


Cold & Cough
8 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் குழந்தை பள்ளிச் சுற்றுலாவிலிருந்து வீட்டிற்கு திரும்பி வரும் போது குழந்தைக்கு மோசமான இருமல் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். காய்ச்சல் காரணமாகவே சளி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் குணமாகிவிடுகிறது. ஆனால், இருமல் வாரக்கணக்கில் தொடர்கிறது..
காய்ச்சல் காரணமாகத் தான் சளி இருக்கிறது என்றால் ஏன் காய்ச்சல் நின்ற பிறகும் அது தொடர்கிறது? காய்ச்சல் தானா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா?
விடைத் தெரிய வேண்டுமா? பின்வரும் விஷயங்களை கவனியுங்கள்:
அலர்ஜியால் தும்மல், அரிப்பு, கண்கள் மற்றும் மூக்கில் எரிச்சல் மற்றும் தொண்டையில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். ஆனால், அலர்ஜியுடன் காய்ச்சல் இருக்காது.
உங்கள் குழந்தைக்கு மூக்கு ஒழுகுதல், கண்களில் எரிச்சல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட பிறகு சளி படிப்படியாக வரலாம்.
உங்கள் குழந்தையின் நண்பர்களைக் கண்காணிக்கவும், அவர்களில் யாருக்கேனும் தும்மல் அல்லது இருமல் இருப்பதை நீங்கள் கவனித்திருந்தால். உங்கள் குழந்தைக்கு தனது நண்பர்களிடமிருந்து கூட சளி தொற்றியிருக்கலாம்.
சளி 1-2 வாரங்களுக்குள் சரியாகிவிடும், அதே நேரத்தில் அலர்ஜி சிறிது காலம் நீடித்திருக்கும். உங்கள் குழந்தைக்கு போலன் அலர்ஜி (மகரந்த ஒவ்வாமை) இருந்தால், நேசல் அலர்ஜி (நாசி ஒவ்வாமை) ஆண்டு முழுவதும் ஏற்படலாம். ஆண்டு முழுவதும் இருக்கக் கூடிய ஒவ்வாமைக்கான பிற தூண்டுதல்களில் தூசிகள், பூஞ்சைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் ஆகியவை அடங்கும்.
வசந்த காலத்தில், பூக்கள் மற்றும் மரங்களில் இருந்து வரும் மகரந்தம் எல்லா இடங்களிலும் இருக்கும், எனவே உங்கள் குழந்தைக்கு தும்மல் அல்லது மூச்சுத்திணறல் இருந்தால், அது மகரந்தங்களால் கூட ஏற்படலாம்.
வாழ்க்கையின் எந்த நேரத்திலும் உங்களுக்கு அலர்ஜி ஏற்படலாம். ஆனால், அவுட்டோர் அலர்ஜி யானது பொதுவாக 4 முதல் 6 வயதுக்கு இடையில் வரும்.
உங்கள் குழந்தையின் மூக்கிலிருந்து வெளியேறும் திரவம் தான் அலர்ஜி அல்லது தொற்று காரணமாக ஏற்பட்டதா என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். அது பச்சையாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், அது ஒரு தொற்றுநோய் காரணமாக இருக்கலாம், அது தெளிவாக தண்ணீர் போன்று இருந்தால், அது அலர்ஜியின் காரணமாக இருக்கலாம்.
நாசிப் பாதைகளில் அடைப்பை அகற்ற, நீங்கள் உப்பு கரைசல் அல்லது ஃப்ளூடிகசோன் போன்ற மருந்துகளை உபயோகிக்கலாம்.
உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ/கணவனுக்கோ ஒவ்வாமை இருந்தால், உங்கள் குழந்தைக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு மரபணு நிலையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே! - குழந்தையின் மலத்தில் சளி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips











கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுமா?(Do Pregnant Women Get Their Period? In Tamil)

கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகள்

பிரதம மந்திரியின் சுரக்ஷித் மாத்ரிவா அபியான் (PMSMA) திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் என்னென்ன நன்மைகள் பெறுவார்கள்?

10 வார கர்ப்பத்திற்கான டயட் சார்ட் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய குறிப்புகள்

ஆரம்ப கால கர்ப்பத்தின் போது குதிப்பது கருச்சிதைவை ஏற்படுத்துமா?(Can Jumping Cause Miscarriage in Early Pregnancy?In Tamil)

கர்ப்ப காலத்தில் சேப்பங்கிழங்கு: பாதுகாப்பானதா இல்லையா? | | Arbi In Pregnancy: Is It Safe Or Not in Tamil