
பொதுவாக குழந்தைகள் அழுகை மூலமாகத் தான் நம்முடன் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் பசியாக அல்லது சோர்வாக இருக்கிறார்களா, ஈரமான அல்லது அழுக்கு டயப்பருடன் இருக்கிறார்களா, அல்லது அவர்கள் சத்தமாக அழுது நம்முடைய கவனத்தை கவர விரும்புகிறார்களா என்பதை அவர்களின் அழுகுரல் நமக்குத் தெரிவிக்கிறது. குழந்தை எதற்காக அழுகிறது என்பதை புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், குழந்தை எதற்காக அழுவார்கள் என்பது பற்றி அறிந்து கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சமாதானப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி குழந்தையின் அழுகையானது பின்வரும் காரணங்களுக்காக இருக்கலாம்: பசி, வலி மற்றும் சோர்வு. பல்வேறு வகையான அழுகைகள், குழந்தைகள் எதற்காக அழுகின்றன, அழும் குழந்தையைக் கையாளும் நுட்பங்கள் போன்றவற்றை பெற்றோர்களால் இந்தக் கட்டுரையின் மூலமாகப் புரிந்து கொள்ள முடியும்.
புதிதாகப் பிறந்த குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் பசியாக இருந்தால், ஈரமாக இருந்தால், குளிராக இருந்தால் அல்லது தூக்கச் சொல்லுவதற்காக கூட அழலாம். பிறந்த குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் வரைக்கும் அழுகிறார்கள்.
அழுகை என்பது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இருக்கும் பசி, அசௌகரியம் அல்லது அதிருப்தியைத் தெரிவிக்கும் ஒரு வழியாகும். இது தான் அவர்கள் நம்மை தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி, எனவே குழந்தை அழும் போது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு வகையான அழுகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவை எதைக் குறிக்கிறது மற்றும் அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது போன்றவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் பாலூட்ட வேண்டும். குழந்தை பசியுடன் இருக்கும்போது அழுகையின் சத்தமும் மாறலாம், குழந்தை அப்படி அழும்போது குழந்தையின் சத்தமானது குறைந்த சுருதியிலிருந்து அதிக சத்தத்திற்கு செல்லும்.
பசிக்காக அழும் குழந்தைக்கான தீர்வு, நிச்சயமாக அவர்களுக்கு உணவளிப்பது தான். குழந்தைக்கு பாட்டிலைக் கொடுப்பதற்கு முன், குழந்தையை சமாதானப்படுத்த முயற்சிக்கவும். இது அவர்களுக்குப் பிடிக்கும், அதனால் அவர்கள் சாப்பிடவும் ஆரம்பிப்பார்கள்.
சோர்வான அழுகையானது சிணுங்கல் அல்லது முனகுதல் போன்ற அழுகையாகவும் இருக்கலாம். குழந்தை இப்படி அழும்போது அது தன்னுடைய கண்களையும் காதுகளையும் தேய்க்கலாம் அல்லது தலைமுடியை இழுக்கலாம். குழந்தை இதுபோன்ற அறிகுறிகளில் எதையாவது ஒன்றைக் காட்டினால், அவர்களை தூங்க வைப்பதற்கான நேரம் இது என்று அர்த்தம். குழந்தைக்கு அமைதியான மற்றும் நிதானமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சிக்கவும்.சில நேரங்களில், குழந்தை போதுமான அளவிற்குத் தூங்க வைப்பதற்கு, ஒரு ரப்பர் நிப்பிளைக் கொடுக்கலாம். இது அவர்களை சாந்தப்படுத்த உதவுவதோடு, சமாதானப்படுத்தவும் உதவும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் சலிப்படையும்போது அல்லது அதிகமாகத் தூண்டப்படும்போது குழந்தை இடைவிடாமல் அழுவார்கள். அப்பொழுது நீங்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சலிப்படைந்த அல்லது அதிகமாகத் தூண்டப்பட்ட குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு, அவர்களுடன் மென்மையான குரலில் பேசவும், பாடவும் அல்லது அவர்களை கட்டி அணைக்கவும். சுற்றியிருக்கும் சூழல் அதிக சத்தமாக அல்லது பிஸியாக இருந்தால், அமைதியான இடத்திற்கு செல்லவும்.
குழந்தை ஈரமாகவோ, குளிராகவோ, சூடாகவோ இருந்தால் அல்லது டயப்பரை மாற்ற வேண்டியதாகவோ இருந்தால், அதிக சத்தத்துடன் குழந்தை அழக்கூடும்.
குழந்தைகள் அசௌகரியத்தால் அழுவதென்பது சகஜம் தான். குழந்தைக்கு வாயுத்தொல்லை அதிகமாக இருந்தாலோ, குடல் வலி இருந்தாலோ அல்லது பல் முளைக்கும்போது இந்த வகையான அழுகை பொதுவானதுதான். அசௌகரியமான அழுகைகள் என்பது அதிக சத்தத்துடன் அழுதல், அவ்வப்போது அழுதல் அல்லது இடைவிடாத அழுகை போன்ற அழுகையாகவும் இருக்கலாம்.
அசௌகரியத்தில் இருக்கும் குழந்தையை சமாதனப்படுத்துவதற்கு பெற்றோர்கள் பல விஷயங்களைச் செய்யலாம்: குழந்தை ஈரமாகவோ அல்லது அழுக்காகவோ இருந்தால், அவர்களின் டயப்பரை மாற்றவும். குழந்தை குளிர்ச்சியாக இருந்தால், அவர்களுக்கு கதகதப்பான ஆடைகளை போட்டு விடுங்கள் அல்லது போர்வையை போர்த்தி விடுங்கள். குழந்தை சூடாக இருந்தால், ஆடைகளை அகற்றவும் அல்லது சற்று குளிர்ச்சியான இடத்திற்கு அவர்களை கொண்டு செல்லவும்.
குழந்தையானது வலியில் இருக்கும்போது, அது பொதுவாக அதிக சத்தத்துடன் அல்லது சமாதானப்படுத்த முடியாத அளவிற்கு அழ ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் குழந்தை தன்னுடைய முஷ்டிகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும், அதன் கால்களை மார்பு வரைக்கும் தூக்கிக் கொண்டிருக்கும் அல்லது குழந்தையின் முகம் சிவந்திருக்கும். இந்த சூழ்நிலையில், வலிக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியவும். குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகவும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால், அவர்களுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டவும் அல்லது வயிற்றில் மசாஜ் செய்ய முயற்சிக்கவும்.
குடல் வலியினால் ஏற்படும் அழுகை என்பது குழந்தை எந்தவொரு காரணமுமின்றி நீண்ட நேரம் அழும் ஒரு நிலையாகும். குழந்தைக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது குடல் பிடிப்பு தொடங்கலாம், மேலும் இது 4 முதல் 6 மாதங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்.
குடல் பிடிப்பினால் அழும் அழுகைகள் அதிக சத்தத்துடன் அல்லது சமாதானப்படுத்த முடியாத அளவிற்கு அழ ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் குழந்தை தன்னுடைய முஷ்டிகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும், அதன் கால்களை மார்பு வரைக்கும் தூக்கிக் கொண்டிருக்கும் அல்லது குழந்தையின் முகம் சிவந்திருக்கும். குழந்தையை மேலும் கீழுமாக தூக்கிப் போட்டு சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள், குழந்தையை ஊஞ்சல் அல்லது குதிக்கும் இருக்கையில் உட்கார வைக்கவும் அல்லது குழந்தையை காரில் அழைத்துச் செல்லவும். குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு பெற்றோர்கள் வெண்மைத்தனமான இரைச்சல் அல்லது தாலாட்டுப் பாடல்களையும் முயற்சி செய்யலாம்.
பெற்றோர்கள் அழுகையை நிறுத்துவதற்கு வழக்கமான அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சி செய்து பிறகும் கூட இடைவிடாமல் அழுது கொண்டிருந்தால், வேறு ஏதாவது சிக்கல் இருந்தால் அதைச் சரி செய்வதற்கு அவர்கள் ஒரு மருத்துவரை அணுகலாம். சில அழுகை சாதாரணமானதாக இருக்கும், ஆனால் அடக்க முடியாததாக இருக்கும், எனவே இப்படி நடந்தால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் இது சாதாரணமானது.
இதையும் படிக்கலாமே! - புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பராமரிப்பு குறிப்புகள்
ஒரு புதிய பெற்றோராக, நீங்கள் எதிர்கொள்ளவதற்கு நிறைய சவால்கள் உள்ளன. புதிதாகப் பிறந்த குழந்தை ஏன் அழுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். குழந்தைக்கு என்ன தேவை என்று பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியாத போது மிகவும் வெறுப்பாக இருக்கும். ஆனால், குழந்தையின் அழுகையைச் சரி செய்வதற்கு பெற்றோர்களால் செய்யக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்களையும், பெற்றோர்கள் இதற்காக தங்களுக்கு உதவுவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் மேலே பட்டியலிட்டுள்ளோம்.
Yes
No

















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |