


Pregnancy Journey
11 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, தன் குழந்தைக்கு இந்த உலகத்தில் வேண்டிய எல்லா சௌகரியங்களையும் அளித்து, பாதுகாப்பளிக்கவே விரும்புகிறார். ஒரு தாயின் அன்பு அபரிமிதமானது, தன் குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் கூட, தன் குழந்தையை பாதுகாப்பதில் இருந்து தாயை யாராலும் தடுத்து விட முடியாது. ஆனால், முதல் மும்மாதம், அதாவது கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள், கருவிலுள்ள சிசுவிற்கு மிகக் கடுமையான ஒரு காலகட்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகும். அதனால் தான், தான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் கூட, தாய் தன் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கருச்சிதைவினை தவிர்ப்பதற்கும், நன்றாக தூங்குவதற்கும் வேண்டி, 8 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது தூங்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளவும்.
எப்படி வேண்டுமானாலும் தூங்கி நீங்கள் பழகி போயிருந்தால், நீங்கள் கண்டிப்பாக இதை மாற்றிக் கொள்ள வேண்டும், உங்கள் குழந்தையின் நலனை காப்பதற்கு இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் சரியானதொரு முறையில் தூங்க வேண்டும். 8 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தூங்கும் முறை, சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால், வயிற்றிலுள்ள சிசுவிற்கு மட்டுமின்றி, உங்களுக்கும் கூட அதிகமான அழுத்தத்தை உண்டாக்கி விடக் கூடும்.
நீங்கள் குப்புற படுத்து நன்றாக தூங்கி விட்டீர்கள் எனில், உங்கள் குடல்களும், மார்பகங்களும் அழுத்தப்படுகின்றன. இது அந்த இடங்களில் இரத்த ஓட்டத்தை தடுத்து விடும். இதனால் மார்பகங்களில் வலியும், கனத்த உணர்வும் ஏற்படக் கூடும். குடல்களை பொறுத்த வரை, குமட்டல் உணர்வை உண்டாக்கி விடும். மேலும், வயிற்று உப்பிசத்தையும், வயிற்று வலியையும் கூட உண்டாக்கி விடக் கூடும்.
மல்லாக்க படுத்துத் தூங்குவதும் கூட நல்லது அல்ல. நீங்கள் மல்லாக்க படுத்துக் கொள்ளும் போது, குடல்கள் கீழ்நோக்கி தள்ளப்படுகிறது. உங்கள் வயிற்றில் கரு வேறு இருப்பதால், வயிற்றினுள் உள்ள அழுத்தத்தை இது மேலும் அதிகரிக்கிறது.
சரியான தூங்கும் முறை என்பது எதுவென்றால், அது உங்கள் அடி வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைப்பதாக இருக்க வேண்டும், அப்படியே உங்கள் வயிறு, முதுகு மற்றும் இடுப்பினையும் தாங்குவதாக இருக்க வேண்டும்.
உங்கள் இடப்பக்கமாக படுத்துத் தூங்குவது தான் மிகச் சரியான தூங்கும் முறையாகும். இது உங்களுடைய அடி வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. மேலும் உங்கள் இதயத்தில் குறைவான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் சிறுநீரகங்களிலிருந்தும், கல்லீரலிலிருந்தும் ஒரே சமயத்தில் அழுத்தத்தை நீக்க உதவுகிறது, இதனால் இந்த உறுப்புகள் நல்ல முறையில் செயல்படும். இடப்பக்கத்தில் தூங்குவது, உங்கள் குழந்தைக்கு இரத்தத்தை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்ற கீழ்ப்பெருநாளத்தில் கூட (வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று) குறைவான அழுத்தத்தை உண்டாக்குகிறது.
நீங்கள் ஒரே பக்கமாக படுத்துத் தூங்குவதற்கு முயலும் போது, சில நாட்களில் அசௌகரியமாக உணரத் தொடங்குவீர்கள். ஏனென்றால், உங்கள் உடலானது நீங்கள் விரும்பிய வண்ணம் தூங்கி பழக்கப்பட்டிருக்கும். மேலும், உங்கள் முதுகிலும், இடுப்புப் பகுதியிலும் கூட வலியும், அசௌகரியமும் ஏற்படக் கூடும். எனினும், நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாது, தொடர்ச்சியாக உங்கள் இடப்பக்கத்திலேயே தூங்க வேண்டும். உங்கள் கர்ப்ப காலத்தின் பின்னாட்களில் இது மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
லேசான உபாதையாக இருக்கும் பட்சத்தில், வீட்டிலேயே எளிதாக மெத்தைகள் மற்றும் தலையணைகளின் உதவியால் அதனை போக்கி விடலாம். உங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை பொறுத்து, நீங்கள் உங்கள் தலையணைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
இது பெரும்பாலும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை கொண்ட பொருள் திரும்பவும் உணவுக் குழாயிற்கு வருவதால் ஏற்படுகிறது அல்லது எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மேல் நோக்கி வருகிறதென்று சொல்லலாம். இவ்வாறு ஏற்படாமல் தடுப்பதற்கு, உண்ட உணவுப் பொருள் மீண்டும் மேல் நோக்கி வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் நெஞ்சுப் பகுதிக்கு கீழே மெத்தைகளை வைத்துக் கொள்வதால், உங்கள் வயிறு சற்று உயர்ந்து இருக்கும். எனவே உண்ட உணவு மேல் நோக்கி செல்ல வாய்ப்பில்லை.
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் கீழ் முதுகுப் பகுதியில் வலி ஏற்படுவதாக கூறுகிறார்கள். வலி ஏற்படும் நாட்களில் இடுப்புப் பகுதியை சிறிது உயர்த்தி வைத்துக் கொண்டால் இது சரியாகி விடும். இவ்வாறு உயர்த்தி வைத்துக் கொள்வது, தசைகளை ஆசுவாசப்படுத்துவதற்கு உதவுவதால், வலி குறைகிறது.
நாளுக்கு நாள் வயிறு வளர்ந்து வரும் போது, சிறிது கனத்தது போன்ற உணர்வு தோன்றும். உங்கள் உடலின் மற்ற பாகங்கள் போன்றே, அதனையும் லேசாக உணரச் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் உங்கள் வயிற்றுக்கு அடியில் மெல்லிய தலையணையை வைப்பதன் மூலம், லேசாக உணரலாம்.
கூடுதலான எடையை சுமப்பதனால், உங்கள் கால்கள் பலகீனமாகவும், சோர்வாகவும் ஆகி விடும். எனவே, நீங்கள் தூங்கும் போது உங்கள் கால்களை குணப்படுத்துவதற்கும், ஆசுவாசப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். உங்கள் கால்களின் இடையே ஒரு தலையணையை வைத்துக் கொள்வதால், உங்கள் கால்களுக்கு இதமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் - விரைவாக நிவாரணம் பெறுவது எப்படி?
தாய்மை என்பது பெண்களின் அற்புதமான அனுபவங்களில் ஒன்று. எனினும், பல பெண்கள் அச்சப்படுவதும் இந்த சமயத்தில் தான். ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய உணவு, தூங்கும் முறை, மற்றும் நிலை உள்ளிட்ட முழுமையான வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது, நீங்கள் 8 வார கர்ப்பிணிப் பெண்கள் தூங்கும் முறைகள் குறித்து புரிந்து கொண்டிருப்பீர்கள். தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இறுதியாக, உங்களின் கர்ப்ப காலத்தை இரசித்து அனுபவியுங்கள். உலகத்தின் தலைசிறந்த நபரை பெற்றெடுக்க போகிறீர்கள் என்பதாக எண்ணி மகிழ்வுடன் இருக்கவும்.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











மார்பக் காம்புகளில் ஏற்படும் கசிவிற்கான பல்வேறு காரணங்கள்

முடி உதிர்வதைத் தடுக்கவும், முடியின் வலிமையை அதிகரிக்கவும் எளிய உதவிக் குறிப்புகள் ( Simple tips to prevent hair fall and increase hair strength in Tamil)

வெயில் காலத்தில் குழந்தையை ஸ்லிப்பீங் பேக்கில் தூங்க வைக்கலாமா? (Is It Ok To Make Your Baby Sleep In A Baby Sleeping Bag In The Summer In Tamil)

கால்-கை வலிப்பைப் புரிந்துகொள்வதற்கான விரிவான வழிகாட்டி(A Comprehensive Guide to Understanding Epilepsy In Tamil)

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் டபுள் மார்க்கர் டெஸ்ட்: இது ஏன் தேவைப்படுகிறது & எப்போது செய்துகொள்ள வேண்டும் (Double Marker Test In Pregnancy: Why Is It Needed & When Should You Get It Done In Tamil)

உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி?