
கர்ப்ப காலத்தில் சௌகரியமாக உணர வேண்டியது மிகவும் முக்கியம். இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உணர்திறன் மிகுந்த தோலுடன், மார்பகம் மற்றும் வயிறும் பெரிதாகிறது. கர்ப்ப காலம் மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்த உணர்வுகளைக் ஏற்படுத்துகிறது. மேலும், பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உண்டாகலாம். எனவே, அணியும் ஆடைகளில் மாற்றம் வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இதில் உள்ளாடைகள் (பேண்டீஸ்) மிகவும் முக்கியம்.
இன்றைய உலகில் ஒரு பெண் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரிசமமான நேர்த்தியுடன் கையாளுகிறார். பெண்களாகிய நாம் நம்முடைய கவனக்குறைவாலோ அல்லது அறியாமையினாலா துன்பப்படுவதை விரும்புவதில்லை. கர்ப்ப காலம் நம் வாழ்க்கை, உடல் அளவு மற்றும் எடையை மாற்றுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் நமக்குப் புதிய ஆடைகள் தேவைப்படுவதைப் போலவே புதிய உள்ளாடைகளும் தேவைப்படும்.
ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய அளவுகோல், நம்முடைய சௌகரியம்தான். கர்ப்ப காலத்தில் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது தோலை உரசாத, எரிச்சல் உண்டாக்காத அல்லது தோல் இயக்கத்தை கட்டப்படுத்தாத உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சில கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான அதே உள்ளாடைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், நாட்கள் செல்லச் செல்ல பலர் அசௌகரியமாக உணர்கிறார்கள். எனவே, கர்ப்பகால உள்ளாடைகளை வாங்குவதே சரியான தேர்வாகும். இதையே நீங்கள் கர்ப்பகாலத்திற்குப் பிறகும் பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கான கர்ப்பகால உள்ளாடைகள் அவர்களை சௌகரியமாக உணர வைக்க பிரத்யேக வடிவமைக்கப்பட்டவை. வயிறு பெரிதாகி வரும் நிலையில், இது உங்கள் வழக்கமான உள்ளாடைகளைவிட அளவு மற்றும் வடிவத்திற்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வழக்கமாக அணியும் உள்ளாடையின் இடுப்புப் பட்டை உயர்ந்து, அசௌகரியமான இடத்தில் இருப்பதை உணரலாம். ஆனால், இந்த கர்ப்பகால உள்ளாடைகள் உங்கள் பெரிதாகி வரும் வயிற்றுப் பகுதிகளுக்கு இடமளித்து உங்களை சௌகரியமாக உணரவைக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
உங்களது வழக்கமான உள்ளாடைகள் உங்களுக்குப் பொருந்தினாலும் வயிறு பெரிதாகும்போது இடுப்புப் பட்டையும் விரிவடையும். எனவே, அதன் பிறகு உங்களால் அதைப் பயன்படுத்த முடியாது. எனவே பிரசவத்திற்குப் பிறகும்கூட பயன்படுத்த முடிகிற நல்ல கர்ப்பகால உள்ளாடைகளை வாங்க செலவுசெய்வது நல்லது.
பெரிதாகியிருக்கும் வயிற்றுக்கு மேல் இருக்கும் இந்த பேன்டிஸ் விரிவடைந்திருக்கும் அடிவயிற்றை முழுமையாக மறைக்கும். இது லோவர்-கட் ஸ்டைலை விட கச்சிதமாகவும், சௌகரியமாகவும் இருக்கும்.
விரிவடைந்த வயிற்றுப் பகுதிக்கு கீழே இருப்பது போன்ற ஸ்டைலில் உள்ள இந்த உள்ளாடைகள் அடியிற்றுக்கு கீழே இருக்கும். இது அதிக வெப்பமான கோடைக்காலத்திற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
இந்த நடுப்பகுதி புடைத்த உள்ளாடைகள் உங்களது விரிவடைந்த வயிற்றின் நடுப்பகுதிவரை இருக்கும், இது மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு ஸ்டைல்களுக்கும் இடைப்பட்ட ஒன்றாகும். பொதுவாக, இந்த ஸ்டைலில் உள்ள பேன்டிகளின் இடுப்புப் பட்டை உங்கள் வயிறு வளர, வளர நீண்டு வயிறு பெரிதாகும்போது சௌகரியமாக உணர வைக்கும்.
கர்ப்ப காலத்தின்போது எதிர்பாராத அளவு உடல் எடை கூடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது கர்ப்பகால உள்ளாடைகளை பயன்படுத்தத் தொடங்குவதற்கான சரியான நேரமாக இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் இயல்பாக நடமாடவும், இயங்கவும் ஹை-வெஸ்டட் உள்ளாடைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வகை உள்ளாடைகளில் இருக்கும் எலாஸ்டேன் மேம்பட்ட நீட்சித் தன்மையை வழங்குவது மட்டுமல்லாமல் இவற்றை நீண்டகாலத்திற்கும் பயன்படுத்தலாம்.
கர்ப்ப காலம் முழுவதும் ஹை-வெஸ்டட் உள்ளாடையை நீங்கள் பயன்படுத்தலாம். ஏனெனில், உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் தொடர்ந்து எடை அதிகரிக்கும். நீங்கள் வழக்கமாக அணியும் உள்ளாடைகள் சௌகரியமாக இருக்காது என்பதோடு, விரிவடையலாம். எனவே, பொருந்திப் போகும் தன்மையை உறுதிசெய்ய ஹை-வெஸ்டட் கர்ப்பகால உள்ளாடைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உள்ளாடைகள் கடைசி டிரைமெஸ்டரில் மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பதோடு பிரசவத்திற்குப் பிறகும் பயன்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும்கூட இவ்வகை உள்ளாடைளின் நெகிழ்ச்சித்தன்மை காரணமாக அமரும் நிலைகளை சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த உயர் இடுப்பு உள்ளாடைகள் கர்ப்பகாலம் முழுவதும் நம்ப முடியாத அளவு சௌகரியமாக இருக்கும்.
ஹை-வெஸ்டட் உள்ளாடைகளை வாங்குவதற்கு முன் ஒரு சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு.
ஹை-வெஸ்டட் உள்ளாடைகளை நீங்கள் நீண்டகாலம் பயன்படுத்துவீர்கள் என்பதால், உங்கள் தெரிவு உங்களுக்கு சௌகரியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில், உங்கள் வயிறு எந்தளவு பெரிதாகும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என்பதால், மிக இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத ஒரு உள்ளாடையை தேர்வு செய்வதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரு ஹை-வெஸ்டட் உள்ளாடை மிக இறுக்கமாக இருந்தால் எரிச்சல் உண்டாக்கும். அதுவே மிகவும் தளர்வாக இருந்தால், தொய்ந்து கீழே விழலாம்.
ஹை-வெஸ்டட் மகப்பேறு உள்ளாடைகளின் ஒட்டுமொத்த எலாஸ்டிசிட்டி அல்லது நீட்சித்தன்மை அடிப்படை செயல்பாடுகளை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள உதவும். வயிறு தொடர்ந்து பெரிதாக வளர்ந்து வந்தாலும்கூட, நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒரே அளவு உள்ளாடைகளை பயன்படுத்தலாம். எனவே, கர்ப்பகால உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது எலாஸ்டிசிட்டி தன்மை மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகிறது.
பிரசவத்திற்குப் பிறகும், உங்களுக்கு இந்தக் கர்ப்பகால உள்ளாடைகள் தேவைப்படலாம். எனவே, ஹை-வெஸ்டட் மகப்பேறு உள்ளாடைகளை வாங்கும்போது, அதன் நீடிக்கும் தன்மையை உறுதிசெய்ய வேண்டும். துணி நீட்சித்தன்மையோடு மென்மையாக இருக்கிறதா என அதன் தரத்தையும் சரிபார்க்கவும். வெகு விரைவில் கிழியக்கூடிய அல்லது எலாஸ்டிசிட்டி தன்மையை இழக்கக்கூடிய துணியை வாங்கக்கூடாது.
இப்போதெல்லாம், ஆன்லைனிலும் சந்தையிலும் பல ஹை-வெஸ்டட் உள்ளாடைகள் சௌகரியமாகவும் நாகரீகமாகவும் கிடைக்கின்றன. நாம் பார்த்து தேர்ந்தெடுக்க வசதியாக எண்ணற்ற வகைகளிலும் பாணியிலும் இருப்பது நிச்சயமாக நம்மை கவர்ந்திழுக்கும். எனவே இன்றே இதை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம்.
அநேகமாக உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாக இருக்கலாம். ஹை-வெஸ்டட் உள்ளாடைகள் கர்ப்பகாலத்திற்குப் பொருந்தாது என நீங்கள் நினைக்கலாம். ஹை-வெஸ்டட் உள்ளாடைகள் நம் உடல் அமைப்பை எடுத்துக்காடடும் ஷேப்வேர் போன்றது. ஆனால், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அப்பகுதியின் பெரும்பகுதியில் குழந்தை இருக்கும். எனவே அந்தப் பகுதியின் அமைப்பைக் கட்டுப்படுத்தி குழந்தைக்கு ஊறு விளைவிப்பதை நாம் விரும்ப மாட்டோம்.
ஆனால் கர்ப்ப காலத்தில் ஹை-வெஸ்டட் உள்ளாடைகளை நீங்கள் ஏன் அணியக்கூடாது என்பதற்கான எந்த மருத்துவ காரணங்களும் கிடையாது. குழந்தை அம்னோடிக் திரவம் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களால் ஆன சேக்ஸால் சூழப்பட்டிருப்பதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. எனவே, தேவையான அழுத்தம் கொடுக்கும் ஹை-வெஸ்டட் உள்ளாடைகளால் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. இருப்பினும், உங்கள் மனநிம்மதி, திருப்திக்காக இது தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பின்வருமாறு:-
கர்ப்ப காலத்தில், உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வயிறு பெரிதாகி வருவதால், சில ஹை-வெஸ்டட் கர்ப்ப கால உள்ளாடைகளால் ஏற்படும் அதிக அழுத்தம் அசௌகரியத்தையும் தீங்கையும் விளைவிப்பதாக இருக்கும். நீங்கள் சௌகரியமாக நடமாட லேசானது முதல் நடுத்தர கட்டுப்பாட்டு உள்ளாடையைத் தேர்வு செய்யலாம்.
கர்ப்ப காலத்தில் ஹை-வெஸ்டட் உள்ளாடைகள் உகந்ததாக இருக்கும். ஆனால் வெஸ்ட் ட்ரைனரைப் பயன்டுத்த வேண்டாம். பெரும்பாலான வெஸ்ட் ட்ரைனர்களைப் போல எந்த ஒரு கர்ப்ப கால ஷேப்வேர்களும் விலா எலும்புகள், வயிறு, அல்லது கல்லீரல் போன்ற உடல் உள் உறுப்புகளை அழுத்தக்கூடியதாக இருக்கக்கூடாது. இது விலா எலும்பு முறிவை ஏற்படுத்தலாம், சுவாசத்திறனை கட்டுப்படுத்தலாம், அமரும் நிலையை பாதிக்கலாம். இது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரத்யேமான உள்ளாடைகள் உள்ளன. இவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, பெல்லி பேன்ட். இது ட்யூப் போன்ற ஒரு ஆடை. இது அளவில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப நம் முதுகு மற்றும் வயிற்றுக்கு பக்கபலமாக இருக்கும். இவை லேசானது முதல் மிதமான அழுத்தத்தை வழங்குகின்றன.
தேர்ந்தெடுக்கும் போது, கர்ப்பிணிப் பெண்கள் க்ரோட்ச் பகுதியில் சௌகரியமாக இருப்பதையும், மிகவும் இறுக்கமாக இல்லாமல் காற்று வெளியேறக்கூடிய துணியாக இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். பல பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று, கூடுதல் கசிவு, பெண்ணுறுப்பில் கடுமையான வலி ஆகியன ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் கர்ப்பகால உள்ளாடையை காற்று வெளியேற்ற முடியாததாக்குகின்றன. உள்ளாடையில் கிராட்ச் பேனல் காட்டன் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், மிக இறுக்கமாக இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பகால உள்ளாடைகள் கர்ப்பிணிப் பெண்கள் உடலை கருத்தில்கொண்டு அதற்கு உகந்த ஆதரவையும் சௌகரியத்தையும் வழங்குவதற்காகவே வடிமைக்கப்பட்டுள்ளன. போதுமான இயக்கம், நீட்சியை அனுமதிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த சமயத்தில் முதுகிற்கு தேவைப்படும் ஆதரவை வழங்கவும் இது உதவுகிறது. இடுப்பு தசைகளில் ஏற்படும் சுமையை குறைக்க இவை மென்மையான, காற்று வெளியேறக்கூடிய, பிரீமியம் தரமான துணியால் ஆனவை. இந்த உள்ளாடைகள் பெரிதாகி வரும் வயிற்றுக்கு பொருந்தும் அதே நேரத்தில், இந்த உள்ளாடைகள் மிகக் கச்சிதமாக நீட்சியடையும். பருத்தி மற்றும் பிற துணி வகைகளின் கலவையால் தயாரிக்கப்பட்ட கர்ப்ப கால உள்ளாடைகள் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. கர்ப்பகால உள்ளாடையை வாங்க புறப்படும் முன் நீங்க அதைப் பற்றி நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
சிறந்த மகப்பேறு உள்ளாடைகள் ஆன்லைனிலும் கிடைக்கிறது. மேலும் இது பெரும்பாலான அம்மாவாகப்போகும் பெண்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
துணி, உள்ளாடை வகை மற்றும் அவை உடலின் எந்தெந்த பகுதிகளில் பொருந்தும் என்பதன் அடிப்படையில் சில வகை கர்ப்பகால உள்ளாடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உள்ளாடைகள் முழு கவரேஜ் ஸ்டைலில் காட்டன் மற்றும் ஸ்பான்டெக்ஸால் ஆனது. அவை நீட்சி அடையக்கக்கூடியதாகவும் வசதியாகவும் இருக்கும். இது உங்கள் வயிற்றை இழுக்க அல்லது கீழே மடிக்க ஒரு மடிப்பு கொண்ட இடுப்புப் பட்டையைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு வசதியாக இருக்கும்.
தொட்டில் பாணியிலானவை. இவை முன்பக்கம் தாழ்வாக, வயிற்றுக் கீழே பொருந்தும், மேலும் பின்பகுதியை முழுமையாக மறைக்கும். இதன் உட்புறத்தில் காட்டன் லைனிங் செய்யப்பட்டிருப்பதால், ஏதாவது கசிவுகள் ஏற்பட்டால் அதை உங்களால் உடனே உணர முடியும்.
இந்த உள்ளாடைகள் பகுதி உள்ளாடை மற்றும் பெல்லி சப்போர்ட் வகையானவை. இந்த உள்ளாடை குழந்தையின் கூடுதல் எடையை தாங்கிப்பிடிக்கும் ஒரு ஒருங்கிணைந்த லேசான சப்போர்ட் பேன்ட் கொண்டுள்ளன. இது அன்றாடம் அணிவதற்கு சிறந்த தெரிவாகும்.
இந்த அருமையான, வசதியான, நீட்சியடையக்கக்கூடிய உள்ளாடைகள் நைலான் மற்றும் ஸ்பான்டெக்ஸால் செய்யப்பட்டவை. இவை அழகான லேஸ்களுடன் நடுப்பகுதி மேடான இடத்தில் பொருந்தும் வகையில் ஏராளமான ஸ்டெச்களுடன் கிடைக்கின்றன.
இது நீங்கள் பெரிதாகியிருக்கும் வயிறை கவர் செய்யும், மென்மையான, சௌகரியமான உள்ளாடையை விரும்புபவராக இருந்தால், இது உங்களுக்கான சிறந்த கர்ப்பகால உள்ளாடையாகும். இந்த வகை நைலான் பாடிஷார்ட்ஸ் 11 சதவீத ஸ்பான்டெக்ஸால் ஆனது.
இந்த ஓவர்-தி-பம்ப் உள்ளாடைகள் நான்கு பக்கம் நீட்சியடையக்கூடிய மற்றும் மைக்ரோஃபைபர் மெஷ் உடன் கிடைக்கின்றன, இவை காற்று வெளியேறவும் ஈரப்பதத்தை உறிஞ்சவும் உதவுகிறது. இவை அடிவயிற்றை தாங்கிப் பிடிக்கும் பேனலுடன் கிடைக்கிறது. இதனால் நீங்கள் நாள் முழுவதும் பாதுகாப்பாக உணரலாம். இது நைலான், ஸ்பான்டெக்ஸ் மற்றும் உறிஞ்சக்கூடிய காட்டன் உள் லைனிங்குடன் கிடைக்கிறது.
இந்த உள்ளாடைகளில் பக்கவாட்டு ஃபாஸ்டெனர்கள் உள்ளதால் இது தானாகவே ஆடை அணிவது அல்லது பராமரிப்பாளர்கள் உதவியுடன் அணிவதை எளிதாக்குகின்றன. இவை டேக் இல்லாமலும் காட்டன் லைனிங்குடனும் ஆன்டி-மைக்ரோபியல் தொழில் நுட்பத்துடனும் கிடைக்கின்றன. இது நாள் முழுவதும் நம்மை புத்துணர்வுடனும் உலர்வாகவும் உணரச்செய்யும்.
(மகப்பேறு தாங் (thong)): இந்த உள்ளாடைகள் முறைப்படி பார்த்தால் மகப்பேறு உள்ளாடைகள் அல்ல; இவை பெரிதாகிய வயிற்றின் கீழ் வசதியாக பொருந்தக்கூடிய V-வடிவ முன் மற்றும் V-வடிவ பின் இடுப்புப் பட்டையைக் கொண்டுள்ளன. இதில் உள்ள அற்புதமாக நீட்சியடையக்கூடிய துணி கர்ப்ப காலம் முழுவதும் நீட்சி அடையும்.
பேன்டி லைன்கள் வெளிப்படையாகத் தெரிவதை விரும்பாதவர் நீங்கள் என்றால், இந்த வகை உள்ளாடை உங்களுக்கானது. இது துணியில் இணைப்புகள் இல்லாமல் (seamless) செய்யப்பட்டது. மேலும், இது ஹை-ரைஸ் மற்றும் ஓவர்-தி-பம்ப் பாணிகளில் கிடைக்கிறது.
இந்த வகை உள்ளாடைகள் பம்ப் பாணி கர்ப்ப கால உள்ளாடைகளின் கீழ் வரும். இது சி-பிரிவுகளில் (C-sections) இருந்து மீண்டு வருபவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த உள்ளாடைகள் மூங்கிலால் ஆனவை. எனவே இவை லேசான மற்றும் மிகவும் சௌகரியமானதாக இருக்கும். இது முன்பக்கம் V-வடிவமும் பின்புறம் முழுமையாக மறைப்பை வழங்கும் வகையில் ஒரு நேர்கோட்டுடனும் இருக்கும்.
இந்த ஓவர்-தி-பம்ப் வகை மகப்பேறு உள்ளாடைகள் சரிசெய்து கொள்ளக்கூடிய இடுப்புப் பட்டை வடிவமைப்புடன் கிடைக்கிறது. எனவே நீங்கள் தேவைக்கேற்ப இடுப்பு பட்டையை நீட்டிக்கொள்ளலாம். இந்த ஹை ரைஸ் உள்ளாடை விஸ்கோஸ், நைலான் மற்றும் ஸ்பான்டெக்ஸ் ஆகியவற்றால் ஆனது. இவை வலை போன்று துணியால் ஆனது என்பதால், காற்று வெளியேறக்கூடியதாகவும் சௌகரியமாகவும் இருக்கும்.
நீங்கள் ஷேப்வேர்களைப் பயன்படுத்த விரும்பினால், இந்த மகப்பேறு ஷார்ட்ஸ் மாடல் உங்களுக்கானது. இது ஒரு பாதுகாப்பான உள்ளாடை. இது உங்கள் வயிற்றை மிகவும் இறுக்காமலும் அழுத்தாமலும் மென்மையாகவும், பாதுகாப்பாகவும் உணர உதவுகிறது. இடுப்பின் பின்புறத்தில் உள்ள சிலிக்கான் பட்டை இது சுருண்டு கீழே போகாமல் தடுக்கிறது.
இந்த வகை மகப்பேறு உள்ளாடைகள் ஓவர்-தி-பம்ப் பாணியிலானது. இது காட்டன் மற்றும் ஸ்பான்டெக்ஸால் ஆனது. இது ஈரப்பதத்தை உறிஞ்சும், காற்று வெளியேறக்கூடிய துணியுடன் சரிசெய்யக்கூடிய பட்டையைக் கொண்டுள்ளது. இது இடுப்பை சுற்றி 360-டிகிரி மடிக்கக்கூடியது என்பதால், அடிவயிற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இது வயிற்றை மறைத்தாலும் அதிக உயரமாக அணியக்கூடாது.
இந்த உள்ளாடைகள் கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு கூடுதல் கசிவைத் தடுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. அதன் ஈரப்பதத்தை உறிஞ்சும் எலாஸ்டேன் துணி அதை உலர்வாக வைக்கிறது. இது இரட்டை அடுக்கு இடுப்புப் பட்டைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அவை ஒன்று முதல் நான்காவது டிரைமெஸ்டர் வரை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் நர்சிங் டேங்க் டாப் வாங்க 5 காரணங்கள்
மகப்பேறு உள்ளாடைகள் கர்ப்பகாலத்திலும் சில சமயங்களில் கர்ப்பத்திற்குப் பிறகும் உகந்த சௌகரியத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் வழக்கமாக அணியும் ஆடைகள் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம் என்பதை கருத்தில் கொள்ளும்போது, மகப்பேறு உடைகள் நம்மை மீண்டும் முக்கியமானவராக உணர வைக்கும். மகப்பேறு உள்ளாடைகள் உங்களை நன்றாகவும் சௌகரியமாகவும் உணரவைக்கும் ஒன்று. இது பல்வேறு வகைகளில் கிடைக்கும் என்பதால் கவர்ந்திழுக்கக்கூடியது. மகப்பேறு உள்ளாடைகள் முன்பு இருந்ததைவிட மேம்பட்டு இருப்பதால் நீங்கள் இன்னும் கவர்ச்சியானவராக உணர முடியும். அழகான உள்ளாடைகளை வாங்கி பயன்படுத்துவது எடை அதிகரிப்பு, நீட்சியால் உண்டாகும் அடையாளங்கள் உட்பட உங்கள் உடலில் ஏற்படும் பல வடிவ மாற்றங்களை குறித்து கலவை கொள்ளாமல் உங்களை நல்லபடியாக உணரவைக்க உதவும்.
Yes
No














I feel if it lasts it can be used till delivery. the fabric is so soft and comfy, i never feel any kind of tightness or itchiness while wearing this.
i like this product it really very comfortable 🙂
very comfortable
Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |