hamburgerIcon

Orders

login

Profile

Profile
Skin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Diet & Nutrition arrow

  • கர்ப்ப காலத்தில் பலாப்பழம்: தொடர்புடைய நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் பக்க விளைவுகள் arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம்: தொடர்புடைய நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் பக்க விளைவுகள்

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம்: தொடர்புடைய நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் பக்க விளைவுகள்

    6 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பல கர்ப்பிணிப் பெண்கள் மனதில் தோன்றும் பொதுவான கேள்விகளில் ஒன்று, "கர்ப்ப காலத்தில் நான் பலாப்பழம் சாப்பிடலாமா?" என்பது தான். இதற்கான எளிமையான விடை ஆம் என்பது தான். கர்ப்ப காலத்தில், ஃபிரஷ் ஆன பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது தான். ஒரு சரி விகித உணவானது கர்ப்பிணிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்ப்பது நல்லது. மறுபுறம் பலாப்பழம், அதிக ஊட்டச்சத்து மதிப்பினைக் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பலாப்பழம் ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இதனை சாப்பிடுவதால் ஏதேனும் பக்க விளைவுகள் அல்லது ஆபத்துக்கள் உள்ளதா என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை உதவியாக இருக்கும்.

    பலாப்பழத்தின் உடல்நலம் சார்ந்த நன்மைகள்

    பலாப்பழம் அதிக ஊட்டச்சத்து மிக்கது. இதில் அதிக கேலரிக்கள் கிடைக்கும் - அதாவது ஒரு கப் பலாப்பழத்தில் கிட்டத் தட்ட 155 கேலரிகள் உள்ளன. இதில் 5 கேலரிகள் மட்டுமே கொழுப்பில் இருந்து வருகிறது, அதனால், இது ஒரு ஆரோக்கியமான தேர்வு என்று நாம் சொல்லலாம். இதில் பின்வருவன நிறைந்துள்ளது:

    • ஃபோலிக் அமிலம்.

    • தியாமின்.

    • நியாசின்.

    • ரிபோஃபிளேவின்.

    • வைட்டமின் ஏ மற்றும் சி.

    • பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் மாங்கனீஸ் போன்ற மினரல்கள்.

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பழத்தில் குறைந்த அளவிலான சேச்சூரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் உள்ளது. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது என்பதால் செரிமானத்திற்கும் மெட்டபாலிசத்திற்கும் உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடலாமா?

    பல பெண்கள் மற்றும் மருத்துவர்கள் கூட கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடக் கூடாது என்றே அறிவுரை கூறுவார்கள். ஏனென்றால், இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை நிரூபிக்கும் வகையிலான சான்றுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. சில பெண்கள் கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படும் என்றும் நம்புகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. ஆரோக்கியமான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் போது இது தாய்க்கோ குழந்தைக்கோ எந்த வித ஆபத்தையும் விளைவிக்காது என்பது தான் உண்மை.

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

    பலாப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான் என்றாலும், இதில் சில ஆபத்துக்கள் இருக்கலாம். அவை பின்வருமாறு -

    • கர்ப்ப காலத்தில் அதிகமாக பலாப்பழம் சாப்பிட்டால், அது நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து விடும்.

    • பலாப்பழத்தில் இரத்த உறைவைத் தூண்டும் ஏஜென்டுகள் உள்ளன.

    • பலாப்பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் பிற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    பழுக்காத பலாப்பழங்களை முதல் டிரைமெஸ்டரில் சாப்பிடுவது பலன் அளிக்காது. மூன்றாவது டிரைமெஸ்டரில் சாப்பிட்டால், சற்று பலனளிக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

    • வயிற்று சார்ந்த பிரச்சனைகளை கையாளுகிறது

    மிதமான அளவில் பலாப்பழம் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் தோன்றும் அல்சர் போன்ற பல வயிற்று தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.

    • குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

    கருவின் வளர்ச்சிக்குத் தேவையான ஜின்க், கால்சியம், பீட்டா-கரோட்டின் மற்றும் இரும்புச் சத்து பலாப்பழத்தில் உள்ளது.

    • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

    பலாப்பழம் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    • சோர்வைப் போக்க உதவுகிறது

    பலாப்பழம் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது தகுந்த ஆற்றலை அளித்து சோர்வைப் போக்குகிறது.

    • செரிமானத்தை மேம்படுத்துகிறது

    பரிந்துரைக்கப்பட்ட தினசரி நார்ச்சத்து தேவையில் கிட்டத்தட்ட 10% பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து பூர்த்தி செய்து விடுகிறது. இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். மலச்சிக்கல் போன்ற சிக்கல்கள் இருக்காது. குடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.

    • மன அழுத்தத்தைக் குறைக்கிறது

    குறிப்பாக பலாப்பழத்தில் உள்ள கொட்டை மிகுந்த நன்மை பயக்கக் கூடியது. ஏனெனில், இதில் புரதம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல மினரல்கள் உள்ளன.

    • நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

    நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த வைட்டமின் சி தேவைப்படும். அதுவும் கர்ப்ப காலத்தில் இது முக்கியமான ஒன்று. பலாப்பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

    கர்ப்ப காலத்தில் பலாப்பழத்தில் உள்ள கொட்டையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கர்ப்பிணிப் பெண்களுக்கு பலாப்பழத்தில் உள்ள கொட்டை மிகுந்த நன்மை பயக்கக் கூடியது -

    • பலாப்பழத்தில் உள்ள கொட்டையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று இரும்புச் சத்து குறைப்பாடு ஆகும். அதனால் கர்ப்ப காலத்தில் பலாப்பழ கொட்டையை எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    • அது மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்களின் சருமம் ஒளிரவும், அழகான கூந்தலுக்கும் தேவையான மினரல்கள் பலாப்பழ கொட்டையில் நிறைந்துள்ளது.

    • பலாப்பழ கொட்டையை எடுத்துக் கொள்வது சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

    கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் கூட, கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை இது உறுதியளிப்பது இல்லை.

    • அடிக்கடி பலாப்பழம் எடுத்துக் கொள்வது கர்ப்பிணியின் இரத்த சர்க்கரை அளவுகளை மாற்றுகிறது. அதனால் நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணிகள் இதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

    • பலாப்பழத்தால் இரத்தம் விரைவில் உறைந்து விடுவதாக நம்பப்படுகிறது.

    • இது ஒரு இயற்கையான மலம் இலக்கி என்பதால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு அல்லது பிற கழிவகற்றுதல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.

    • ஒரு சில பெண்களுக்கு பலாப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும்.

    உங்கள் கர்ப்ப கால உணவில் பலாப்பழத்தை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்

    பலாப்பழத்தை எப்படி பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். பழுக்காத பழங்களை சமைத்து சாப்பிடலாம். அல்லது பழுத்த பழங்களை அப்படியே கூட சாப்பிடலாம் அல்லது ஷேக் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் பலாப்பழ சிப்ஸ் சாப்பிடலாம், ஆனால் குறைந்த அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பலாப்பழத்தை துண்டாக்கி தேங்காய் திருவி போட்டுக் கூட சாப்பிடலாம்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்பமாக இருக்கும் போது இறால் சாப்பிடலாமா?

    பலாப்பழங்களை தேர்வு செய்வது மற்றும் ஸ்டோர் செய்வது தொடர்பான அறிவுறுத்தல்கள்

    பலாப்பழங்களை வாங்கும் போது, ஃபிரஷ் ஆன, எடை அதிகம் உள்ள, டார்க் பச்சை நிறத்தில் உள்ள, வலுவான முட்கள் கொண்ட பழுக்காத பழங்களை தேர்வு செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில் பலாப்பழங்களை மிதமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். பலாப்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து மருத்துவர் ஆலோசனையுடன் இதனை அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Questions

    • Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

      arrow
    • Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

      arrow
    • மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

      arrow
    • 3 மந்த் பேபி எப்படி இருக்கும்

      arrow
    • அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

      arrow

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    பிறப்பு முதல் 1 வருடம் வரை உங்கள் குழந்தைக்கு என்ன உணவளிக்க வேண்டும் - இதோ முழுமையான பேபி டயட் சார்ட் (What to Feed Your Baby from Birth to 1 Year - Here's the Complete Baby Diet Chart In Tamil)

    Image related to Postnatal Care

    Postnatal Care

    பிரசவத்திற்குப் பிந்தைய கால நிலைகள் என்னென்ன?(Postpartum Period (Puerperium): What are the stages?In Tamil)

    Image related to Loss Of Sleep

    Loss Of Sleep

    பிரசவத்திற்குப் பிறகு வரும் தூக்கமின்மை: அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் அதற்கான நிவாரணங்கள்

    Image related to Maternity Fashion

    Maternity Fashion

    மெட்டர்னிட்டி லெக்கின்ஸ்: கர்ப்பமாக இருக்கும் போது உங்களுக்கு சௌகரியமான ஒன்றை தேர்வு செய்வது எப்படி!(Maternity Leggings: Choosing comfort in Pregnancy and How! In Tamil)

    Image related to Scans & Tests

    Scans & Tests

    கர்ப்பத்தின் அல்ட்ராசவுண்ட் அறிக்கையை எவ்வாறு படிப்பது (How to Read an Ultrasound Report of Pregnancy In Tamil)

    Image related to Sex Life

    Sex Life

    சிசேரியனுக்குப் பிறகு எப்போது உடலுறவு கொள்ள வேண்டும்?

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave