Lowest price Ever for Children's Day! Use Code: FIRST10
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பமாக இருப்பவர்களுக்கு கீரை நல்லதா? ஆமாம் நல்லது தான்,, ஆனால் ஓரளவிற்கு மட்டுமே. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று ஃபோலிக் அமிலம், இது கீரையில் ஏராளமாக உள்ளது. ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் பிறப்பு குறைபாடுகளைத் தவிர்க்கலாம். இந்த பச்சை இலை காய்கறியில் கர்ப்ப காலத்தில் தேவைப்படும் இரும்புச் சத்தும் உள்ளது. இருந்தாலும், கீரையை அதிகம் சாப்பிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் சிறுநீரகக் கற்களுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில் கீரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பாலக் கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. கீரையில் வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. கூடுதலாக, இது ஊட்டச்சத்திற்கான நார்ச்சத்து, ஃபிளேவனாய்டுகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். பசலைக் கீரையில் தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கக் கூடிய பல்வேறு சத்துக்கள் உள்ளன.
100 கிராம் கீரையானது பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது:
23 கிலோ கலோரி.
99 மில்லி கிராம் கால்சியம்.
79 மில்லி கிராம் மெக்னீசியம்.
பொட்டாசியம் 558 மில்லி கிராம்.
வைட்டமின் சி 28.1 மில்லி கிராம்.
194 கிராம் ஃபோலேட்.
49 மில்லி கிராம் பாஸ்பரஸ்.
79 மில்லி கிராம் சோடியம்.
கர்ப்ப காலத்தில் கீரையை சாப்பிடுவதால் பின்வரும் வழிகளில் நன்மை ஏற்படும் :
கர்ப்ப காலத்தில் உடலின் இரத்த அளவு 30% முதல் 50% வரைக்கும் அதிகரிக்கிறது, இது இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்திற்கான உடலின் தேவையை அதிகரிக்கும். வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் கீரையே உங்கள் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை வழங்க உதவியாக இருக்கும்.
அதிக கால்சியம் அளவுகள் குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், அதே சமயம் குறைந்த கால்சியம் அளவு கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். கீரையில் இருக்கும் கால்சியத்தின் அளவானது இரத்த அழுத்தத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாக இருக்கும் கீரையானது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் பாலக் கீரை சாப்பிடலாம், இது தினமும் தேவைப்படும் வைட்டமின் ஏ தேவையைப் பூர்த்தி செய்கிறது. கீரையில் வைட்டமின் பி உள்ளது, இது பிறக்கப் போகும் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
கீரை பொதுவாக கர்ப்பத்திற்கு நல்லது. ஆனால், கீரையை அதிகமாக சாப்பிடுவது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம், அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
கால்சியம் பாஸ்பேட் சிறுநீரகக் கற்கள் கர்ப்பிணிப் பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும், குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டரில் அதிகமாக இருக்கும். கூடுதலாக, ஆக்சலேட் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படலாம். இருந்தாலும், சிறிதளவு கீரை சாப்பிட்டால் இந்த ஆபத்து ஏற்படாது.
சால்மோனெல்லோசிஸ் மற்றும் லிஸ்டிரியோசிஸ் போன்றவை கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதிக்கலாம். கீரை இலைகளில் இருக்கும் பாக்டீரியா மாசுபாட்டினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, சாப்பிடுவதற்கு முன்பு இலைகளை அவசியம் நன்றாகக் கழுவ வேண்டும்.
சாலிசிலேட் இரத்தப்போக்கினைத் தூண்டும் மற்றும் பிரசவத்தை நீட்டிக்கச் செய்யும், குறிப்பாக மூன்றாவது டிரைமெஸ்டரில் இது காணப்படுகிறது. கர்ப்பத்தின் கடைசி சில மாதங்களில் கீரை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் இதில் சாலிசிலேட் உள்ளது.
கீரை போன்ற நார்ச்சத்துள்ள உணவு செரிமானம் சீராக நடக்க உதவுகிறது. இருந்தாலும், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு கீரையை அதிக அளவில் சாப்பிடுவதன் விளைவாக நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொந்திரவு ஏற்படலாம், குறிப்பாக பச்சையாக உட்கொள்ளும் போது.
கர்ப்பமாக இருக்கும் போது அரை கப் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் கீரையை அளவோடு சாப்பிட வேண்டும், ஏனென்றால் கீரையை அதிகமாகச் சாப்பிட்டால் அது பலவிதமான சிரமங்களை ஏற்படுத்தும். கீரை இலைகள் புதியதாகவும், கறைகள் அல்லது ஓட்டைகள் அற்றதாகவும் இருக்க வேண்டும், குழந்தையை எதிர்பார்க்கும் பெண்மணிகள் கீரை சாலட் சாப்பிடலாம். கீரை இலைகளை சாலட்டில் சேர்ப்பதற்கு முன்பு நன்கு கழுவிவிட்டு, உடனடியாக சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கீரையை பல வழிகளில் சாப்பிடலாம் -
மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு ஒரு கப் கீரை சூப்.
சீஸ் உடனான கீரை ஆம்லெட் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஒரு டம்ளர் ஆரோக்கியமான கீரை ஸ்மூத்தி கூட ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
காய்கறி சாலட்டில் கீரையையும் சேர்க்கலாம்.
பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெயில் கீரையை வதக்கி, ரொட்டியுடன் பரிமாறலாம்.
கர்ப்ப காலத்தில் கீரை சாப்பிடுவது பாதுகாப்பானது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கீரையானது வழங்குகிறது. கீரையை அளவோடு சாப்பிடுவதும், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது.
மேலும், கர்ப்பமாக இருக்கும் போது ஏதாவது உணவுமுறை மாற்றங்கள் அல்லது மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது, அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்வதைக் கருத்தில் கொள்ளும் போது அல்லது அதை தவிர்க்கும் போது எப்போதும் உங்களுடைய மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |