

Pregnancy
10 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
மகப்பேறு அல்லது தாய்ப்பால் ஊட்டுவதற்கு உதவும் வகையிலான பிரா (Nursing bra) வாங்கும் போது, கர்ப்பிணிகள் அல்லது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் பிராவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்களுக்காக நல்ல அளவிலான மற்றும் கச்சிதமாக பொருந்தக் கூடிய மகப்பேறு அல்லது நர்சிங் பிராவைத் தேர்வுசெய்ய உதவும் சில வழிகள் இங்கே உள்ளன!
80% பெண்கள் தவறான அளவு கொண்ட பிராவை அணிகின்றனர். 70% பெண்கள் தங்களுக்கு மிகவும் சிறியதாக இருக்கும் பிராக்களை அணிகின்றனர். 10% பெண்கள் மிகவும் பெரிய பிராக்களை அணிகின்றனர். கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் நிகழ்கிறது. உங்கள் விலா எலும்பு விரிவடைகிறது. உங்கள் எடை அதிகரிக்கிறது. உங்கள் பாலூட்டி சுரப்பிகளில் பால் உற்பத்தி நடைபெறுவதால் உங்கள் மார்பகத்தின் அளவை அது அதிகரிக்கச் செய்கிறது - இவை அனைத்தும் உங்கள் மார்பகங்களின் அளவு அதிகரிக்க காரணமாகின்றன. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அல்லது 3 முதல் 6 மாதங்களில், நீங்கள் வழக்கமாக அணியும் பிரா உங்களுக்கு இறுக்கமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
அதாவது, இதன் அர்த்தம் என்னவென்றால் உங்கள் மார்பக அளவு அதிகரித்துள்ளதால் தற்போது நீங்கள் அணிந்திருக்கும் பிராவின் அளவை மாற்ற வேண்டும் என்பதாகும். இறுக்கமான பிராக்களை அணிவது உங்கள் மார்பகங்களில் உள்ள பால் குழாய்களைத் தடுக்கக் கூடும். மேலும் இது உங்கள் மார்பகங்களில் தொற்று அல்லது மடி வீக்க நோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, சரியான மகப்பேறு அல்லது தாய்ப்பாலூட்ட உதவும் பிரா அளவைத் தேர்ந்தெடுப்பது கர்ப்பிணிகள் அல்லது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சரியான மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் பிராவை அணிவதால் நீங்கள் தேர்ந்தெடுத்த பிராவின் வடிவமைப்பையும் அம்சங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் கர்ப்ப காலத்தில் வெவ்வேறு நிலைகளில் இரண்டு செட் மகப்பேறு பிராக்களை வாங்குமாறு நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். கர்ப்ப காலத்தின் 3 முதல் 6 மாதங்கள் வரை நீங்கள் மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் பிராக்களின் முதல் செட்டை வாங்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால கட்டத்தில் உங்களுக்கான சரியான பிரா அளவைக் கணக்கிட வேண்டுமானால், நீங்கள் கர்ப்பத்திற்கு முன் அணிந்திருந்த பிரா அளவுடன் ஒரு கப் அளவையும் ஒரு பின் அளவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் தற்போதைய பிரா அளவு இருந்தால் 32சி ( 32 என்பது பின் அளவு மற்றும் 'சி' என்பது கப் அளவு) என இருந்தால், உங்கள் புதிய பிரா அளவு 34டி என இருக்கும். உங்கள் கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் உங்கள் இரண்டாவது செட் மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் பிராக்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தையின் வருகைக்குத் தயாராவதற்காக உங்கள் மார்பகங்களில் பால் வரத் தொடங்கியதால் உங்கள் பிராக்களின் அளவு மீண்டும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சரியான பிரா அளவைக் கணக்கிட, உங்கள் கர்ப்பகால பிரா அளவோடு ஒரு கப் அளவைச் சேர்த்து, உங்கள் கர்ப்பகால பிரா அளவிலிருந்து ஒரு பின் அளவைக் கழிக்கவும். எனவே, கர்ப்பமாக இருக்கும்போது 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு உங்கள் பிரா அளவு 34டி என இருந்தால், கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் உங்கள் பிரா அளவு 32டிடி என இருக்கும்.
இருப்பினும், இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் பிராக்களை வாங்குவதற்கு முன், இந்த 5 டிப்ஸ்கள் உங்களுக்கு சரியான அளவிலான மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் பிராவைத் தேர்வுசெய்ய உதவும்.
நீங்கள் உள்ளாடை கடைகளுக்கு மகப்பேறு அல்லது நர்சிங் பிராக்களை வாங்கச் செல்லும்போது, அங்குள்ள ஊழியர்களிடம் சரியான பிரா அளவை தேர்வு செய்ய உங்களுக்கு உதவுமாறு கேட்க வெட்கப்படாதீர்கள். உள்ளாடை கடைகளில் உள்ள பணியாளர்கள் இதுகுறித்து நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள். அதுகுறித்து நல்ல புரிதலும் அவர்களுக்கு இருக்கும். உங்களுக்கு ஏற்ற அளவிலும் பொருத்தமான அளவிலும் மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் நர்சிங் பிராக்களை வாங்கும்போது சரியான முடிவை எடுக்க அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள். வெவ்வேறு வகையான மகப்பேறு பிராக்களை முயற்சித்துப் பார்த்து, முடிவில் ஒரே வகையான மகப்பேறு அல்லது நர்சிங் பிராக்களை வாங்குங்கள். இது நீங்கள் தேர்ந்தெடுத்த மகப்பேறு பிரா அல்லது நர்சிங் பிரா வகை அளிக்கும் வசதிக்கு உங்கள் மார்பகங்களை பழக்கப்படுத்த உதவும்.
மகப்பேறு அல்லது நர்சிங் பிராவின் பட்டைகள் அணியும்போது உங்கள் தோள்களில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உங்களை உணர வைக்க வேண்டும். பிரா பட்டைகள் உங்கள் தோள்களில் பள்ளத்தை ஏற்படுத்தினால் அல்லது உங்கள் தோள்களில் இருந்து கீழே விழுந்தால், அது உங்களுக்கு ஏற்ற அளவு கொண்ட பிரா கிடையாது.
சரியான மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் நர்சிங் பிரா உங்கள் மார்பகங்கள் கப்களுக்குள் வசதியாக பொருந்துவதை உறுதி செய்யும். கப்களுக்கு இடையில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது. மேலும் உங்கள் மார்பகங்கள் பிராவின் மேல் அல்லது பக்கங்களில் இருந்து வெளியேறக் கூடாது. நீங்கள் பிரா அணிந்திருக்கும்போது, உங்கள் முலைக்காம்புகள் நேராக முன்னோக்கி இருக்கும்படியும், பிரா கப்களால் கீழ்நோக்கி அழுத்தப்படாமலோ அல்லது மேல்நோக்கி தள்ளப்படாமலோ இருப்பதையும் உறுதி செய்யவும்.
பிராவின் கப்களுக்கு இடையே உள்ள ஜாயிண்ட் அல்லது பிராவின் மைய முன்பகுதி உங்கள் மார்பில் தட்டையாக இருக்க வேண்டும். மார்பின் மையப் பகுதி உங்கள் மார்பில் அழுத்தம் கொடுப்பதாக நீங்கள் உணர்ந்தால் அல்லது மார்பின் மேல் வசதியாக உட்காருவதை விட உயரமாக இருந்தால், நீங்கள் தவறான மகப்பேறு அல்லது பாலூட்ட உதவும் நர்சிங் பிரா அளவை அணிந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே! - வாஷபிள் நர்சிங் பேட்கள்(washable nursing pads) மார்பகக் கசிவை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்குமா?
மகப்பேறு அல்லது நர்சிங் பிராவில் பேண்ட் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது மார்பகங்களுக்கு உங்கள் பிரா 80 % ஆதரவை வழங்குவதற்கு பொறுப்பாகும். பிரா பேண்ட் உங்கள் உடலில் வசதியாக பொருந்தி, மார்புப் பகுதியைச் சுற்றி நேராக இருக்க வேண்டும். இது உங்கள் தோல் மீது தட்டையாக இருக்க வேண்டும். பிரா பேண்ட் மேல்நோக்கி இருந்தால், நீங்கள் தவறான மகப்பேறு அல்லது நர்சிங் பிரா அளவை அணிந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களுக்கான சரியான மகப்பேறு பிரா அல்லது நர்சிங் பிராவைத் தீர்மானித்த பிறகு, நீங்கள் விரும்பும் ஸ்டைலில் உங்கள் அளவைக் கண்டுபிடிப்பது சில நேரங்களில் சிக்கலாக இருக்கலாம். மைலோவின் மகப்பேறு/நர்சிங் மோல்டட் கப் ஸ்பேசர் பிரா எண்ணற்ற அளவுகளில் கிடைக்கிறது. மைலோவின் மகப்பேறு ஸ்பேசர் பிராவில் உங்கள் அளவை நிச்சயமாகக் காண்பீர்கள்! காற்றுபுகக்கூடிய, இலகுரக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட 3டி துணியால் உருவாக்கப்பட்ட பிராக்கள் மைலோவிடம் உள்ளது. மைலோவின் மகப்பேறு ஸ்பேசர் பிரா நாள் முழுவதும் மற்றும் இரவு முழுவதும் அணிய வசதியாக இருக்கும். மார்புப் பகுதியில் ஈரப்பதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அதிகபட்ச காற்று உங்கள் மார்பகங்களுக்குச் செல்வதை மகப்பேறு பிரா உறுதி செய்கிறது.
மகப்பேறு ஸ்பேசர் பிராவில் காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு வசதி இருக்கிறது. இது மார்புப் பகுதியில் இருந்து வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் ஆவியை வெளியேற்ற உதவுகிறது. மகப்பேறு அல்லது நர்சிங் ஸ்பேசர் பிராவின் சரிசெய்யக்கூடிய தோள்பட்டை பட்டைகள் நர்சிங் கிளாஸ்ப்களைக் கொண்டிருக்கின்றன. அவை தேவைக்கேற்ப எளிதாக திறக்கவும் மூடவும் முடியும். முழு டிராப்-டவுன் ஸ்பேசர் ஃபேப்ரிக் கப்களுடன் கூடிய மைலோவின் மகப்பேறு ஸ்பேசர் பிரா, உங்கள் குழந்தைக்கு எளிதில் தாய்ப்பால் கொடுக்க உங்களை அனுமதிக்கிறது.
பேட் செய்யப்படாத மற்றும் வயர் இல்லாத, மகப்பேறு ஸ்பேசர் பிராவில் மோல்ட் செய்யப்பட்ட கப்கள் உள்ளன. அவை பிராவுக்கு இடைவெளியில்லாத தோற்றத்தைக் கொடுக்கும். இது எந்தக் கூடுதல் அளவையும் சேர்க்காமல் மார்பக வடிவத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பால் வழிந்தோடுவதை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மகப்பேறு ஸ்பேசர் பிராவின் பக்கவாட்டு தையல்கள் உங்கள் வளரும் மார்பகங்களுக்கும் கூடுதலான மற்றும் மிகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றன.
அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பிரா இருக்கிறது என்றால், அது மைலோவின் மகப்பேறு/நர்சிங் மோல்டட் ஸ்பேசர் கப் பிராவாக தான் இருக்க முடியும்! எனவே இந்த வசதியான மற்றும் செயல்படக்கூடிய மகப்பேறு நர்சிங் பிராவை இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்!

Non-Wired Non-Padded Maternity Bra - Classic Black, Classic White, Magnolia Cream 32B (Pack of 3)
Supports Growing Breasts | Eases Pumping & Feeding
₹ 952

4.2
(990)


846 Users bought
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் & பக்க விளைவுகள் | மைலோஃபேமிலி
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது?

குறுநடை போடும் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதற்கான மைல்கற்கள் மற்றும் செயல்பாடுகள் (Communication in Toddlers: Milestones & Activities In Tamil)

கருக்கலைப்புக்குப் பிறகு எவ்வளவு விரைவில் நீங்கள் கர்ப்பமாக முடியும்? (How Soon After an Abortion Can You Get Pregnant In Tamil)

தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு பெண் கர்ப்பமாக முடியுமா? (Can a Woman Get Pregnant While Breastfeeding? In Tamil)

உணர்ச்சி நல்வாழ்வு என்றால் என்ன | அதன் முக்கியத்துவம் மற்றும் அறிகுறிகள் (Emotional Well-Being | Importance & Symptoms In Tamil)