


Scans & Tests
25 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
எப்போது ஒருவருக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்படுகிறது? மேலும் ஒருவருக்கு எப்போது நோய் வரும், வராது என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ஸ்கிரீனிங் பரிசோதனை செய்வதன் மூலமாக மட்டுமே இதைக் கூற முடியும். ஸ்கிரீனிங் பரிசோதனை என்றால் நோய்களை முன்கூட்டியே கண்டறிவதாகும். குறிப்பிட்ட நோய் தாக்கும் அபாயம் உள்ள நபர்களுக்கு இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு, 50 வயதை ஒட்டிய பெண்கள் புற்றுநோய்க்கான பரிசோதனையை செய்து கொள்கின்றனர். பெண்களுக்கான இந்தப் பரிசோதனையை செய்வதன் மூலமாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
பருவம் அடைவது முதல், பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு காலத்தின்போது உடலில் பல மாற்றங்கள் நிகழுகின்றன. உதாரணத்திற்கு ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் காணப்படும். பல்வேறு காரணங்களால் ஹார்மோன் சுரப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, உடலில் தென்படும் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வோடு இருப்பதுடன், அவ்வபோது ஸ்கிரீனிங் பரிசோதனைகள் செய்து கொள்வது முக்கியமானது.
அவசியமான சில பரிசோதனைகள் இதோ.
உடலின் மெடபாலிச நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற வகையில், தைராய்டு சுரப்பிகளில் இருந்து கிடைக்கின்ற மிக முக்கியமான ஹார்மோன்கள் T4, T3, மற்றும் TSH ஆகும். உங்களுக்கு ஹைபோதைராய்டிஸம் இருந்தால், உங்கள் மெடபாலிச நடவடிக்கைகள் மந்தமாகும் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஹைபோதைராய்டிஸம் என்பது உடலில் தைராய்டு ஹார்மோன்கள் மிக, மிக குறைவாக உள்ள நிலையாகும். உடல் சோர்வு, சரும வறட்சி மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை இந்த குறைபாடு காரணமாக ஏற்படுகின்ற பொதுவான அறிகுறிகள் ஆகும். இதர அறிகுறிகளுடன் சேர்த்து, ஹைபோதைராய்டிஸம் காரணமாக உங்கள் இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறாக வேகமாக இருக்கும். சிலருக்கு கவலை, உடல் எடை இழப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹார்மோன் மாற்றம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, கர்ப்பம் போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தலைச்சுற்றல், மயக்கம், நீர்சத்து குறைபாடு மற்றும் மிகுதியான வியர்வை போன்ற அறிகுறிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இவை அடிக்கடி நிகழுகிறது என்றால் ரத்த அழுத்த பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.
லிபிட் ஃபுரொபைல் பரிசோதனை மிகவும் முக்கியமானதாகும். இது உங்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவுகளை தெரிந்து கொள்ள உதவியாக அமையும். இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பாலினத்தவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்சினை ஆகும். அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் காரணமாக உங்கள் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதனால், இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிப்பதால் உணரத் தகுந்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. பரிசோதனை மூலமாக மட்டுமே இதை தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் வயதுக்கு ஏற்பதான் உடலும் இருக்கும். ஒவ்வொரு நபருமே புற்றுநோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உடையவர்கள் தான். நம்ப முடியவில்லையா? நீங்கள் வெயிலில் செல்வதில்லையா? சூரியணில் இருந்து வரும் யூவி கதிர்களும் கூட புற்றுநோய்க்கான இயல்புகளைக் கொண்டதுதான். புற்றுநோய்க்கான அபாயங்கள் அதிகரிக்கும் நிலையில், அவ்வபோது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.
புற்றுநோயை கண்டறிய ஒன்றுக்கும் மேற்பட்ட சில ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம். குறிப்பாக அதிக அபாயம் கொண்ட நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் மரபு ரீதியாக நோய் ஆபத்து கொண்டவர்கள், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துவோர் மற்றும் இதற்கு முன்பு புற்றுநோய் இருந்த நோயாளிகள் போன்றோர் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிடி ஸ்கேன், எலும்பு ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்ற சில ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோயை கண்டறிய பரவலாக பயன்படுத்தக் கூடிய பரிசோதனை முறைகள் இதோ!
பாலிப் கட்டிகளைப் பொறுத்தவரையில் கொலோனோஸ்கோபி சோதனையின் மூலமாக அதை முன்னதாகவே கண்டறிந்து, நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது நுரையீரல் புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனை ஆகும். குறிப்பாக புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் பொதுவான புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிசோதனை இதுவாகும். இது மார்பக புற்றுநோயை கண்டறிய உதவுகிறது.
இந்தப் பரிசோதனையாது கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனை மிக முக்கியமானது. இதை ஏன் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இதோ.
புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிசோதனை மூலமாக, புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, அது உடல் முழுவதும் பரவுவது தடுக்கப்படுகிறது மற்றும் தெரஃபி சிகிச்சை வெற்றிகரமாக அமைகிறது.
தாமதமின்றி முன்கூட்டியே புற்றுநோயை கண்டறிந்தால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
முன்கூட்டியே கண்டறிவதால் சிகிச்சை செலவுகள் குறையும். ரசாயன மருந்துகளும் குறையும் மற்றும் சிகிச்சை முறையின் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும்.
புற்றுநோய் பாதித்து உடல் உள்ளே ஏற்படும் தாக்கங்களால் ஒருவர் அதன் அறிகுறிகளை உணருவதற்கு முன்பாகவே புற்றுநோயை கண்டறிய பரிசோதனை உதவிகரமாக அமையும்.
உங்களுக்கு அருகாமையில் உள்ள மருத்துவரிடம் புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்து கொள்ள எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொண்டு, அதை இன்றே செய்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே! - கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கான ஃபீடல் டாப்ளர் ஸ்கேன் பற்றிய விரிவான வழிகாட்டி
ஸ்கிரீனிங் பரிசோதனைகளில் தொந்தரவு அதிகம் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடலுக்கும் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, உங்கள் வயதுக்கு ஏற்ற பரிசோதனைகள் அவசியம். பெண்களைப் பொருத்தவரையில் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் அதிக நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மிக, மிக முக்கியமானது.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்? ( how long it takes to get pregnant in Tamil?)

கர்ப்ப காலத்தில் மாதுளை | நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்(Pomegranate During Pregnancy: All You Need To Know In Tamil)

கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர்: விளைவுகள், அபாயங்கள் மற்றும் நன்மைகள் (Cauliflower During Pregnancy: Effects, Risks & Benefits In Tamil)

பெண்களுக்கான 25 எடை இழப்பு குறிப்புகள்

கண் நோய் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பருவகால தொற்றுநோய்(Eye Flu Alert: The Seasonal Epidemic You Need to Know About In Tamil)

கர்ப்பத்தில் கரு வளர்ச்சி கட்டுப்பாடு (Fetal Growth Restriction ( FGR )) கண்ணோட்டம்(Fetal Growth Restriction (FGR) in Pregnancy – Overview In Tamil)