
பிறருடன் சரளமாக பேசும் திறன், சமூக மற்றும் சுய-கவனிப்பு திறன்கள் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாட்டில் குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்டுள்ள நபருக்கு அறிவுசார்ந்த குறைபாடு அல்லது இயலாமை (ஐடி/ID) இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நம் அன்றாட வழக்கங்களை மேற்கொள்ளும் போது மற்றும் ஏதேனும் முடிவுகளை எடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் உள்ளடக்குகிறது.
அறிவுசார்ந்த குறைபாடு இரண்டு வகைப்படும். அவை:
இது கற்றல், சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற திறன்களை உள்ளடக்குகிறது.
இது பிறருடன் தொடர்புகொள்வது, தனிப்பட்ட கவனிப்பு, நட்பு பாராட்டுதல், விதிகளைப் பின்பற்றுதல் அல்லது ஒருவரின் அன்றாடப் பணிகளை முடிக்கும் திறன் ஆகியவற்றைக் உள்ளடக்குகிறது.
அறிவுசார்ந்த குறைபாட்டை மன நிலை குறைபாடு என்றும் சொல்லலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒருவரின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உருவாகிறது. பெரும்பாலும், இதற்கான காரணம் புலப்படுவதில்லை. அறிவுசார்ந்த குறைப்பாட்டிற்கான பொதுவான காரணங்கள் நோய், மூளையில் ஏற்படும் காயம் அல்லது கட்டிகள் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை அடங்கும். அறிவுசார்ந்த குறைப்பாட்டிற்கு வழிவகுக்கும் சில பொதுவான நிலமைகள் பின்வருமாறு:-
சிலருக்கு பிறப்பதற்கு முன்பே இந்த நிலைமைகள் இருக்கலாம் அல்லது சில சந்தர்ப்பங்களில், குழந்தை போதுமான வயதை எட்டும் வரை இதற்கான அறிகுறிகள் தென்படாது.
அறிவுசார்ந்த குறைபாடு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:-
இவை பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு மரபு வழியாகப் பெற்ற நிலைகள். மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களின் கலவையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அது ஒரு குறிப்பிட்ட நிலை அல்லது நோய்க்கு வழிவகுத்து மரபணு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனநல குறைபாடு ஏற்படுவதற்கான மரபு சார்ந்த குறைபாடுகளில் டவுன் நோய்க்குறி, உடையக்கூடிய எக்ஸ் நோய்க்குறி, ஃபெனில்கெட்டோனூரியா, கரு ஆல்கஹால் நோய்க்குறி முதலியவை அடங்கும்..
கக்குவான் இருமல், மூளைக்காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற நோய்களும் அறிவுசார்ந்த குறைபாடுகளுக்கு காரணமாக அமைகின்றன. குவாஷியோர்கோர் (புரதச் சத்து குறைபாடு) அல்லது மராஸ்மஸ் (புரதம் மற்றும் கலோரிகளின் குறைபாடு) உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடும் அறிவுசார்ந்த குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். பாதரசம் அல்லது ஈயம் போன்ற நச்சுப்பொருட்களின் அதிகப்படியான எக்ஸ்போஷரும் மனநலம் குன்றிய நிலைக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் ரூபெல்லா போன்ற நோய்த்தொற்றுகள் அல்லது கர்ப்பமாக இருக்கும் தாய் மது அருந்துவது போன்ற பழக்க வழக்கங்கள் கருவின் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் இது பின்தங்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது தான் அறிவுசார்ந்த குறைபாடுகளுக்கு வழிவகுக்கின்றன.மேலும், கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின் போது ஏற்படும் காயம், அதிர்ச்சி அல்லது பிரசவத்தின் போது போதுமான ஆக்ஸிஜன் இல்லாதது போன்ற நிகழ்வுகள் குழந்தையின் மூளையின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
அறிவுசார்ந்த குறைபாடுகள் நான்கு வகைப்படும்:- லேசானது, மிதமானது, கடுமையானது மற்றும் தீவிரமானது.
பொதுவாக குழந்தை பள்ளிக்குச் செல்லும் வரையில் கூட இந்த அறிகுறிகள் தென்படுவது இல்லை. பள்ளிக்குச் சென்ற பின்னர் தான், பாடங்களை மெதுவாக புரிந்துகொள்வது மற்றும் கற்றலில் சிரமம் போன்ற கல்வி தொடர்பான சிக்கல்களைக் காணலாம். லேசான அறிவுசார்ந்த குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தனிப்பட்ட கவனிப்பு செயல்பாடுகளை மூலம் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளலாம். அவர்கள் மெதுவாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்தவரின் மேற்பார்வை மற்றும் ஆதரவு தேவைப்படலாம். லேசான ஊனமுற்ற குழந்தையின் ஐகியூ (நுண்ணறிவு எண்) 50 மற்றும் 69-க்கு இடையில் இருக்கும்.
மிதமான அறிவுசார்ந்த குறைபாடுள்ள குழந்தைக்கு தொடர்புகொள்வது கடினமாக இருக்கும் மற்றும் நண்பர்களை உருவாக்குவதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இந்தக் குழந்தைகளால் சுய-கவனிப்பு செய்து கொள்ள முடியாது. கண்டிப்பாக ஒருவரின் மேற்பார்வை அவசியம். மிதமான அறிவுசார்ந்த குறைபாடு உள்ளவர்களின் ஐக்யூ 35 முதல் 49 வரை இருக்கும்.
கடுமையான குறைபாடு உள்ள குழந்தையின் மோட்டார் செயல்பாடு சரியாக இருக்காது. அவர்கள் நடப்பது, தொடர்புகொள்வது அல்லது சுய-கவனிப்பு போன்றவற்றை மேற்கொள்வது கடினம். கடுமையான அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளின் ஐக்யூ 20 முதல் 34 வரை இருக்கும்.
தீவிரமான அறிவுசார்ந்த குறைபாடு கொண்ட குழந்தையால் நம்மைப் போன்று நகர முடியாது. அவர்கள் சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கலாம். அதனால் செய்கைகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு நிலையான உதவி மற்றும் முழு ஆதரவு அவசியம்.
அறிவுசார்ந்த குறைபாடு என்பது வாழ்நாள் முழுக்க நீடிக்கக் கூடிய ஒரு நோயாகும். இதனை நிரந்திரமாக குணப்படுத்த முடியாது. இருந்தாலும், ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், சுய-கவனிப்பு மூலம் சமாளிக்கலாம். இத்தகைய குறைப்பது உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படைக் காரணம் அல்லது மரபணு நிலை பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடும். அதனால் ஆரம்ப சிகிச்சையை வழங்க குறிப்பிட்ட இடைவெளியில் இது கண்டறியப்பட வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் பின்வரும் சேவைகள் மற்றும் ஆதரவை கொடுக்கலாம்:-
குடும்பம் மற்றும் சமூகத்தின் இடைவிடாத ஆதரவுடன், அறிவுசார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் பெரும் முன்னேற்றத்தைக் காட்டுவார்கள். இதன் மூலம் சமூகத்தில்தங்கள் பங்கை நிலைநிறுத்துவார்கள்.
அறிவுசார்ந்த குறைபாடு பொதுவாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அடிக்கடி காணப்படுகிறது. அதோடு, ஏழை மக்களில் இது மிகவும் பொதுவானது என்றும் சொல்லலாம். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 1,000 பேரில் 16 பேருக்கு அறிவுசார்ந்த குறைபாடு உள்ளது. உலக மக்கள்தொகையில் சுமார் 1-3 சதவீதம், அதாவது 200 மில்லியன் மக்கள் அறிவுசார்ந்த குறைபாடு உள்ளவர்கள்.
உங்கள் குழந்தைக்கு அறிவுசார்ந்த குறைபாடுகள் இருந்தால், பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:
Yes
No



Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |