hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு நேரம் மல்லாந்து படுக்கலாம்? | How Long Can You Lay On Your Back When Pregnant in Tamil arrow

In this Article

    கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு நேரம் மல்லாந்து படுக்கலாம்? | How Long Can You Lay On Your Back When Pregnant in Tamil

    Pregnancy Journey

    கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு நேரம் மல்லாந்து படுக்கலாம்? | How Long Can You Lay On Your Back When Pregnant in Tamil

    12 February 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பட்டியல் உங்களை தவிப்பில் ஆழ்த்தலாம். ஒவ்வொரு வாரமும் உங்கள் வயிறு வளர்ந்து கொண்டே போவதால், உங்களின் தூக்க தோரணையையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்து உறங்கினால், நீங்கள் படுத்து உறங்குவதற்கான ஒரு புதிய நிலையில் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில், 20 வாரங்களுக்கு பிறகு கர்ப்பிணி பெண்கள் மல்லாந்து படுப்பது பரிந்துரைக்கப்படவில்லை. கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுக்கும் போது, உங்கள் கர்ப்பப்பையின் அழுத்தம் முதுகுத்தண்டின் கீழே உள்ள வீனா கேவா என்ற முதன்மை இரத்த நாளத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும். வீனா கேவாவில் ஏற்படும் சுருக்கம் குழந்தைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கும் என்பதே இதன் பின்னால் உள்ள கோட்பாடு ஆகும். எனவே, பொதுவாக, தூங்கும்போது இரத்த நாளங்களுக்கு சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    கர்ப்ப காலத்தில் தூக்கம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது? (Why Is Sleep So Important During Pregnancy in Tamil)

    உங்கள் உடல் தன்னை மீட்டமைக்கவும், சீரமைக்கவும் தேவைப்படும் ஒரு காலமே தூக்கம் ஆகும். உங்களது மூளை நினைவுகளை சேமிப்பதும், இரத்த நாளங்கள் தங்களை மீட்டமைத்து கொள்வதும் இந்த நேரத்தில் தான். குழந்தைக்கு செல்லும் கூடுதல் இரத்த ஓட்டத்தால் தான் இரத்த நாளங்கள் அதிக அழுத்தத்தில் உள்ளன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். மேலும், கர்ப்ப காலம் காரணமாக சற்று பலவீனமாக இருக்கும் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை தூக்கம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் உடல் இன்சுலினிற்கு எவ்வாறு வினையாற்றுகிறது என்பதையும் தூக்கம் முடிவு செய்யும். இதனால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு உண்டாவது தடுக்கப்பட்டு, பேறுகால நீரிழிவு நோய் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் தூங்குவதற்கான சரியான நிலை எது? (What Is The Best Position To Sleep In Pregnancy in Tamil)

    • கர்ப்பமாக இருக்கும் போது இடதுபுறம் படுத்து உறங்குவது சிறந்த நிலையாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆயினும், வலதுபுறம் படுத்து தூங்குவதும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளிப்படையாக, முதல் டிரைமெஸ்டருக்கு பின் குப்புற படுத்து தூங்குவது சாத்தியமில்லாமல் போகிறது. கர்ப்ப காலத்தில் இரவு முழுவதும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பல நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனினும், தூக்கம் என்பது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பதால், கர்ப்பிணி பெண்கள் தாங்கள் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் படுத்து உறங்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர்.

    • பக்கவாட்டில் படுத்து உறங்கும் போது உங்களுக்கு ஏதாவது ஆதரவு தேவைப்பட்டால், உங்களின் பல்வேறு உடல் உறுப்புகளுக்கு தலையணையை பயன்படுத்தி கொள்ளலாம். பிரக்னன்சி பில்லோ அல்லது வழக்கமான தலையணைகளைக் கொண்டு சௌகரியமாக படுத்து உறங்குங்கள். உதாரணமாக, உங்களின் முட்டிகளுக்கு இடையே ஒரு தலையணையையும், உங்கள் இடுப்பிற்கு கீழே மற்றொரு தலையைணையையும் வைப்பது பக்கவாட்டில் படுக்கும் போது சமநிலையை உருவாக்க உதவும். முழு உடலுக்கும் உங்கள் முதுகின் கீழ் அல்லது முன்புறத்தில் ஒரு தலையணை வைத்தும் நீங்கள் தூங்கலாம். இடுப்பு வடிவம் கொண்ட தலையணையை உங்கள் பக்கவாட்டில் அல்லது நெஞ்சிற்கு கீழ் வைத்து படுத்தும் முயற்சி செய்யலாம்.

    • பக்கவாட்டு நிலையே உங்கள் கர்ப்ப காலத்தின் இரண்டாவது டிரைமெஸ்டரில் படுத்து உறங்குவதற்கான சரியான நிலையாகும். ஒரு சில மருத்துவர்கள் வலதுபுறத்தை விட இடதுபுறத்தில் படுத்து உறங்குவது நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர். ஏனெனில், வீனா கேவா முதுகுத்தண்டின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது. ஆகவே, இடதுபுறமாக படுத்து உறங்குவது உங்கள் குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை எளிதில் செல்ல அனுமதிக்கும். அது மட்டும் இல்லாமல், எந்த நிலை உங்களுக்கு சௌகரியமாக உள்ளதோ அந்த நிலையிலலே நீங்கள் படுத்து உறங்கலாம். உங்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு எப்போதும் எது "சிறந்த பக்கம்" என்பதை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சௌகரியமான நிலையில் தூங்குங்கள்.

    கர்ப்ப காலத்தில் குப்புற படுத்து தூங்குதல் (Sleeping On Your Stomach During Pregnancy in Tamil)

    கர்ப்பமாக இருக்கும் போது, எப்போது குப்புற படுத்து தூங்குவதை நிறுத்த வேண்டும் என்று நான் யோசித்துள்ளேன். கட்டாயமாக ஒரு சில நிமிடங்கள் நீங்கள் அவ்வாறு படுத்துக் கொள்ளலாம். உங்கள் கர்ப்பத்தின் 16 முதல் 18 வாரங்கள் அடையும் வரை குப்புற படுத்து தூங்குவதால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. இந்த நேரத்தில் உங்கள் வயிறு வளர்ந்து, குப்புற படுத்து தூங்குவதை கடினமாக்கும். வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும் போது, பெரும்பாலான பெண்கள் குப்புற படுத்து தூங்குவதை அசௌகரியமாக உணர்கின்றனர். ஆனால் சௌகரியத்திற்காக மட்டுமே அவ்வாறு சொல்லப்படவில்லை. குப்புற படுத்து தூங்கக்கூடாது என்று சொல்லப்படுவதற்கு பாதுகாப்பு சார்ந்த காரணங்களும் உண்டு. மல்லாந்து படுப்பதால் ஏற்படும் விளைவுகளைப் போலவே, குப்புற படுத்து தூங்குவதாலும் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும். மேலும், கர்ப்ப காலத்தில் குப்புற படுத்து தூங்கும்போது வயிறு உள்ளே தள்ளப்பட்டு, பெருந்தமனி மற்றும் ஐவிசி (கீழ் பெருஞ்சிரை)-ஐ அழுத்தும்.

    கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்து தூங்குதல் (Sleeping On Your Back During Pregnancy in Tamil)

    முதல் டிரைமெஸ்டரில் மல்லாந்து படுத்து உறங்குவது பாதுகாப்பானது தான். எனினும், கர்ப்ப காலத்தின் நடுவே கருப்பை கனமாகத் தொடங்கும். எனவே, வேறொரு நிலையை தேர்ந்தெடுப்பது சிறந்தது. அது மட்டும் இல்லாமல், 15 முதல் 20 வாரங்கள் வரையிலான கர்ப்ப காலத்தில் மல்லாந்து தூங்கும் போது அது இரத்த ஓட்டத்தில் குறுக்கிடும் அளவிற்கு கருப்பை பெரிதாக வளர்ந்திருக்கும். இது உங்கள் முதுகெலும்பு தொடரின் வலது பக்கமாக இயங்கும் மற்றும் உடலின் கீழ் மற்றும் நடுத்தர பகுதிகளிலிருந்து இதயத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்லும் ஒரு பெரிய நரம்பான கீழ் பெருஞ்சிரையை சுருக்கலாம்.

    மல்லாந்து படுத்து தூங்குவது பெருநாடியை அழுத்தி, உங்கள் உடல் மற்றும் நஞ்சுக்கொடிக்கு முக்கியமான இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் தூக்கத்தில் இருந்து மூச்சுத்திணறலால் விழித்துக் கொள்ளலாம் அல்லது மல்லாந்து படுப்பதால் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிப்பது போல் இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும். முதுகு வலி, மூல நோய், செரிமான கோளாறுகள் மற்றும் மோசமான இரத்த ஓட்டம் ஆகியவை கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுப்பதால் ஏற்படும் பிற சிக்கல்கள் ஆகும்.

    கர்ப்ப காலத்தில் பக்கவாட்டில் படுத்து தூங்குதல் (Sleeping On Your Side During Pregnancy in Tamil)

    கர்ப்பமாக இருக்கும் போது, பக்கவாட்டில் படுத்து தூங்குவது, குறிப்பாக இடதுபுறமாக தூங்குவது ஒரு சிறந்த நிலையாகும். ஏனெனில், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில் கருப்பையின் எடையை வலதுபுறம் நோக்கி வைப்பது தாயை சௌகரியமாக உணரச் செய்யும். இடதுபுறமாக படுத்து உறங்குவது போல வலதுபுறம் திரும்பி தூங்குவது அவ்வளவு பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. ஏனெனில், அது ஐவிசி-யை அழுத்தும். ஆனால், கருப்பை வலதுபுறமாக சாயாதவாறு தலையணை கொண்டு அதனை ஆதரிப்பது ஒரு சில நேரங்களில் நல்ல தேர்வாக அமையும்.

    ஆயினும், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் குப்புற அல்லது மல்லாந்து படுத்து உறங்கும் ஒரு நபர் என்றால், தீடீரென இடதுபுறமாக படுத்து தூங்குவதில் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். ஆகையால், கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதலே பிரக்னன்சி பில்லோவைப் பயன்படுத்தி அது உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை ஆராய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இடுப்பு அல்லது கால் வலியைக் குறைக்க அதனை உங்கள் கால்களின் அடியில் வைத்து உறங்கலாம். பக்கவாட்டில் திரும்பி படுப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உடலை சற்று தூக்கியவாறு வைக்க நீங்கள் தலையணைகளை கூட பயன்படுத்தலாம். 45-டிகிரி சாய்வுவாட்டத்தில் மல்லாந்து தூங்குவது சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தின் போது போதிய தூக்கம் இல்லாமல் இருத்தல்(Loss of Sleep in Pregnancy In Tamil)

    கர்ப்ப காலத்தில் மல்லாந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது நான் எழுந்துவிட்டால் என்ன ஆகும்? (What If You Wake Up Sleeping On Your Back During Pregnancy in Tamil)

    பொதுவாக இரவு நேரத்தில் தூங்கும்போது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது வழக்கமான ஒன்று தான். எனவே, கர்ப்ப காலத்தில் மல்லாந்து தூங்கிக் கொண்டிருக்கும்போதோ அல்லது குப்புற படுத்து உறங்கும்போதோ எழுந்துவிடுவதால் ஒரு தீங்கும் ஏற்படாது. பதட்டமடைய வேண்டாம். இதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அசௌகரியமான தூக்க நிலையை சரி செய்து கொள்ளவே நீங்கள் அடிக்கடி திரும்பிப் படுப்பீர்கள். அப்படித் தான் உங்களை அறியாமல் நீண்ட நேரம் குப்புற படுத்து இருப்பீர்கள். அசௌகரியமான தூக்க நிலையை உங்கள் ஏற்றுக்கொண்டு பழகும் அளவிற்கு அதிக நாட்கள் ஆகிவிடவில்லை.

    எனினும், மூன்றாவது டிரைமெஸ்டரில் நீங்கள் மல்லாந்து படுத்தால், அது இரத்த ஓட்டத்தை சுருக்கி, உங்களுக்கு உடனடியாக அசௌகரியமான உணர்வைத் தரும். ஆகையால், நீங்கள் உடனடியாக விழித்துக் கொள்வீர்கள். உங்கள் குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சமரசம் செய்து விட்டு, நீண்ட நேரம் அதே நிலையில் உங்களால் படுத்து உறங்க முடியாது. நீங்கள் அடிக்கடி மல்லாந்து படுத்திருக்கும் போதோ, குப்புற படுத்து உறங்கும்போதோ அல்லது வலதுபுறம் படுத்து தூங்கும்போதோ எழுந்துவிடுகிறீர்களா என்பதை உங்கள் கணவரை கவனிக்க சொல்லுங்கள்.

    கர்ப்பமாக இருக்கும் போது 28 வாரங்களுக்கு பின்னர் ஏன் நீங்கள் மல்லாந்து படுக்கக்கூடாது? (Why You Should Not Sleep On Your Back Past 28 Weeks Of Your Pregnancy in Tamil)

    28 வாரங்கள் கர்ப்பத்தின் போது, உங்கள் கருப்பையின் அதிக எடை காரணமாக நீங்கள் மல்லாந்து தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் குழந்தையைத் தாங்கும் கருப்பையில் உள்ள நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குட நீர் ஆகியவற்றின் எடையே உங்கள் கர்ப்ப கால எடையின் ஒரு பங்கு ஆகும். நீங்கள் மல்லாந்து படுக்கும்போது, உங்கள் கருப்பையின் எடை முழுவதும் ஐவிசி மீது இருக்கும். ஐவிசி-யை அழுத்தி வைப்பது குழந்தையின் குறைந்த பிறப்பு எடை, ப்ரீஎக்லாம்ப்சியா, மோசமான கரு வளர்ச்சி மற்றும் இறந்து பிறக்கும் குழந்தை போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.

    உங்கள் கர்ப்பத்தின் 28 வாரங்கள் பின்னர் மல்லாந்து படுப்பதால் ஏற்படும் அபாயங்கள்(Risks Of Sleeping On Your Back Past 28 Weeks Of Your Pregnancy in Tamil)

    உங்கள் கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் மல்லாந்து படுக்கும் போது ஏற்படும் ஒரு சில அபாயங்களை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வது அவசியம். அவற்றில் சில அபாயங்கள் பின்வருமாறு:

    • ப்ரீஎக்லாம்ப்சியா (Preeclampsia)

    கர்ப்ப காலத்தில் வீனா கேவா மீது அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது, ப்ரீஎக்லாம்ப்சியா மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும். ப்ரீஎக்லாம்ப்சியா இருக்கும் போது, உங்களுக்கு தலைவலி அல்லது அடிவயிற்றில் வலி ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது பிறக்கும் போதே குழந்தை இறந்துவிடுதல் போன்ற அபாயங்களுக்கு நேரலாம்.

    • மோசமான கரு வளர்ச்சி மற்றும் குறைந்த பிறப்பு எடை (Reduced fetal growth and low birth weight)

    உங்கள் கர்ப்பத்தின் 30 வாரங்களுக்கு பின்னர் மல்லாந்து படுப்பது, கீழ் பெருஞ்சிரையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் கருவிற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து. இது குழந்தையின் பிறப்பு எடை குறைவிற்கு வழிவகுக்கும். குறைவான பிறப்பு எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சு பிரச்சினை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    • இறந்து பிறக்கும் குழந்தை (Stillbirth)

    கர்ப்ப காலத்தின் 28 வாரங்கள் பின்னர் மல்லாந்து படுத்து உறங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மல்லாந்து படுத்து தூங்குவது கரு வளர்ச்சியில் பின்னடைவு மற்றும் கருவில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை இரண்டுமே குழந்தை இறந்து பிறக்க காரணமாக அமையும். இந்த காரணிகளுடன் சேர்த்து, வேறு ஏதேனும் இணைநோய்களும் இருக்கும் பட்சத்தில் குழந்தை இறந்து பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

    கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான சில மாற்றீடுகள்(Pregnancy Safe Alternatives in tamil)

    கர்ப்பத்தின் 28 வாரங்களுக்கு பின், மல்லாந்து படுத்து தூங்குவது பாதுகாப்பானது அல்ல. ஆனால், நீங்கள் பாதுகாப்பாக படுத்து உறங்க ஒரு சில சௌகரியமான தூக்க நிலைகள் உள்ளன.

    • குப்புற படுத்து தூங்குவது (Belly sleeping)

    குப்புற படுத்து தூங்குவது எந்த ஒரு முதன்மையான இரத்த நாளங்களிலும் அழுத்தத்தை ஏற்படுத்தாது மற்றும் இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாக கருதப்படுகிறது. டவ்நட் பில்லோ பயன்படுத்துவது இந்த நிலையில் படுத்து உறங்குவதை சௌகரியமாக மாற்றும்.

    • பக்கவாட்டு முழங்கை நிலை (Lateral Decubitus position)

    நீங்கள் மல்லாந்து படுக்கும் நபராக இருந்தால், மூன்றாவது டிரைமெஸ்டரில் கிட்டத்தட்ட மல்லாந்து உறங்குவது போன்ற ஒரு நிலையில் படுப்பது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும். பக்கவாட்டு முழங்கை நிலையை கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவதற்கான சிறந்த நிலையாக மருத்துவர்கள் கருதுகின்றனர். மல்லாந்து படுப்பதற்கும், பக்கவாட்டில் படுப்பதற்கும் இடையில் உள்ள ஒரு நிலையே இந்த நிலையாகும். இந்த நிலையில் நீங்கள் படுத்துறங்க தலையணை மற்றும் மெத்தை உங்களுக்கு உதவும். இருபுறத்திலும் சாய்ந்தவாறு, நீங்கள் பக்கவாட்டு முழங்கை நிலையில் படுத்து உறங்கலாம். எனினும், இதில் கடினமான விஷயம் என்னவென்றால், நீங்கள் முழுவதுமாக பக்கவாட்டிலும் இல்லாமல், முழுமையாக மல்லாந்தும் படுக்காமல் இருக்க வேண்டும்.

    • இடதுபுறமாக படுத்து தூங்குவது (Left side sleeping)

    கர்ப்பத்தின் 28 வாரங்களுக்கு பிறகு, இடதுபுறமாக படுத்து தூங்குவது ஒரு சிறந்த மாற்றாகும். ஏனெனில், வலதுபுறமாக படுத்து தூங்குவது மல்லாந்து படுத்து உறங்குவது போலவே, உங்கள் கர்ப்பத்தில் ஒரு சில அபாயங்களை ஏற்படுத்தும்.

    முடிவுரை

    உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் இரண்டு டிரைமெஸ்டரில் மல்லாந்து படுத்து தூங்குவது பாதுகாப்பானது. எனினும், மூன்றாவது டிரைமெஸ்டரில் மல்லாந்து படுத்து தூங்குவது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஒரு சில அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு படுத்து தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இரவின் நடுவே நீங்கள் மல்லாந்து தூங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தால், உடனடியாக உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவும். நீங்கள் பிரக்னன்சி பில்லோவையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதனை உங்கள் முதுகிற்கு பின்னால் வைப்பதன் மூலம், மல்லாந்து படுக்க நேர்ந்தால் பக்கவாட்டிற்கு மாறி விடுவீர்கள். மேலும், கர்ப்ப காலத்தில் தூங்கும் நிலைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால், அதனை உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

    Tags

    Sleeping Position during Pregnancy in Tamil, How to sleep in Pregnancy in Tamil, Best Sleeping Positing in Pregnancy in Tamil, How Long Can You Lay On Your Back When Pregnant in English, How Long Can You Lay On Your Back When Pregnant in Telugu, How Long Can You Lay On Your Back When Pregnant in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    கர்ப்பமாக இருக்கும் போது பயணம் செய்வது சரியா?(Is It Okay To Commute While Pregnant in Tamil)

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    உங்கள் முதலாளிக்கு நீங்கள் கர்ப்பமாக இருப்பதை எப்படி தெரியப்படுத்துவீர்கள்?(How Do You Notify Your Employer That You Are Pregnant in Tamil)

    Image related to Sex Life

    Sex Life

    உங்கள் பிரக்னன்ஸியின் இரண்டாவது மூன்று மாதங்களில் உங்கள் துணையுடன் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது I How safely can you have sex with your partner during the second trimester of your pregnancy in Tamil

    Image related to Nutrition Tips

    Nutrition Tips

    கர்ப்ப காலத்தில் நீங்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த உணவு(டையட்) திட்டம் எது I What Is The Best Diet Plan That You Must Consume During Pregnancy in Tamil

    Image related to Scans & Tests

    Scans & Tests

    இரண்டாவது டிரைமெஸ்டர் ஃபெடல் அனோமாலி ஸ்கேன்: உங்கள் கர்ப்ப காலத்தில் அது எதைக் கண்டறியும் I Second Trimester Fetal Anomaly Scan: What will it detect during your pregnancy in Tamil

    Image related to High Blood Pressure in Pregnancy

    High Blood Pressure in Pregnancy

    பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் அதைத் திறம்பட நிர்வகித்தல் I Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.