


Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பமாக இருக்கும் போது ஒரு சில உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். இது குறித்து நாம் பல்வேறு வேடிக்கையான விஷயங்களை கேள்விப்பட்டு இருப்போம். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டாவதாக தெரிவித்துள்ளனர். பல கர்ப்பிணிப் பெண்கள் ஊறுகாயின் உப்புச் சுவை காரணமாக அதனை விரும்பி உண்பதால் ஊறுகாய் அவர்களின் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே, கர்ப்ப காலத்தின் போது ஊறுகாய் உண்பது நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். இந்தக் கேள்விக்கான பதிலை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் - "கர்ப்ப காலத்தின் போது நாம் ஊறுகாய் சாப்பிடலாமா" என்பது குறித்து சிந்திப்பது பொதுவானது தான். ஆனால், ஒரு சிலர் தான் இந்த நாட்டத்திற்கான காரணம் குறித்து யோசிக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் போது ஊறுகாய் சாப்பிட விரும்புவது என்பது பொதுவாக சொல்லப்படுகிற ஒரு கருத்தாகும். கர்ப்ப காலத்தின் போது ஒரு பெண் உண்ண விரும்பும் உணவினை வைத்து ஒரு சிலர் குழந்தையின் பாலினத்தை யூகிக்க முயற்சிப்பார்கள், எனினும் இதனை நிரூபிப்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. பெண்கள் கீழ்க்காணும் காரணங்களுக்காக கர்ப்ப காலத்தின் போது ஊறுகாய் சாப்பிடுவதற்கு விரும்பக் கூடும் -
ஈஸ்ட்ரோஜென் அல்லது வேறு ஹார்மோன்களின் மாற்றங்களின் காரணமாக மணம் மற்றும் சுவையுணர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, கர்ப்ப காலத்தின் போது, ஒரு பெண்ணுக்கு கர்ப்பமாவதற்கு முன்பு இருந்ததை விடவும் உணவு சுவை வேறு மாதிரியாகத் தெரியும். ஊறுகாய் போன்ற சில உணவுகள் அவர்களின் அதிகரித்த சுவை அல்லது மண உணர்ச்சியை திருப்திப்படுத்துகிற மாதிரி இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் இந்த உணவுகளை உண்ண நாட்டம் கொள்கிறார்கள்.
உணர்வு ரீதியான மன அழுத்தம்: ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்படுவதை உணரலாம், அப்போது ஊறுகாய் போன்ற மனம் விரும்பும் உணவுகளை அவர்கள் நாடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் - "கர்ப்ப காலத்தில் நான் ஊறுகாய் சாப்பிடலாமா?" என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் போது, அதற்கான பதில் ஆம் என்பதே ஆகும். ஊறுகாயில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இல்லை. ஊறுகாயில் மிகக் குறைவான அளவு புரோட்டீனும், கொழுப்பும் உள்ளது, மேலும் மிகக் குறைந்த அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. ஊறுகாயில் இரும்புச் சத்து, உப்பு ஆகிய இரண்டு ஊட்டச்சத்துகள் உள்ளன. கூடுதலாக, அவற்றில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி-யும் உள்ளன. வெவ்வேறு ஊறுகாய்களில் சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் ஆகியவை வேறுபட்ட அளவுகளில் இருக்கும். எனவே, இதன் ஊட்டச்சத்து பற்றிய தகவல்களை வாசிப்பது மிகவும் அவசியமாகும். ஊறுகாயில் மினரல்களும், வைட்டமின்களும் அதிகமாக இல்லாத பட்சத்திலும் கூட, உணவோடு சேர்த்து ஊறுகாயை சாப்பிடுவது சாப்பாட்டின் ப்ரோபயாட்டிக் (நல்ல பாக்டீரியாக்கள் உள்ளவை) மதிப்பினை அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் ஊறுகாய் சாப்பிடும் விருப்பத்திற்கு கீழ்க்காணும் காரணங்கள் பங்களிக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக போதுமான அளவு ஆய்வு செய்யப்படவில்லையென்றாலும் கூட, கர்ப்ப காலம் முழுவதும் வேகமாக மாற்றமடைந்து வரும் ஹார்மோன்களின் காரணமாக இந்த நாட்டம் ஏற்படலாம் என்று யூகிக்க வாய்ப்புள்ளது.
எனினும், முதல் மும்மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஈஸ்ட்ரோஜெனும், புராஜெஸ்டிரோனும் அதிகரிப்பதன் காரணமாக மசக்கையும், வாந்தியும் ஏற்படுகிறது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் புலன் சார்ந்த உணர்வுகள், குறிப்பாக சுவை மற்றும் மண உணர்வுகள், கணிசமாக மாற்றமடையும்.
ஊட்டச்சத்து குறைபாடு: கர்ப்ப காலத்தில் இரத்த அளவோடு சேர்த்து உப்புத் தேவைகளும் அதிகரிக்கிறது என்று தவறான கருத்து இருக்கிறது. எனினும், கர்ப்ப காலத்தில் ஊறுகாய் உண்ணும் நாட்டம் ஏற்படுவது சோடியம் குறைபாட்டினை குறிக்கிறது. அதன் விளைவாக, உணவுண்ணும் நாட்டம் ஏற்படுவது இந்த அத்தியாவசிய மினரல்களின் குறைபாடுகளின் காரணமாக உடலின் எதிர்வினையாக சிலர் கருதுகின்றனர்.
ஊறுகாயை மிதமான அளவில் சாப்பிடுவதால் கீழ்க்காணும் கர்ப்ப கால நன்மைகள் ஏற்படும் .
உடலின் எலக்ட்ரோலைட் அளவுகளை சமநிலைப்படுத்துகிறது
உடலுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தின் போது, வளரும் முதிர்கருவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிறைய எலக்ட்ரோலைட்கள் தேவைப்படுகின்றன. ஊறுகாயில் குறிப்பிடத்தக்க அளவு உப்பும், பொட்டாசியமும் உள்ளது, எனவே மிதமான அளவில் ஊறுகாய் சாப்பிடுவது இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்.
ஊறுகாய் சாப்பிடுவதால் செரிமானத்திற்கு உதவியாய் இருக்கும், மேலும், ஓரளவிற்கு, நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கும் உதவும். ஊறுகாயில் நலம் தரும் பாக்டீரியா இருக்கும், எனவே, ஊறுகாய் சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் நிறைய ஆரோக்கியமான பாக்டீரியாவை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு உதவுகிறது.
ஊறுகாயில் ஆன்டி ஆக்சிடன்ட் விளைவுகள் உள்ளதாக நம்பப்படுகிறது. சமைக்கப்படாத காரணத்தால், ஊறுகாய் போட பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் அல்லது பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் பொதுவாகவே பாதுகாக்கப்படுகின்றன. எனவே, இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
நெல்லிக்காய் போன்ற, பல்வேறு விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருந்து செய்யப்படும் ஊறுகாய் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், மற்றும் கால்சியம், இரும்புச் சத்து, மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் உடலுக்குக் கிடைக்கும்.
ஊறுகாயில் பெரும்பாலும் நிறைய உப்பு சேர்க்கப்படும், இது கர்ப்ப காலத்தின் போது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது. கூடுதலாக, பெரும்பாலான இந்திய ஊறுகாய்களில் மிதமிஞ்சிய அளவில் எண்ணெய் இருக்கும், இது கர்ப்ப காலத்தில் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அளவுகளை அதிகரித்து விடக் கூடும். செயற்கையான பதப்படுத்திகள் உள்ள ஊறுகாய் அல்லது மிக சூடாக உள்ளவை கர்ப்ப காலத்தில் உங்களுக்கு உப்பிசம் அல்லது வாயுத் தொந்திரவை ஏற்படுத்தக் கூடும்.
கர்ப்ப காலத்தில் ஊறுகாய் சாப்பிடுவது மிகவும் சௌகரியமான உணர்வை எற்படுத்தும். ஆனாலும், இது குறித்து ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அதன் பக்க விளைவுகளை குறைக்க உதவும். அவை பின்வருமாறு :
நீர்ச்சத்துடன் இருப்பது
கர்ப்பிணிப் பெண்கள் இரைப்பை அழற்சிக்கு ஆட்படும் பட்சத்தில், ஊறுகாயை தவிர்ப்பது
நெஞ்செரிச்சலை தடுப்பதற்கு ஊறுகாயை தவிர்ப்பது
அதிக அளவு பதப்பொருட்கள் அடங்கிய ஊறுகாயை உண்ணாமலிருப்பது
உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கு இனிப்பில்லாத ஊறுகாயை உண்பது
அவ்வப்போது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது தவறில்லையென்றாலும் கூட, அளவுக்கு மீறி செல்லாமலிருப்பது தான் நல்லது. கர்ப்ப காலத்தின் போது ஊறுகாயினை அளவாக சாப்பிடும் போது சில நன்மைகள் கிடைக்கும், ஆனால் மிதமிஞ்சிய அளவில் உண்பது உடல்நலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)