


Bathing
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான புராடக்ட்டுகளைப் பயன்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். அது போலத் தான் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கும் சரியான பொருட்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். சில பெற்றோர்கள் குழந்தையின் சருமம் மற்றும் முடி ஆரோக்கியமாக வைத்திருக்க ஆர்கானிக் ஆயில்கள், மைல்டு சோப்புகள் மற்றும் ஷாம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தை நல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட புராடக்ட்டுகளை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள். குழந்தையின் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருப்பதால், குளியல் நேரத்தை ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக மாற்ற சரியான ஸ்கின் கேர் புராடக்ட்டுகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
குழந்தையை குளிக்க வைக்கும் நீரில் தாய்ப்பாலை சேர்ப்பது பால் குளியல் (மில்க் பாத்) எனப்படுகிறது. இது புதிய விஷயம் ஒன்றும் அல்ல, பாலுடன் குளிப்பது வெவ்வேறு கலாச்சாரங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடையின் பால் பாரம்பரியமாக பால் குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இப்போது குழந்தைகளுக்கான தாய்ப்பால் குளியல் பிரபலமடைந்து வருகிறது.
தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, மேலும் தாய்ப்பாலில் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளது. பெரியவர்கள் கூட தங்கள் ஸ்கின் கேர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற தாய்ப்பாலை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகின்றனர். தாய்ப்பாலில் குழந்தையை குளிக்க வைப்பது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான தோல் நோய்களில் இருந்து அவர்களை விரைவில் குணமடைய உதவும்.
எக்ஸிமா
டயபர் ரேஷஸ்
குழந்தை முகப்பரு
தழும்புகள்/தடிப்புகள்
பூச்சிக் கடி
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்குத் தேவையான பல வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தாய்ப்பாலில் உள்ளன. இந்த இயற்கை ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்குவதன் மூலமும் ஈரப்பதமாக்குவதன் மூலமும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தையின் சருமத்திற்கு உதவும் தாய்ப்பாலின் சில முக்கிய கூறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
இம்யூனோகுளோபின் ஏ (IgA) - இந்த இரத்தப் புரதம், நோய்த்தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதுடன் தோல் நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
பால்மிட்டிக் அமிலம் - இந்த கொழுப்பு அமிலம் குழந்தையின் சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும் ஒரு சிறந்த க்ளன்ஸராகவும், மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.
லாரிக் அமிலம் - சில குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முகப்பருவால் பாதிக்கப்படுகின்றனர். லாரிக் அமிலத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
ஒலிக் அமிலம் - இந்த கொழுப்பு அமிலம் குழந்தையின் சருமத்தில் ஒரு இயற்கையான பாதுகாப்புத் தடையை உருவாக்க உதவுகிறது, இது நீண்ட நேரம் ஈரப்பதமாக இருக்கும்.
வேக்ஸீனிக் அமிலம் - இது தாய்ப்பாலில் உள்ள இயற்கையான டிரான்ஸ் கொழுப்பு ஆகும், இது ஈரப்பதத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
லினோலிக் அமிலம் - இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலம் ஈரப்பதத்தை லாக் செய்ய உதவுவதுடன் வீக்கத்தைக் குறைக்கிறது.
குழந்தையின் தோல் தாய்ப்பாலின் நன்மைகளை உணர்ந்த பிறகு, பெற்றோர்கள் தாய்ப்பாலை குழந்தையின் குளியலில் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் குளியலை எப்படி கொடுக்கவேண்டும் என்பது இங்கே
குழந்தைக்கு போதுமான வெதுவெதுப்பான நீரில் குளியல் தொட்டியை நிரப்பவும்.
அறை வெப்பநிலையில் இருக்கும் தாய்ப்பாலை நீரில் சேர்க்கவும்.
சிறந்த முடிவுகளுக்கு குழந்தையை 15 நிமிடங்கள் குளியல் தொட்டியில் நன்றாக நீர் படுமாறு வைக்கவும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையை சுத்தமான டவல் கொண்டு துடைத்து, இயற்கை ஊட்டச்சத்துக்களையும் மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்துங்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பாலில் குளிப்பாட்டுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள சரியான குளியல் செய்முறையைப் பின்பற்ற வேண்டும். பால் குளியல் பற்றி பெற்றோர்கள் கேட்கும் சில பொதுவான கேள்விகள்
குழந்தையின் குளியல் நீரில் 150 மில்லி முதல் 300 மில்லி வரை தாய்ப்பாலை பெற்றோர்கள் சேர்க்கலாம். குளியல் தொட்டியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதைப் பொறுத்து பாலைச் சேர்க்கலாம் இதற்கு சரியான அளவு என்று எதுவும் இல்லை. நீரில் பால் நிறம் தெரியும் அளவிற்கு பெற்றோர்கள் பாலைச் சேர்க்கலாம்.
குழந்தை குளிக்கும் நீரில் அறை வெப்பநிலையில் இருக்கும் தாய்ப்பாலை சேர்ப்பது சிறந்தது. இது நீரின் வெப்பநிலை குறையாமல் இருப்பதை உறுதி செய்யும். குளிர்காலத்தில் தாய்ப்பாலை சூடாக்குவது நல்லது, ஏனெனில் இது குளிக்கும் தண்ணீரை சூடாக வைத்திருக்க உதவும்.
ஆம். நல்ல பலன்களைப் பெற பெரியவர்கள் தங்கள் சருமத்தில் தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம். தாய்ப்பாலில் காணப்படும் பல கூறுகள் ஒப்பனை நிறுவனங்களால் செயலில் உள்ள பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆம். பெற்றோர்கள் நாட்பட்ட/காலாவதியான தாய்ப்பாலை வெளிப்புற பயன்பாட்டிற்கும் குழந்தையின் குளியலுக்கும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். ஆனால், காலாவதியான பாலை உபயோகிக்கும் முன் அதன் வாசனையை சோதித்து பார்ப்பது நல்லது. பாலில் விசித்திரமான வாசனை இருந்தால், அதை நிராகரிக்க வேண்டும். கெட்டுப்போன தாய்ப்பால் குழந்தையின் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்துடன் ஏற்கனவே இருக்கும் தோல் பிரச்சனைகளை மோசமாக்கும். பால் நல்ல வாசனையாக/ நல்ல நிலையில் இருந்தால், குழந்தையின் பால் குளியலுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது.
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)