
கர்ப்பம் தரித்த பின்னர், ஒரு பெண்ணின் உணவு உண்ணும் பழக்கங்கள் மேம்படுகின்றன. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு அதிக வைட்டமின்கள், மினரல்கள், மற்றும் பிற முக்கியமான ஊட்டச்சத்துகள் உங்கள் உடலுக்குத் தேவைப்படும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் உங்கள் உடல் பெற்று வருவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சரியான வழி, சமச்சீர் உணவு உண்பது தான். உலர் பிளம்ஸ் போன்ற உலர் பழங்கள் உங்கள் கர்ப்ப கால டயட்டில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஊட்டச்சத்து மிக்க ஒரு உணவாகும். ஏனென்றால், அவற்றில் தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் அநேக நன்மைகள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது பற்றியும், அவற்றின் நன்மைகள், கேடுகள், மற்றும் பக்க விளைவுகள், ஊட்டச்சத்து நற்பயன்கள் போன்றவை குறித்தும் மேலும் தெரிந்து கொள்வதற்கு, இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்கவும்.
உலர் பிளம்ஸ் என்பது உலர வைத்த பிளம் பழமாகும், இது உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலர் பிளம்ஸ் பொதுவாகவே உடல்நலத்திற்கு நல்லது, பல்வேறு உடல்நல நற்பயன்களையும் வழங்குகிறது. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது நலம் பயக்கும் என்பதால், நிபுணர்கள் இதனை கர்ப்பிணிப் பெண்கள் உண்பதற்கு பரிந்துரை செய்கிறார்கள்.
உலர் பிளம்ஸில் அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ளதால், கர்ப்பமாக இருக்கும் போது இதனை சாப்பிடுவது பாதுகாப்பானது. இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, மெக்னீசியம், இயற்கையான சர்க்கரை, வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகளுடன், உலர் பிளம்ஸில் மிக அதிக அளவில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதனால் வயிற்றில் வளரும் முதிர்கருவின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க நேர்மறையான பலன்கள் விளைகின்றன. அவை கருப்பையை உறுதியாக்க உதவுகின்றன, இதன் மூலம் பிரசவ வலியும், பிரசவமும் எளிதாகும். ஆகவே, கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் முதிர்கருவின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு உலர் பிளம்ஸ் சாப்பிடுவது சிறந்ததொரு வழியாகும்.
கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சரியானதொரு நொறுக்குத் தீனியாகவே கருதப்படுகிறது, ஏனென்றால் இது உடனடியாக பசியை போக்குவதற்கு உதவி செய்கிறது, மேலும் இவற்றில் பல்வேறு நார்ச்சத்துப் பொருட்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. அதன் விளைவாக, இவை தசைகளை வலுப்படுத்தி, வளர்வதற்கு உதவுகின்றன. இது பிரசவம் எளிதாக அமைவதற்கு உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கர்ப்ப காலத்தில், உங்கள் பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் உடல் கூடுதலாக ஈஸ்ட்ரோஜெனை சுரக்கிறது.
உலர் பிளம்ஸ் குடலின் வெளிப்புற சுவர்களில் உள்ள தசைகளை கர்ப்ப காலத்தில் தளர்த்துவதற்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சாற்றினை அருந்துவது மலச்சிக்கலை தீர்ப்பதற்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் தாயின் உடலிற்கு மிக அதிகமான இரும்புச் சத்து தேவைப்படும். உங்கள் வழக்கமான உணவுகளில் இரும்புச் சத்து போதுமான அளவிற்கு கிடைத்து விடாது. இரும்புச் சத்து குறைபாடு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ள உலர் பிளம்ஸ் போன்ற உணவுகளை கூடுதலாக எடுத்துக் கொள்வது முக்கியமாகும்.
உலர் பிளம்ஸை இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் பொட்டாசியம் கணிசமான அளவுகளில் உள்ளது. கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சாற்றினை அருந்துவது இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் கவலை, மனச்சோர்வு போன்ற உணர்வுகளை கையாள்வதற்கு உலர் பிளம்ஸ் உதவியாய் இருக்கும். கவலை, மனச்சோர்வு போன்றவற்றை கையாள்வதற்கு இதில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.
உலர் பிளம்ஸ் எடுத்துக் கொள்வது கர்ப்ப காலத்தில் உங்களுக்கு குமட்டல் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவும் இயற்கையான, ஆரோக்கியமான வழிமுறையாகும். இதில் மோஷன் சிக்னஸ்-ஐ (குமட்டலும், தலைசுற்றல் உணர்ச்சியும்) தடுத்து, உங்களை கர்ப்ப காலத்தில் சுகமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன.
அளவுக்கதிகமாக உலர் பிளம்ஸை சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் எதிர்மறையான விளைவுகள் உப்பிசம், வாயு, மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஆகும். ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படும் பட்சத்தில், மருத்துவரை அணுகவும். கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸை தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் அளவுகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு, நிபுணர்களின் பரிந்துரைகளை பரிசீலிக்கவும். கர்ப்ப காலத்தில் வாயு, உப்பிசம் பிரச்சனை உள்ளவர்கள் உலர் பிளம்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
பெரும்பாலும் உலர் பழங்களை சாப்பிடுவதால் பற்கள் கறையாகின்றன. அவற்றை சரியாக சுத்தப்படுத்தவில்லை என்றால், அவை பற்களை சேதமாக்கி விடக் கூடும். சாப்பிட்ட பிறகு பற்களில் ஒன்றும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதை எப்போதுமே உறுதி செய்து கொள்ளவும்.
ஆம், கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது பிறக்கப் போகும் குழந்தைக்கு நன்மை தரும். உலர் பிளம்ஸில் வைட்டமின் ஏ உள்ளது. தாய் மற்றும் குழந்தையின் கண்களின் சரியான வளர்ச்சி, சருமம், மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை வைட்டமின் ஏ-வை சார்ந்துள்ளது. கர்ப்ப காலத்தில் உலர் பிளம்ஸை சாப்பிடுவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் கருவில் வளரும் குழந்தையின் சரும நலத்திற்கும் கூட இது உதவும்.
ஆம், உதவும். இதில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. மன அழுத்தத்தையும், நம்பிக்கையின்மையையும் குறைப்பதற்கு, இது மிகவும் முக்கியமாகும்.
ஆம், உதவும். அவற்றில் தனித்துவமான சுவை உள்ளதால், மோஷன் சிக்னஸை குறைப்பதற்கு இது உதவக் கூடும்.
உலர் பிளம்ஸில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ உள்ளன, இது வளரும் முதிர்கருவின் கண் வளர்ச்சிக்கு உதவுகிறது. கூடுதலாக, கருப்பையில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாகும். மேலும், இது மனச்சோர்வுள்ள அல்லது பதற்றமாக உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது.
உலர் பிளம்ஸ் பற்களில் சிக்கிக் கொண்டு விடும் வாய்ப்புள்ளதால், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தவறாமல் உங்கள் பற்களை இரு முறை துலக்குவதும், ஃப்ளாஸ் செய்வதும் (பல்லிடுக்கில் சுத்தம் செய்வது) அவசியமாகும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பெருஞ்சீரகத்தின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு
சந்தேகத்துக்கிடமின்றி, உலர் பிளம்ஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு எண்ணற்ற நற்பயன்களை அளிக்கிறது. மற்ற உணவுகளைப் போலவே, இதனையும் அளவாகவே உண்ண வேண்டும். இதனை சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மருத்துவரை சந்தித்து, நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவு குறித்து தெரிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். ஒவ்வொருவரின் கர்ப்பமும் வெவ்வேறானது, அதனால் உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் உலர் பிளம்ஸ் சாப்பிடுவதால் உண்டாகக் கூடிய குறிப்பிட்ட அபாயங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முக்கியமான காலகட்டத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு வேண்டி, மிகக் குறைவான அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்வது அநாவசியமான சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவும்.
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |