hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diapering arrow
  • எப்போதெல்லாம் டயப்பர்(diaper) மாற்ற வேண்டும்? arrow

In this Article

    எப்போதெல்லாம் டயப்பர்(diaper) மாற்ற வேண்டும்?

    Diapering

    எப்போதெல்லாம் டயப்பர்(diaper) மாற்ற வேண்டும்?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குழந்தைகளுக்கு தூக்கி எறியக் கூடிய டயப்பர்களை பயன்படுத்த வேண்டுமா? அல்லது துணியால் தயாரான டயப்பர்களை பயன்படுத்த வேண்டுமா? என்பதை பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். டயப்பர் மாற்றுவது எப்படி? என்று ஒவ்வொரு குறிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இதை எளிதாக மேற்கொள்வது எப்படி? என்றும் தெரிந்து கொள்ளலாம்.

    கருத்தாக்கம்

    தூக்கி எறியக் கூடிய டயப்பர்(disposable diaper) அல்லது மீண்டும் உபயோகம் செய்யக் கூடிய டயப்பர்(cloth diapers), இவற்றில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாகும். அதே சமயம், குழந்தை பெற்றுக் கொள்ளும் முன்பாக, டயப்பர்களை மாற்றுவது குறித்து கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால், ஒரு பெற்றோராக உங்கள் பயணம் எளிமையாக அமையும்.

    இதற்கு முன்பு நீங்கள் எப்போதும் டயப்பர் மாற்றியது இல்லை என்றால், இந்தப் பணி சற்று சிரமமானதாகத் தோன்றும். ஆனால், ஒருசில முறை நீங்கள் மாற்றி பழகி விட்டால், பின்னர் அது இயல்பாகிவிடும். நீங்கள் புதிதாக குழந்தை பெற்றெடுத்தவர் என்றால், உங்கள் குழந்தை உங்களுக்கு நிறைய அனுபவத்தை கொடுக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 டயப்பர்கள் வரையில் மாற்ற வேண்டியிருக்கும். தோராயமாக ஓராண்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டயப்பர்களை மாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கான டயப்பர்களை மாற்றும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    தூக்கி எறியக் கூடிய டயப்பர்களை பயன்படுத்துவது எப்படி?

    டயப்பரை மாற்றும் முன்பாக அதற்கு தேவைப்படும் (தேவையில்லாமல் இருக்கலாம்) அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேவையான சூழல்

    கீழ்காணும் பொருட்கள் மற்றும் சூழல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:

    • ஒரு பாதுகாப்பான, சுத்தமான இடம் தேவை:

    பெற்றோர் பலர் சேஞ்சிங் டேபிள் அல்லது தரையில் சேஞ்சிங் பேட் ஒன்றை பயன்படுத்துகின்றனர். அல்லது மெத்தை அல்லது ஷோஃபா போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றனர். நீங்கள் சேஞ்சிங் டேபிள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நிலையாக நிற்க வைப்பதற்கான ஸ்டிராப்புகளை பயன்படுத்துங்கள்.

    • மேலும், டேபிள் பயன்படுத்துவதற்கான இதர வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்.

    பச்சிளம் குழந்தை அதிகம் நகர்ந்து விடாது. ஆனால், 4 மாதம் ஆன குழந்தை உருண்டு செல்லக் கூடும். உங்கள் செல்லக் குழந்தை நகர்ந்து சென்றாலும், தொடக்கம் முதலே பாதுகாப்பாக கையாண்ட அனுபவம் உங்களுக்கு இருந்தால் அது உங்களுக்கு எளிமையாகும்.தூக்கி எறியக் கூடிய டயப்பர் அல்லது துணி டயப்பர் எதுவானாலும் சரியான அளவில் இருக்க வேண்டும்.

    • குழந்தையை துடைப்பதற்கு எதாவது வேண்டும்:

    பல பெற்றோர் டயப்பர் ஏரியாவை சுத்தம் செய்ய பேபி வைப்ஸ் பயன்படுத்துகின்றனர். ஆனால், பச்சிளம் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆகவே வெந்நீர் மற்றும் துணி அல்லது பஞ்சு போன்றவற்றை முதல் சில வாரங்களுக்கு பயன்படுத்தும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்வர். (ஏற்கனவே ஈர நிலையில் உள்ள வைப்ஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்). வழக்கமாக பேபி வைப்ஸ்களால், குறிப்பாக ஆல்கஹால் உள்ள வைப்ஸ்களால் 2 மாதம் வரையிலான உங்கள் குழந்தைகளுக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

    தூக்கி எறியக் கூடிய டயப்பர்களை(disposable diapers) மாற்றுவது எப்படி? ஒவ்வொரு படியாக தெரிந்து கொள்ளலாம்.

    1. உங்கள் கைகளை கழுவிக் கொண்டு, தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கைக்கு எட்டும் தொலைவில் இருக்க வேண்டும்.

    2. எங்கு வைத்து மாற்றுகிறீர்களோ, அங்கு உங்கள் குழந்தையின் முதுகுப் பகுதி கீழ் இருக்குமாறு படுக்க வைத்துக் கொள்ளுங்கள்.

    3. டயப்பரில்( diaper) உள்ள டேப்களை கழற்றி விடவும். உங்கள் குழந்தையின் கால்களை பிடித்து தூக்கி, டயப்பர்களை (diaper)மெதுவாக எடுக்கவும். ஒருவேளை மலக்கழிவுகள் அதிகமாக இருந்தால் டயப்பரின் மேல் பகுதியை மெதுவாக நகர்த்தி, அதை டயப்பரின்(cloth diaper) கீழ் பகுதியோடு சேர்த்து வைத்து எடுக்கவும்.

    4. குழந்தையிடம் இருந்து டயப்பரை அகற்றி, அருகாமையில் வைத்து விடுங்கள். ஆனால், குழந்தை மேல் பட்டுவிடும் தூரத்தில் இருக்கக் கூடாது.

    5. இப்போது குழந்தையை சுத்தமாக துடைக்கவும். பெண் குழந்தைக்கு துடைக்கிறீர்கள் என்றால், தொற்றுகளை தடுக்கும் வகையில் பின்பக்கம் வரையிலும் சேர்த்து துடைக்கவும். குழந்தைக்கு அரிப்பு ஏற்படாதவாறு அந்தப் பகுதியை முழுமையாக சுத்தம் செய்யவும்.

    6. அகற்றப்பட்ட டயப்பர்(diaper) மீது தூக்கி எறியக் கூடிய வீணான பொருள் எதையாவது வைத்து விடவும்.

    7. இப்போது புதிய அல்லது சுத்தமான டயப்பர்(diaper) ஒன்றை உங்கள் குழந்தையின் அடிப்பகுதியை நோக்கி கொண்டு செல்லுங்கள். டயப்பரின்(diaper) பக்கவாட்டில் உள்ள டேப்கள் உங்கள் குழந்தையின் அடிப்பகுதியை நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். டயப்பரின் முன்பகுதி எது என்பதை குறிக்கும் அடையாளங்கள் அல்லது வார்த்தைகள் இன்று பெரும்பாலான டயப்பர்களில் இருக்கின்றன.

    8. டயப்பரை(diaper) மூடும் முன்பாக, அரிப்பை தடுக்க உங்கள் மருத்துவர் ஏதேனும் ஆயின்மெண்ட் அல்லது க்ரீம்களை பரிந்துரை செய்திருந்தால் அதை தடவி விடவும். குழந்தைக்கு டயப்பர் பொருத்திய பின் இவ்வாறு செய்வதால், தரையின் மீது ஆயின்மெண்ட் படுவதையும், அதை துடைக்க நேருவதையும் தவிர்க்கலாம். ஏனெனில், சில சமயம் அது சிரமமானதாக இருக்கும்.

    9. டயப்பரின் முன்பக்கத்தை குழந்தையின் வயிற்றோடு பொருத்தி மூடவும். பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக நறுக்கப்பட்ட டயப்பர்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், எஞ்சியிருக்கும் டயப்பரை மடித்து வைப்பதை உறுதி செய்யவும். இதைச் செய்தால் தான் தொப்புள்கொடி கீழே விழும் வரையில் அதன் மீது எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

    10. ஏற்கனவே பயன்படுத்திய டயப்பரை(diaper) எடுத்து, அதைச் சுற்றியுள்ள டேப்களால் மூடவும். உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கட்டாயம் இப்படி செய்ய வேண்டும். மீண்டும் தொற்று ஏற்படுவதை தடுக்க இது உதவும்.

    தூக்கி எறியக் கூடிய டயப்பரை(disposable diaper) மாற்றுவதற்கான சிம்பிள் டிப்ஸ்

    உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இடையே விரைவில் இடைவெளி ஏற்படலாம். ஆனால், இந்த டிப்ஸ் உங்களுக்கான வழியை உருவாக்கிக் கொள்ள உதவும்:

    • உங்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்திருக்கும் பட்சத்திலும், தொப்புள்கொடி விழும் வரையிலும் மருத்துவர் தெரிவித்த ஆலோசனைகளை பின்பற்றவும்.

    • டயப்பர் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். கசிவுகளை தடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால், ரொம்பவும் இறுக்கமாக அணிவித்தால் உங்கள் குழந்தையின் வயிற்றில் அதிக இறுக்கத்தை ஏற்படுத்தி, அதன் காரணமாகவே உடனடியாக கழிவுகள் வெளியேறக் கூடும். குறிப்பாக பாலூட்டிய பிறகு இது நிகழக் கூடும்.

    • ஒரு சில நாட்களைக் கடந்தும் உங்கள் குழந்தைக்கு அரிப்பு குணமாகவில்லை என்றால் அல்லது குழந்தைக்கு அதிக வலி ஏற்படுவதுடன், தோல் சிவப்பாக மாறும் பட்சத்தில், உடனடியாக குழந்தை நல மருத்துவரை அணுகவும்.

    • உணவு சமைக்கப்படும் இடம் அல்லது சாப்பிடும் இடத்தில் டயப்பரை(diaper) மாற்றவோ, மாற்றிய டயப்பரை விட்டுச் செல்லவோ வேண்டாம்.

    துவைத்துக் கொள்ளக் கூடிய துணி டயப்பர்களை(cloth diapers) மாற்றுவது எப்படி?

    மீண்டும் பயன்படுத்தக் கூடிய டயப்பர்களை மாற்றுவது: ஒவ்வொன்றாக பார்க்கலாம்

    சாதாரண டயப்பரை பயன்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், ஃப்ரீ சைஸ் மறு பயன்பாடு டயப்பர்களை(cloth diaper), குழந்தை கழிவுகளை வெளியேற்றினாலும் மாற்றத் தேவையில்லை என்று சில தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் கருதுகின்றனர். இது தவறான பழக்கமாகும். எந்தவொரு தொற்று, அரிப்பு அல்லது எக்சீமா போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால் குழந்தையை எப்போதுமே சுத்தமாகவும், ஈரமின்றியும் வைத்துக் கொள்வது அவசியமாகும். ஃப்ரீ சைஸ் மறு பயன்பாடு டயப்பர் என்பது ஒருமுறை வெளியேறும் கழிவுகளை மட்டுமே உறிஞ்சக் கூடியதாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தை சிறுநீர் கழிக்கும்போதும் டயப்பர்(diapers) மாற்றப்பட வேண்டும்.

    வளரும் குழந்தைகளைக் காட்டிலும், பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் கட்டாயம் மாற்ற வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு வைக்கும் டயப்பர்கள் அடிக்கடி ஈரமாகாது என்பதால் 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு நீங்கள் 7 முதல் 10 முறை டயப்பரை மாற்ற வேண்டும்.

    ஃப்ரீ-சைஸ் மறு பயன்பாடு டயப்பர்(Reusuable cloth diapers) ஈரமாகிவிட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி?

    டயப்பரை மாற்ற வேண்டும் என்ற அறிகுறி, தூக்கி எறியத்தக்க டயப்பர்களில் தென்படுவதைப் போல மறு பயன்பாடு கொண்ட துணி டயப்பர்களில்(cloth diapers) தென்படாது. குழந்தை கழிவை வெளியேற்றினாலும் கூட அதன் நிறம் மாறாது அல்லது ஈரம் மிகுந்ததாக மாறாது. எனினும், உங்கள் குழந்தையின் ஃப்ரீ-சைஸ் மறு பயன்பாடு டயப்பரை மாற்ற வேண்டும் என்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கீழ்காணும் டிப்ஸ் உதவும்.

    • ஃப்ரீ-சைஸ் மறு பயன்பாடு டயப்பரில் அப்சார்பண்ட் இன்சர்ட்ஸ் அல்லது சோக்கர்ஸ் ஆகியவை இருக்கும். சாதாரண ஈரத்தில் 2 அல்லது 3 மணி நேரம் வரையிலும் இது தாக்குப் பிடிக்கும். ஆனால், அந்த துணி டயப்பர் உப்பலாக மாறும் முன்பு அல்லது தொய்வாக தொங்கும் முன்பாக நீங்கள் கட்டாயம் மாற்றியாக வேண்டும்.

    • நீங்கள் வாட்டர் ஃப்ரூப் லைனிங்க்ஸ் பயன்படுத்தவில்லை என்றால், டயப்பரின் வெளிப்புற பகுதியை தொட்டுப் பார்த்து ஈரம் இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். ஈரமாக இருந்தால், அதை உடனடியாக மாற்றவும்.

    • துணி டயப்பர்கள் பெரும்பாலும் காட்டன் அல்லது அதேபோன்ற பேப்ரிக் மூலமாக தயார் செய்யப்பட்டிருக்கும். ஈரம் பட்டவுன் அது இறுக்கமாக மாறிவிடும். நூல் அல்லது டயப்பரின் அடிப்பகுதி ஆகியவை ஒரே சமயத்தில் தொய்வாக இருக்கும் பட்சத்தில் டயப்பரை மாற்ற வேண்டும் என நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    • மறு பயன்பாடு டயப்பர்கள் கால்களை சுற்றி இறுக்கமாக இருக்கும். ஆகவே, கழிவுகள் எந்த வகையிலும் கசியாது. ஈரமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அதை நேரடியாக கழட்டி பார்ப்பது அல்லது உங்கள் விரலை விட்டுப் பார்ப்பதற்கு பதிலாக முன்பகுதியை இழுத்து உள்ளே பார்க்கலாம்.

    டயப்பரை மாற்றுவது ஏன் முக்கியமானது?

    உங்களுக்கு அது சலிப்பாக தோன்றலாம். ஆனால் அடிக்கடி டயப்பர்களை மாற்றினால் தான் அரிப்பு அல்லது சரும எரிச்சல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

    இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தையை முதன் முதலில் வெளி இடங்களுக்கு எப்போது அழைத்துச் செல்லலாம் ?

    முடிவுரை

    குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக டயப்பர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மறுமுறை டயப்பர் மாற்றும் முன்பாக குழந்தையின் சருமம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.

    மைலோ எசன்சியல்ஸ் ஃப்ரீ சைஸ் மறு பயன்பாடு டயப்பர்கள்(reusuable cloth diaper) நல்ல உறிஞ்சும் தன்மை கொண்டவை மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் கொண்டவை. குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது சௌகரியமாக உணருவதற்கு இது உதவிகரமாக இருக்கும். இதை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். சருமத்திற்கு உகந்தது மற்றும் சலவை செய்ய எளிமையானது. பிரிண்டட் மற்றும் சாலிட் கலர் கொண்ட டயப்பர்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறென்ன நீங்கள் கேட்க வேண்டியிருக்கிறது. உடனடியாக மைலோ ஸ்டோருக்கு செல்லவும்

    Mylo Baby Diaper Pants (S) Size – 12-Hour Leak-Proof Protection for Happy Babies

    Lightweight | Rash Free | 12 Hours Protection | ADL Technology

    ₹ 449

    4.4

    (38549)

    99911 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.