
தாய்மை என்பது ஒரு வரம் தான். ஏனெனில், அனைவருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. பொதுவாக சில பெண்கள் தாங்களாகவே தங்கள் 40 வயது வரை கர்ப்பம் தரிக்காமல் காத்திருக்கத் தேர்வு செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் பல பெண்கள் கருவுறுதல் பிரச்சினைகள் காரணமாக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். 40 வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலம் சில நன்மைகள் இருந்தாலும், இந்த கட்டத்தில் தாய்க்கு அதிக சிரமங்களும் ஏற்படும்.
40 வயதில் நீங்கள் தாமதமாக கர்ப்பம் தரித்தால், அதற்கேற்ற சில சுகாதார சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும், அத்தகைய சூழலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது. அதற்காகத் தான் நாங்கள் உங்களுக்கு 40 வயதில் கர்ப்பம் தரிப்பதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்களைப் பற்றி இங்கு விளக்கியுள்ளோம்.
சொல்லப் போனால், இதில் எந்த வித நேரடி நன்மைகளும் இல்லை. என்றாலும், பின்வரும் சில சூழ்நிலைகளில் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்:
இந்த காலகட்டத்தில் நீங்கள் முன்பை விட மெச்சூர் ஆக இருப்பீர்கள். அதனால், இந்த புதிய பொறுப்பை நன்றாக கையாளுவீர்கள்.
உங்கள் குழந்தையை வளர்க்க உங்களிடம் போதுமான நிதி இருக்கும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மற்றும் வேளையில் ஒரு நிலையான நிலையில் இருப்பீர்கள். அதனால், உங்கள் குழந்தைக்கு போதுமான நேரத்தை உங்களால் ஒதுக்க முடியும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தியிருப்பீர்கள். அதனால் நீங்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பீர்கள்.
கடந்த சில காலமாக நவீன விஞ்ஞானம் எவ்வாறு எல்லாம் முன்னேறியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தல் 40 வயதில் குழந்தை பெறுவது என்பது பாதுகாப்பானது தான். இருப்பினும், 40 வயதில் கர்ப்பம் தரிப்பது பின்வரும் அபாயங்களையும் ஏற்படுத்தக் கூடும்:
உயர்ந்த இரத்த அழுத்தம்.
கர்ப்பகால நீரிழிவு நோய்.
கருச்சிதைவு.
டவுன் சிண்ட்ரோம் போன்ற பிறவி குறைபாடுகள்.
எடை குறைந்த குழந்தை.
இடம் மாறிய கர்ப்பம்.
நீங்கள் 40 வயதில் கர்ப்பமானால், அதனால் தாய் மற்றும் குழந்தைக்கு சிக்கல்கள் ஏற்படலாம். இந்த சிக்கல்கள் பொதுவாக வயதான தாய்மார்களில் காணப்பட்டாலும், உங்களுக்கு இந்த சிக்கல்கள் இல்லாமலும் போகலாம்.
நஞ்சுக்கொடி தகர்வு.
குழந்தை பெரிதாக இருத்தல்.
சிசேரியன் முறையிலான பிரசவம்.
குழந்தை இறந்து பிறத்தல்.
உங்கள் வயதானது உங்கள் கருவுறுதல் தன்மையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க, கருவுறாமை மற்றும் கர்ப்பம் தரிப்பதில் சிரமத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவ்வாறு இருப்பினும், தொடர்ந்து வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியோடு பெண்கள் 40 வயதிலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமான ஒன்று தான். அதற்கான ஆப்ஷன்கள் பின்வருவனற்றை உள்ளடக்குகிறது:
உங்களுக்கு வயதாகும்போது கர்ப்பம் தரிக்க உதவும் வகையில் இளமையாக இருக்கும் போதே கரு முட்டைகளை உறைய வைத்தல்.
விந்தணு வங்கிகள்.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (ஐவிஎஃப்) அல்லது பிற கருவுறாமை தொடர்பான சிகிச்சைகள்.
வாடகைத்தாய்.
இருப்பினும், இவ்வாறு பல ஆப்ஷன்கள் இருந்தாலும் கூட, உங்கள் வயது அதிகரிக்கும்போது உங்கள் கருவுறுதல் தன்மையானது குறைகிறது. இது பின்வருவனவற்றின் காரணமாக இருக்கலாம்:
கருத்தரிப்பதற்கு குறைவான முட்டைகளே எஞ்சி இருத்தல்.
ஆரோக்கியமற்ற கரு முட்டைகள்.
கருச்சிதைவு அதிகரிப்பதற்கான ஆபத்து.
கருப்பையில் இருந்து கரு முட்டைகள் சரியாக வெளியேறாமல் இருத்தல்.
கருவுறுதலை பாதிக்கும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து.
உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் வெற்றிகரமாக கருத்தரிக்க மற்றும் கர்ப்பமாக இருக்க சிறிது நேரம் எடுக்கும். நீங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக கருத்தரிக்க முயற்சி செய்து தற்போது உங்கள் வயது 35-க்கு மேல் இருந்தால், நீங்கள் ஒரு கருவுறுதல் நிபுணரைப் பார்க்க வேண்டிய நேரம் இது. 40 வயதில் கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாகத் தான் இருக்கும்.
கருவுறாமைக்கான காரணத்தை அறிய உங்கள் மருத்துவர் சில சோதனைகளை உங்களுக்கு பரிந்துரைப்பார். சொல்லப் போனால் பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் ஆனாலே, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறைந்து விடும். இருப்பினும், 35 வயதிற்கு மேலேயும் கருத்தரிப்பதற்கு சில சிகிச்சைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
இந்த மருந்துகளில் வெற்றிகரமான ஒவுலேஷனுக்கு (அண்டவிடுப்பு) உதவும் வகையிலான ஹார்மோன்கள் உள்ளன.
இது செயற்கை கருவூட்டல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறையானது விந்தணுவை நேரடியாக கருப்பையில் செலுத்துகிறது. உங்கள் பார்ட்னருக்கு மலட்டுத்தன்மை இருந்தால், ஐயூஐ உறுதுணையக இருக்கும்..
முட்டைகள் மற்றும் விந்தணுக்கள் அந்தந்த பார்ட்னர்களிடமிருந்து அகற்றப்பட்டு ஆய்வகத்தில் அது கருவுற்ற முட்டை ஆக்கப்படுகிறது. அதன் பின்னர் அது பெண்ணின் கருப்பையில் செருகப்படுகிறது.
40 வயதில் கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு சவாலான சாதனையாக இருந்தாலும் கூட, தாமதமாக கர்ப்பம் தரிக்க தாயின் உடல் நலத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம். இதில் அடங்குவன பின்வருமாறு:
உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி மற்றும் நோவு.
கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள்.
கர்ப்ப கால சோர்வு அதிகமாக இருக்கும்.
உங்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க, சுகப் பிரசவத்திற்கான வாய்ப்புகளும் குறைந்து விடும். இத்தகைய கருவுறுதல் சிகிச்சைகள் குறைப்பிரசவத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம். வயதுக்கு ஏற்ப உடல்நல பிரச்சனைகளும் அதிகரிக்கும் என்பதால், தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தை என இருவரையும் காப்பாற்ற, சிசேரியன் டெலிவரி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு 40 வயதில் சுகப் பிரசவம் நடந்தால், குழந்தை இறந்தே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வழக்கமாக 40 வயதில் சிசேரியன் பிரசவத்திற்கு தான் வாய்ப்பு அதிகம் என்றாலும், தாமதமாக கர்ப்பம் அடைந்த பல பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறார்கள். எனவே இதற்கு நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி, தாமதமாக கர்ப்பம் தரிப்பதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், 40 வயதில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான அனைத்து ஆபத்துகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரிடம் பேசி, சுகப் பிரசவத்திற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தைப் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் பின்வரும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்:
புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள்.
மது குடிப்பதை நிறுத்துங்கள்.
சத்தான, ஆரோக்கியமான, சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பருமனாக இருந்தால் அல்லது குண்டாக அதிக எடையுடன் இருந்தால் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் உங்கள் எடையை குறைத்துக் கொள்ளுங்கள்.
சரியான உடல் எடையை பராமரியுங்கள்.
கர்ப்ப காலத்தில் உங்கள் எடை அதிகரிப்பை சரியாக நிர்வகியுங்கள்.
கர்ப்ப காலத்தில் துரித மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
உங்கள் மகப்பேறு கால அட்டவணையின்படி கர்ப்ப காலத்தில் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்.
உங்கள் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் காஃபின் உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
40 வயதில் முதன்முறையாக கர்ப்பம் தரிப்பது என்பது ஆழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தரலாம். ஆனால் அதுவே உங்களுக்கு இரண்டாவது குழந்தை என்றால், ஒப்பீட்டளவில் அது எளிதாக இருக்கும். உங்களுக்கு அனுபவம் இருக்கும். என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் 40 வயதில் இரண்டாவது குழந்தையை கருவில் சுமந்து கொண்டு இருந்தால், கர்ப்பத்தின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் மனதில் கொள்ள மறவாதீர்கள்.
இதையும் படிக்கலாமே! - IUI (Intrauterine Insemination) பரிசோதனைக்கு விந்தணு பெறுவது எப்படி?
நீங்கள் 40 வயதில் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பினால், அது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். ஆனால், தாமதமாக கர்ப்பம் தரிப்பது தொடர்பான அனைத்து நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் இது பற்றி பேசுங்கள். உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்கள் மற்றும் உடல்நிலையை மதிப்பீடு செய்து, விரைவில் புது வரவிற்கு கிரீன் சிக்னல் கொடுப்பார். நீங்கள் விரைவில் கருவுற்று உங்கள் செல்லக் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |