hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்பத்தின் போது ஹலீம் / சாலியா விதை எடுத்துக்கொள்வதன் பயன்கள் | Aliv Seeds Benefits in Pregnancy in Tamil arrow

In this Article

    கர்ப்பத்தின் போது ஹலீம் / சாலியா விதை எடுத்துக்கொள்வதன் பயன்கள் | Aliv Seeds Benefits in Pregnancy in Tamil

    Pregnancy Journey

    கர்ப்பத்தின் போது ஹலீம் / சாலியா விதை எடுத்துக்கொள்வதன் பயன்கள் | Aliv Seeds Benefits in Pregnancy in Tamil

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஹலீம் விதைகள் என்று அழைக்கப்படும் ‘அலிவ் விதைகள்’ கொண்டுள்ள அதிக ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக பரவலாக உட்கொள்ளப்படும் விதைகள் ஆகும். இவற்றை கார்டன் க்ரெஸ் விதைகள் என்றும் கூறுவர் மற்றும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் இதனைச் செயல்பாட்டு உணவுகள் என்பர். இவை பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருப்பதோடு, நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்கள் தாக்கும் அபாயத்தைத் தணிக்கவும் தடுக்கவும் உதவுகிறது. அலிவ்/ ஹலீம் விதைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வதில் தடை இல்லை.

    ஹலீம் விதையின் நன்மைகள் என்ன என்பதை அறிய, மாதவிடாய் காலத்தில் ஹலீம் விதைகளின் நன்மைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் அவற்றின் நன்மைகள் பற்றி அனைத்தையும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

    ஹலீம் விதைகள் என்றால் என்ன? (What are halim seeds in Tamil)

    ஹலீம் விதைகள் கர்பிணிப் பெண்கள் பொதுவான ஏங்கும் புளிப்பான சுவை கொண்டவை. சிறிது கார மணம் கொண்டவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த விதைகளை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் உட்கொள்ளலாம். இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை.

    மாதவிடாய் கட்டத்தில் ஹலீம் விதைகள் பயக்கும் நன்மை சார்ந்து இவ்விதைகளைப் பலர் பொதுவாக எடுத்துக் கொள்வதுண்டு. இந்த விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. ஹலீம் விதைகள் உடலுக்கு இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் அறியப்படுகிறது; தினமும் ஒரு ஸ்பூன் ஹலீம் விதைகளை உட்கொள்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைந்தபட்சம் 60% இரும்புச்சத்து தேவை பூர்த்தியாகிறது.

    கர்ப்பத்தின் போது ஹலீம் விதைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் (Halim seeds benefits during pregnancy in Tamil)

    ஹலீம் விதைகள் வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். அவை உடலுக்கு ஃபோலிக் அமிலத்தையும், ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தையும் வழங்குகின்றன. இவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது மற்றும் நோய்த்தொற்றுகள் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

    1. ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது (Improve Haemoglobin)

    கர்ப்ப காலத்தில், கருவின் வளர்ச்சிக்கும், அதே போல் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்திற்கும் அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஹலீம் விதைகள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கும். ஹலீம் விதைகளில் உள்ள இரும்புச்சத்து அதன் குறைபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது. சைவ உணவு உண்போருக்கு ஹலீம் விதைகள் இரும்புச் சத்து வழங்க சிறந்த மூலமாகும்.

    2. இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் (Increase Red Blood Cell Count)

    ஹலீம் விதைகளின் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

    3. எலும்புகள் மற்றும் பற்களுக்குப் பலம் தருதல் (Strengthens Bones & Teeth)

    ஹலீம் விதைகளில் இருந்து கிடைக்கும் கால்சியம் வளரும் கருவின் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

    4. எடை இழப்புக்கு உதவுகிறது (Aids Weight Loss)

    ஹலீம் விதைகளில் புரதம் உள்ளது. இது எடையை பராமரிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஹலீம் விதைகளை உட்கொள்வது உடல் பசியைத் தடுக்க உதவுகிறது. மேலும் உடல் தசைகளைப் பராமரிக்க உதவுகிறது.

    ஹலீம் விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் (Side effects of consuming halim seeds in Tamil)

    ஹலீம் விதைகளை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவான ஹலீம் விதைகள் பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மையே பயக்கிறது.

    ஹலீம் விதைகள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக அறியப்படுகின்றன. எனவே குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் ஹலீம் விதைகளை எடுத்துக் கொள்ளும் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    ஹலீம் விதைகள் உடலில் இருந்து பொட்டாசியத்தை வெளியேற்றுவதாக அறியப்படுகிறது; எனவே, அதிக அளவு ஹலீம் விதைகளை உட்கொண்டால், உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும். ஹலீம் விதைகளை உண்ணும் அளவு குறித்து ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

    எத்தனை கார்டன் கிரெஸ், அலிவ் அல்லது ஹாலும் விதைகள் எடுத்துக் கொள்ளவேண்டும்? (How many seeds of garden cress, aliv, or halim should be consumed in Tamil)

    நாளொன்றுக்கு ஒரு டீஸ்பூன் ஹலீம் விதைகள் உட்கொண்டால் போதுமானது. விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் உட்கொள்வது சிறந்த முடிவுகளைத் தரும்.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions)

    1.ஹலீம்/அலிவ் விதைகளை தினமும் சாப்பிடலாமா? (Can I eat aliv seeds every day?)

    அலிவ் விதைகளை தினமும் உட்கொள்ளலாம். அவற்றை பால், ஸ்டியூ மற்றும் சூப்களுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது எலுமிச்சை சாற்றை சிறிது பிழிந்து அப்படியே உட்கொள்ளலாம்.

    2.ஹலீம் விதைகளை சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? (Who should avoid eating halim seeds?)

    கோயிட்டர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம். பொதுவாக, கர்ப்பிணிப் பெண்கள் ஹலீம் விதைகளை உட்கொள்ள முடியும் என்றாலும் ஒரு சுகாதார நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் அது குறித்து கலந்தாலோசித்து பின்னர் எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு, டையூரிடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் எவரும் ஹலீம் விதைகளை உட்கொள்ளக் கூடாது.

    3.ஹலீம் விதைகள் உண்பது கருக்கலைப்புக்கு வழிவகுக்குமா? (Can halim seeds lead to abortion?)

    சில ஆதாரங்களின்படி, ஹலீம் விதைகள் கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவதால் கர்ப்பிணிப் பெண்கள் அதைத் தவிர்க்க வேண்டும், கருப்பைச் சுருக்கங்கள் கருக்கலைப்பு தன்னிச்சையாகத் தூண்டப்படுவதற்கு வழிவகுக்கும். கர்ப்பிணிப் பெண்கள், ஹலீம் விதைகளை உட்கொள்ளும் முன், மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    References

    1. Al-Jenoobi FI, Al-Thukair AA, Alam MA, Abbas FA, Al-Mohizea AM, Alkharfy KM, Al-Suwayeh SA. (2014) Effect of Garden Cress Seeds Powder and Its Alcoholic Extract on the Metabolic Activity of CYP2D6 and CYP3A4. Evid Based Complement Alternat Med.

    2. Gokavi SS, Malleshi NG, Guo M. (2004). Chemical composition of garden cress (Lepidium sativum) seeds and its fractions and use of bran as a functional ingredient. Plant Foods Hum Nutr.

    Tags

    What are Aliv Seeds/ Halim Seeds in Tamil, What are the benefits of eating Halim Seeds in pregnancy in Tamil, What are the Side effects of eating Halim Seeds in pregnancy in Tamil, Aliv Seeds Benefits in Pregnancy in English, Aliv Seeds Benefits in Pregnancy in Hindi, Aliv Seeds Benefits in Pregnancy in Telugu, ⁠Aliv Seeds Benefits in Pregnancy in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.