This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your ovulation on mylo app

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பை கவனித்துக் கொள்வது எப்படி

Getting Pregnant
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பை கவனித்துக் கொள்வது எப்படி
Likes16 Likes|
Read time5 min

முன்னுரை

குழந்தையை பெற்றெடுக்கும் போது ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் தனது பிறப்புறுப்பில் அசௌகரியத்தையும், வலியையும் அனுபவிக்கிறாள். பிரசவத்திற்குப் பிறகு குழந்தைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாலும் கூட, பிரசவத்திற்குப் பிறகான பராமரிப்பில் ஒருவர் அலட்சியம் காட்டக்கூடாது. பிரசவத்திற்கு பின் பெண்ணுறுப்பில் இருந்து வரும் வெளியேற்றம் முதல் காயம் வரை பிறப்புறுப்பிற்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவள். அது போலவே அவளது பிரசவம், குழந்தையை பெற்றெடுத்தல் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கியமும் வேறுபடும். இருப்பினும் குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பெண்ணுறுப்பில் என்ன மாதிரியான மாற்றங்களை ஒருவர் எதிர்ப்பார்க்கலாம்?

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பு எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு பெண் யோசிக்கலாம். பெண்ணுறுப்பின் வெட்டுத் திறப்பு (episiotomy) அவசியமா? பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பில் காயங்கள் குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்? ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்ப காலம் மற்றும் குழந்தையை பெற்றெடுத்தல் என்பது எப்படி வேறுபடுகிறதோ, பிரசவத்திற்கு பிறகான அவர்களின் அனுபவங்களும் பெண்ணுக்கு பெண் மாறுபடுமா. குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஒரு பெண் அனுபவிக்கும் பொதுவான விஷயங்களில் சில பின்வருமாறு:

  • பெண்ணுறுப்பில் வறட்சி

  • பெண்ணுறுப்பு மற்றும் பெரினியத்தில் காயம்

  • பெண்ணுறுப்பில் மிகவும் அதிகப்படியான வெளியேற்றம்

  • பெண்ணுறுப்பில் தழும்பு

  • அதிகப்படியான அல்லது லேசான மாதவிடாய் இரத்தப்போக்கு

  • பிரசவத்திற்கு பிறகு பெண்ணுறுப்பு விரிவடைதல்

  • சிரிக்கும்போது, குதிக்கும் போது அல்லது இருமும் போது கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவு

  • உடலுறவின் போது வலி மற்றும் பிற மாற்றங்கள்

  • பெண்குறி நிறத்தில் மாற்றம்

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பை கவனித்துக் கொள்வதற்கான டிப்ஸ்

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் பிறப்புறுப்பு காயங்களுடன் காணப்படும். மேலும், குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே வலி மறைந்துவிடும் என்று நினைத்து விட கூடாது. குழந்தை பிறந்த சில வாரங்கள் வரை பெண்ணுறுப்பில் வலி மற்றும் காயம் நீடிக்கும். குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பை எப்படி கவனித்துக்கொள்வது என்பது குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டு இருந்தால், உங்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ் இதோ:

  • இடுப்புக்குளியல்

இடுப்புக்குளியல் என்பது ஒரு டப் நிறைய வெதுவெதுப்பான நீரில் ஒரு நபரின் கீழ்ப்பாதியை மூழ்கடிப்பதன் மூலம் வீக்கம் அல்லது கிழிதல் காரணமாக ஏற்பட்ட வலியை போக்க உதவும் ஒரு குளியல் முறையாகும். இடுப்புக்குளியல் என்பது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் திசுக்கள் விரைவாக ஆறவும், குணமடையவும் உதவி புரியும். பிரசவத்திற்கு பிந்தைய உபகரணங்களோடு இடுப்புக்குளியலுக்கான உபகரணத்தையும் மருத்துவமனை வழங்கலாம்.

  • இதமான ஸ்ப்ரேக்கள்

மூலநோய் மற்றும் கிழிதல் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க உதவும் பல பென்சோகைன் அல்லது லிடோகைன் ஸ்ப்ரேக்கள் கடைகளில் கிடைக்கின்றன. நாப்கின் மாற்றிய பின் அல்லது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு ஒருவர் இந்த ஸ்ப்ரேக்களை தோல் மீது பயன்படுத்தலாம்.

  • ஐஸ் பேக்குகள்

ஒரு ஐஸ்கட்டியை மென்மையான துணியில் சுற்றி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10-15 நிமிடங்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் வைப்பது வலியைக் குறைக்கும். ஒரு மருத்துவமனைகள் ஒற்றைப்பயன் ஐஸ் பேக்குகளை வழங்கலாம். மருந்துக் கடைகளிலும் ஐஸ் பேக்குகள் கிடைக்கும்.

  • விட்ச் ஹேசல் பேடுகள்

விட்ச் ஹேசலில் டானின்கள் எனப்படும் இரசாயனங்கள் உள்ளன. அவை பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன. இது, வலியைக் குறைத்து, தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. விட்ச் ஹேசல் சிறிய அளவிலான இரத்தப்போக்கினை நிறுத்தக்கூடிய ஹீமோஸ்டேடிக் பண்புகளையும் கொண்டுள்ளது. மருத்துவ காட்டன் பந்து ஒன்றை விட்ச் ஹேசலில் ஊறவைத்து, அதை உணர்திறன் உள்ள இடங்களில் தணிக்கும் சிகிச்சையாக தடவவும்.

  • உலர்ந்த நிலையில் வைக்கவும்

சிறுநீர் கழித்த பிறகு அல்லது இடுப்புக்குளியலுக்கு பிறகு, கால்களை விரித்து வைப்பதன் மூலம் பிறப்புறுப்பு பகுதியை உலர விடவும். ஒரு ஹேர்டிரையரை கூல் செட்டிங்கில் அமைத்தும் பயன்படுத்தலாம். ஹேர்டிரையரை பிறப்புறுப்பு பகுதியில் இருந்து 6-8 அங்குல தூரத்தில் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது வலியை முற்றிலுமாக குறைக்காது என்றாலும், டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்க இது உதவும். இது பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

  • ஓடிசி வலி நிவாரணிகள்

பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் வலியைப் போக்க உதவும் பலவிதமான ஓவர்-தி-கவுண்டர் வலி நிவாரணிகள் கிடைக்கின்றன. இப்யூபுரூஃபன் ஒரு பயனுள்ள அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இது வலியைத் தணிக்கும் மற்றும் தசைப்பிடிப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு மற்றும் பெரினியல் வலி ஆகியவற்றிற்கு உதவுகிறது. பொதுவாக பாலூட்டும் போது இப்யூபுரூஃபனை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என்றாலும், எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி மருத்துவ பரிந்துரையைப் பெறுவது முற்றிலுமாக பரிந்துரைக்கப்படுகிறது.

முடிவுரை

பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பல பெண்களின் மனதில் இருக்கும் மிக முக்கியமான கேள்வியில் ஒன்று அவர்களின் பிறப்புறுப்பானது கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு முன்பு இருந்தது போலவே மீண்டும் மாறுமா என்பதுதான். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு விரிவடையும் அளவுக்கு மீள்தன்மை கொண்டது மற்றும் பழைய நிலைக்கு திரும்பும் திறன் கொண்டது. பிரசவத்தின் போது வலிகள் அதிகம் இருந்தாலும், பிறப்புறுப்பானது ஒரு குழந்தையை பிரசவிக்க தேவையான திறன் கொண்டது. மேலும், எந்தவொரு அசௌகரியமும் ஒரு மருத்துவர் வழங்கும் மருந்துகள் மூலமாக சிகிச்சையளிக்கப்படலாம். அது மட்டும் அல்லாமல், பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு பகுதியை ஆற்றவும் ஆறுதலளிக்கவும் வீட்டு வைத்தியத்தியங்களை நீங்கள் முயற்சிக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு பகுதியை நன்றாக பராமரிப்பதன் மூலம், அப்பகுதி விரைவில் குணமடையலாம். மேலும், இதன் மூலம் பெண்கள் தங்கள் புதிதாக பிறந்த குழந்தையுடன் தங்களது நேரத்தை கவலையின்றி செலவிடலாம்.

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Chandrika Iyer
Chandrika Iyer

Related Articles

Reviews by Mylo Moms

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled starFilled star

    every female in this world should have one of these

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled starFilled star

    Wow product i have liked this so much i will buy one for every female in the family.

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled starFilled star

    i love to review products of mylo it is absolutely must buy

Questions about this article

  • trying to conceive

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.