


Nutrition Tips
27 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுவதும், எந்த உணவு நமக்கு சரியானது என்று விழிப்புணர்வோடு இருப்பதும் முக்கியமானதாகும். கிவி பழம் சைனீஸ் கூஸ்பெர்ரி வகையைச் சேர்ந்தது ஆகும். இதில் மினரல்கள் மற்றும் விட்டமின்கள் மிகுதியாக உள்ளன.
கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கான மிக சிறந்த பழம் கிவி ஆகும். ஒருவேளை கிவி உங்களுக்கு அலர்ஜியை தருகிறது என்றால் மட்டும் தவிர்க்கலாம். போலன் மற்றும் லேடக்ஸ் போன்றவை யாருக்கெல்லாம் அலர்ஜியாக இருக்கிறதோ, அவர்களுக்கு கிவி ஒத்து வராது. சருமத்தில் அரிப்பு, உதடு வீக்கம் மற்றும் இதர அலர்ஜி அறிகுறிகள் பொதுவானதாகும். கிவி பழத்தில் விட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, ஃபோலேட், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர் போன்றவை இருக்கின்றன. இதில் சர்க்கரை சத்து குறைவாகும். ஆகவே ஆரோக்கியமான ஸ்நாகஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 முதல் 3 கிவி பழங்களை சாப்பிடுவது பாதுகாப்பானதுதான்.
கர்ப்ப காலத்தில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையிலும் சரியான உணவை எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும். கர்ப்ப காலத்தில் தினசரி கிவி பழம் சாப்பிடுவதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தின் முதல் டிரைமெஸ்டரில் கிவி பழம் சாப்பிடுவதால் கீழ்காணும் ஊட்டச்சத்துகள் உள்பட நிறைய பலன்கள் கிடைக்கும்:
(Folate) ஃபோலேட் சத்து மிகுதியான அளவில் உள்ளது. குழந்தைக்கு நரம்பியல் ரீதியான கோளாறு ஏற்படுவதைத் தடுக்க இந்த சத்து மிக முக்கியமானதாகும். கர்ப்பத்திற்கு முன்பாகவும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் போதுமான அளவில் இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட ஃபோலிக் ஆசிட் அளவு 400 mcg ஆகும். ஒவ்வொரு கிவி பழத்திலும் 10 முதல் 20 mcg அளவு ஃபோலிக் ஆசிட் உள்ளது. ஆகவே, தினசரி ஒன்றிரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது பலனுள்ளதாக அமையும்.
(Vitamin C) விட்டமின் சி என்பது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ள வகை செய்யும். கிவி பழத்தில் 70 mcg அளவுக்கு விட்டமின் சி உள்ளது. கர்ப்பிணி பெண்ணின் உடல் தினசரி இரும்புச்சத்தை உறிஞ்ச வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் இரும்புச்சத்து அவசியமாகும். குழந்தைக்கு நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ் உருவாக இரும்புச்சத்து உதவியாக இருக்கும். இந்த ரசாயன கடத்திகள் இல்லாமல் உடல் இயங்காது.
கிவி பழத்தில் கால்சியம் சத்து கொஞ்சம் இருக்கிறது. தாய் மற்றும் குழந்தையின் எலும்புகள் பலமாக இருப்பது அவசியமாகும். கிவி பழத்தில் 20 முதல் 25 mcg அளவுக்கு கால்சியம் இருக்கிறது. லேக்டோஸ் (பால்) பொருட்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுகின்ற மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
கிவி பழத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நார்ச்சத்து உள்ளது. கிவி பழத்தில் 2g அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. இது மலக்குடல் நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும். கர்ப்ப காலத்தில் மலக்குடல் சார்ந்து பல விதமான பிரச்சினைகள் உண்டாகின்றன. மலம் இறுகி வெளியேறலாம் அல்லது திரவம் போல வெளியேறலாம். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக இவ்வாறு நடக்கும்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது டிரைமெஸ்டரில் விட்டமின் ஏ, ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து, ஐயோடின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்கும். கிவி பழத்தில் 2 mcg அளவுக்கு விட்டமின் ஏ இருக்கிறது. இதர ஊட்டச்சத்துகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
கிவி பழத்தில் விட்டமின் இ சத்து மிகுதியான அளவில் உள்ளது. தாய்க்கும், குழந்தைக்கும் செல் பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கிறது. அதுமட்டுமல்ல, சரும ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் இரண்டாம் நிலை ஆரோக்கிய மாற்றங்கள் இந்த மூன்றாவது அத்தியாய காலத்தில் தான் பெண்களுக்கு நிகழும். குறிப்பாக, கர்ப்ப கால நீரிழிவு நோய் இதில் முக்கியமானதாகும். கிவி பழத்தில் குளுகோஸ் சத்து மிக குறைவு. அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு உள்ளது. உடலுக்கான சர்க்கரை வேட்கையை குறைக்க இந்தப் பழத்தை சாப்பிடலாம்.
கிவி பழத்தில் விட்டமின் கே சத்து உள்ளது. இது புண்களை ஆற்றவும், இரத்தக் கட்டுக்களை தடுக்கவும் உதவுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி சிலருக்கு கிவி பழம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஒன்றிரண்டு முறை கிவி பழம் சாப்பிட்ட பிறகு இந்த அலர்ஜி உண்டாகலாம். அல்லது ஒரு நபர் ஏற்கனவே லேடக்ஸ் அல்லது போலன் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் என்றால் அவர்களுக்கு கிவி பழமும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
வாய் மற்றும் தொண்டை பகுதியில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு தென்பட்டால் கிவி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். தொடர்ந்து சாப்பிட்டால் அழற்சி உண்டாகும் அல்லது வலி ஏற்படும் அல்லது வாந்தி வரும்.
வாய் சார்ந்த அலர்ஜிகள் சில சமயம் உருவாகும். வாய் கூச்சம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். சிலருக்கு ஆஸ்துமா, சருமத்தில் படை போன்ற தொந்தரவுகள் வரும்.
கிவி பழத்தில் விட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளது. ஆனாலும், இது கனையத்தை பாதிக்கக் கூடியது ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகப்படுத்தி, கனையத்தை பாதிக்கக் கூடும்.
பூஞ்சைக்கு எதிரான மருந்துகளை உட்கொள்ளும்போது கிவி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை சேர்த்து உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உங்களுக்கு தெரியாது என்றாலும், கிவி பழத்தை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் முன்பாக ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் OBGYN நிபுணர் ஆகியோரை ஆலோசிக்கவும். கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறப்பானது எது என்பது குறித்து அவர்கள் தெளிவான விளக்கம் அளிப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சமயத்தில் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு உதவிடும் பல ஊட்டச்சத்துகள் கிவி பழத்தில் உள்ளன. எனினும், எந்தவொரு உணவும் அளவுக்கு மிஞ்சினால் அது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, ஆரோக்கியமான உணவு அல்லது ஆரோக்கியமற்ற உணவு என எதுவாக இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடவும்.
Kiwi in pregnancy in tamil, uses of kiwi during pregnancy in tamil, side effects of kiwi during pregnancy in tamil, Kiwi fruit benefits during pregnancy In English, Kiwi fruit benefits during pregnancy In Hindi, Kiwi fruit benefits during pregnancy In Telugu, Kiwi fruit benefits during pregnancy In Bengali
Yes
No

Written by
Ravish Goyal
Official account of Mylo Editor
Read MoreGet baby's diet chart, and growth tips







கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Poppy Seeds During Pregnancy: Meaning, Benefits & risks in Tamil

கர்ப்ப காலத்தில் முதுகுவலி எப்போது தொடங்குகிறது? (When Does Back Pain Start In Pregnancy In Tamil)

புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பராமரிப்பு குறிப்புகள்

மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்

கர்ப்பத்தின் போது சப்ஜா விதைகள் உட்கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(Sabja Seeds during Pregnancy: Benefits and Side Effects In Tamil)

கர்ப்பத்தைத் தவிர்க்க பாதுகாப்பான நாட்களை எவ்வாறு கணக்கிடுவது?(How to Calculate Safe Days to Avoid Pregnancy? In Tamil)