


BeautyTips
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பாடி பாலீஷிங் செய்து ஒருவர் தன்னைத் தானே நன்கு கவனித்துக் கொள்வதன் மூலம், ஒரு தேவதையை போல உணரலாம். இது உடல் முழுமைக்கும் செய்கின்ற ஒரு சிகிச்சையாதலால், இதன் மூலம் ஒருவர் புத்துணர்ச்சியுடனும், இளமைப் பொலிவுடன் திகழ முடியும். இது ஸ்பா மற்றும் அழகு நிலையத்தின் சேவைகள் இரண்டையுமே அளிக்கவல்லது, எனவே பெண்கள் இரண்டு சேவைகளையும் ஒன்றாக பெற முடியும்!
பாடி பாலீஷிங் என்பது, உங்கள் உடல் முழுவதும் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி, செல்களின் மீளமைப்பினை ஊக்குவித்து, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இது முகத்திற்கு மட்டும் செய்யும் ஃபேஷியல் போன்றதல்ல, உடல் முழுமைக்குமானது! இதன் நடைமுறையில் உள்ள ஏழு படிநிலைகள், சருமத்திற்கு நீர்ச்சத்து அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு படிநிலையிலும், வெவ்வேறு அழகுசாதனப் பொருட்கள், வெவ்வேறு விதமான பலன்களை பெறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
பாடி பாலீஷிங் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இது அதிகம் பேசப்படுவதில்லை. எளிமையாக வீட்டிலேயே பாடி பாலீஷிங் செய்வதால் ஒருவர் எத்துணை புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் திகழ முடியும் என்பதை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.
பாடி பாலீஷிங் செய்வதன் மூலம், சருமத்தின் மேல் பரப்பிலுள்ள இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. இதனால் சருமம் மென்மையாக ஆவது மட்டுமின்றி புத்துணர்ச்சியும் பெற்று மிளிர்கிறது.
மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்துவதற்கும், மற்ற சரும பராமரிப்பு பயன்பாட்டிற்கும், சருமத்தின் துளைகளுக்கு உள்ளே அவை ஊடுருவிச் செல்ல வேண்டும். பாடி பாலிஷீங் செய்வதன் மூலம், சருமத்தின் துளைகள் திறக்கப்படும், பாலீஷ் செயல்முறையினால் மட்டுமின்றி மற்ற சரும பராமரிப்பு சிகிச்சைகள் செய்யும் போதும், சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டிருப்பதால் ஊட்டச்சத்துகள் உறிஞ்சிக் கொள்ளப்படும்.
ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கு பாடி பாலீஷிங் செய்வது சிறந்த வழிமுறையாகும். இது அடைக்கப்பட்ட துளைகளை திறப்பதற்கும், செல்களின் வளர்ச்சிக்கும், வயது முதிர்ச்சியின் அடையாளங்களை குறைப்பதற்கும் உதவுகிறது. சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும், நீர்ச்சத்துடனும் வைத்திருப்பதன் மூலம், இது சரும ஆரோக்கியத்தை காக்கிறது.
பாடி பாலீஷிங் செய்வதன் மூலம், சருமமானது புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், மேற்பரப்பில் புதிய செல்களையும் வெளிப்படுத்துகிறது.
சருமத்தின் துளைகள் மாசினையும், அழுக்கினையும் சிறிய காந்தம் போல ஈர்த்துக் கொள்கிறது. இந்த அழுக்கினை அகற்றாவிட்டால், சருமத்தில் எரிச்சல் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பாடி பாலீஷிங்கின் மூலம் இந்த அழுக்கு அகற்றப்பட்டு, துளைகள் சுத்தம் செய்யப்படும்!
பொதுவாகவே உட்புற முடி வளர்ச்சி மிகவும் தொல்லை தரும் ஒரு விஷயமாகும், குறிப்பாக பிடுங்கிய பிறகோ அல்லது ஷேவ் செய்த பிறகோ கூட தொல்லை தருவதாக இருக்கிறது. அவை வலி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம், நீக்குவதற்கு கடினமானதாகவும் இருக்கலாம். பாடி பாலீஷ் செய்வதால் உட்புற முடி வளர்ச்சி ஏற்படுவதே முற்றிலுமாக தடுக்கப்படுகிறது!
சருமத்தின் ஆரோக்கியத்தை காப்பதற்கு மாய்ஸ்சுரைஸர்கள் உதவவில்லையெனில், ஒரு வேளை சருமத்தில் தேங்கியுள்ள இறந்த சரும செல்களின் காரணமாக சருமத்தினால் மாய்ஸ்சுரைஸர்-ஐ கிரகித்துக் கொள்ள முடியவில்லையென்று பொருள் கொள்ளலாம். பாடி பாலீஷிங்-இன் மூலம் இறந்த சரும செல்களை அகற்றி, மாய்ஸ்சுரைஸர்-ஐ பயன்படுத்தி பலன் பெறலாம்!
வெயிலினால் நிறம் மாறிய சருமத்திற்கு சிகிச்சையளிக்கும் முன், முதலில் சருமம் மென்மையாகவும், சீராகவும் இருப்பது அவசியம், இல்லையெனில் அந்தளவிற்கு பலன்கள் இருக்காது. பாடி பாலீஷிங் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தில் உள்ள வறட்சி அல்லது சீரற்ற தன்மையையும் போக்க உதவுகிறது. இதனால் நிறம் மாறிய சருமத்திற்கான சிகிச்சை பலன் அளிக்கிறது.
ஷேவிங் செய்யும் போது சரியாக முடி முழுவதும் அகற்றப்படாவிட்டால், எரிச்சலையுண்டாகும், இது பொதுவாக இறந்த செல்களின் தேக்கத்தின் காரணமாக ஏற்படும். ஷேவ் செய்வதற்கு முன்பு பாடி பாலீஷிங் செய்வதால், முடி முழுவதுமாக அகற்றப்பட்டு ஷேவிங் செய்வதின் முழு பலனையும் பெறலாம்!
பாடி பாலீஷிங் செய்வதால் சருமம் இளமைப் பொலிவுடன் விளங்குகிறது. இது சருமத்தை விரைவாக புத்துணர்ச்சியூட்டி, மென்மையாக்குகிறது. இதனால் சருமம் இளமைப் பொலிவுடன் மிளிர்கிறது.
பாடி பாலீஷிங் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அதனை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். ஒருவர் எளிமையான சுயமாக செய்யும் பாடி பாலீஷிங் கிட்-ஐ உருவாக்கிக் கொண்டு, சருமத்தில் தடவலாம். இதனை படிப்படியாக செய்வது எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது:
வீட்டில் பாடி பாலீஷிங் செய்வதற்கு படிகக் கல், லூஃபா (உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று), ஆலிவ் எண்ணெய், சுயமாக செய்து கொள்ளும் கிட் அல்லது கடையில் வாங்கிய பாடி பாலீஷிங் கிட் போன்ற அடிப்படையான சில பொருட்கள் தேவைப்படும்.
கிட்-ஐ தயார் செய்தவுடன், இளஞ்சூடான நீரில் குளித்து முதலில் உடலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து, சூடு செய்யப்பட்ட ஆலிவ் எண்ணெயை சிறிதளவு உடல் முழுவதும் தடவ வேண்டும்.
அடுத்து, லூஃபாவின் மூலம், சுயமாக செய்யப்பட்ட பாடி பாலீஷை சருமத்தில் சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
படிகக் கல்லை பயன்படுத்தி, முழங்கால், கணுக்கால், மற்றும் முழங்கை போன்ற கடினமான சரும பகுதிகளை மென்மையாக தேய்க்க வேண்டும்.
இறுதியாக, வெதுவெதுப்பான நீரில் பாடி பாலீஷிங்கை கழுவி விடலாம், ஆனால் ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக் கொள்வதற்கு சோப் போடக் கூடாது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் உதடுகள் வறண்டு போவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
உடலிலுள்ள சருமத்தை பெரும்பாலும் நாம் கவனித்துக் கொள்வதில்லை, அவை தான் அதிகப்படியாக பல சங்கடங்களுக்கு ஆளாகின்றன எனினும் முகத்திலுள்ள சருமத்தை போல எந்தவொரு தீங்கிற்கான அறிகுறிகளையும் காட்டுவதில்லை. உங்கள் முழு உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதன் மீது அக்கறை செலுத்துவதற்கும் அவ்வப்போது இது போல் எளிமையான முறைகளை முயன்று பார்க்க சரியான தருணம் இது தான். இது போன்ற பயன் தரும் தகவல்களை பெறுவதற்கு, Mylo குடும்ப வலைப்பதிவை பின்தொடரவும்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)