


Vaginal Bleeding
27 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு தன் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இருப்பினும், அவர்கள் சமாளிக்க வேண்டிய பிரசவத்திற்குப் பிந்தைய அறிகுறிகளை தவற விடுகின்றனர். பிரசவத்திற்குப் பிந்தைய நாட்களில் ஒரு பெண் பல விதமான அறிகுறிகளை அனுபவிக்கிறாள். அவற்றில் ஒரு அறிகுறி தான் பெண்ணுறுப்பில் ஏற்படும் இரத்தப்போக்கு ஆகும்.
பெண்ணுறுப்பில் ஏற்படும் இரத்தப்போக்கு பொதுவாக சில நாட்களுக்குப் பின் தானாக நின்றுவிடும். எனினும் ஒரு பெண் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு பற்றியும், குழந்தையை பிரசவித்த எத்தனை நாட்களுக்கு அது நீடிக்கும் என்பது பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
பெண்ணுறுப்பு வாயிலாக இரத்தம் வெளியேற்றப்படும் ஒரு மருத்துவ நிலையே பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஒரு குழந்தையை பிரசவித்த பிறகு நிகழ்கிறது. எனவே இது பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு அல்லது லோச்சியா என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது.
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் என்பதைப் பொருட்படுத்தாமல் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு ஏற்படுகிறது. ஒரு சில பெண்கள் இதனை மாதவிடாய் இரத்தப்போக்கு என தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
பேற்றுப்போக்கு என்பது பொதுவாக மாதவிடாயை விட அதிக நாட்கள் நீடிக்கும். மேலும், ஒரு சாதாரண மாதவிடாயின் போது அனுப்பவிக்காத சில விஷயங்களை இதன்போது அனுபவிக்கலாம். இது கர்ப்ப காலத்திற்கு பிறகு உடலை விட்டு வெளியேற வேண்டிய கூடுதலான இரத்தம், சளி மற்றும் கருப்பை திசுக்களைக் கூட கொண்டிருக்கலாம்.
நஞ்சுக்கொடி இணைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த திசுக்கள் பிறப்புறுப்பு இரத்தப்போக்கின் போது உடலால் வெளியேற்றப்படுகின்றன. இந்த கூறுகள் காரணமாக, இரத்தமானது வழக்கத்தை விட அடர் நிறத்திலும், அதிக அளவிலும் இருக்கும்.
பொதுவாக ஒரு பெண்ணுக்கு பிரசவ தேதியில் இருந்து பத்து நாட்கள் வரை பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த இரத்தப்போக்கு குழந்தை பிறந்த பின்னர் மெதுவாக குறைந்து ஆறு வாரங்கள் வரை இலேசாக இருக்கும். பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவமானது சிவப்பு நிறத்தில் இருந்து, பின்க்காக மாறி, பின்னர் பிரவுன் நிறமாகி, இறுதியில் வெள்ளை-மஞ்சள் நிறத்தில் காணப்படும். இருப்பினும் இது கர்ப்ப கால பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் பொறுத்து பெண்ணுக்கு பெண் மாறுபடும்.
ஒரு சில பெண்கள் சிசேரியன் செய்து கொண்ட பிறகு இந்த இரத்தப்போக்கு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதில் குழப்பமடைகின்றனர். இதற்கான பதிலும் ஒன்று தான். அதாவது, இது பத்து நாட்கள் வரை நீடிக்கும். இரத்தப்போக்கின் நிறம் படிப்படியாக மங்கி, அதன் அளவும் குறைய ஆரம்பிக்கும்.
பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு என்பது வழக்கமான ஒன்று தான். எனவே, குழந்தையை பிரசவித்த பிறகு பெண்ணுறுப்பில் இருந்து வரும் வெளியேற்றத்தைக் கண்டு பயப்படவோ, பதட்டமடையவோ வேண்டாம். இதனை சமாளிக்க ஒரு பெண் தடிமனான நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் டயப்பர் அளவு தடிமனான நாப்கின்களை பயன்படுத்தலாம்.
இது போன்ற நேரங்களில் டாம்பான்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதன் வழியாக எளிதில் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் பெண்ணுறுப்பு மற்றும் கருப்பைக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் நிலைமை மோசமாகலாம்.
குழந்தை பிறந்த உடனேயே ஆடம்பர உள்ளாடைகள் அணிவதை ஒரு பெண் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு ஆடை மீது மிகவும் உறுதியாக பிடித்துக்கொள்ளும் என்பதால் அதனை துவைப்பதில் சிரமம் ஏற்படும். இது போன்ற நேரங்களில் பழைய உள்ளாடைகளை அணிவது நல்லது. எனினும், உள்ளாடைகள் சுத்தமாகவும், சௌகரியமாகவும் மற்றும் ஸ்பாட்டிங் ஏற்படுவதை தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் தடிமனான துணியால் ஆன ஒன்றாகவும் இருத்தல் அவசியம்.
பிரசவத்திற்கு பிறகு ஒரு பெண் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவளது உடல் முழுவதுமாக குணமடையாததாலும், கடினமான வேலைகளை செய்யும்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம் என்பதாலும் இது கூறப்படுகிறது.
பிரசவத்திற்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது என்பது கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் கடந்து செல்லும் ஒரு நிகழ்வு ஆகும். இதன் தீவிரம் பெண்ணுக்கு பெண் மாறுபடலாம். எனினும், பிரசவம் ஆன பின் இந்த இரத்தப்போக்கு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை ஒரு பெண் அறிந்திருக்க வேண்டும். இந்த இரத்தப்போக்கு நீண்ட நாட்கள் நீடித்தால் அப்பெண் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். ஒருவர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் பின்வருமாறு,
வெளியேற்றத்தின் போது ஒரு பெண் பெரிய பெரிய இரத்த கட்டிகளை கவனித்தால் உடனடியாக அவர் மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை பெரிய அளவிலான நாப்கினை மாற்ற வேண்டிய அளவில் அதிகப்படியான பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு ஏற்பட்டால் இது ஏதேனும் தொற்று அல்லது வேறு பிற சிக்கல்களைக் குறிக்கலாம்.
பேற்றுப்போக்கு அல்லது பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் இரத்தப்போக்கின் போது வீசும் துர்நாற்றம் என்பது மாதவிடாய் இரத்தப்போக்கு போலவே இருக்கும். ஒரு வேலை அது இன்னும் தீவிரமானதாக இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து உடனடியாக இது குறித்து பேசவும்.
பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கின் போது ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டாலோ, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது இதயத்தின் படபடப்பு அதிகரித்தாலோ அவளுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை.
இரத்தப்போக்கு குளிர் அல்லது காய்ச்சலை ஏற்படுத்தினாலோ அல்லது வாந்தி, குமட்டல் போன்றவற்றை அனுபவித்தாலோ நிபுணர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
ரெக்டம் மற்றும் பெண்ணுறுப்பிற்கு இடைப்பட்ட பகுதியான பெரினியத்தில் வீக்கம் காணப்படும் சூழ்நிலையில் மருத்துவ உதவி அவசியம். சில நேரங்களில், பெண்ணுறுப்பு தானாக வீங்கி, அதிலிருந்து வலி ஏற்படும். இது போன்ற நேரங்களிலும் ஒரு பெண் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சுகப்பிரசவம் ஆன பெண்ணுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை விட சிசேரியன் செய்த பிறகு ஏற்படும் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு பொதுவாக அதிகப்படியானதாக இருக்கும். இருப்பினும் இந்த இரத்தப்போக்கு தொடர்ந்து அதிகரித்தும், கட்டுப்படுத்த முடியாததாகவும் இருந்தால், இது பிரசவத்திற்குப் பிந்தைய உதிரப்போக்காக இருக்கலாம்.
இது போன்ற இரத்தப்போக்கு பொதுவாக கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியை இணைக்கும் இடம் அல்லது கருப்பை வாய் அல்லது பெண்ணுறுப்பு கிழிந்து போன இடத்தில் இருந்து ஏற்படும். அரிதானதாக இருந்தாலும், பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு அதிகப்படியாக இருக்கும்போது அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது தாயின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பிரசவத்திற்குப் பிந்தைய உதிரப்போக்கிற்கு சிகிச்சை அளிக்க உடனடி மருத்துவ உதவி தேவை என்பதே இதன் அர்த்தம்.
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips





கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்(Kiwi fruit benefits during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Poppy Seeds During Pregnancy: Meaning, Benefits & risks in Tamil

கர்ப்ப காலத்தில் முதுகுவலி எப்போது தொடங்குகிறது? (When Does Back Pain Start In Pregnancy In Tamil)

புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பராமரிப்பு குறிப்புகள்

மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்

கர்ப்பத்தின் போது சப்ஜா விதைகள் உட்கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(Sabja Seeds during Pregnancy: Benefits and Side Effects In Tamil)