


Diet & Nutrition
21 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் கர்ப்பத்தின் 4வது மாதம் தொடங்க உள்ளதா? அப்படி என்றால் நீங்கள் கர்ப்பத்திற்கான இரண்டாவது ட்ரைமெஸ்டர் டயட் சார்ட்டை பின்பற்ற வேண்டி இருக்கும்
உங்கள் கர்ப்பத்தின் 2வது ட்ரைமெஸ்டர் என்பது 1வது மற்றும் கடைசி மூன்று ட்ரைமெஸ்டர்களை விட சிறந்தது என்று தான் கூற வேண்டும். இருப்பினும், உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் எந்தெந்த பானங்களை பருகுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கவும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு உணவுப் பொருட்களைப் பற்றி தான் இங்கு பேச உள்ளோம். கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்டரில் உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை ஒரு டயட் சார்ட் மூலமாக நீங்கள் திட்டமிடலாம். இது குறித்து பேசலாம், வாங்க.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பத்தின் நான்காவது மாதம் என்பது மிகவும் விரும்பத்தகாத ஒரு மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் தான் ஒரு பெண் குமட்டல், தலைவலி, காலை சுகவீனம் போன்ற சில கடினமான கர்ப்ப கால விளைவுகளை அனுபவிக்கிறாள். எனவே, இரண்டாவது ட்ரைமெஸ்டருக்கான டயட் சார்ட்டை கொண்டிருப்பது இரத்த சர்க்கரை அளவுகள், கொலஸ்ட்ரால் அளவுகள், கலோரி உட்கொள்ளல் போன்ற உங்களின் அனைத்து உடல் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.
ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மிகவும் கடினமான செயலமுறையாகும். ஏனெனில் அக்குழந்தையை சுமக்கும் தாயின் உடலானது பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மேலும், இந்த ட்ரைமெஸ்டரில் தான் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. எனவே முழுமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம்.
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் தங்கள் உணவில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில உணவுப் பழக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
உங்கள் 2வது ட்ரைமெஸ்டருக்கான டயட் சார்ட்டினை திட்டமிடும்போது நீங்கள் பின்பற்றக்கூடிய சில முக்கியமான உணவுப் பழக்கங்கள்:
புரதச்சத்து குழந்தைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் குழந்தை வளரும் இந்த நேரத்தில் புரதம் செல் உற்பத்தியின் முதன்மை ஆதாரமாக உள்ளது. கோழி மற்றும் மீன்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் புரத சத்தினைப் பெற டோஃபு மற்றும் சீமைத் திணை ஆகியவற்றை தங்கள் உணவில் சேர்க்கலாம்.
ரொட்டி, பழுப்பு அரிசி மற்றும் பாஸ்தா போன்ற நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுளைச் சேர்ப்பது, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற செரிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகின்றன.
பழங்கள் ஆன்டிஆக்சிடண்டுகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக பழங்கள் செயல்படுகிறது. பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.
வளரும் கருவின் சிறந்த எலும்பு ஆரோக்கியத்திற்கு இவை அவசியம்.
நட்ஸ் இரும்பு, கால்சியம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் போன்ற தாதுக்கள் இந்த நட்ஸ்களிலிருந்து பெறப்படுகின்றன. பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், முந்திரி பருப்பு, திராட்சைகள் மற்றும் பேரீச்சம்பழங்கள் ஆகியவை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நட்ஸ் வகைகள்.
வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் ஆன்டிஆக்சிடண்டு பண்புகள் கொண்ட காய்கறிகளில் அதிக அளவில் உள்ளன. கருவின் வளர்ச்சிக்கு இது தேவை.
முட்டை புரதங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது.
இறைச்சி ஒரு நல்ல புரத ஆதாரமாகும். ஆனால் இதனை சரியான அளவுகளில் சாப்பிட வேண்டும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் புரதங்கள் மீன்களில் எக்கச்சக்கமாக உள்ளது. இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, மீன்களில் டிஎச்ஏ (DHA) இருப்பது அவசியம். இருப்பினும், மீன்களை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பச்சை மீன்கள் பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சில உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே 2வது ட்ரைமெஸ்டரின் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
சமைக்கப்படாத இறைச்சி சமைக்கப்படாத இறைச்சி என்பது எந்த ஒரு நபருக்கும் ஆரோக்கியமான விருப்பம் அல்ல, எனவே இதனை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்
சமைக்கப்படாத மீன் இவை குழந்தையின் நஞ்சுக்கொடிக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
சமைக்கப்படாத அல்லது பாதியளவு சமைக்கப்பட்ட முட்டை முட்டையின் மஞ்சள் கருவில் பாக்டீரியா அல்லது சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
பாதரசம் நிறைந்த மீன்கள் வாள்மீன் அல்லது சுறாவில் பாதரசம் நிறைந்துள்ளது. இது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
துரித உணவுகள் என்பது அதிக அளவில் பதப்படுத்தப்பட்டவை மற்றும் இது போன்ற உணவுகளில் சேர்க்கைகள் அல்லது பதனப்படுத்திகள் காணப்படுகின்றன. அவை செயற்கையானவை என்பதால் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
பாலாடைக்கட்டி சில பாலாடைக்கட்டிகளில் புளிக்கவைக்கும் பூஞ்சைகள் உள்ளன. அவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். குழந்தைகள் பிறந்த பிறகு தான் அவர்களின் உடலானது ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. எனவே, இதுபோன்ற கர்ப காலத்தில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
உடனடி உணவுகள் உங்கள் உடலில் கலோரிகளைச் சேர்க்க மட்டுமே பயன்படும். எனவே, அவற்றைத் தவிர்ப்பது மிக அவசியம்.
சர்க்கரை நிறைந்த உணவுகள் மிட்டாய்கள் அல்லது குக்கீகள் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்கள் தாய்க்கும் குழந்தைக்கும் நீரிழிவு நோய்களை ஏற்படுத்தலாம்.
காஃபின் இது பிறக்கும் போது குழந்தையின் எடை குறைய வழிவகுக்கும். மேலும் அதிக காஃபின் உட்கொண்டால் கருச்சிதைவு கூட ஏற்படலாம். ·
மது பானங்கள் மது பானங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தனியாக சொல்ல அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், குழந்தையின் உடலுக்கு மது பானங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தெரியாது. இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
மைதா மாவு பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகள் இது மலச்சிக்கலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உடல் பருமன் மற்றும் சில சமயங்களில் மூல நோயையும் ஏற்படுத்தும்.
இப்போது, ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெற உங்கள் தினசரி உணவில் நீங்கள் என்னென்ன உணவைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
ஒரு லேசான மற்றும் முழு காலை உணவை சாப்பிட, நீங்கள் எள்ளு விதைகளுடன் வேக வைக்கப்பட்ட சில உருளைக்கிழங்குகள், டோஸ்ட் செய்யப்பட்ட முழு கோதுமை ரொட்டி மற்றும் ஒரு கிளாஸ் ஃபிரஷான மாம்பழ மில்க் ஷேக்கை சாப்பிடலாம்.
மதிய வேளையில், உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளியைத் தவிர்க்க திராட்சை போன்ற சில பழங்களை சாப்பிடுங்கள்.
பச்சை பயறு குழம்பு, பீன்ஸ் பொரியல், வெங்காயம் கலந்து செய்யப்பட்ட சப்பாத்தி மற்றும் தயிர் போன்ற உங்கள் சத்தான உணவை சாப்பிடுங்கள்.
காபி அல்லது டீ குடிப்பதற்குப் பதிலாக, குறைவான மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்ட எலுமிச்சை பானம் மற்றும் மக்கா சோளத்தைச் சாப்பிடுங்கள்.
இரவு உணவை மிதமாக வைத்திருக்க, காய்கறி கிச்சடி, அப்பளம் மற்றும் சிறிதளவு புதினா பச்சடி சாப்பிடுங்கள்.A
உங்கள் நாளை கடலை மாவு தோசை, கொத்தமல்லி-புதினா சட்னி மற்றும் ஒரு கிளாஸ் மோருடன் ஆரம்பிக்கவும். · Snack ஸ்நாக்ஸ் – உணவுகளுக்கு இடையே பெரிய இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் அதற்கு இடைப்பட்ட இந்த நேரத்தில் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடலாம்.
சப்பாத்தி/ சாதத்துடன் சோயா கிரேவி, பீர்க்கங்காய் பொரியல், மாதுளம் பழம் பச்சடி ஆகியவற்றை மதிய உணவிற்கு நீங்கள் சாப்பிடலாம்.
நீங்கள் ஏற்கனவே பழம் சாப்பிட்டு விட்டதால் காய்கறி கலந்த அவல் மற்றும் இளநீர் சாப்பிடலாம்.
ஆரோக்கியமான இரவு உணவுவாக சிவப்பு மைசூர் பருப்பில் செய்யப்பட்ட சூப், ஆப்பிள் பூசணி பொரியல், ராகி சப்பாத்தி, கேரட் மற்றும் முள்ளங்கி சேர்த்து செய்யப்பட்ட சாலட் சாப்பிடுங்கள்.
அக்ரூட் பருப்புகள் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து செய்யப்பட்ட கோதுமைக் கஞ்சியை நீங்கள் சாப்பிடலாம். மேலும் இதனுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் பருகுங்கள்.
இந்த நேரத்தில் சப்போட்டா பழம் சாப்பிட சிறந்தது.
நீங்கள் காரசாரமான கொண்டைக்கடலை கிரேவி, வெண்டைக்காய் பொரியல், குல்சா மற்றும் தயிர் சாப்பிடலாம்.
ஸ்நாக்ஸாக நட்ஸ் வகைகள் மற்றும் மாங்காய் ஜூஸ் எடுத்து கொள்ளலாம்.
நார்ச்சத்து நிறைந்த காளான் மற்றும் பட்டாணி சாப்பிடலாம். மேலும் சாதம் அல்லது சப்பாத்தி உடன் பாகற்காய் பொரியல் எடுத்து கொள்ளுங்கள்.
பன்னீர் சான்ட்விச் மற்றும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் சிறந்தது.
ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த தர்பூசணி பழம் சாப்பிடுங்கள்.
பருப்பு வகைகளில் இருந்து புரதங்கள் கிடைக்க அனைத்து வகை பருப்பு கொண்டு செய்யப்படும் மசியல், கத்திரிக்காய் பொரியல் மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி சரியான மதிய உணவாக இருக்கும்.
உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஜல் ஜீரா சிறந்தது. இதனுடன் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.
சாதம் அல்லது சப்பாத்தி உடன் மீல் மேக்கர் கிரேவி மற்றும் உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல் இரவு உணவாக சாப்பிடலாம்.
இந்தியாவின் பிரதான காலை உணவாக இருக்கும் உப்புமா சாப்பிடுவதற்கு பதிலாக ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸூடன் பீன்ஸ் மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
உங்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்யவும் மற்றும் பசியை கட்டுப்படுத்தவும் பப்பாளி பழம் சாப்பிடலாம்.
சாதம்/ சப்பாத்தி உடன் சாம்பார் மற்றும் பீட்ரூட் பொரியல் சாப்பிடுங்கள். இதனுடன் வெங்காய பச்சடி அல்லது வெள்ளரிக்காய் பச்சடி சாப்பிடலாம்.
கஃபைன் கலந்த பானங்களுக்கு பதிலாக சத்து மாவு கஞ்சி குடிக்கலாம். ஏனெனில் இது ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்தது.
சுரைக்காய் கிரேவி மற்றும் பீன்ஸ் பொரியல் சாப்பிடுங்கள். இதனுடன் மசாலா கலந்த சப்பாத்தி சாப்பிடலாம்.
தேங்காய் சட்னியுடன் ரவை இட்லி மற்றும் ஒரு டம்ளர் காபி குடிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு வாரத்தில் ஒரு முறை மட்டுமே காபி சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்நாக்ஸாக வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
பால கீரையுடன் பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸ் சேர்த்து சாப்பிடுவது சிறந்த புரத மூலமாக அமைகிறது. இதனை சப்பாத்தி மற்றும் பச்சடியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தாமரை விதைகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடல் வலிமை கூடும். இதனுடன் வெதுவெதுப்பான பாதாம் பால் குடிக்கலாம்
காராமணி சுண்டல் உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமானது. இதனுடன் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பரங்கிக்காய் சேர்த்து சாப்பிடுங்கள். இதற்கு சப்பாத்தி சாப்பிடலாம். முடிந்த வரை இரவில் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
ஞாயிறுக்கிழமையை கொண்டாடும் விதமாக காலை உணவிற்கு, லஸ்ஸியுடன் வெந்தயக் கீரை சப்பாத்தியை சாப்பிடுங்கள்.
நீங்கள் ஒரு நல்ல ஆன்டி ஆக்ஸிடண்டிற்கு பதிலாக சாத்துக்குடி ஜுஸ் குடிக்கலாம்.
· பலருக்கு விருப்பமான சுவை மிகுந்த ராஜ்மா சுண்டல் ஒரு ஆரோக்கியான வாரத்திற்கு சிறந்தது. இதனுடன் சீரக சாதம் மற்றும் காலிஃபிளவர் & பட்டாணி பொரியலுடன் சாப்பிடலாம்.
பாதாம், திராட்சை, முந்திரி பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களை முடிந்தவரை எடுத்துக் கொள்ளவும், மேலும் ஒரு கிளாஸ் எலுமிச்சைப் பானம் பருகுவதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.
இரவு உணவு லேசாக இருத்தல் வேண்டும். ஆகவே பச்சை பயறு குழம்பு, சப்பாத்தி/சாதம், உருளைக்கிழங்கு மசாலா போன்றவற்றை நீங்கள் உண்ணலாம்.
இதையும் படிக்கலாமே! - பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது சைவ உணவு முறையை பின்பற்றலாமா?
தற்போது நாம் பார்த்த டயட் சார்ட்டானது உங்கள் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவாகும். இதில் சில அடிப்படை ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் காணப்படுவதால் இதனை தாராளமாக உங்கள் உணவில் சேர்க்கலாம். அது மட்டும் அல்லாமல் இந்த உணவுப் பொருட்கள் மலிவான விலையில் எளிதாகக் கிடைக்கிறது.
Yes
No

Written by
Ravish Goyal
Official account of Mylo Editor
Read MoreGet baby's diet chart, and growth tips











குழந்தைகளுக்கு வரும் பொடுகு காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

வயது தெரியாமல் இளமையாகத் தோன்ற தேவையான முக்கிய குறிப்புகள்

இனப்பெருக்க உட்சுரப்பியல் | Reproductive Endocrinology in Tamil

கெமிக்கல் பிரக்னன்ஸி (இராசயன கர்ப்பம்) என்றால் என்ன?

கர்ப்ப காலத்தில் நாடித்துடிப்பை பரிசோதனை செய்வது எப்படி?(How To Check Pulse Rate During Pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்