


Diet & Nutrition
16 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலம் ஆகும். இந்தக் காலத்தில் அவர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிந்து இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடலாமா கூடாதா என்பது கர்ப்பிணிகள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி தான். இந்தக் கட்டுரையின் மூலம் அதற்கான பதில் மற்றும் கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் மற்றும் தொடர்புடைய ஆபத்துக்கள், பக்க விளைவுகள் மற்றும் அலர்ஜி குறித்து விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
அதோடு, குழந்தையின் வளர்ச்சியை இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிந்து கொள்வோம். இந்தப் பதிவின் இறுதியில், கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லதா என்பது குறித்த முழு புரிதல் உங்களுக்கு கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது ஒரு விவாதத்திற்கு உரிய தலைப்பு ஆகும். சில நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் உண்பது தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பானது என்றும் நம்புகின்றனர். ஆனால், ஒரு சில நிபுணர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படும் என்று நம்புகின்றனர்.
வேர்க்கடலை ஒரு பொதுவான அலர்ஜென் ஆகும். அதனால் கர்ப்பிணிகள் வேர்க்கடலை உள்ள உணவுகளைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை உண்பதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்டிப்பாக அலர்ஜி ஏற்படும் என்று எந்த ஒரு சான்றும் இல்லை. சொல்லப் போனால், கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் வையிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.
அதனால், உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி இருந்தால், அல்லது கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது குறித்து குழப்பமாக இருந்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. அவர்களுக்கு உங்கள் முழு மருத்துவ வரலாறும் தெரியும் என்பதால், உங்களை சரியாக வழிநடத்துவார்கள். வேறு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் அல்லது சிகிச்சை தேவைப்பட்டாலும், அதற்கேற்றவாறு பரிந்துரை செய்வார்கள்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடக்கும். அதில் சில முக்கியமானவை பின்வருமாறு:
இதில் புரதம் மற்ற ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் இ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் அதிக கேலரிகள் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைத்துவிடும். இது எடை அதிகரிப்பை தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தையும் இது குறைக்கிறது. வேர்க்கடலையில் பைட்டோகெமிக்கல்ஸ் உள்ளன. இது கருவின் வளர்ச்சி மற்றும் பிரசவிப்பதிலும் உதவியாக இருக்கும்.
வேர்க்கடலை, சொல்லப் போனால், எல்லா வகையான் நட்ஸ்களும் இரும்புச் சத்து நிறைந்து உள்ளதாக இருப்பதால், இரத்த சோகை போன்ற இரத்தம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. டெலிவரி சமயத்தில் இரத்த சோகை இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடக் கூடும்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், இதில் ஒற்றைநிறைவுறா கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு, குறிப்பாக ஒலீயிக் அமிலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அது ஒரு வகையான அலர்ஜிக் ரியாக்ஷனை தூண்டி விடும். வேர்க்கடலை அலர்ஜி என்பது குழந்தைகள் மற்றும் பெரியர்களிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான அலர்ஜி ஆகும். சில சூழ்நிலைகளில் இந்த அலர்ஜிகள் கடுமையாகவும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.
அதனால், வேர்க்கடலை அலர்ஜி உள்ளவர் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லதா என்று குழப்பமடையக் கூடும்.
பாதுகாப்பாக இருக்க, வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்த கர்ப்பிணிப் பெண்கள் இதனை சாப்பிடாமல் தவிர்ப்பது தான் நல்லது. இது நேரடியாக வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்காது என்றாலும், தாய்க்கு மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கக் கூடும். இதன் காரணமாக பிரசவம் சிக்கலாகக் கூடும். அதனால் நேரடியாக வேர்க்கடலை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதோடு, வேர்க்கடலை கலந்துள்ள மற்ற உணவுப் பொருட்களையும் தவிர்த்து விடுவது நல்லது.
வேர்க்கடலையானது பார் சாக்கலேட், கேண்டீஸ், கிரனோலா பார்ஸ், என பல வகையான சாக்லேட்களில் சேர்க்கபடுவதுண்டு. அதோடு ஆசிய உணவுகளில், இது பல உணவுகளில் சாஸ்களில் அடிப்படையாக சேர்க்கப்படும்.
எனவே, அலர்ஜி உள்ளவர்கள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இருப்பினும், சில சூழலில் இதனை சாப்பிடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வேர்க்கடலை அலர்ஜி இருந்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும் இல்லையென்றால், அவர் வேர்க்கடலையை தாராளமாக சாப்பிடலாம். ஒவ்வாமைக்கு வலுவான பரம்பரை கூறு இருப்பதாக நீண்ட காலமாக கருதப்பட்டது. இருப்பினும், அது அவ்வாறு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
முடிவாக சொல்ல வேண்டுமெனில், கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் வேர்க்கடலை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது தான் என்று சொல்லலாம். இருந்தாலும், அலர்ஜி உள்ளவர்கள் இதனை முழுவதுமாக தவிர்ப்பதே நல்லது. வேர்க்கடலை அலர்ஜி உள்ள குடும்ப வரலாறு கொண்ட கர்ப்பிணிப் பெண்கள், தங்களுக்கு அத்தகைய அலர்ஜி இல்லையென்றால், கண்டிப்பாக வேர்க்கடலை சாப்பிடலாம். பல சூழலில், உங்கள் உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்த எண்ணினால் அல்லது கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
இறுதியாக, வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை உபயோகித்து தயாரிக்கப்பட்ட உணவுகளில் அதிக அளவில் சோடியம், கொழுப்பு மற்றும் கேலரி இருப்பதால், கர்ப்ப காலம் அல்லது எந்த காலமாக இருந்தாலும் மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலம் தொடர்புடைய ஹெல்த் கேர் மற்றும் செல்ஃப் கேர் குறித்த டிப்ஸ் அல்லது உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை வளர்ப்பது குறித்த ஆலோசனைகள் போன்றவற்றிற்கு மைலோ ஃபேமிலி வெப்சைட்டை பார்வையிடவும்.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











9 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?

கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதா? | Is Ghee Good During Pregnancy in Tamil

கர்ப்ப காலத்தில் காளான்கள்: வகைகள், நன்மைகள் & அபாயங்கள்
பெண்களுக்கு ஹெப்படைடிஸ் சி அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை

கர்ப்ப காலத்தில் செட்டிரிசைன்: பொருள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Cetirizine in Pregnancy: Meaning, Risks & Side Effects in Tamil

கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அபாயங்கள் & பக்க விளைவுகள்