


Illnesses & Infections
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
சராசரி நபர் ஆண்டுதோறும் இரண்டு முதல் மூன்று தொண்டை நோய்த்தொற்றுகள் அல்லது சளி ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள் ,கர்ப்பிணிப் பெண்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில், கர்ப்ப காலத்தில், பெண்கள் நோய்வாய்ப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் எந்த இருமல் சிரப் பாதுகாப்பானது மற்றும் எந்த இருமல் சிரப் எடுக்கக்கூடாது என்பது குறித்து குழப்பமாக இருப்பார்கள். இது அனைத்தும் இருமல் மருந்தில் உள்ள இன்கிரிடீயன்ட்டைப் பொறுத்தது. கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது அது கருவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது, எனவே அது குறித்து சமீபத்திய ஆண்டுகளில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு கர்ப்பிணிப் பெண் இருமல் சிரப்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதோடு, ஒரு மருத்துவரால் அது உட்கொள்ளத் தக்கது என உறுதியாக அறிந்த பின்னரே அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இருமல் மருந்துகளில் உள்ள பின்வரும் கலவைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன அல்லது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன:
குவெய்பெனெசின் கொண்ட சிரப் இருமலிலிருந்து குணமடைய உதவுகிறது. இது சுவாசக் குழாய்களில் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் இயற்கையான சளி வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. குவெய்பெனெசின் சிரப் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பானது. எப்பொழுதும் அறிவுறுத்தல்களைச் சரிபார்த்து, கருவுக்கு ஆபத்தை விளைவிக்கும் புரோபிலீன் கிளைகோல் அல்லது ஆல்கஹால் கொண்ட குவெய்பெனெசின் புராடக்ட்டுகளைத் தவிர்க்கவும்.
சூடோபெட்ரின் ஒரு மூக்கடைப்பு நீக்கியாகும். சூடோபெட்ரின் கொண்ட சிரப்கள் மூக்கில் உள்ள இரத்தக் குழாய்களைக் கட்டுப்படுத்தி தொண்டை, சைனஸஸ் மற்றும் மூக்கில் செயல்படுகின்றன. இந்த நடவடிக்கை தொண்டை மற்றும் சைனஸஸில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும். இருப்பினும், இதில் அதிக சிக்கலை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ள தாய்மார்கள் பிரக்னன்ஸியின் முதல் மூன்று மாதங்களில் சூடோபெட்ரின் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குளோர்பெனிரமைன் கொண்ட இருமல் சிரப் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான ஒரு மூக்கடைப்பு நீக்கியாகும். கூடுதலாக, இது உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் சளி போன்ற அறிகுறிகளைப் போக்குகிறது.
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் என்பது இருமலை அடக்கும் மருந்து ஆகும், இது மெடிக்கல் ஸ்டோர்களில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய இருமல் சிரப் ஆகும். கர்ப்ப காலத்தில் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பனைப் பயன்படுத்துவதற்காக பல சீரற்ற சோதனைகள் செய்ததில் இந்த மருந்துக்கும் பிரசவத்தின் போது ஏற்படும் ஆபத்தான சிக்கல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது.
டிஃபென்ஹைட்ரமைன் அலர்ஜியை முறியடிக்கக்கூடிய சிரப் வகையைச் சேர்ந்தது. இது மூக்கடைப்பை குறைக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அலர்ஜி அறிகுறிகளை ஏற்படுத்தும் உடலில் உள்ள ஒரு அங்கமான ஹிஸ்டமைனின் செயல்பாட்டை இது தடுக்கிறது.
ஃபீனைல்ஃப்ரைன் கொண்ட சிரப்கள் பிரக்னன்ஸியின் முதல் மூன்று மாதங்களின் இறுதி வரை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த சிரப்பை குறைந்த அளவில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இது நஞ்சுக்கொடிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கலாம் மற்றும் கர்ப்பிணியின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
கோடீன் கொண்ட இருமல் சிரப்பை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது அல்ல. சில ஆய்வுகள் பிரக்னன்ஸியின் ஆரம்ப காலத்தில் கோடீன் உட்கொள்வது ஸ்பைனா பிஃபிடா (முதுகெலும்பு குறைபாடு) மற்றும் குழந்தைக்கு இதய குறைபாடு ஏற்படுவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை மருந்துகளில் இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் உள்ளன. பிரக்னன்ஸியானது 20 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், என்எஸ்ஏஐடி கொண்ட இருமல் சிரப்களைத் தவிர்ப்பது நல்லது. 2 வது டிரைமெஸ்டருக்குப் பிறகு, என்எஸ்ஏஐடி-கள், கருவை (அம்னோடிக் திரவம்) பாதுகாக்கக்கூடிய அடிவயிற்றில் உள்ள திரவத்தை குறைக்கலாம். இது வயிற்றில் உள்ள கருவின் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கருவில் உள்ள பிற உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும். என்எஸ்ஏஐடி-கள் கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமெஸ்டரில் எடுத்துக் கொண்டால் குழந்தையின் இதய வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
ட்ரையம்சினோலோன் போன்ற சில கார்டிகோஸ்டீராய்டுகளைக் கொண்ட சிரப்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்த மருந்து பிறவி குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இந்த குறைபாடுகள் முதன்மையாக நாசித் தொண்டைகளில் ஏற்படுகின்றன. கூடுதலாக, இது கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் போது கடுமையான சுவாசக் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில எத்தனால் கலந்த சிரப்புகள் கிடைக்கின்றன. எத்தனால் ஒரு வகை ஆல்கஹால் ஆகும். கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் கருச்சிதைவு மற்றும் குழந்தைக்கு ஃபேட்டல் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் (உடல் அல்லது அறிவுசார் பிரச்சனைகள்) ஏற்படுவது போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உங்களுக்கு இருமல் சிரப் தேவைப்பட்டால் அது ஆல்கஹால் இல்லாததா என்பதை உறுதிப்படுத்த லேபிளை படித்துச் சரிபார்க்கவும். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், வாங்குவதற்கு முன் உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரை அணுகவும்.
சிரப் கசக்காமல் இருக்க இனிப்புகள் சேர்க்கபடுகின்றன. இருப்பினும், கர்ப்ப காலத்தில், இந்த இனிப்புகள் பெண்களின் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். தேவைப்பட்டால், "சர்க்கரை இல்லாத" சிரப்களைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பொதுவாக சர்பிடால் போன்ற சுகர் ஆல்கஹால்களும், சுக்ரலோஸ் போன்ற செயற்கை இனிப்புகளும் அடங்கும். ஒரு பெண்ணுக்கு பிரக்னன்ஸி கால நீரிழிவு நோய் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய சர்க்கரை இல்லாத சிரப்களை முடிந்தவரை குறைவாக உட்கொள்வது நல்லது, நீங்கள் பிரக்னன்டாக இருக்கும் போது செயற்கை இனிப்புகளை அதிகம் பயன்படுத்தினால் சிக்கல்கள் ஏற்படலாம். பிறக்கும் குழந்தைக்கு அதிக உடல் பருமன் மற்றும் குறைப்பிரசவம் ஆகியவை இதில் அடங்கும்.
இதையும் படிக்கலாமே! - கக்குவான் இருமல்: அறிகுறி, அபாயங்கள் மற்றும் தடுப்புமுறை
பெரும்பாலான இருமல் சிரப்கள் பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளைக் கொண்டிருக்கின்றன. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சிரப்பை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கிறது. பாதுகாப்பு கருதி, லேபிள்களை படித்து சரிபார்த்து, குறைந்த பாதிப்பு கொண்ட மாற்று ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்குத் தேவைப்படும்போது பொதுவாக பல அறிகுறிகளை அளிக்கக்கூடிய சிரப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில் தனிப்பட்ட சிரப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். உங்களுக்கு மருந்து தேவைப்பட்டால், குறுகிய காலத்திற்கு மட்டும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றை கண்டறியவும்.
1. Taking Medicine During Pregnancy. (2018). Journal of Midwifery & Women's Health
2. Cao Y, Rhoads A, Burns T, Carnahan RM, Conway KM, Werler MM, Mitchell A, Romitti P. (2021). Maternal use of cough medications during early pregnancy and selected birth defects: a US multisite, case–control study. NCBI
Tags
An Expecting Mother's Guide to Choosing a Safe Cough Syrup in Pregnancy in English, An Expecting Mother's Guide to Choosing a Safe Cough Syrup in Pregnancy in Telugu, An Expecting Mother's Guide to Choosing a Safe Cough Syrup in Pregnancy in Bengali
Yes
No

Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)