

Updated on 3 November 2023
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன வயிற்றில் இருக்கும் சேர்த்து சாப்பிடுவதால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது குறித்து அவர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தப் பதிவானது கர்ப்பமாக இருக்கும் போது பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சாத்தியமான அபாயங்கள் பற்றி ஆராய்கிறது. வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடிய சில சுவையான பன்னீருக்கான செய்முறைக் குறிப்புளையும் இதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பல பெண்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் கேள்விகளில் ஒன்று - கர்ப்ப காலத்தில் நான் பன்னீர் சாப்பிடலாமா? என்பது தான். இந்த கேள்விக்கான சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமெனில் ஆம் என்று சொல்லலாம். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லை என்றால், அவர்கள் தங்களுடைய கர்ப்ப கால உணவில் பன்னீரை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். பன்னீரில் புரதம், கால்சியம் நிறைந்து இருப்பதால், இந்த ஊட்டச்சத்துக்களின் தினசரி தேவையை போர்த்தி செய்து கொள்ள நீங்கள் இதை உட்கொள்ளலாம். பன்னீர் எளிதில் ஜீரணம் ஆக, குக்ட் சீஸ் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
பன்னீர் கர்ப்பத்திற்கு நல்லது. இதோ அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் (40 கிராமுக்கு) -
1. 103.15 கிலோ கலோரி ஆற்றல்.
2. 7.5 கிராம் புரதம்.
3. கால்சியம் 190 மில்லி கிராம்
4. ஃபோலிக் அமிலம் 37.3 மில்லி கிராம்
5. பொட்டாசியம் 132 மில்லி கிராம்
6. 4.9 கிராம் தானியம்.
7. 6 கிராம் கொழுப்பு.
கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா - என்ற கேள்விக்கான பதில் இப்போது கிடைத்துவிட்டது - அடுத்து கர்ப்ப காலத்தில் பன்னீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் -
1. பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு நல்லது. இது குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சாதகமானதாகவும் உள்ளது. கூடுதலாக, தாதுக்கள் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுகின்றன மற்றும் கர்ப்ப காலத்தில் எலும்பின் கனிமச் சிதைவைத் தடுக்கின்றன.
2. புரதத்தின் வலுவான ஆதாரமாக இருக்கும் பன்னீர், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், சகிப்புத்தன்மையை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது கர்ப்ப காலத்திற்கான அறிகுறிகளை நிர்வகிப்பதில் பெண்களுக்கு உதவுகிறது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் காலை சுகவீனம் போன்றவற்றை நிர்வகிக்கிறது.
3. பன்னீர் ஆனது புரதத்தின் அருமையான மூலாதரமாகும், எனவே புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைத் தீவிரமாகத் தேடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பன்னீர் மிகவும் ஏற்றது. பிறக்கப் போகும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, புரதம் மிகவும் முக்கியமானது.
4. பன்னீர் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பசியைப் போக்க மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை சாப்பிடுவது நிறைவாக இருக்கும் என்பதால், இது எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
5. கர்ப்ப காலத்தில் பன்னீரை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்க உதவும். பனீரை இரவு உணவாகவும், சிற்றுண்டியாகவும் சாப்பிடுவதற்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
6. மூட்டு வலி மற்றும் விறைப்புத் தன்மையானது, கர்ப்ப காலத்தில் பொதுவானதாக இருப்பதோடு மிகவும் சங்கடமாகவும் இருக்கும். பன்னீர் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஓரளவிற்கு, கர்ப்பம் தொடர்பான வலிகள் மற்றும் எடிமாவைக் குறைக்க உதவுகிறது.
பன்னீரை அதிகமாக சாப்பிடுவதால் பின்வரும் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் -
1. பன்னீரில் சோடியம் அதிகம் உள்ளதால் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
2. அதிகப்படியான பன்னீரைச் சாப்பிடுவதால், அஜீரணம், இரைப்பை குடல் அசௌகரியம் மற்றும் அரிதான சூழ்நிலைகளில், ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம்.
3. அதிக கொழுப்பபுள்ளதால், பன்னீரை அதிகமாக சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கக் கூடும்.
எந்த வகையான பன்னீரையும் ஒருவர் ரசித்து சாப்பிட்டால் அது சுவையானதாக இருக்கும். இருந்தாலும், குழந்தையை எதிர்பார்க்கும் கர்ப்பிணிகள் பச்சையாகவோ அல்லது சமைக்காத பன்னீரையோ சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்னீர், குறிப்பாக கடையில் வாங்கப்படும் பன்னீரில் பாக்டீரியாவின் தாக்கம் இருக்கலாம். பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, கர்ப்ப காலத்தில் சமைக்காத பன்னீர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் பன்னீரை எப்படி சாப்பிடுவது என்று நீங்கள் யோசித்தால், நீங்கள் இந்த இரண்டு சுவையான உணவுகளை வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம்.
இதற்கான செய்முறை விளக்கம் இதோ:
ஒரு பெரிய கிண்ணத்தில் தயிரை எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இஞ்சி-பூண்டு விழுதுடன் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
பிறகு கியூப் போன்று நறுக்கிய காய்கறிகள் மற்றும் பன்னீரை அந்தத் தயிர் கலவையில் சேர்க்க வேண்டும்.
இதை குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வரைக்கும் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து பன்னீர் மற்றும் காய்கறிகளை ஸ்கீவர்ஸ் அல்லது டூத்பிக்கில் மாற்றி மாற்றி சொருக வேண்டும்.
இதை 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஷேலோ ஃப்ரை செய்யவும்.
·இதை செய்து முடித்த பிறகு இதன் மீது எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலாவைச் சேர்க்கலாம்.
அவ்வளவு தான், இதை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
இதற்கான செய்முறை விளக்கம் இதோ,
சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்ட நீரில் 3-4 நிமிடங்களுக்கு நன்றாக சுத்தம் செய்த கீரையை போட்டு இலைகளின் நிறம் மாறும் வரை வேக வேண்டும். அடுத்து அதனை பேஸ்ட் ஆக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் தெளிந்த நிலையில் இருக்கும் வெண்ணையைப் போட்டு சூடாக்கி, பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அதன் பிறகு, சிறிது இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்க வேண்டும்.
இஞ்சி-பூண்டு வாசனை போனவுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
6-8 நிமிடங்களுக்குப் பிறகு உப்பு மற்றும் பிற மசாலாப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.
சற்று வெந்த பிறகு, கீரை விழுதைச் சேர்த்து, பிறகு மூடி போட்டு மூடிவிட்டு, மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரைக்கும் சமைக்கவும்.
இது நன்றாக வெந்த பிறகு, சிறிதளவு கிரீமை சேர்த்துக் கொள்ளலாம். இந்த கிரேவியில் வதக்கிய பன்னீரை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்து நன்றாக கிளரி விடவும். சுமார் 1-2 நிமிடத்திற்கு வேக விடவும். அவ்வளவு தான், சுவையான பாலக் பன்னீர் தயார்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் பன்னீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். எனவே, கர்ப்ப கால உணவில் பன்னீரை சேர்த்துக் கொள்வதால் அதனுடைய அனைத்து ஆரோக்கியமான நன்மைகளினால் பயனடையலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Yes
No

Written by
Dhanalakshmi Pillai
Get baby's diet chart, and growth tips







গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali

স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali

গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali

গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali

ইনার থাই চ্যাফিং: কারণ, উপসর্গ এবং চিকিৎসা | Inner Thigh Chafing: Causes, Symptoms & Treatment in Bengali

গর্ভাবস্থায় ব্রাউন রাইস: উপকারিতা ও সতর্কতা | Brown Rice During Pregnancy: Benefits & Precautions in Bengali