
கர்ப்பம் என்பது குழந்தையின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு உற்சாகமான நேரம் ஆகும். அதே சமயத்தில், பலர் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு அல்லது வடிவம் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துமா என்பது நம்மிடத்தில் தோன்றும் பொதுவான கேள்விகளில் ஒன்று. இந்த வலைப்பதிவில், பேபி கேர்ள் பெல்லி மற்றும் பேபி பாய் பெல்லி என்பதைப் பற்றியும் உங்கள் வயிற்றின் வடிவம் அல்லது அளவை வைத்து உங்கள் கருவில் ஆண் குழந்தை இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்ல முடியுமா என்பதைப் பற்றியும் ஆராய்வோம்.
கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எடை அதிகரிப்பு மற்றும் வயிறு பெரிதாகுதல் போன்ற பல மாற்றங்கள் இந்தக் காலத்தில் தான் ஏற்படும். இந்த மாற்றங்கள் குழந்தையின் பாலினத்தைப் பற்றி ஏதேனும் தடயங்களை வெளிப்படுத்துமா என்று குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் ஆச்சரியப்படுவது இயற்கையானது தான். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு அல்லது வடிவத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்பது தான் உண்மை.
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு அல்லது வடிவம் குழந்தையின் பாலினத்தைக் குறிக்கும் என்ற கருத்தை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உண்மையில், பல காரணிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு மற்றும் வடிவத்தை மாற்றலாம். இதில் குழந்தையின் அளவு, பெண்ணின் எடை மற்றும் உடல் வகை மற்றும் கருப்பையில் குழந்தையின் நிலை ஆகியவை அடங்கும்.
ஒரு ஆண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரிய அல்லது முக்கோண வடிவ வயிறு இருக்கும் எனவும், அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தையை சுமக்கும் பெண்ணுக்கு சிறிய அல்லது வட்டமான வயிறு இருக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த நம்பிக்கைகள் பழங்காலத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்களின் அனுபவக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, இதற்கு எந்தவொரு அறிவியல் அடிப்படையும் இல்லை. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு அல்லது வடிவத்தின் அடிப்படையில் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க நம்பகமான வழிகள் எதுவுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வரும் மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால், கர்ப்ப காலத்தில் வயிறு கீழ் இறங்கியவாறு இருப்பது ஆண் குழந்தைக்கான அறிகுறி என்பதே ஆகும். ஒரு ஆண் குழந்தை பெண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வயிற்றில் கீழே இறங்கியவாறு அமர்ந்திருக்கும், இதனால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கீழே இறங்கியவாறு இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த நம்பிக்கையும் அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை.
வயிற்றில் உள்ள குழந்தையின் நிலை பெண்ணுக்குப் பெண் மற்றும் கர்ப்பத்திற்கு கர்ப்பம் மாறுபடும். மேலும், இது குழந்தையின் பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் குழந்தையின் நிலை அல்லது அவர்களின் உடலின் வடிவம் காரணமாக வயிறு கீழ் இறங்கியவாறு இருக்கலாம், அதே காரணத்திற்காக மற்றவர்கள் மேல் பக்கம் உயர்ந்தவாறு இருக்கும் வயிற்றைக் கொண்டிருக்கலாம்.
கர்ப்பிணிப் பெண் அனுபவிக்கும் உடல் ரீதியிலான அறிகுறிகள் அல்லது அடையாளங்களின் அடிப்படையில் குழந்தையின் பாலினத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. இந்த கட்டுக்கதைகளில் சில பின்வருமாறு:
கர்ப்பிணிப் பெண் அதிக எடையுடன் இருந்தால் அவருக்கு பெண் குழந்தை தான் பிறக்கும். அதுவே எடை குறைவாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பிணிப் பெண் மென்மையான, தெளிவான நிறத்துடன் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும். அதுவே தோல் வெடிப்பு போன்றவற்றால் டல்லாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பிணிப் பெண் இனிப்பு உணவுகளை விரும்பி சாப்பிட்டால் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும். உப்பு அல்லது புளிப்பு உணவுகளை விரும்பி உண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு வெளியே தெரிந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதுவே வயிறு தோலுடன் ஒட்டி சிவப்பாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்.
இது போன்ற எந்த கட்டுக்கதைகளுக்கும் எந்த அறிவியல் சான்றும் இல்லை. மேலும், அவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் வழிமுறையாக நம்பப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் பேபி பாய் பெல்லி வடிவம் மற்றும் பேபி கேர்ள் பெல்லி வடிவம் என ஆண் அல்லது பெண் குழந்தையைக் குறிக்கும் குறிப்பிட்ட வடிவம் என்று எதுவும் இல்லை. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் வடிவம் மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்.
கர்ப்ப காலத்தில் சிறிய வயிறு இருந்தால் நீங்கள் பெண் குழந்தையை கருவில் சுமப்பைதைக் குறிக்கிறது என்ற கருத்தில் எந்த உண்மையும் இல்லை. கர்ப்ப காலத்தில் வயிற்றின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். மேலும், இது குழந்தையின் பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் வடிவத்திற்கும் இது பொருந்தும்.
குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க சரியான ஒரே வழி அல்ட்ராசவுண்ட் அல்லது அம்னியோசென்டெசிஸ் போன்ற மருத்துவ பரிசோதனைகளாகும். இந்த சோதனைகள் பொதுவாக கர்ப்பத்தின் 18-20 வாரங்களுக்குப் பிறகு செய்யப்படலாம். இந்தச் சோதனை முடிவுகள் மூலம் குழந்தையின் பாலினம் பற்றிய நம்பகமானத் தகவலை குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோருக்கு வழங்க முடியும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலம் முழுவதும் கருவின் எடை தாயின் எடையை எவ்வாறு பாதிக்கிறது?
எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவு அல்லது வடிவத்தை வைத்து கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்பது தான் உண்மை. பல காரணிகள் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் தோற்றத்தை பாதிக்கலாம், ஆனால் இது குழந்தையின் பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க நம்பகமான ஒரே வழி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதே ஆகும். ஆதலால், கர்ப்பம் மற்றும் குழந்தையின் பாலினத்தைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் புராணக் கதைகள் மற்றும் உங்கள் கர்ப்பம் மற்றும் பிரசவம் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது ஆதார அடிப்படையிலான தகவலை நம்புவது முக்கியம்.
1. Perry DF, DiPietro J, Costigan K. (1999). Are women carrying "basketballs" really having boys? Testing pregnancy folklore. Birth.
2. Mathews F, Johnson PJ, Neil A. (2008). You are what your mother eats: evidence for maternal preconception diet influencing foetal sex in humans. Proc Biol Sci.
Tags
Baby Girl vs Boy Belly in Tamil, What are the myths of gender determination in Tamil, Size of belly indicates the gender in Tamil, Baby Girl vs Baby Boy Belly in English, Baby Girl Belly vs Baby Boy Belly in Hindi, Baby Girl Belly vs Baby Boy Belly in Telugu, Baby Girl Belly Vs Baby Boy Belly in Bengali
இல்லை — அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. வயிற்று வடிவம் தாயின் உடல் கட்டுமானம், குழந்தை நிலை மற்றும் முந்தைய கர்ப்பங்களைப் பொறுத்தது.
18-22 வாரங்கள் அனோமலி அல்ட்ராசவுண்டில் பாலினம் கண்டறிய முடியும். NIPT இரத்த பரிசோதனை 10 வாரங்களிலிருந்தே 99% துல்லியமானது.
இது ஒரு கட்டுக்கதை. வயிற்றின் உயரம் தாயின் தசை வலிமை, கருப்பை அளவு மற்றும் குழந்தையின் நிலையைப் பொறுத்தது — பாலினத்தைப் பொறுத்தது அல்ல.
இல்லை — PCPNDT சட்டத்தின் கீழ் இந்தியாவில் கருவின் பாலினத்தை வெளிப்படுத்துவது சட்டவிரோதம். பெண் சிசுக்கொலை தடுப்பு.
Yes
No


















Enakku twin's baby's irukku but oru girl baby iruntha nalla irukkum Enakku thanni ******thu 20 irukkunu sonnanga
Boy or girl
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |