


Caring for your Newborn
3 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய விழிவெண்படல அழற்சி (இளம் சிவப்புக் கண் நோய்)
பொதுவாக இளம் சிவப்புக் கண் நோய் என்பது சாதாரண சளி மற்றும் காது தொற்று, சைனஸ், மற்றும் தொண்டை புண் போன்றவறை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் விளைவாக ஏற்படுகிறது.
இது குழந்தைகளிடத்தில் காணப்படும் பொதுவான ஒன்றாகும்.எரிச்சலை ஏற்படுத்தும் விழிவெண்படல அழற்சி என்பது குளங்களில் இருக்கும் குளோரின் மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றால் ஏற்படும் கண் எரிச்சலின் விளைவாகும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இளம் சிவப்புக் கண் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால், இது வேறு சில உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண் எஸ்.டி.டி (STD) (பால்வழி பரவும் நோய்கள்) நோயால் பாதிக்கப்பட்டால், இதில் இருக்கும் வைரஸ் ஆனது பிரசவத்தின் போது குழந்தையின் கண்களுக்குள் செல்லலாம், இதன் விளைவாக குழந்தைக்கு இளம் சிவப்புக் கண் நோய் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு, குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கண்களுக்கு உங்களுடைய மருத்துவர் கண் சொட்டு மருந்துகளை பரிந்துரைக்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு ஏதாவது எஸ்.டி.டி (STD) (பால்வழி பரவும் நோய்கள்) உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்யலாம். இப்படி செய்வதால் அந்த வைரஸ் ஆனது குழந்தைக்கு கடத்தப்படுவது தடுக்கப்படும்.
இளம் சிவப்புக் கண் நோயின் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
கண்களில் அசெளகரியம் ஏற்படுதல்
கண்களில் இருந்து ஏதேனும் திரவம் வெளியேறுதல்
வலி மற்றும் வீக்கம்
கண் இமைகள் வீங்குதல்
பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும் போது கண் கூசுதல்
பொதுவாக ஒவ்வாமை விழிவெண்படல அழற்சி இருந்தால், அரிப்பு மற்றும் கண்ணில் இருந்து நீர் வடிதல் இருக்கும்
பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படும் பட்சத்தில், இது தொற்றும் தன்மையுடையதாக இருக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் இளம் சிவப்புக் கண் நோயானது, கண்ணில் இருந்து திரவம் வெளியேற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போது இது மற்றவர்களுக்கு விரைவாகப் பரவத் தொடங்கிவிடும்.
ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டும் விழிவெண்படல அழற்சி தொற்றும் தன்மை அற்றவையாகும். பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒன்றைத் தொடுவதன் மூலமாகவோ உங்களுடைய குழந்தைக்கு இளம் சிவப்புக் கண் நோய்கள் ஏற்படலாம். இது இருமல், தும்மல், அசுத்தமாக இருக்கும் நீரில் நீந்துதல் அல்லது தொற்று இருக்கும் துண்டுகளை பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவலாம்.
இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்களுடைய குழந்தையிடம் தென்பட்டால், அதை சரி செய்வதற்கான சரியான சிகிச்சையை உறுதிப்படுத்த நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுவாக வைரஸ் காரணமாக ஏற்படும் இளம் சிவப்புக் கண் நோய் தானாகவே சரியாகிவிடும். அதனால் அதற்கு சிகிச்சை அளிக்கத் தேவை இல்லை. ஆனால், பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டு இருந்தால், மருத்துவர் அதனை சரி செய்ய கண் சொட்டு மருந்துகள் அல்லது ஆயின்மென்ட்களைப் பரிந்துரைப்பார்கள்.
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips







கர்ப்பத்தின் போது ஹலீம் / சாலியா விதை எடுத்துக்கொள்வதன் பயன்கள் | Aliv Seeds Benefits in Pregnancy in Tamil

மார்பக வலிக்கான காரணங்கள்: பெண்களுக்கு மார்பக வலி ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்(Breast Pain Reasons: Know Why Women Have Breast Pain In Tamil)

கர்ப்ப காலத்தில் உங்கள் பிஎம்ஐ (உடல் நிறை குறியீட்டெண்) எவ்வளவு இருக்க வேண்டும்?

அனோரெக்ஸியா நெர்வோசா: அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை (Anorexia Nervosa: Symptoms, Causes, Risks & Treatment In Tamil)

பாலினத்தடை இல்லாமல் அனைவருக்கும் பாடி லோஷன் தேவைப்படுவதற்கான 10 காரணங்கள்(Gender No Bar: 10 Reasons Why Everyone Needs a Body Lotion In Tamil)

கர்ப்ப காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், விளைவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்