


Pregnancy
17 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் மனஅழுத்தம் அல்லது பதட்டம் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவராக இருப்பின், உங்கள் கர்ப்பக்காலம் கற்பனை செய்திட முடியாத அளவுக்கு கடினமாக இருக்கலாம். கர்ப்பக்காலத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு இணையாக மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். நிலையான மன ஆரோக்கியம் கர்ப்பக்காலம் முழுவதிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அம்மாவின் சிறந்த மனநிலை குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். கர்ப்பக்காலத்தில் அம்மாக்களின் மன ஆரோக்கியம் மற்றும் உணர்வுகள் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
கர்ப்பக்காலத்தில் மூட் ஸ்விங் ஏற்படுவது மிக சாதாரணம். ஆனால் உங்களுக்கு பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை அல்லது பதட்டம் இருக்கும் பட்சத்தில், இது தீவிரமான பிரச்சனையாக இருக்கலாம். கர்ப்பக்கால மனஅழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் சில தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில கர்ப்பிணிகள் பின்வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளலாம்.
இனி ஏற்படவிருக்கும் பிரச்சனைகளை எண்ணிய கவலையே பதட்டம் எனப்படுகிறது. ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியம், அம்மா எனும் புதிய மாற்றம், குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களை எண்ணி ஏற்படும் கவலையாகவும் இருக்கலாம். இந்த எல்லா கவலைகளும், பயங்களும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். இதற்கு நமக்கு பிரத்யேகமான பரிமாரிப்பு அவசியம்.
மனஅழுத்தம் என்பது வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து தாழ்வாக அல்லது சோகமாக அல்லது எரிச்சலாக உணருதலே ஆகும். சில பெண்கள் கர்ப்பக்காலத்திற்கு முன்பே கூட மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால், ஒரு கர்ப்பிணி, தான் கர்ப்பமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக இல்லை அல்லது வீட்டில் அல்லது வேலையில் ஏதாவது பிரச்சனை என்றாலும் இவ்வாறு ஏற்படலாம்.
இது திடீர் பயம் சில தீவிரமான உடல் நிலைகளுக்கு வழிவகுப்பதினால் ஏற்படுகிறது.
உண்ணுதல் கோளாறு இருக்கும் ஒருவர் கூடுதலாக உண்பார்கள் அல்லது சுத்தமாக சாப்பிடமாட்டார்கள்.
சில செயல்களை தவிர்க்க முடியாமல் மறுப்படி மறுப்படி என பலமுறை செய்தல்.
ஒருவேளை நீங்கள் கவலையாக அல்லது மனஅழுத்தமாக உணர்ந்தால், உங்கள் மருத்துவர் அல்லது தெரிப்பிஸ்டை அணுகுங்கள். நீங்கள் எவ்வளவு விரைவாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில், அம்மாவின் மன ஆரோக்கியம் மிக முக்கியமானது. உங்கள் மருத்துவ வரலாற்றை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்துக்கொள்தல் அவசியம், அப்போதுதான் மருத்துவரால் கர்ப்பக்காலத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் அல்லது தூண்டப்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்துக்கொண்டு அதற்கு தக்க சிகிச்சை வழங்கமுடியும். இதனால் சில அம்மாக்கள் குழந்தைக்கு அல்லது அம்மாவின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தேவையில்லாத மருந்துகள் அல்லது மது அருந்துதல் போன்றவற்றை செய்யத் துவங்கும் அபாயமும் ஏற்படலாம். முடிந்தளவு உங்களுக்கு மன ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட்டால் உடனுக்குடன் மருத்துவரை அணுக முயற்சித்திடுங்கள்.
மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிகிச்சை பின்வரும் வடிவில் வழங்கப்படலாம்.
பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து மருந்துச்சீட்டின் படி மருந்து உட்கொள்வதையே பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தீடீரென மருந்து உட்கொள்வதை நிறுத்தக்கூடாது. ஏனெனில், மருந்தை நிறுத்துவதால் ஏற்படும் தாக்கம் குழந்தை மற்றும் அம்மாவையும் பாதிக்கலாம். எப்போது மருத்துவர்களுக்கு உங்களது முழு மருத்துவ அறிக்கையையும் வழங்குங்கள். ஏனெனில், சில மருந்துகளுக்கு தீவிர பக்க விளைவு ஏற்படலாம் அல்லது அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம் அல்லது பிறழ்வுகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏதேனும் மன ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது கர்ப்பம் தரிக்க திட்டமிட்டாலோ உடனடியாக உங்கள் மருத்துவருக்கு தெரியப்படுத்துங்கள். இதனால் எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதை தவிர்க்கும் படியான மருந்துதான என சோதித்து மருத்துவர் உங்களுக்கு அவற்றை பரிந்துரைப்பார்.
உங்கள் மருத்துவருடன் மனம் விட்டு பேசுவது உங்களுக்கு பெரும் உதவி புரியும். உங்களுக்கும் மற்றும் உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பற்றிய யோசனையை பெறுவார்கள். உங்கள் மன அழுத்தத்தை ஏற்றிக்கொண்டே போகாதீர்கள், ஏனெனில், இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் மற்றோரு கர்ப்பிணி பெண்ணுடனும் பேசி பார்க்கலாம்; உங்கள் பிரச்சனைகளை பகிர்தல் உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பெரிய ஆதரவை வழங்கும். உங்கள் கர்ப்பத்தைப் பற்றி எப்போதெல்லாம் நீங்கள் மனஅழுத்தமாகவும் அல்லது பதட்டமாகவும் உணர்கிறீர்களா அல்லது வேறேதேனும் பிரச்சனைகள் ஏற்படும் எனில் உங்கள் குடும்பத்துடன் அல்லது பெற்றோருடன் பேச முயற்சி செய்யுங்கள், அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு ஆறுதல் கூறி உங்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும். இது உங்களுக்கு ஏற்படும் பதட்டம் அல்லது மனஅழுத்தத்தை குறைக்க உதவும்.
சில அடிப்படை பயிற்சிகள், யோகா அல்லது தியானம் உங்களது மனஅழுத்தத்தை குறைக்க உதவும். எப்போதெல்லாம் நீங்கள் பதட்டமாக உணர்கிறீர்களோ அப்போது நடைப்பயிற்சி, வீட்டுவேலை செய்தல் அல்லது உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது என உங்கள் சில செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் பதட்டம் அல்லது மனஅழுத்தம் ஏற்படுகிறதோ, உடனடியாக இழுத்து மூச்சு விட்டு உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் பேசுங்கள்; அவர்களுடன் உங்கள் பிரச்சனைகளை பகிர்வது உங்களை நிம்மதியாக உணரவைக்கும்.
விசித்தரமாக இருந்தாலும் உண்மையே, டயட் மற்றும் உணவு பழக்கங்கள் கர்ப்பக்காலத்தில் உங்கள் மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மாற்ற உதவும். கலர்ஃபுல் உணவு கொண்ட பிளேட் எப்போதுமே உங்களை ஊக்கப்படுத்தும் ஒரு அருமருந்து. சிறந்த உணவு ஒருவரது எண்டோர்பின்ஸ், டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற ஹாப்பி ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும். இவை அனைத்தும் கர்ப்பக்காலத்தில் சரியான உணவு வகையை உண்பதால் அதிகரிக்கக்கூடியவை. ஆகவே, சிறந்த உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதில்லை கர்ப்பக்காலத்தில் உங்கள் . மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்பது அசைக்கமுடியாத உண்மை.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips


கர்ப்பமான 8 வாரங்களில் வயிறு வெளியே தெரியுமா?

உங்கள் குழந்தையை ஈரம் மற்றும் தடிப்புகள் இல்லாமல் வைத்திருப்பதில் துணி டயப்பர்(cloth diapers) எவ்வளவு உதவிகரமானதாக இருக்கும்?

கர்ப்ப காலத்தில் டைபாய்டு: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | Typhoid In Pregnancy: Symptoms & Treatment in Tamil

கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை: பாதுகாப்பானதா இல்லையா?

9 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?

கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதா? | Is Ghee Good During Pregnancy in Tamil