
தலசீமியா என்பது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வரக்கூடிய ஒரு வகையான பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். தலசீமியா பாதிப்பு கொண்டோரின் உடல் வழக்கத்தை விட குறைவான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்கிறது. ஹீமோகுளோபின் என்பது நமது இரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதியாகும், இது நமது திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.
தலசீமியா தீவிரமற்ற, மிதமான அல்லது தீவிரமானதாக இருக்கலாம். தீவிரமற்ற தலசீமியாவுக்குப் பொதுவாக சிகிச்சை தேவையில்லை. ஆனால் மிதமான மற்றும் தீவிர தலசீமியானது இரத்த சோகை (குறைந்த சிவப்பு இரத்த அணுக்கள்), சோர்வு மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தலசீமியா கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கருச்சிதைவு, குறைப்பிரசவம் அல்லது எடை குறைவான குழந்தை பிறத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, கர்ப்ப காலத்தில் தலசீமியா பரிசோதனை செய்து இதன் தாக்கம் குறித்து அறிய மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோயாளிக்கு சிகிச்சை தேவையா என்பதைத் தீர்மானிக்கவும் இது உதவும்.
பரம்பரை இரத்தக் கோளாறான தலசீமியா, லேசானது முதல் தீவிர இரத்த சோகையை ஏற்படுத்தக் கூடியது. தலசீமியாவில் இரண்டு வகைகள் உள்ளன: ஆல்பா மற்றும் பீட்டா. ஆல்பா தலசீமியா மிகவும் பொதுவானது மற்றும் பொதுவாக லேசான இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. பீட்டா தலசீமியா மிகவும் தீவிர இரத்த சோகையை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஒருவருக்கு பீட்டா-தலசீமியா இருந்தால் அவர்கள் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் தலசீமியா நோயின் கேரியராக இருந்தால், கருவும் அதைக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தின் முதல் பத்து வாரங்களுக்குள் தலசீமியா இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் அவசியமானது.
கர்ப்ப காலத்தில் சிக்கிள் செல் மற்றும் தலசீமியா இருப்பது இரத்த பரிசோதனைகள் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. முடிவுகள் பாசிடிவாக இருந்தால், கருவில் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தலசீமியாவைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் சிக்கிள் செல் பரிசோதனையும் மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை.
ஹீமோகுளோபினுடன் தொடர்புடைய நிலைகள் பொதுவாக உள்ள பகுதிகளில், சிக்கிள் செல் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நோய்கள் அரிதாக இருக்கும் பகுதிகளில், குடும்ப வரலாறு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. சிக்கிள் செல் ஆபத்து அறியப்பட்டால், ஸ்கிரீனிங் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு பெண் கர்ப்பம் ஆவதற்கு முன்னரே, நிலையின் தீவிரம் மற்றும் குழந்தையின் மீது அதன் விளைவுகளை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடும். சில தலசீமியா பரிசோதனைகள் பின்வருமாறு:
இந்த சோதனை கர்ப்பத்தின் 16-வது வாரத்தில் செய்யப்படுகிறது. இதில் கருவைச் சுற்றியுள்ள திரவத்தின் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
இந்த சோதனை கர்ப்பத்தின் 11 வது வாரத்தில் நடத்தப்படுகிறது, இந்த பரிசோதனைக்கு நஞ்சுக் கொடியின் ஒரு சிறிய துண்டு அகற்றப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் கோளாறு மற்றும் அதன் வகையைக் கண்டறிய HbA2 சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில், சோதிக்கப்படும் ஹீமோகுளோபின் A2 சரிபார்க்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் HbA2 பரிசோதனையில் HbA2 அளவு அதிகரித்துள்ளதாக அறியப்பட்டால் தலசீமியா உள்ளது என்று பொருளாகும். எனவே,கர்ப்பிணிப்,பெண்கள் இச் சோதனையை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. சோதனை முடிவுகள் வெளிவர ஒருவார காலம் ஆகக் கூடும் மற்றும் முடிவுகள் பாசிடிவாக இருந்தால், மரபணு ஆலோசனை வழங்க ஒரு சிறப்பு செவிலியர் பரிந்துரைக்கப்படுவார்.
தலசீமியா மைனர் நிலையில், தாய் கொண்டிருக்கும் இரத்த சோகை கரு உயிர்வளி பற்றாக்குறைக்கு ( ஃபீட்டல் ஹைபோக்ஸியா) வழிவகுக்கும். இதனால் கருப்பையக வளர்ச்சி தடை (ஐயூஜிஆர்) ஏற்படும். ஐயூஜிஆர் என்பது கரு குறைந்த வளர்ச்சி கொண்ட ஒரு நிலை.
ஐயூஜிஆர் பிரச்சனை ஹீமோகுளோபின் நிலைமைகளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல, வேறு பல காரணிகளும் அதை பாதிக்கின்றன. இதற்கான முறையான சிகிச்சையளிக்கப்பட்டவுடன், கரு எவ்விதப் பிரச்சனையும் இன்றி நன்கு வளர முடியும், மேலும் தலசீமியா மைனர் மற்றும் கர்ப்பம் ஆகியவை கருவுக்குத் தீங்கு விளைவிக்காமல் தொடரலாம். தலசீமியா மைனர் காரணமாக கர்ப்பத்தில் ஆபத்தான எதிர்மறை விளைவுகள் இல்லை என்பதை மற்ற ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படிக்கலாமே! : கர்ப்பகால ஸ்கேனில் சிஆர்எல் (CRL)
• தாயின் உட்சுரப்பு அமைப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
• கர்ப்ப காலத்தில் பெண்ணின் இரத்த அளவு கணிசமாக உயர்கிறது; எனவே, அவ்வப்போது இரத்தஏற்றம் தேவைப்படுகிறது.
• இதயத்தின் அழுத்த அளவைச் சோதிக்க, தொடர்ந்து இதயப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
• மருத்துவரை அணுகி தலசீமியா மைனர் கர்ப்பகால உணவுமுறை குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.
• பொதுவாக, தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண், ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது குழந்தைக்குக் கடுமையான இரத்த சோகை மற்றும் நரம்புக் குழாய் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
கர்ப்ப கால தலசீமியா பரிசோதனைக்கு ₹2,000 முதல் ₹4,000 வரை செலவாகும். மேலும், மற்ற சோதனைகளின் செலவுகளையும் கருத்தில் கொள்வது அவசியம். இரத்தமேற்றுதல் மூலம் தலசீமியாவுக்கு சிகிச்சை அளிக்க விரும்பினால், இரத்தமாற்றத்திற்கு ₹10,000 முதல் ₹15,000 வரை செலவாகும்.
கர்ப்ப கால தலசீமியா குறித்து அறிதல், அதற்கான சோதனைகள் மற்றும் கர்ப்ப கால தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டால் எப்படிப் பராமரிப்பது போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கு மேலே உள்ள தகவல்கள் போதுமான தொடக்கத்தைத் தரும்.
Tags
Thalassemia Test in Pregnancy in Bengali, Thalassemia Test in Pregnancy in Tamil, Thalassemia Test in Pregnancy in
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |