This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்பு பற்றிய விரிவான வழிகாட்டி

Weight Loss
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 16, 2026
பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்பு பற்றிய விரிவான வழிகாட்டி
Likes21 Likes|
Read time6 min

அறிமுகம்

ஃபேட் ஒர்க்அவுட் திட்டங்கள் மற்றும் புராடக்ட்டுகள் ஒருபுறம் இருக்க, பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய வடிவம் பெறுவது என்பது ஒரு நீண்ட கால செயல்முறையாகும். இது முதல் குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கலாம். பிரசவத்திற்குப் பின் எடை குறைப்பது என்பது முதலில் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த ஆர்ட்டிக்கில் புதிய தாய்மார்களுக்கு அவர்களின் உடலைப் பற்றியும் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அவர்கள் மெலிந்து ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை பற்றியும் வழிகாட்டும்.

பிரசவத்திற்குப் பிந்தைய உடல்

பிரசவத்திற்குப் பிறகு அதிலிருந்து குணமடையவும் மீட்கவும் நேரம் எடுக்கும். மேலும், ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும். ஒருவர் தன் உடலை மறுசீரமைக்க அதற்கு தேவையான நேரம் அளிக்க வேண்டும். பொதுவாக, ஒரு பெண்ணின் கருப்பை வாய் மூடுவதற்கும், இரத்தப்போக்கு நிற்பதற்கும், கருப்பையானது கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கும் குறைந்தது 6 வாரங்கள் ஆகும். இந்த நேரத்தில், உடலை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற மென்மையான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எனர்ஜி லெவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் போது லைட் வெயிட் பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை உடற்பயிற்சி அட்டவணையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் பழைய உடல் வடிவம் பெற எவ்வளவு காலம் ஆகும்?

பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய உடல் வடிவம் பெற எவ்வளவு காலம் ஆகும்? இது உண்மையில் ஒவ்வொரு நபரும் அவர்கள் எவ்வளவு விரைவாக அதிலிருந்து மீள்கிறார்கள் என்பதை பொறுத்தது. மற்ற பெண்கள் இதற்காக அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், சில பெண்களால் தங்கள் கர்ப்பத்திற்கு முந்தைய எடையை பெறவும் மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளுக்கும் மிக விரைவாக திரும்ப முடிகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மீண்டும் பழைய வடிவத்தை பெற வேண்டும் என்பதற்காக அவசரமாகவும், அதிகமாகவும் எதையும் தொடங்காமல் மெதுவாகவே ஆரம்பிக்கவும். பிரசவம் முடிந்த சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இது போன்ற கடின பயிற்சிகளை தொடங்கினால் காயம் அடைவதற்கோ அல்லது குணமாவதில் இருந்து தாமதமாவதற்கோ வழிவகுக்கும். கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி, கர்ப்ப காலத்தில் அவர்களின் செயல்பாடு அளவுகள் ஆகும். அந்த நேரத்தில் அதிக சுறுசுறுப்பாக இருந்தவர்கள், பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய உடல்நிலைக்கு எளிதாக திரும்பலாம்.

நீங்கள் என்ன சாப்பிடலாம் ?

இப்போது, பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்புக்கான உகந்த உணவை அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

உங்கள் உடற்பயிற்சி இலக்கு என்னவாக இருந்தாலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம் என்பதால், புதிய தாய்மார்கள் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உடல்கள் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, அவற்றை பழையபடி மீட்கவும் குணமடையவும் தேவையான நேரத்தை அதற்கு வழங்க வேண்டும். அதற்காக, சத்தான உணவு சுவையற்றதாக இருக்க வேண்டும் என்று இது இங்கே குறிப்பிடவில்லை. பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கியமான, எடை குறைப்பு டயட்டை எடுத்துக்கொள்வதற்கான சில குறிப்புகள் இங்கே:

  • நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை பிரசவத்திற்கு பிறகு உடலை மீட்டெடுக்க உதவுகின்றன மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட எந்த சேதத்தையும் சரிசெய்ய உதவும்.

  • போதுமான அளவு புரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். புதிய தாய்மார்களுக்கு தசை திசுக்களை மீண்டும் கட்டமைக்க புரதம் தேவைப்படுகிறது மற்றும் அவர்களின் உடலில் சர்ஜரியின் போது ஏதேனும் ஏற்பட்ட வெட்டுக்கள் அல்லது கீறல்களில் இருந்து குணமடைய உதவுகின்றன. குறைந்த அளவு கொழுப்புடன் அதிக நன்மைகளைப் பெற கோழி, மீன் அல்லது டோஃபு போன்ற புரதங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  • நிறைய தண்ணீர் அருந்துங்கள். நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் திசுக்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 கிளாஸ்கள் அருந்தவும். தாய்ப்பால் கொடுப்பவர்களாக இருந்தால் இன்னும் அதிகமாக தேவைப்படலாம்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் அதிகப்படியான காஃபின் ஆகியவற்றைத் தவிருங்கள். இவை உடலின் குணப்படுத்தும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் உடலில் நீரிழப்பு அல்லது தூக்கக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். காஃபின் குறிப்பாக உடலின் இயற்கையான தூக்க சுழற்சி அல்லது சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைக்கலாம். காபி குடிக்க வேண்டும் என்றால், கடைசி கப்பை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குறைந்தது 6 மணிநேரத்திற்கு முன் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரசவத்திற்கு பிந்தைய பெண்களுக்கான உடற்பயிற்சி பிளான்

  • ஒரு குழந்தையைப் பெறுவது ஒரு அற்புதமான நிகழ்வு என்றாலும், இது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நிறைய புதிய சவால்களைக் கொண்டுவருகிறது. புதிதாக குழந்தைபெற்ற பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிரசவத்திற்குப் பிறகு பழைய வடிவத்தை எப்படிப் பெறுவது என்பது ஆகும். நல்ல செய்தி என்னவென்றால், உணவு மற்றும் உடற்பயிற்சியின் சரியான கலவையுடன், விரைவாக முடிவுகளைப் பார்க்க ஆரம்பிக்க முடியும்.

  • நிச்சயமாக, ஒவ்வொரு பெண்ணும் குணமடைவதிலிருந்தும் அதிலிருந்து மீள்வதிலிருந்தும் வேறுபடுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம், மிக விரைவிலேயே எந்த கடின உடற்பயிற்சிகளையும் தொடங்கக்கூடாது. ஆனால் பொதுவாக, பெரும்பாலான நிபுணர்கள் பிரசவத்திற்கு ஆறு வாரங்களுக்குள் மிதமான உடற்பயிற்சி பிளானை தொடங்க பரிந்துரைக்கின்றனர்.

பிரசவத்திற்குப் பின் எடை குறைப்புக்கான சில டிப்கள் மற்றும் உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செயல்படுத்தலாம்:

நடைபயிற்சி :

பிளாக்கை சுற்றி 10-15 நிமிட நடைப்பயிற்சியைத் தொடங்கி, தற்போதைய லெவலில் உங்கள் உடல் வசதியாக உணர ஆரம்பித்தவுடன், நேரத்தையும் தூரத்தையும் படிப்படியாக அதிகரிக்கவும்.

லைட்வெயிட் லிஃப்டிங் :

பைசெப் கர்ல்ஸ் மற்றும் டிரைசெப்ஸ் கிக்பேக்குகள் போன்ற சில அடிப்படை ஆர்ம் பயிற்சிகளைச் செய்ய 3-5 பவுண்டு டம்பல்ஸைப் பயன்படுத்தவும்.

இடுப்புக்கான ஃபுளோர் பயிற்சிகள் :

கேகல்ஸ் என்றும் அழைக்கப்படும். இது இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை குறைக்க உதவுகிறது மற்றும் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.

நிச்சயமாக, எந்தவொரு பிளானையும் தொடங்குவதற்கு முன், ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். அவர் ஓ.பி/கைனக்கில் அதிக அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு பிரசவத்தில் உள்ள தனிப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் காரணிகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் அடுத்தடுத்து பிரசவித்த பெரும்பாலான தாய்மார்கள் இந்த பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்பு குறிப்புகளைப் பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான சிறந்த 5 வீட்டு வைத்தியம்

முடிவுரை

நிறைவாக, பிரசவத்திற்குப் பின் எடை குறைப்பு சவாலானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக சாத்தியமற்றது அல்ல. கொஞ்சம் கவனம், அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி பிளானை பின்பற்றுவதன் மூலம், எந்த நேரத்திலும் ஒரு உறுதியான மற்றும் ஆரோக்கியமான உடலமைப்பை அடைய முடியும். கர்ப்பம் மற்றும் பிரசவம் பற்றி இதுபோன்ற தகவல் தரும் பிளாக் போஸ்ட்டுகள் மற்றும் கட்டுரைகளுக்கு, மைலோ ஸ்டோரில் ஏராளமான பிளாக் போஸ்ட்டுகளை ஆராயுங்கள்.

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
Feeding Tracker
Baby's feeding schedule made easy
arrow_right
undefined icon
Baby Names
Search names with meanings
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
Chandrika Iyer
Chandrika Iyer

Related Articles

Questions about this article

  • Asked when Mother of 1 Year Old Baby

    Weigh gain pathi solluga

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.