
கர்ப்பத்தின் போது, தாய்க்கு மட்டுமின்றி, வளரும் குழந்தைக்கும் முறையான ஊட்டச்சத்து முதன்மையானது. தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் உணவு வகைகளைக் கர்ப்பிணிப் பெண் உட்கொள்வது இன்றியமையாதது.
கர்ப்ப மாதங்களில் குமட்டல் ஏற்படுவதன் காரணமாகப் பலர் பெரும்பாலான உணவுகளை உட்கொள்ள முடியாமல் போகும் நிலையில், அவர்களது உடல் சூப்பர்ஃபுட்கள் அல்லது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் கடினமாக்குகிறது. எனவே, பல கர்ப்பிணிப் பெண்கள், இதற்கு சப்ளிமென்ட்டாக, மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்கள் அல்லது புரோட்டீன் பவுடரைத் தேர்வு செய்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புரோட்டீன் பவுடர் சப்ளிமென்ட் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் புரோட்டீன் பவுடர் உபயோகிப்பதன் நன்மைகள் மற்றும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ள சிறந்த கால கட்டம் பற்றி அறிவோம்.
புரோட்டீன் சப்ளிமென்ட்டாகச் செயலாற்றும் புரோட்டீன் பவுடர் தூள் வடிவில் கிடைக்கிறது. இது அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. திசுக்கள் மற்றும் உறுப்புகளை உருவாக்குவது முதல் உடல் செயல்பாடுகளுக்கு உதவுவது மற்றும் தசையை வலுவாக்குவது வரை பல பணிகளுக்குப் புரதம் தேவை. தாவர அடிப்படையிலான மற்றும் விலங்கு சார்ந்த உணவுகளில் புரதங்கள் உள்ளன. உடலின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கர்ப்பிணி பெண்ணுக்கு புரோட்டீன் பவுடரின் தேவை ஏற்படலாம். குறிப்பாகச் சைவ உணவுகளை உண்ணும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது அவசியப்படலாம்.
பொதுவாக, கர்ப்ப காலத்தில் புரோட்டீன் பவுடரை உட்கொள்வது பாதுகாப்பானதே. நிபுணர்களின் கூற்றுப்படி, தினசரி உணவில் புரதம் குறைந்தது 25% இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் தினசரி உணவில் போதுமான அளவு புரதம் பெறுவது கடினமாக இருந்தால். கர்ப்ப காலத்தில் புரோட்டீன் சப்ளிமென்ட் பவுடரை எடுத்துக்கொள்வதன் மூலம் இதைப் பூர்த்தி செய்யலாம். தரத்தின் மீது கவனம் கொள்ளவும். பாதுகாப்பான பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதையும், FDA-ல் சான்றளிக்கப்பட்டதையும் உறுதிசெய்ய நிபுணருடன் ஆலோசிப்பது நல்லது.
கர்ப்பத்தின் போது தேவையான புரத அளவை உறுதி செய்ய புரோட்டீன் சப்ளிமென்ட் சிறந்த வழியாகும். புரோட்டீன் ஷேக்ஸ் முதல் ரொட்டி, ஸ்மூதி அல்லது ஸ்நாக்ஸ் என பலவற்றில் புரோட்டீன் பவுடரைப் பயன்படுத்தலாம். புரோட்டீன் பவுடரின் சில நன்கு அறியப்பட்ட நன்மைகள் இங்கே,
கர்ப்பத்தின் போது, உடல் உணவுக்கு ஏங்குகிறது – அந்நிலையில் பூரண உணர்வைப் பெற புரதத்தை உட்கொள்வது சிறந்த வழியாகும். ஷேக் அல்லது ஸ்மூதி வடிவில் உள்ள புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வது பசியைக் குறைக்கும்.
புரதம் உடலில் சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்ய உதவுகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் மீட்புக்குத் திசுக்கள் அதிக நேரம் எடுக்கும் போது திசுக்களை சரி செய்கிறது.
கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி ஒழுங்கற்றதாக இருப்பதால் புரோட்டீன் பவுடரை உட்கொள்வது அதை ஈடுகட்டுகிறது. புரோட்டீன் பவுடர் மனநிலை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
புரதம் உடலின் பில்டிங் பிளாக்ஸ் ஆகும். எனவே சரியான அளவு உட்கொள்வது, கர்ப்பிணித் தாய்க்கு மட்டுமல்ல, கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 60 கிராம் அளவு புரதம் உட்கொள்ள வேண்டும். புரத உட்கொள்ளல் கர்ப்பிணிப் பெண்ணின் தினசரி கலோரி உட்கொள்ளலில் குறைந்தது 25% இருக்க வேண்டும்.
தரத்தின் மீது கவனம் கொள்வது மிக முக்கியம். ஊட்டச்சத்துள்ள உணவை உருவாக்கத் தேவையான மூலிகைகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். புரோட்டீன் பவுடரில் காஃபின் இருந்தால் அதைத் தவிர்ப்பது நல்லது. புரோட்டீன் பவுடரின் லேபிள்களைப் பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள மூலப் பொருட்களுக்கு ஒவ்வாமை ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, புரோட்டீன் பவுடரை மிதமான அளவில் உட்கொள்வதால் எந்த ஆபத்தும் இல்லை எனலாம். இருப்பினும், முன்பே சொன்னது போல தரமான, FDA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தெளிவாக லேபிளிடப்பட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். காஃபின் அல்லது வைட்டமின்கள் சேர்க்கப்பட்ட புரோட்டீன் பவுடர் பிராண்டுகளைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்பத்தின் போது தாயின் உடல் மற்றும் உள்ளே வளரும் குழந்தையின் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் புரதம் உதவுகிறது; புரோட்டீன் பவுடரைத் தவிர, கொழுப்பில்லா இறைச்சி, பீன்ஸ், கொட்டைகள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், சோயா பொருட்கள் மற்றும் முட்டை போன்றவற்றிலும் புரதம் அதிக அளவில் உள்ளது.
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |