hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Baby Clothes arrow
  • குழந்தைகளுக்கான குளிர்கால ஃபேஷன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்! (Winter Fashion for kids:everything you know about In Tamil) arrow

In this Article

     குழந்தைகளுக்கான குளிர்கால ஃபேஷன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்! (Winter Fashion for kids:everything you know about In Tamil)

    Baby Clothes

    குழந்தைகளுக்கான குளிர்கால ஃபேஷன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்! (Winter Fashion for kids:everything you know about In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குளிர்காலம் நெருங்கி வருவதால், அந்த ஹாலிடே பார்ட்டிகளுக்கு என்ன அணிய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. வின்ட்டர் பார்ட்டிக்கு ஜாக்கெட் அல்லது கோட் கண்டிப்பாக இருக்க வேண்டும், மேலும் உங்கள் குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க கிளவுஸ்கள் மற்றும் ஸ்கார்ஃப்பை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எதை தேர்வு செய்தாலும், பார்ட்டியில் உங்கள் குழந்தை அட்டகாசமான உடை அணிந்து அனைவரையும் ஈர்ப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    குழந்தைகளுக்கான குளிர்காலத்திற்கேற்ற லேதர் கோட்டுகள் & ஜாக்கெட்டுகள் (Baby Winter Leather Coats & Jackets In Tamil)

    லேதர் ஜாக்கெட்டுகள் குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு ஏற்ற ஒரு உன்னதமான உடையாகும். அவை குளிர்ச்சியிலிருந்து நல்ல காப்பு மற்றும் ஸ்டைலை வழங்குகிறது. உங்கள் குழந்தை கூட்டத்திலிருந்து தனித்து தோற்றமளிக்க வேண்டுமெனில் லேதர் ஜாக்கெட்டுகள் தான் சிறந்தது.

    ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான கம்பளி ஸ்வெட்டர்கள் மற்றும் ஆடைகள் (Woolen Sweaters and Cardigans for Baby Boys and Girls In Tamil)

    கம்பளி உடைகள் உங்கள் குழந்தை குளிர்காலத்தில் அணியக்கூடிய மிகவும் வசதியான மற்றும் காற்றோட்டமான ஆடையாகும். குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் பல்வேறு வகையான கம்பளி ஆடைகள் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.

    ஸ்டைலிஷ் பேபி ஹூடீஸ் ஸ்வெட்ஷர்ட்ஸ் க்ளோத்கள் (Stylish Baby Hoodies Sweatshirts Clothes In Tamil)

    ஹூட் ஸ்வெட்ஷர்ட் குழந்தைகளின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். குளிர் காலத்திற்கு ஏற்ற வசதியான ஜீன்ஸ் அல்லது ஜாகர்ஸ் போன்ற எந்த வகையான பாட்டம்ஸுடனும் இதை இணைக்கலாம். குழந்தைகளுக்கான ஹூடிகள் மென்மையான துணியால் தயாரிக்கப்படுகின்றன, வெப்பநிலை குறையும் போது இது போன்ற உடைகள் ஏற்றதாக இருக்கும். இன்றே உங்களின் ஹூட் ஸ்வெட்ஷர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து, குளிர்காலம் முழுவதும் உங்கள் குழந்தையை சௌகரியமாக வைத்திருங்கள்.

    பெண் குழந்தைக்கான தனித்துவமான வின்ட்டர் ஷ்ரக் (Unique Winter Shrug for Baby Girl In Tamil)

    இந்த பார்ட்டி-வேர் ஷ்ரக்ஸில் உங்கள் மகள் பார்க்க படுஜோராக இருப்பார்! இந்த உடைகள் நாகரீகமான குளிர்கால ஆடைகளின் மகிழ்ச்சிகரமான சிறந்த தேர்வாகும், மேலும் அவை சரியான பார்ட்டி தோற்றத்திற்காக துல்லியமாக தயாரிக்கப்படுகின்றன. வின்ட்டர் பார்ட்டிகளில் உங்கள் மகள் வசீகரமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வின்ட்டர் வெட்டிங் ஷ்ரக்ஸை ஆர்டர் செய்யுங்கள்.

    ஆண் குழந்தைகளுக்கான இதமான உள்ளாடைகள் (Warm Innerwear and Thermals for Baby Boys In Tamil)

    குளிர்காலங்களில் உங்கள் குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று, உள்ளாடை அணிவது. தெர்மல்கள் மென்மையான கம்பளியால் தயாரிக்கப்படுகின்றன அத்துடன் அவை உடல் வெப்பநிலையை ஆரோக்கியமான மட்டத்தில் வைத்திருக்கின்றன. முதலில் உங்கள் குழந்தைக்கு உள்ளாடை அணிவித்து, அதன் மேல் கூடுதல் அடுக்குகளைச் சேர்க்கவும்.

    குழந்தைக்கு கம்பளி சாக்ஸ் (Wool Socks for Baby)

    உங்கள் குழந்தையின் கால்களை எப்படி கதகதப்பாக வைத்திருப்பது என்று சிந்திக்கும்போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். கம்பளி சாக்ஸ் ஒரு சிறந்த வழி, ஏனெனில் அவை மென்மையானவை மற்றும் உங்கள் குழந்தையின் கால்களை கதகதப்பாக வைத்திருக்க உதவும். சுறுசுறுப்பான மற்றும் தரையில் விளையாடும் குழந்தைகளுக்கு கம்பளி சாக்ஸ் அவசியம் இருக்க வேண்டும். பிடிப்பு இல்லாததால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க ஆண்டி ஸ்லிப் சாக்ஸ் இன்டர்நெட்டில் கிடைக்கிறது.

    இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கான டிஸ்போசபிள் டயப்பர்களை(disposable diapers) எப்போது நிறுத்த வேண்டும்

    குழந்தைகளுக்கான கம்பளி தொப்பிகள் மற்றும் குல்லாக்கள் (Woolen Caps and Hats for Babies In Tamil)

    உங்கள் குழந்தைக்கு குல்லா அல்லது கம்பளி தொப்பியை அணிவிப்பதை வழக்கமாக்குங்கள், குறிப்பாக அவை காதுகளை மூடும் வகையாக இருக்க வேண்டும். காதுகளை மூடும்படி இருக்கும் தொப்பிகள் குளிர் மாதங்களில் குழந்தைகளுக்கு சளி அல்லது காய்ச்சல் வராமல் தடுக்கிறது.

    பெண் குழந்தைகளுக்கான ஹேண்ட் கிளவுஸ்கள் (Hand Gloves for Baby Girls)

    மென்மையான கம்பளியால் செய்யப்பட்ட ஒரு ஜோடி கிளவுஸ்களை அணிந்திருக்கும் குழந்தை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவை அபிமானமாக இருப்பது மட்டுமல்லாமல், அணிய மிகவும் வசதியாகவும் இருக்கும். மேலும் அவை கம்பளியால் செய்யப்பட்டவை என்பதால், குளிர் காலநிலையில் வெளியே அணிவதற்கு ஏற்றது.

    குழந்தைகளுக்கு கேபிளால் பின்னப்பட்ட இதமான குளிர்கால தொப்பி (Baby Cable Knit Warm Winter Cap)

    கேபிளால் பின்னப்பட்ட தொப்பி என்பது குழந்தை மற்றும் பெரியவர்களின் அலமாரிக்கு ஒரு ஸ்டைலான கூடுதலாகும். இது நேர்த்தியாகத் தெரிவதுடன் மிகவும் பயனுள்ளது. ஒரு நல்ல தரமான கேபிளால் பின்னப்பட்ட தொப்பி உங்கள் குழந்தைகளின் காதுகளுக்குள் நுழையும் குளிர்ந்த காற்றிலிருந்து பாதுகாப்பதுடன் குழந்தைகளின் தலையை கதகதப்பாக வைத்திருக்கும்.

    பேபி முழு கை ஸ்வெட்டர் & ஸ்ட்ரைப் பேன்ட் செட் (Baby Full Sleeves Sweater & Stripe Pant Set)

    குழந்தைகளின் ஆடைகளில் ஸ்ட்ரைப் பேண்ட் தான் லேட்டஸ்ட் டிரெண்ட். ஸ்ட்ரைப் பேண்ட்களை அணிவது உங்கள் குழந்தை வழக்கமான பேண்ட்களில் இருக்கும் மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்து இருப்பார்கள். ஸ்ட்ரைப் பேன்ட்கள் முழு கை ஸ்வெட்ஷர்ட்களுடன் இணைந்தால் நன்றாக இருக்கும்.

    குழந்தைக்கான குளிர்கால முழு கை ரோம்பர் (Baby Winter Wear Full Sleeves Romper)

    உங்கள் குழந்தைக்கு வசதியான, தளர்வான, ஒரு துண்டு ஆடையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரோம்பர் ஒரு சிறந்த வழி. ரோம்பர்களை அணிந்துகொள்வதற்கு எளிதானது, மேலும் அவை விளையாடும் நேரம் அல்லது தூக்க நேரத்துக்கு ஏற்றவை. கூடுதலாக, அவை பல்வேறு அழகான பாணிகள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன.

    குழந்தைக்கான ஹூடியுடனான முழு கை ஸ்வெட்டர் (Baby Full Sleeves Sweater with Hoodie)

    குழந்தைகளுக்கான ஹூடிஸ் குளிர்காலத்திற்கு ஏற்றது. தேர்வு செய்ய பல கவர்ச்சிகரமான வடிவமைப்புகள் உள்ளன, மேலும் குழந்தைகள் நிச்சயமாக அவற்றை விரும்புவார்கள். ஹூடிகள் மென்மையான மற்றும் வசதியான பொருட்களால் செய்யப்படுகின்றன, குளிர் நாட்களில் உங்கள் குழந்தைகளை கதகதப்பாக வைத்திருப்பதற்கு இவை ஏற்றது. கூடுதலாக, அவை எளிதான பராமரிப்புக்காக மெஷினில் துவைக்கக்கூடியவை.

    குழந்தைகளுக்கான முழு கை ஸ்வெட்டர் & கேப் உடன் வரும் ஃபூட்டட் பேண்ட் செட் (Baby Full Sleeves Sweater & Footed Pant Set with Cap)

    உங்கள் குழந்தையை வசதியாக உணர வைக்கவும், அதே சமயத்தில் அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தாமல் இருக்கும் வகையிலான ஒரு உடையை தேடுகிறீர்களா? இதற்கான பதில் ஃபூட்டட் பேண்ட் செட் தான். இது முழு கை மற்றும் ஃபூட்டட் பேண்ட்களுடன் கூடிய ஸ்வெட்டருடன் வருகிறது, இவை இரண்டும் மென்மையான மற்றும் வசதியான மெட்டீரியலால் ஆனது. ஸ்வெட்டரின் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் உங்களை ஈர்ப்பதோடு குழந்தைக்கும் ஏற்றதாக இருக்கும். அதோடு, பேண்ட் வசீகரமாக இருக்கும். கூடுதலாக, இந்த செட் பொருத்தமான தொப்பியுடன் வருகிறது, இது உங்கள் குழந்தையின் தலையை கதகதப்பாக வைத்திருக்க ஏற்றதாகும்.

    TAGS :

    Kids fashion in tamil, kids winter fashion in tamil, winter clothes for kids in tamil, Winter Fashion for kids:everything you know about In English, Winter Fashion for kids:everything you know about In Hindi, Winter Fashion for kids:everything you know about In Telugu, Winter Fashion for kids:everything you know about In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Topics

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.