This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பிரசவத்திற்குப் பின்னான உடல் உறவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (போஸ்ட்பார்ட்டம் செக்ஸ்)

Sex Life
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பிரசவத்திற்குப் பின்னான உடல் உறவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  (போஸ்ட்பார்ட்டம் செக்ஸ்)
Likes156 Likes|
Read time7 min

குழந்தையைப் பெற்றெடுத்த பின், ஒரு பெண்ணிற்குள் உடல் ரீதியிலான மாற்றங்கள் மட்டும் அல்லாமல், மன ரீதியிலான மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியிலான மாற்றங்களும் ஏற்படும். ஆம், இப்போது உங்கள் கைக்குழந்தை உங்கள் கையில் தவழ்வதால், முக்காவாசி நேரம் குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே ஓடிவிடும். செக்ஸ் அல்லது பாலியல் உறவு தான் உங்கள் மனதில் ஓடும் கடைசி விஷயமாக இருக்கும். ஆனால், இந்த புதிய வழக்கத்திற்கு நீங்கள் செட் ஆகிவிட்டீர்கள் என்றால், உங்கள் பாலியல் உறவை மீண்டும் தொடர்வதற்கு சரியான நேரம் எது என்பது குறித்து நீங்கள் யோசிப்பீர்கள்.

போஸ்ட்பார்ட்டம் செக்ஸ் என்பது வெறும் உடல் உறவு அல்ல, இதற்கு நீங்கள் உடல் ரீதியாக தயாராக இருந்தால் மட்டுமே போதாது. பிரசவத்திற்குப் பிந்தைய உடலுறவு குறித்த உங்கள் முடிவு பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமைகிறது. அவை பின்வருமாறு

  • பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு அல்லது பாலியல் வேட்கை

  • பாலியல் உறவிற்கு உணர்வு ரீதியாக தயாராக இருத்தல்

  • உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம்

  • கணவருடனான உங்கள் உறவு

  • ஒரு அம்மாவாக குழந்தையை கவனித்துக் கொள்ளுதல் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடுதல் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கொள்ளும் திறன்

பிரசவத்திற்குப் பின் நீங்கள் எப்போது உடலுறவில் ஈடுபடலாம்?

ஏசிஓஜி-ன் (அமெரிக்கன் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறியல் நிபுணர்கள் கல்லூரி) படி, பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு வைத்துக் கொள்ளத் தொடங்குவதற்கு என நிலையான நேரம் ஒன்றும் கிடையாது. இருந்தாலும், பெரும்பாலான நிபுணர்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் குறைந்தபட்சம் 4-6 வாரங்கள் காத்திருக்கும் படி பரிந்துரைக்கின்றனர்.

உங்களுக்கு நார்மல் டெலிவரி என்றால், யோனி கிழிந்திருக்கக் கூடும் அல்லது வெட்டுக் காயம் (எபிசியோடமி) இருக்கும். அது பிரசவத்திற்குப் பின் ஆறுவதற்கு சிறுது காலம் ஆகும். இத்தகைய சூழலில், அந்த காயங்கள் முழுவதுமாக ஆறுவதற்கு முன் உடலுறவு கொண்டால், அது பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். மறுபுறம் உங்களுக்கு சிசேரியன் டெலிவரி என்றால், நீங்கள் அதில் இருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கும். பாலியல் உறவில் ஈடுபட நீங்கள் குறைந்தபட்சம் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தக் கூடும். சிசேரியன் டெலிவரி என்றால், வயிற்றைக் கிழித்து தான் குழந்தையை வெளியே எடுப்பார்கள், அதனால் அந்த புண் ஆறுவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதனால் போஸ்ட்பார்ட்டம் செக்ஸ் குறித்து நீங்கள் திட்டமிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

பிரசவத்திற்குப் பின் உடலுறவு கொள்ளும் போது நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பின், ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள், குறிப்பாக நீங்கள் தாய்ப்பாலூட்டினால், உங்கள் யோனியை மென்மையானதாகவும் வறண்டதாகவும் மாற்றும். எபிசியோடமி அல்லது யோனி கிழிந்திருந்தால் அதில் இருந்து முழுவதுமாக குணமைடையவில்லை என்றால் உங்களுக்கு வலி ஏற்படும். அந்த வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுபட, நீங்கள் பின்வரும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

ஓடிசி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம்(Take OTC painkillers) :

பிரசவத்திற்குப் பின் நீங்கள் உறவு கொள்ள ஆசைப்பட்டால், வலியில் இருந்து நிவாரணம் பெற நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. ஓடிசி (மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் இருந்து வாங்கக்கூடிய மாத்திரை மருந்துகள்) வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பிளாடரை காலியாக வைக்க வேண்டும். உடலுறவுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். உடலுறவுக்குப் பின் உங்களுக்கு எரிச்சல் உணர்வு இருந்தால், டவலில் ஐஸ் கட்டி போட்டு மூடி அந்த டவலை வைத்து அந்தப் பகுதியில் ஒத்தி எடுங்கள்.

லூப்ரிக்கண்ட் பயன்படுத்தலாம்(Use lubricant) :

உங்கள் யோனி வறண்டு காணப்பட்டால், இது உங்களுக்கு வரப் பிரசாதம் போல அமையும்.

மாற்று முறைகளை முயற்சி செய்யுங்கள்(Try alternatives) :

நீங்கள் உடலுறவிற்கு தயாராக இல்லையென்றால், நீங்கள் மசாஜ், ஓரல் செக்ஸ், மியூச்சுவல் மாஸ்டர்பேஷன் (பரஸ்பர சுய இன்பம்) போன்ற மாற்று வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

இருப்பினும், இந்தக் கட்டத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது உங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தால், உங்கள் மருத்துவரைத் தொடர்புகொண்டு சாத்தியமான தீர்வுகளைப் பற்றி கேளுங்கள்.

பிரசவிப்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்?

போஸ்ட்பார்ட்டம் செக்ஸ் கண்டிப்பாக வேறு மாதிரி தான் இருக்கும். குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மூன்று மாதத்தின் போது பெரும்பாலான பெண்களுக்கு சில பாலியல் தொடர்பான பிரச்சனை எழும். சில பொதுவான பிரச்சனைகள் பின்வருமாறு:

  • மெல்லிய யோனி திசு

  • யோனி வறண்டு இருத்தல்

  • வலி

  • இரத்தக் கசிவு

  • எபிசியோடமி அல்லது யோனி கிழிந்திருத்தல்

  • திசுக்கள் எலாஸ்டிசிட்டியை இழத்தல்

  • குறைந்த லிபிடோ

  • தளர்வான தசைகள்

  • சோர்வு

  • புண்

பிரசவத்திற்குப் பின், பெண் அதில் இருந்து மீண்டு வரும் காலத்திலும் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெலிவரிக்குப் பின் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் திடீரென்று வெகுவாகக் குறையும். நீங்கள் தாய்ப்பாலூட்டினால், இந்த அளவுகள் ப்ரீ-பிரக்னன்சி அளவுகளை விட குறையக்கூடும். இது யோனி வறண்டு போகும் சாத்தியத்தை அதிகரிக்கும். இதனால் எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

எவ்வளவு சீக்கிரம் நீங்கள் கர்ப்பம் தரிக்க முடியும்?

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பிரசவத்திற்குப் பின் நீங்கள் உடனடியாக கர்ப்பம் தரிக்க முடியும். பல பெண்களில், அதுவும் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு, முதல் ஓவுலேஷன் ஆறு வாரங்களில் ஏற்படுகிறது, சிலருக்கு முன்பே கூட ஏற்படலாம். தாய்ப்பாலூட்டும் பெண்களில், பாலூட்டுவது ஒரு சில மாதங்களுக்கு பர்த் கண்ட்ரோல் ஆக செயல்படக்கூடும். இருந்தாலும், இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. டெலிவரி ஆன உடனே நீங்கள் உடலுறவு கொள்ளத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் ஒரு நம்பகமான குழந்தைப்பிறப்பு கட்டுப்பாட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.

டெலிவரிக்குப் பின் உடலுறவு கொள்ளும் போது இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது தானா?

உங்கள் கர்ப்பப்பை இதில் இருந்து மீண்டு வருவதால், டெலிவரிக்குப் பின் இரத்தப்போக்கு இருக்கலாம். உடலுறவு காரணமாக கூடுதல் இரத்தம் வெளியேறக் கூடும். உங்கள் யோனி வறண்டு போய்விடலாம். பிரசவத்திற்குப் பின் இன்னும் உணர்த்திறன் மிக்கதாக மாறக் கூடும். ஏனென்றால், யோனி தசைகள் மெலிதாகி, அது மேலும் காயம் அல்லது கிழிதலுக்கு வழிவகுத்துவிடும். இத்தகைய சூழலில், இரத்தப்போக்கு ஏற்படுவது பொதுவானது தான். உடலுறவின் போது இரத்தப்போக்கு இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

குழந்தை பிறப்பிற்குப் பின் பாதுகாப்பாக உடலுறவு கொள்வதற்கான சில குறிப்புகள் :

இதையெல்லாம் கேட்டு உங்களுக்கு சற்று பயம் ஏற்படலாம், ஆனால் பயம் வேண்டாம்! பிரசவித்த பின்னும் உங்களால் கண்டிப்பாக முன்பைப் போல மகிழ்ச்சியாக உடலுறவில் ஈடுபட முடியும். பிரசவித்த பிறகு நீங்கள் பின்வரும் சில செக்ஸ் டிப்ஸ்களைப் பயன்படுத்தலாம்

  • மெதுவாக முன்னெடுத்து செல்லுங்கள் :

உங்கள் மருத்துவர் செக்ஸ் வைத்துக் கொள்ள கிரீன் சிக்னல் காட்டும் வரை நீங்கள் ஒரு சில வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு முன் இருந்தது போல உங்கள் உடல் திரும்புவதற்கு போதிய நேரம் கொடுப்பது அவசியமாகும். உடலுறவு கொள்வதற்கு முன் நீங்கள் மசாஜ் போன்ற வார்ம்-அப் மூலம் உங்கள் கணவருடன் நெருங்கி இருக்கலாம்.

  • முன்னின்பத்தை (ஃபோர்பிளே) அதிகரிக்கலாம் :

யோனிக்கு அதன் இயற்கையான லூப்ரிகேட்டிங் தன்மையை மீட்டெடுக்க போதுமான நேரம் கொடுங்கள். அதனால், முன்னின்பத்தை (ஃபோர்பிளே)அதிகரிக்கலாம். பரஸ்பர சுயஇன்பம், மசாஜ் போன்றவற்றை முயற்சிக்கலாம்.

  • லூப்ரிகன்ட் பயன்படுத்துங்கள் :

உங்கள் ஹார்மோன்கள் கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் போது முன்னின்பத்துடன் (ஃபோர்பிளே) நீங்கள் லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் அடிப்படையிலான லூப்ரிகண்டுகள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், நீர் சார்ந்தவற்றைப் பயன்படுத்தவும்.

  • கெகல் பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள் :

இடுப்பு தசைகளை வலுப்படுத்த கெகல் பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும். சிறுநீரை அடக்க முடியாமை போன்ற பெரும்பாலான பிரசவத்திற்குப் பிந்தைய சிக்கல்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அதோடு, யோனியில் உணர்வையும் வலிமையையும் மீட்டெடுக்கவும் இது உதவும்.

  • உங்கள் கணவருடன் பேசுங்கள்:

​​​​​​​பிரசவத்திற்குப் பிந்தைய உடலுறவைப் பற்றி ​​உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வேறுபடும். உங்கள் கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். உங்களுக்கு எது நல்லதாக படுகிறது, எது வலி அல்லது அசௌகரியத்தைக் கொடுக்கிறது என்றெல்லாம் எடுத்து சொல்லுங்கள். இது தேவையில்லாத அசௌகரியத்தைத் தவிர்த்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்க உதவியாக இருக்கும்.

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Chandrika Iyer
Chandrika Iyer

Related Articles

Questions about this article

  • Asked by Mother of 2 Months Old Baby

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.