


Getting Pregnant
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மார்பக சுய பரிசோதனை என்பது பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டி உள்ளதா என்பதை பரிசோதிக்கக் கூடிய ஒரு முறையாகும். கட்டி உருவாக்கம் மற்றும் அளவு அல்லது சமச்சீற்ற நிலையில் இருப்பது போன்ற உங்கள் மார்பகங்களில் தோன்றும் ஏதேனும் வெளியில் தெரியக்கூடிய தேவையற்ற மாற்றங்கள் இருந்தால் நீங்கள் அதனை ஆய்வு செய்வதன் மூலமாக உணரலாம். உங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றத்தைக் கண்டால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலான நேரங்களில், மார்பகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எந்த தீங்கையும் ஏற்படுத்துவதில்லை, அவை புற்றுநோய்க்கு காரணமாவதில்லை. இருப்பினும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ள பெண்களுக்கு புற்றுநோய் உருவாகுதல் போன்ற தீங்கிழைக்கும் காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொதுவாக, மார்பக சுய பரிசோதனை செய்து பார்ப்பதை மருத்துவமனைகள் பரிந்துரைப்பதில்லை, ஏனெனில் இவை உண்மையில் புற்றுநோயைக் கண்டறிவதற்கு அதிகம் பயன்படாது. இருப்பினும், உங்கள் மார்பகங்களை நீங்கள் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம் ஆகும். இதனால் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க முடியும், அதோடு உங்கள் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை பரிசோதித்து உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கலாம். சுய பரிசோதனையானது மேமோகிராம்கள் மற்றும் பிற மார்பக ஸ்கிரீனிங் சோதனைகளுடன் ஆதரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பெண்ணும் மார்பக ஆரோக்கியத்திற்கு தன்னை பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம் ஆகும். மாதாந்திர மார்பக சுய பரிசோதனைகள் செய்வதன் மூலம் தொற்று அல்லது மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கக்கூடிய மாற்றங்களை நீங்கள் காண முடியும். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது உயிர்வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துகிறது. இருப்பினும், மருத்துவர்கள் அறிவுறுத்தும் பரிசோதனைகள் மற்றும் ஸ்கிரீனிங் சோதனைகளை அவர்கள் அறிவுறுத்தல் இல்லாமல் நீங்களே எடுக்கக்கூடாது.
மார்பகங்களின் ஒட்டுமொத்த தோற்றம், உணர்வு அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருத்தல்
முலைக்காம்பு அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள்
தோலில் ஏதேனும் சுருக்கம் இருத்தல்
மார்பக திசுக்களில் கட்டிகள், முடிச்சுகள் மற்றும் புள்ளிகள்
முலைக்காம்பிலிருந்து திரவ வெளியேற்றம்
முலைக்காம்பு அல்லது ஏதேனும் ஒரு பகுதி மார்பகத்தின் உட்புறம் நோக்கி இருத்தல்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலி இருத்தல்
முலைக்காம்பில் ஒவ்வாமை ஏற்பட்டதின் விளைவாக வெளியில் தெரியும் மாற்றம்
மார்பக வீக்கம்
தோல் சிவந்து இருத்தல், புள்ளிகள் அல்லது சூடாக உணர்தல்
இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் மார்பகங்கள் மற்றும் மார்பு பகுதியில் ஏதோ தவறு இருப்பதற்கான அறிகுறிகளாகும். உங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யும் போது ஏதேனும் அறிகுறி அல்லது வெவ்வேறு அறிகுறிகளின் கலவையை நீங்கள் கண்டால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நீங்கள் அவ்வப்போது உங்கள் மார்பகங்களின் ஆரோக்கியத்தை சரிபார்க்க வேண்டும். நமது மார்பகங்களை பெரும்பாலான நேரம் நாம் ஆடைகளால் மறைத்து இருப்பதால், மார்பகங்களைப் பற்றி நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். இருப்பினும், தொடர்ச்சியான மார்பக பரிசோதனைகள் மூலம், உங்கள் உடலின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும். மார்பக சுய பரிசோதனையின் செயல்முறை மிகவும் எளிதானது, மேலும், நீங்கள் ஷவரில் குளிக்கும் போது அல்லது இரவில் ஆடைகளை அவிழ்க்கும் போது அல்லது காலையில் ஆடை மாற்றும் போது இதைச் செய்யலாம்.
உங்கள் மார்பகங்களை கண்ணாடியில் பார்ப்பது மூலமாகவும் தொட்டு உணர்வதன் மூலமாகவும் நீங்கள் பரிசோதனை செய்யலாம்.கண்ணாடி முன் நின்று சுய பரிசோதனை செய்ய வேண்டும். முதலில், நீங்கள் உங்கள் ஆடைகளை அகற்றி, கண்ணாடி முன்னால் நிற்க வேண்டும்.
உங்கள் கைகளுக்கு பக்கவாட்டில் வைத்து உங்கள் மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகளின் வடிவம், நிறம் மற்றும் அளவை பரிசோதிக்கவும். அதன் பிறகு, உங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, உங்கள் மார்பகங்களை கவனிக்கவும். நீங்கள் கவனிக்கும் அல்லது உணரும் எந்த மாற்றங்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க உங்கள் மார்புப் பகுதியை வளைத்துப் பார்க்கவும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.நீங்கள் மார்பகங்களை கைகளாலும் பரிசோதனை செய்யலாம்.
உங்கள் ஆடை மற்றும் ப்ராவை கழற்றவும். பின்னர் உங்கள் வலது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் பரிசோதிக்கவும்.
சிறிது அழுத்தம் கொடுத்து, பின்னர் மிதமான அழுத்தம் கொடுத்து முயற்சிக்கவும்.
கட்டிகள், அடர்த்தியான புள்ளிகள் அல்லது பிற மாற்றங்கள் உள்ளதா என்று உங்கள் மார்பகத்தை பரிசோதிக்கவும்.
மார்பகங்களின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக பரிசோதிப்பதை உறுதி செய்ய உங்கள் கைகளை வட்ட வடிவத்தில் நகர்த்தலாம்.
உங்கள் முலைக்காம்பை பரிசோதித்து, ஏதேனும் திரவம் வெளியேறுகிறதா என்று பார்க்க அதை லேசாக அழுத்தவும். உங்கள் மற்றொரு மார்பகத்திலும் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும். நீங்கள் படுத்திருக்கும் போது உங்கள் மார்பகங்களையும் சரிபார்க்கலாம்.
எளிதில் மறையாத எந்தவொரு மாற்றங்களையும் மார்பகங்களில் நீங்கள் கவனிக்கும்போது நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். நிறமாற்றம் மற்றும் வலி போன்றவை இருந்தால் அல்லது மார்பகங்களிலிருந்து ஏதேனும் திரவ வெளியேற்றம் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். இந்த செயல்முறை உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். இவ்வாறு தொடர்ந்து சோதிக்கும் போது, உங்களுக்கு சில மாற்றங்கள் தென்பட்டால், நீங்கள் விரைவில் மருத்துவரிடம் சென்று ஆரம்ப கட்ட சிகிச்சையைத் தொடங்கலாம்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)