
நீங்கள் கர்ப்பமாக இருக்கீங்களா? அப்படி என்றால் குழந்தை பிறக்கும் வரை நீங்கள் அடிக்கடி மகப்பேறு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். கருவில் இருக்கும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை கண்டறிய மருத்துவரால் மகப்பேறுக்கு முந்தைய சோதனைகள் செய்யப்படுகின்றன. குரோமோசோமல் அசாதாரண நிலை, கர்ப்பகால நீரிழிவு அல்லது இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை இந்த சோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
கர்ப்பகால பரிசோதனைகள் பொதுவாக கர்ப்பத்தின் மூன்றாவது மாதம், ஆறாவது மாதம் மற்றும் ஒன்பதாவது மாதங்களில் எடுக்கப்படும். முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் சோதனை மூலம் கிடைக்கப் பெறும் முடிவானது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குரோமோசோம் அசாதாரண நிலைகள் பற்றிய ஆரம்பத் தகவலை மருத்துவருக்கு வழங்குகிறது.
என்டி ஸ்கேன் அறிக்கை அல்லது நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி ஸ்கேன் மூலம் தான் அசாதாரண நிலைகள் பற்றி மருத்துவர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வகையான ஸ்கேன் பொதுவாக கர்ப்பத்தின் 11 முதல்13 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. இந்த காலக் கட்டத்திற்குப் பிறகு, திசு தடிமனாக மாறி, ஒளி ஊடுருவாது. இதனால் முடிவு சரியாக இருக்காது.
என்டி ஸ்கேன் என்பது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ஒரு பிரபலமான சோதனை ஆகும். என்டி ஸ்கேன் ரிசல்ட் நார்மல் அறிக்கையின் உதவியுடன் மருத்துவர் தெளிவான திசுக்களின் அளவைக் காண முடியும். இது நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இது குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள பகுதியை காட்டுகிறது.
குழந்தையின் கழுத்தின் பின்புறத்தில் தெளிவான அல்லது திரவ இடம் இருப்பது அசாதாரண நிலை கிடையாது. இருப்பினும், குழந்தைக்கு அதிக தெளிவான இடம் இருந்தால், அது டவுன் சிண்ட்ரோம் அல்லது எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் அல்லது படாவ் சிண்ட்ரோம் போன்ற குரோமோசோமல் அசாதாரண சூழ்நிலைகளைக் குறிக்கிறது.
நம் உடலில் உள்ள செல்கள் கரு உட்பட பல பாகங்களைக் கொண்டுள்ளது. மரபணு விஷயம் கருவில் அடங்கியுள்ளது. பொதுவாக, கருவில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. அவை தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்படுகின்றன.
இருப்பினும், டவுன் சிண்ட்ரோமுடன் பிறந்தவர்கள் 21 குரோமோசோமின் கூடுதல் நகலைக் கொண்டுள்ளனர். இது குணப்படுத்த முடியாத நிலை மற்றும் குழந்தையின் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இவர்களது பண்புகள் ஆரோக்கியமான குழந்தைகளிடமிருந்து வேறுபட்டு இருக்கும்.
குட்டையான உயரம்
ஹைபோடோனியா (உடலின் தசைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் இறுக்கமில்லாமல் இருக்கும்)
மேல்நோக்கி சாய்ந்தவாறு கண்கள் இருக்கும்
இந்த நிலை 700 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண்டறியப்படுகிறது. இது குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான மரபணுப் பிரச்சனைகளில் ஒன்றாகும்.
எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் மற்றும் படாவ் சிண்ட்ரோம் ஆகியவை அரிதான மற்றும் ஆபத்தான குரோமோசோமல் அசாதாரண நிலைகளாகும். ஒரு குழந்தை இந்த இரண்டு நிலைகளில் ஏதாவது ஒன்றுடன் பிறந்தால் முதல் வருடத்திலேயே இறந்துவிடும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்டி ஸ்கேன் நார்மல் ரிப்போர்ட் வருவதால் பல நன்மைகள் உள்ளன. சில நன்மைகள் பின்வருமாறு:
குரோமோசோமல் அசாதாரண நிலைகள் (எட்வர்டு சிண்ட்ரோம் அல்லது படாவ் சிண்ட்ரோம்), மரபணு பிரச்சனைகள், பிறவி இதய அசாதாரண நிலைகள், கருச்சிதைவுகளுக்கான ரிஸ்க் மற்றும் டவுன் சிண்ட்ரோம் வளரும் வாய்ப்புகள் ஆகியவை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கண்டறியப்படலாம். என்டி ஸ்கேன் மூலம் ஒருவர் பெறக்கூடிய மிகப்பெரிய நன்மை இதுவாகும்.
குழந்தைக்கு ரிஸ்க் இருப்பதாக சோதனை முடிவுகள் காட்டினால், ஒருவர் மற்ற சோதனைகளையும் செய்து பார்க்கலாம். குழந்தையை கர்ப்பத்தில் சுமக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் மகப்பேறு மருத்துவர் சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும்.
இது அறுவை சிகிச்சை அற்ற சோதனை என்பதால், அத்தகைய சோதனை செய்யப்படுவதற்கு முன்பு கர்ப்பிணிக்கு முன்கூட்டியே இந்த அறுவை சிகிச்சை அற்ற சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அறுவை சிகிச்சை உடைய சோதனைகள் ஆபத்தானவை மற்றும் பெரும்பாலும் கருச்சிதைவுகள் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.
கர்ப்ப காலத்தில் செய்யப்படும் மற்ற ஸ்கேன்களைப் போலவே, இந்த சோதனையும் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றிய சிறந்த ஃபீட்பேக்-ஐ வழங்குகிறது. என்டி ஸ்கேன் குழந்தையை பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இது குழந்தை பிறக்கும் தேதியையும் உறுதிப்படுத்துகிறது.
கருவில் உள்ள குழந்தையின் முதுகுப் பகுதியில் உள்ள தெளிவான இடம் 15 ஆவது வாரத்தில் மறைந்துவிடும். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் என்டி ஸ்கேன் சோதனை செய்யப்படுவதற்கு இதுவே காரணம். இந்த சோதனையுடன் இரத்த பரிசோதனையும் எடுக்க வேண்டும். அதில், பிளாஸ்மா புரதம் மற்றும் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (எச்சிஜி) ஆகியவை பரிசோதிக்கப்படும். இது ஒரு தாய்வழி ஹார்மோன் ஆகும். இரண்டிலும் ஏதேனும் அசாதாரண நிலை காணப்பட்டால் குரோமோசோம் சிக்கலைக் குறிக்கிறது.
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு என்டி ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நடத்தப்படும் மிகவும் பொதுவான மகப்பேறுக்கு முந்தைய சோதனைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது, முக்கியமான மகப்பேறு கால பராமரிப்பு முடிவுகளை எடுக்க உதவுகிறது.
என்டி ஸ்கேன் ரிப்போர்ட்டை பெறுவதற்கு கர்ப்பிணியின் அடிவயிற்றில் மருத்துவர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை மேற்கொள்கிறார். இதற்கு மாற்றாக ஒரு டிரான்ஸ்வஜினல் சோதனையை மேற்கொள்ளலாம். அந்த அல்ட்ராசவுண்ட் சோதனையானது பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
கர்ப்பிணியின் உடலில் இருந்து ஒரு படத்தை உருவாக்க அல்ட்ராசவுண்டில் உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படத்தின் உதவியுடன், மருத்துவர் கருவில் உள்ள குழந்தையின் கழுத்தில் ஒளி ஊடுருவக்கூடிய அல்லது தெளிவான இடத்தை அளவிட முடியும். குழந்தைக்கான ரிஸ்க்கை கணக்கிடுவதற்கும், அது எந்த அசாதாரண நிலையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது என்பதை கணக்கிடுவதற்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமில் பெண்ணின் வயது உள்ளிடப்படுகிறது.
என்டி ஸ்கேன் மூலம் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது பிற குரோமோசோமல் பிரச்சனைகள் உள்ளதா என்பதை முழுமையாக கண்டறிய முடியாது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மட்டுமே குறிப்பிட்டு காட்ட முடியும். கர்ப்பிணிப் பெண் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவரிடம் பேச வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படக்கூடிய ரிஸ்க்கை புரிந்துகொள்ள உதவும்.
கர்ப்பிணிக்கு என்டி ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்தால், டவுன் சிண்ட்ரோம் இருப்பதை சோதனையில் 85 சதவீதம் கண்டறிந்து விடலாம். இரத்தப் பரிசோதனை செய்யாமல், பரிசோதனையின் துல்லியத்தன்மை 75 சதவீதமாக இருக்கிறது.
என்டி ஸ்கேன் செய்வதற்கு சிறப்பு தயாரிப்பு எதுவும் தேவையில்லை. அரை மணி நேரத்தில் ஸ்கேன் முடிந்துவிடும். இருப்பினும், குழந்தையின் பொசிஷன் சரியாக இல்லாவிட்டால், மீண்டும் ஸ்கேன் நடத்துவதற்காக கொஞ்ச நேரம் காத்திருக்குமாறு கர்ப்பிணியிடம் மருத்துவர் கேட்க வாய்ப்புள்ளது. ஸ்கேன் செய்ய அதிகபட்சமாக ஒரு மணிநேரம் ஆகும்.
என்டி ஸ்கேன் செய்யும்போது, கர்ப்பிணி பரிசோதனை செய்வதற்கான டேபிளில் படுத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர் அல்ட்ராசவுண்ட் கருவியை கர்ப்பிணியின் வயிற்றின் மீது வைத்து நகர்த்துவார்.
இந்தச் சசோதனை நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கர்ப்பிணி தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீரால் நிரம்பிய முழுமையான சிறுநீர்ப்பை எளிதாக குழந்தையை ஸ்கேனில் பார்க்க உதவுகிறது. அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் அடிவயிற்றில் எடுக்கப்படும் என்பதால், கர்ப்பிணிப் பெண் பரிசோதனையின் போது செளகரியமான ஆடைகளை அணிய வேண்டும்.
பரிசோதனையின் அன்றே முடிவுகள் கர்ப்பிணிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது அல்லது ஒருவர் பரிசோதனை மையத்தை விட்டு வெளியேறும் முன் மருத்துவர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது குறித்து விவாதிக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு அசாதாரண முடிவைப் பெறுவது குழந்தைக்கு குரோமோசோமல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாதாரண முடிவுகளைப் பெறுவதும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இல்லை என்பதை உறுதிப்படுத்தாது என்பதும் உண்மை.
சோதனையில் ஐந்து சதவீதம் தவறான நேர்மறை விகிதம் உள்ளது. கர்ப்பிணிகளில் ஐந்து சதவிகிதம் பேர் நேர்மறையான ரிசல்ட்டுகளைப் பெற்ற பிறகு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். ரிசல்ட் நேர்மறையாக இருந்தால், மகப்பேறுக்கு முந்தைய உயிரணு இல்லாத டிஎன்ஏ சோதனை எனப்படும் மற்றொரு இரத்த பரிசோதனையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இது இரத்தத்தில் உள்ள கருவின் டிஎன்ஏவை ஆய்வு செய்ய உதவுகிறது மற்றும் டவுன் சிண்ட்ரோம் மற்றும் பிற கோளாறுகளுக்கான குழந்தையின் ரிஸ்க்கை அணுக உதவுகிறது.
நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி நிலை 3.5மிமீ என்று இருந்தால் அது சாதாரண ரேஞ்ச் ஆகும். சோதனை முடிவு 2.5 மிமீ மற்றும் 3.5 மிமீ-க்குள் வந்தால் மருத்துவர்கள் வழக்கமாக டவுன் சிண்ட்ரோம் இல்லை என்பார்கள். என்டி அளவுகளில் ஏதேனும் அதிகரிப்பு இருந்தால் குழந்தைகளில் குரோமோசோமல் அசாதாரண நிலைகள் இருக்கக் கூடும்.
குழந்தையின் என்டி அளவு 6மிமீ என இருந்தால், இது குரோமோசோமல் அசாதாரண நிலைகளில் அதிக ரிஸ்க் இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இது குழந்தைகளுக்கு மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
நோயறிதல் சோதனை மற்றும் ஸ்கிரீனிங் சோதனை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
என்டி ஸ்கேன் நார்மல் ரிப்போர்ட் படங்கள் ஒரு ஸ்கிரீனிங் சோதனை ஆகும். இது நோய் கண்டறியும் சோதனை கிடையாது. என்டி ஸ்கேன் மூலம் நேர்மறையான ரிசல்ட்டுகளைப் பெற்ற பிறகு கர்ப்பிணிகள் பயப்படலாம். ஏனென்றால் அது ஒரு உறுதியான முடிவு அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படக்கூடிய ரிஸ்க்கை மட்டுமே முன்னறிவிக்கிறது.
நோயறிதல் மற்றும் ஸ்கிரீனிங் சோதனை இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஸ்கிரீனிங் சோதனைகள் நோய்க்கான ரிஸ்க் ஃபேக்டர்களைக் கண்டறிய உதவுகின்றன. நோயறிதல் சோதனை, நோய் இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
குரோமோசோமல் அசாதாரண சூழ்நிலைகளைக் கண்டறிய, நோயறிதல் பரிசோதனையைப் பற்றி மருத்துவரிடம் கேளுங்கள். கர்ப்பிணிகளுக்கு அமினோசென்டிசிஸ் ஒரு ஆப்ஷனாக உள்ளது. திரவ மாதிரியை எடுப்பதற்காக ஒரு ஊசி கர்ப்பிணியின் அடிவயிற்றின் வழியாக கருவைப் பாதுகாக்கும் பையில் செருகப்படுகிறது. இந்த திரவமானது குழந்தையைப் பற்றிய முக்கியமான மரபணு விவரங்களை வழங்கும் செல்களைக் கொண்டுள்ளது.
மற்றொரு கண்டறியும் சோதனை கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகும். இதையும் கர்ப்பிணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சோதனையில், மருத்துவர் கர்ப்பிணியின் நஞ்சுக்கொடியில் உள்ள திசுக்களின் மாதிரியை எடுத்து, குரோமோசோமல் அசாதாரண நிலைகள் மற்றும் மரபணு கோளாறுகளை சரிபார்க்க அதை பரிசோதிப்பார்.
ஓர் அபாய எச்சரிக்கை - இந்த இரண்டு சோதனைகளிலும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் அல்ட்ராசவுண்ட் அறிக்கையை எவ்வாறு படிப்பது
என்டி ஸ்கேன் என்பது அறுவை சிகிச்சை இல்லாத மற்றும் பாதுகாப்பான பரிசோதனை முறையாகும். இது கர்ப்பிணிக்கோ அல்லது கருவில் உள்ள குழந்தைக்கோ தீங்கு விளைவிக்காது. கர்ப்பம் உருவான முதல் மூன்று மாதங்களில் ஸ்கிரீனிங் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், இது ஒரு ஆப்ஷனல் ஸ்கிரீனிங் தான். நீங்கள் தேவைப்பட்டால் எடுக்கலாம் அல்லது எடுக்காமலும் விடலாம். பல கர்ப்பிணிகள், முடிவுகளை அறிந்த பிறகு கவலை அடைவதால், இது போன்ற சோதனைகளைத் தவிர்க்கிறார்கள். மகப்பேறு மருத்துவரிடம் சோதனை முடிவுகளால் உங்களுக்கு ஏற்படக்கூடும் கவலைகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் மனநலன் எப்படி பாதிக்கும் என்றும் அவர்களிடம் எடுத்து கூறலாம்.
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |