This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் அதைத் திறம்பட நிர்வகித்தல் I Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in Tamil

Blood Pressure
Written by - Priya Baskarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 16, 2026
பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் அதைத் திறம்பட நிர்வகித்தல் I Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy  in Tamil
Likes2 Likes|
Read time12 min

கருவுற்றிருப்பதை அறிந்து ஒரு பெண் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். தாயில் வயிற்றில் குழந்தை வளரும் அனுபவம் ஒரு மாயாஜால உணர்வுக்கு குறைவானதல்ல. தாயின் முன்னுரிமைகள் உடனடியாக மாறும். மேலும் குழந்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் பிறப்பதை உறுதிசெய்ய எதையும் செய்யத் துணிவார்கள்.

ஆனால், ஒவ்வொரு கர்ப்பமும் சீராக இருக்கும் எனச் சொல்லமுடியாது. இத்தருணத்தில் ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு, ஊக்கமின்மை, மிகை பதற்றம் போன்றவை ஒரு குழந்தையை இவ்வுலகிற்குக் கொண்டு வர ஒரு பெண் மேற்கொள்ளும் போராட்டங்களில் சில எனலாம். இவற்றில் சில உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். எனவே, இப் பிரச்சனைகள் தாய்க்கும் கருவுக்கும் பெறும் சிக்கலாக மாறுவதற்கு முன்பு அதை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம். இங்கு, கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் ரச்சனைகளில் ஒன்றான உயர் இரத்த அழுத்தம் பற்றியும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக அலசுவோம்.

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன? (What Is High Blood Pressure in Tamil)

இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயக்க ஆற்றல் எனலாம். இதன் விளைவாக, இரத்தம் இதயத்திலிருந்து உடல் முழுவதும் விநியோகிக்கும் தமனிகளுக்கு (இரத்த நாளங்கள்) செலுத்தப்படுகிறது. மிகை பதற்றம் எனவும் குறிப்பிடப்படும் உயர் இரத்த அழுத்தம் என்பது தமனிகளில் இரத்தத்தின் இயக்க ஆற்றல் வழக்கமான வரம்பை மீறும் ஒரு நிலை.

பேறுகால உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? (What Is High Blood Pressure in Pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் உடலை வேறுவிதமாகப் பாதிக்கலாம். இதன் விளைவாக, உயர் இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் இரத்த அழுத்தம் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்பதால் குழந்தையின் ஆரோக்கியமும் ஆபத்தில் உள்ளது.

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் விளைவாக, குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் கட்டுப்படுத்தப்படலாம். குறை பிரசவம், குறைந்த எடையுடன் பிறப்பு, கருச்சிதைவு மற்றும் பிற சிரமங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடும்.

பேறுகால உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் அறிகுறிகள் (Symptoms Of High Blood Pressure in Pregnancy in Tamil)

பேறுகால உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் சில பெண்களில் மிதமானதாகவோ, இல்லாமலோ கூட இருக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பேறுகால உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

கர்ப்பம் தரித்துள்ள வேளையில் இரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் எனக் குறிக்கலாம். 160/110 இரத்த அழுத்தம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்குத் தீவிர உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. சாதாரண இரத்த அழுத்த அளவீடு 120/80 இருக்கும் என்பதை அறிக.

பேறுகால உயர் இரத்த அழுத்தத்தின் எச்சரிக்கை குறியீடுகளை அறிந்து கொள்வது அவசியம்:

· மிகவும் தீவிர தலைவலி.

· வாந்தி அல்லது குமட்டல்

· அதிக புரதம் கொண்ட சிறுநீர் (கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மருத்துவ ஆலோசனையின் போதும் சிறுநீரின் மாதிரி சோதிக்கப்படுவதுண்டு)

· பார்வை சார்ந்த மாற்றங்கள்

· மேல் வயிற்றில் வலி.

பேறுகால உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்(Causes Of High Blood Pressure in Pregnancy in Tamil)

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்களில் சில:

· உங்களுக்கு முதல் குழந்தை பிறப்பதாக இருந்தால்.

· உங்கள் சகோதரி அல்லது தாய்க்கு ஏற்கனவே கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் இருந்திருந்தால்.

· நீங்கள் 40+ வயதுடையவராக இருந்தால்.

· நீங்கள் கருத்தரிக்கும்போது அதிக எடையுடன் இருந்தால்.

· கர்ப்பத்தில் இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால்.

· நீங்கள் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால்.

· ஏற்கனவே கர்ப்பத்திற்கு முன் உயர் இரத்த அழுத்தம் கொண்டிருந்தால்

பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம் (Home Remedies To Control High Blood Pressure In Pregnancy in Tamil)

பேறு காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்களில் சில:

· ஆப்பிள் சிடார் வினிகர்

· உடற்பயிற்சி

· வாழைப்பழம் சாப்பிடுவது

· சோடியம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல்.

· மன அழுத்தத்தைத் தவிர்ப்பது.

· சரியான அளவு மெக்னீசியம் உட்கொள்ளல்.

· புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்

· ஜங்க் உணவைத் தவிர்த்தல்

· காஃபின் தவிர்த்தல்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. முதன்மையானது, பிரசவத்துக்கு முந்தைய அனைத்து மருத்துவ ஆலோசனை சந்திப்புகளையும் தவறாது மேற்கொள்வது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இறுதியாக, சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள். காஃபின், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் இவற்றை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.

பேறு கால உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள் (Types Of High Blood Pressure In Pregnancy in Tamil)

1. நாள்பட்ட மிகை பதற்றம் (Chronic Hypertension)

இது கர்ப்பம் தரிக்கும் முன்பிருந்தே உங்களை பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம் ஆகும். கர்ப்பத்தின் 20-வது வாரத்திற்கு முன் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை ப்ரீ-எக்லாம்ப்சியா என்றும் அழைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரிடம் முதல் சந்திப்பு வரை அதை உணர மாட்டார்கள். சிகிச்சை அளிக்கப்படாத நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் பிற ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் எல்லைக்கு அருகாமையில் இருந்தாலும், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

2. கருவளர்கால உயர் இரத்த அழுத்தம் (Gestational Hypertension)

கர்ப்பத்தின் 20-வது வாரத்திற்குப் பிறகு, உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு பெரும்பாலான நேரங்களில் தீங்கு விளைவிப்பதில்லை. கூடுதலான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளை நீங்கள் உணராது இருக்கலாம். இருப்பினும், இந்த வகையான உயர் இரத்த அழுத்தம் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக குழந்தை வழக்கத்தை விட சிறியதாக பிறக்கலாம் (குறைந்த எடையுடன்), உங்கள் குழந்தை முன்கூட்டியே பிறக்கலாம், ப்ரீக்ளாம்ப்சியாவும் ஒரு சாத்தியமான விளைவு ஆகும். பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்களுக்குள் இரத்த அழுத்தம் குறையும் என்ற போதிலும், இது எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

3. மிகைப்படுத்தப்பட்ட ப்ரீக்ளாம்ப்சியாவுடன் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் (Chronic Hypertension With Superimposed Preeclampsia)

கர்ப்பத்திற்கு முன்பிருந்தே நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் கொண்ட பெண்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வர். இத்தகைய பெண்கள் மேலும் மோசமடையும் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதத்தின் இருப்பு மற்றும் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிற சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

4. பிரீக்ளாம்ப்சியா (Preeclampsia)

ப்ரீக்ளாம்ப்சியா என்பது பேறு காலத்தில் தீவிர உயர் இரத்த அழுத்தச் சிக்கலாகும். இது பொதுவாக கர்ப்பத்திற்கு 20 வாரங்களுக்குப் பிறகு உருவாகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில், பிரசவத்திற்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் கூடத் தோன்றும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மற்ற உறுப்பு அமைப்புகளையும் சேதப்படுத்தும் சாத்தியம் உள்ளது. முன்பெல்லாம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே ப்ரீக்ளாம்ப்சியா இருப்பதாகக் கருதப்படும். இருப்பினும், சிறுநீரில் புரதம் இல்லை என்றாலும் ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் எக்லாம்ப்சியா இரண்டும் உயர் இரத்த அழுத்தம் அல்லது மிகைப்பட்ட பதற்றம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் அதிக அளவு புரத இருப்பு ஆகியவற்றின் பின்விளைவுகளாகும். பேறு காலத்தில் ப்ரீ-எக்லாம்ப்சியா என்பது உயர் இரத்த அழுத்தத்தின் துவக்கமாகும். ப்ரீ-எக்லாம்ப்சியாவை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது தீவிர நிலைக்குச் சென்று எக்லாம்ப்சியாவாக மாறுகிறது. எக்லாம்ப்சியாவினால் வலிப்பு மற்றும் சில நேரங்களில் கோமா நிலைக்குக் கூடச் செல்ல வாய்ப்புண்டு.

கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் எக்லாம்ப்சியா தாக்கம் ஏற்படலாம், இது பிரசவத்திற்குப் பிந்தைய 48 மணி நேரத்திற்குள் கூட உருவாகலாம். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு 4-6 வாரங்கள் வரை கூட ப்ரீ-எக்லாம்ப்சியாவும் தோன்றக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காட்டுகிறது. கர்ப்பத்தின் டோக்ஸீமியா என்று முன்பு அழைக்கப்பட்ட ப்ரீ-எக்லாம்ப்சியாவை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால், 200 பெண்களில் ஒருவருக்கு எக்லாம்ப்சியாவாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

ப்ரீக்ளாம்ப்சியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் (Signs And Symptoms Of Preeclampsia in Tamil)

ப்ரீக்ளாம்ப்சியாவின் அடையாளங்களும் அறிகுறிகளும் முதலில் ஆபத்து சூழலைக் காட்டாமல் இருந்தாலும், ப்ரீக்ளாம்ப்சியா அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதை நீங்கள் உணர்ந்தவுடன், கூடிய விரைவில் உங்கள் மகப்பேறு நிபுணரை அணுகவும். கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள்:

  • கைகள் அல்லது முக வீக்கம்

  • திடீரென எடை கூடுதல்

  • மூச்சு விடுவதில் சிரமம்

  • வாந்தி மற்றும் குமட்டல்

  • கடுமையான தொடர்ச்சியான தலைவலி

  • பார்வைக் கோளாறு

  • தோள்பட்டை அல்லது மேல் வயிற்று வலி

தீவிர ப்ரீக்ளாம்ப்சியா அறிகுறிகள் பின்வருமாறு:

  • நுரையீரல் திரவங்களால் நிரம்புதல்.

  • தீவிர பார்வை கோளாறுகள்.

  • மயக்கம்

  • மனநிலையில் மாற்றம்.

  • சிறுநீர் கழிக்கும் இடைவெளி குறைதல்.

  • சிறுநீரகம் அல்லது கல்லீரல் அசாதாரணமாக செயல்பாடு.

  • பிளேட்லெட் எண்ணிக்கையில் கடுமையான குறைவு.

  • கடுமையான தலைவலி.

  • மேல் வயிற்று வலி.

  • 160 mm Hg அல்லது அதற்கு மேற்பட்ட சிஸ்டாலிக் அல்லது 110 mm Hg அல்லது அதற்கு மேற்பட்ட டயஸ்டாலிக் அழுத்தம்

ப்ரீக்ளாம்ப்சியாவுக்கான காரணங்கள் (Causes of Preeclampsia in Tamil)

ப்ரீ-எக்லாம்ப்சியா அதிகரிப்புக்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், அசாதாரண நஞ்சுக்கொடி வளர்ச்சி, மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் காரணமாக இந்த மருத்துவ நிலை ஏற்படுவதாகக் கருத்து உண்டு. கூடுதலாக, உடல் பருமன் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற ஊட்டச்சத்து காரணிகளும் ப்ரீ-எக்லாம்ப்சியாவுக்குப் பங்களிக்கின்றன.

இந்த இரண்டு நிலைகளும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான உறுதியான விளக்கம் இல்லை என்றாலும், ப்ரீ-எக்லாம்ப்சியாவால் பாதிக்கப்படுவதற்கான சில காரணிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் டீன் ஏஜ் அல்லது 40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், நீங்கள் பருமனாக இருந்தால், கருத்தரிப்பதற்கு முன் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்திருந்தால், உங்கள் முந்தைய கர்ப்பத்தில் ப்ரீ-எக்லாம்ப்சியா வரலாறு இருந்திருந்தால், டோனர்கருவூட்டல் மூலம் கருத்தரித்திருந்தால், தாய் அல்லது சகோதரிக்கு ப்ரீ-எக்லாம்ப்சியா உள்ளது என்றால் இந்த நிலைமைகளால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. மேலும், நீரிழிவு, லூபஸ், ஏதேனும் சிறுநீரக நோய் மற்றும் மூட்டுவலி ஆகியவையும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருக்கலாம்.

ப்ரீக்ளாம்ப்சியா நோயறிதல் முறைகள் (Diagnosis of Preeclampsia in Tamil)

மகப்பேறுக்கு முன்பான வழக்கமான மருத்துவ ஆலோசனை சந்திப்பு மற்றும் சோதனைகளின் மூலம் ப்ரீக்ளாம்ப்சியாவைக் கண்டறியலாம். ப்ரீக்ளாம்ப்சியா அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் (குறிப்பாகக் கர்ப்பத்திற்கு முன்மருத்துவர் இச்சிக்கலை விரைவில் கண்டறிய உதவும்.

ப்ரீக்ளாம்ப்சியாவைக் கண்டறிய பல அறிகுறிகளை அலசி முடிவெடுப்பது அவசியம். உதாரணமாக, சிறுநீரில் உள்ள அதிக அளவு புரதம் ப்ரீக்ளாம்ப்சியாவின் அறிகுறியாக இருந்தாலும், அது மட்டுமே அறிகுறியாகக் கருதப்படக் கூடாது.

ப்ரீக்ளாம்ப்சியாவைக் கண்டறிய இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளைச் மேற்கொள்ளுதல் மற்றும் அதோடு பிறக்கவுள்ள குழந்தையின் நலத்தை உறுதிப்படுத்த மற்றும் உங்கள் இரத்தம் எவ்வளவு திறம்பட உறைகிறது என்பதைத் தீர்மானிக்க, அல்ட்ராசவுண்ட் மற்றும் கருவின் கண்காணிப்பு ஆகியவற்றை மருத்துவர் பரிந்துரைப்பார்கள்.

சமீப காலமாக, காங்கோ ரெட் ஸ்பாட்டிங் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இது சிறுநீர் சோதனைகளை விட ப்ரீ-எக்லாம்ப்சியாவைக் எளிதாகக் கண்டறியும் என்று கூறப்படுகிறது. சிறுநீரில் உள்ள புரதங்களை காங்கோ ரெட் ஸ்ட்ரெயின் திறம்படப் பிணைப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த சோதனைகளில் ஏதேனும் ஒன்று நடைபெற வேண்டுமானால், உங்கள் மருத்துவ ஆலோசனை சந்திப்புகளைத் தவறாது மேற்கொள்ளவேண்டும் மற்றும் அதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

ப்ரீக்ளாம்ப்சியாவிற்கான சிகிச்சை (Treatment of Preeclampsia in Tamil)

பேறுகால ப்ரீக்ளாம்ப்சியாவை குழந்தை பிறந்த பிறகே சீர் செய்ய இயலும். இருப்பினும், அதற்கு சிகிச்சை வழங்கப்பட மாட்டாது என்று பொருள்படாது. சரியான நேரத்தில் ப்ரீக்ளாம்ப்சியாவுக்குச் சிகிச்சை வழங்குவது நிலை மோசமடையாமல் தடுக்கவும், HELLP சிண்ட்ரோம் மற்றும் எக்லாம்ப்சியா போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படாமலும் தடுப்பதை உறுதி செய்யும்.

உங்கள் ப்ரீக்ளாம்ப்சியா மிதமானதாக இருந்தால், மருத்துவர் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பார்கள்:

நிலையின் முன்னேற்றம் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை, கல்லீரல் நொதிகள், சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீர் புரத அளவுகளில் மாற்றங்களைக் கண்காணிக்க வழக்கமான இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்.

· இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணித்தல்.

· கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் குழந்தையின் வழக்கமான கிக் எண்ணிக்கையைக் கண்காணித்தல்

· உணவில் மாற்றங்கள். பச்சைக் காய்கறிகள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட, நிறைய தண்ணீர் குடிக்க, குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்ள, உப்பு உட்கொள்ளலை முடிந்தவரை குறைக்கப் பரிந்துரைகள்.

· முறையான ஓய்வை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தல். இது உங்கள் பிரசவ காலத்தை நீட்டித்து குழந்தை வயிற்றில் வளர அதிக நேரம் கிடைக்கும் மற்றும் பிரசவம் பாதுகாப்பானதாக இருக்க உதவும்.

· நீங்கள் நிலையாக இருப்பதையும், அறிகுறிகளில் தீவிரத்தன்மை இல்லை என்பதையும் உறுதிப்படுத்த, ஆரம்ப நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கேட்கப்படலாம். கருவின் வளர்ச்சியை மேம்படுத்த கார்டிகோஸ்டீராய்டுகளும் வழங்கப்படலாம்.

· கர்ப்பத்தின் 37 வது வாரங்களில் பிரசவம் பற்றி உங்கள் மகப்பேறு நிபுணர் உங்களிடம் உரையாடுவார். தேவைப்பட்டால், முதலில் மருந்துகளுடன் தொடங்கி, வலி தூண்டல் செய்யப்படலாம். கருவுக்குச் சிக்கல் ஏதேனும் இருந்தால் விரைவில் பிரசவிப்பது அவசியம். ப்ரீக்ளாம்ப்சியா உள்ள பெண்கள் பிறப்புறுப்பு வழியாகவே குழந்தை பிரசவிக்க முடியும். ஆனால், பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட்டால் சிசேரியனுக்கு அவசியம் ஏற்படலாம்.

பேறுகால ப்ரீக்ளாம்ப்சியா என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் கடினமான சூழ்நிலையே என்றாலும், மேலே உள்ள அனைத்து வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றினால், ப்ரீக்ளாம்ப்சியாவை நிர்வகிப்பது எளிதாகும்.

Tags:

High Blood Pressure in Tamil, High Blood Pressure symptoms in Tamil, Treatment for High Blood Pressure in Tamil, High Blood Pressure during pregnancy in Tamil, High Blood Pressure in pregnant ladies in Tamil, Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in Telugu, Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in English

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Priya Baskar
Priya Baskar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.