


Baby Bump
17 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பமாக இருக்கும் போது தோன்றக் கூடிய அறிகுறிகள், குறிப்பாக குமட்டல் வருவது போன்றவை தவிர்க்க முடியாததென்றாலும், உங்கள் மேடிட்ட வயிறு வெளியே தெரிந்து, நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து எப்போது எல்லாருக்கும் தெரிய வரும் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.இச்சமயத்தில் எப்பொழுது வயிறு வெளியே தெரியும் என்று எண்ணுவது இயல்பானது தான். அது நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டேர்கள் என்று பெருமையுடன் உலா வருவதகு இருக்கலாம் அல்லது இன்னும் சில வாரங்களுக்கு உங்கள் கர்ப்பத்தை மறைத்துக் கொள்வவதற்காகவும் இருக்கலாம். குறிப்பிட்ட மைல்கற்கள் இல்லையென்றாலும் பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது வயிறு பெரிதாகும். பெரும்பாலும் சுமார் 20 வாரங்களில், கர்ப்பிணிப் பெண்களின் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும். எனினும், உங்களுக்கு அவ்வாறு இல்லாமலும் போகலாம். ஏனெனில், ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் தனித்துவமிக்கது, ஒவ்வொருவருமே தனித்துவமிக்கவர்கள். கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலங்களில், வயிறு வெளியே தெரியாது. ஆயினும், 8 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வயிறு வெளியே தெரியுமா? இதற்கு விடை தெரிந்து கொள்வதற்கு, வயிறு வெளியே தெரியும் காலவரிசையை பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.
நீங்கள் எத்தனை முறை கர்ப்பமாக ஆகியிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் வயிறு எவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியும் என்பது இருக்கிறது. எனினும், நீங்கள் முதன் முறையாக கர்ப்பமாக இருந்தால், பெரும்பாலும், முதல் மும்மாதங்களில் உங்கள் வயிறு வெளியே தெரியாது. இரண்டாவது மும்மாதங்களில் தான், உங்கள் வயிறு மேடிட்டிருப்பதின் முதல் அறிகுறிகள் தோன்றும். உங்கள் வயிறு சிறிதாகவும், நீங்கள் குறைவான எடையுள்ளவராகவும் உள்ள பட்சத்தில், 12 வாரங்களில் உங்கள் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒரு வேளை நீங்கள் அதிக எடையுள்ளவராக இருந்தால், 16 வாரங்களில் வயிறு வெளியே தெரியும். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் போது, 8 வாரங்களில் உங்கள் வயிறு வெளியே தெரிவதில்லை.
கர்ப்பமான 8 வாரங்களில் கூட உங்கள் கர்ப்பப்பை மிகச் சிறிதாகத் தான் இருக்கும். எனவே, நீங்கள் அதை உணர்வது அவ்வளவு எளிதாக இருக்காது. எனினும், இரண்டாவது டிரைமெஸ்டர் நெருங்கும் போது உங்கள் கர்ப்பப்பை வளர்ச்சியடைந்து, உங்கள் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
நீங்கள் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தால், உங்கள் வயிறு சீக்கிரமே தெரிய ஆரம்பிக்கும். உங்கள் முதல் கர்ப்பத்திற்கு பின், தற்போது முதல் மும்மாதங்களிலேயே உங்கள் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஏனென்றால் முதல் முறை கர்ப்பமாக இருந்த போதே, உங்கள் அடிவயிற்றுத் தசைகள் விரிவடைந்திருக்கும், சில சூழ்நிலைகளில், அவை பழையபடி தங்கள் அசல் அளவிற்கு திரும்ப முடியாமல் போகக் கூடும். இதன் விளைவாக, 8 வாரங்களிலேயே உங்கள் கர்ப்ப வயிறு தெரிய ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு மாதிரியான மனநிலையில் உள்ளவர்கள் எனினும், உங்கள் வயிறு வெளியே தெரியாதது குறித்து நீங்கள் கவலையடையக் கூடும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதையும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் நீங்கள் விரும்புவது நியாயமானது தான். எனினும், வயிறு வெளியே தெரிய தாமதமாவது பிரச்சனையிருப்பதை குறிக்கிறது. உங்கள் வயிறு வெளியே தெரியும் காலமென்பது, பல காரணிகளை சார்ந்துள்ளது, அவை உங்கள் உடலமைப்பு, கர்ப்பமாவதற்கு முன் இருந்த உங்கள் உடற்கட்டு, மற்றும் உங்கள் கர்ப்பப்பை இருக்குமிடம், அதன் வடிவம் போன்றவையாகும். கண்ணாடி முன் நின்று உங்கள் கர்ப்ப வயிற்றை நீங்கள் பார்த்து, உங்கள் ஆரோக்கியத்தை பற்றித் தெரிந்து கொள்வதை விடவும் உங்கள் மருத்துவரின் பரிந்துரைகளை பின்பற்றவும். ஆரோக்கியமான, சிறிய குழந்தையை பெற்றெடுப்பது கூட சாத்தியமானது தான். ஆனாலும், உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் மருத்துவரை உடனடியாக கலந்தாலோசிக்கவும்.
இரட்டைக் குழந்தைகளோ, அல்லது அதற்கும் மேற்பட்ட கருவோ உங்கள் கர்ப்பத்தில் இருந்தால், உங்கள் முதல் டிரைமெஸ்டர் முடியும் முன்னரே உங்கள் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஏனென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை தாங்குவதற்கு ஏற்றாற் போல் உங்கள் கர்ப்பப்பை விரிவடைந்து விடும்.
ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறானது. சிலருக்கு வயிறு உங்களுக்கு முன்னரே சீக்கிரமாகவே வெளியே தெரிந்து விடலாம் அல்லது அவர்களுக்கு முன்னமே உங்களுக்குத் தெரிந்து விடலாம். மேலும், வயிற்று உப்பிசம் காரணமாகவும், சீக்கிரமாகவே கர்ப்ப வயிறு வெளியே தெரியலாம். ஹார்மோன்கள் அதிகரிப்பின் காரணமாக, உங்கள் உடல், திரவத்தினை தக்க வைத்திருக்கக் கூடும். இதன் விளைவாக, வயிற்று உப்பிசம் ஏற்பட்டு, அதனை நீங்கள் கர்ப்ப வயிறாக தவறாக நினைத்திருக்க வாய்ப்புள்ளது.
கூடுதலாக, உங்கள் வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும் போது, உங்கள் கர்ப்பப்பையின் வடிவமும் பாதிக்கப்படுகிறது. ஒரு வேளை உங்கள் கர்ப்பப்பையானது கர்ப்ப காலத்தின் முதல் சில மாதங்களின் போது பின்னோக்கி சாய்ந்திருந்தால், கர்ப்ப வயிறு தெரிவதற்கு நீண்ட காலம் ஆகலாம். கூடுதலாக, ஒரு வேளை உங்கள் கர்ப்பப்பையானது முன்னோக்கி சாய்ந்திருக்கும் பட்சத்தில், சீக்கிரமாகவே உங்கள் கர்ப்ப வயிறு தெரிய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாயு மற்றும் வயிறு உப்பசத்தை எப்படி கையாள்வது ?
கர்ப்ப வயிறு தெரியாமல் இருந்து, பின் வயிறு மேடிட்டு பெரிய வயிறாக தெரிவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சமயங்களில் கர்ப்ப வயிறு வெளியே தெரியுமென்பதை நினைவில் வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள் ஒரு வேளை இரட்டைக் குழந்தைகளை சுமந்து கொண்டிருந்தாலோ, அல்லது இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்திருந்தாலோ, அல்லது இரண்டாம் முறையாக கர்ப்பத்தில் இரட்டையர்களை சுமந்து கொண்டிருந்தாலோ, அது உங்கள் கர்ப்ப வயிற்றின் வளர்ச்சியை பாதிக்கிறது. உங்கள் 8-வாரகால கர்ப்பத்தின் வளர்ச்சி குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். பல பெற்றோர்கள் இது தான் தங்கள் வாழ்நாளின் அருமையானதொரு காலகட்டம் என்று கூறுகிறார்கள், எனினும் திரும்பிப் பார்ப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்து விடுகிறது. மேலும், உங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் உடற்கட்டையும் அனுபவித்து மகிழுங்கள்.
Tags
8 Weeks Pregnant Bump in English, 8 Weeks Pregnant Bump in Bengali
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips







உங்கள் குழந்தையை ஈரம் மற்றும் தடிப்புகள் இல்லாமல் வைத்திருப்பதில் துணி டயப்பர்(cloth diapers) எவ்வளவு உதவிகரமானதாக இருக்கும்?

கர்ப்ப காலத்தில் டைபாய்டு: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | Typhoid In Pregnancy: Symptoms & Treatment in Tamil

கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை: பாதுகாப்பானதா இல்லையா?

9 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?

கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதா? | Is Ghee Good During Pregnancy in Tamil

கர்ப்ப காலத்தில் காளான்கள்: வகைகள், நன்மைகள் & அபாயங்கள்