


Care for Baby
20 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
சீம்பால் என்பது குழந்தை பிறப்பதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலையில் இருந்து வெளிவரும் குழந்தைக்கான முதல் சூப்பர் உணவாகும். தாய்க்கு பிரசவம் ஆன பிறகு, அவர்களுடைய மார்பகங்களில் இருந்து இந்த மஞ்சள் நிற பால் சுரக்கும். (இது திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது). இது குழந்தையின் ஆரம்ப நாட்களில் குழந்தைக்கு ஊட்டமளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.
சீம்பால் உற்பத்தியானது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் சீம்பால் சுரக்கத் தொடங்கும், வேறு சிலருக்கு கருவுற்ற கடைசி மூன்று மாதங்களில் சீம்பால் சுரக்கத் தொடங்கும். ஒருவேளை உங்களுக்கு அவ்வாறு சுரக்கவில்லை என்றால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், பிரசவத்திற்குப் பின்னர் தான் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அது பால் சுரத்தல் மற்றும் சீம்பால் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன.
குழந்தை பிறந்த முதல் 3-5 நாட்களுக்கு, தாயின் உடலானது சீம்பாலை மட்டுமே உற்பத்தி செய்யும்.
அடுத்தக் கட்டமானது இடைநிலைப் பால் என்று அழைக்கப்படுகிறது, அதாவது இது சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் கலவையாக இருக்கும். இது 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். அதற்குப் பின்னர் வழக்கமாகக் கொடுக்கப்படும் தாய்ப்பாலாக மாறிவிடும்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் குடல் இயக்கத்தின் போது மலம் (மெக்கோனியம்) கடினமாக, ஒட்டும் தன்மையுடனும் கருப்பு நிறத்தில் தார் போன்றும் இருக்கும். மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடிய வழக்கமான ஃபார்முலா பாலை ஒப்பிடும்போது சீம்பால் ஆனது செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து கருமை நிறத்திலான மலத்தை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. சீம்பால் அதிகப்படியான பித்தத் துகளை வெளியேற்றுவதால், மஞ்சள் காமாலையைத் தடுக்கவும் உதவுகிறது.
இதில் ஆன்டிபாடிகள், எதிரிப்புப் புரதங்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளன. இது நுரையீரல், தொண்டை அல்லது குடலில் ஏற்படும் தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, சீம்பாலில் இருக்கும் பி.ஹெச் (pH) அளவும் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பிறந்த குழந்தைக்கு ஊடுருவத்தக்க குடல் சுவர் (கட் லைனிங்) இருப்பதால், அது அவர்களை மிக எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாக்குகிறது. சீம்பால் இந்த குடல் சுவரை அடைப்பதற்கு குடல் புறணி வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்து அற்புதங்களைச் செய்கிறது. இது உணவு ஒவ்வாமை மற்றும் குடல் கசிவுப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
குடல் சுவரை மூடுவதற்காக சீம்பால் உதவுவதால் இது தேவையற்ற பொருட்கள் இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுத்து நோய் உண்டாக்குவதைத் தடுக்கும்.
குழந்தையின் உடலானது தன்னைத் தானே சீராக்கிக் கொள்வதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். சீரான உடல் நிலையைப் பராமரிக்க, சீம்பால் ஆனது வாஸ்குலர் அமைப்பு, நுரையீரல் செயல்பாடு மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
சீம்பால் ஆனது சிறிய மற்றும் செறிவூட்டப்பட்ட அளவுகளில் வெளியிடப்படலாம். இது உங்களுடைய குழந்தைக்கு சரியானதாக இருக்கும். உங்களிடமிருந்து உற்பத்தி ஆகும் சீம்பால் அளவு உங்களுடைய குழந்தையின் பசிக்கு போதுமானதாக இருப்பதால், அதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
எனவே, உங்களுடைய குழந்தையின் தேவைகளைப் பற்றி உங்கள் உடல் அறிந்திருப்பதால், நீங்களே உங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே! - புதிதாக தாய்மையடைந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழும் முறை: தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips











கக்குவான் இருமல்: அறிகுறி, அபாயங்கள் மற்றும் தடுப்புமுறை

கர்ப்ப காலத்தில் அனோமலி ஸ்கேன் செய்வதன் நோக்கம் என்ன?(What is the purpose of the anomaly scan during pregnancy?In Tamil)

தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

கருவில் உள்ள குழந்தையின் தாமதமான இதயத் துடிப்புக்கான காரணங்கள் என்ன?

கர்ப்பத்தின் போது தோல் அலர்ஜி(ப்ரூரிகோ): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை(Prurigo of Pregnancy: Causes, Symptoms & Treatment In Tamil)

குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)