This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உங்கள் முதல் மும்மாதங்களுக்கான லைஃப் சேவர்கள் (உயிர் காக்கும் ஆலோசனைகள் (14 Lifesavers For Your First Trimester In Tamil)

Pregnancy Journey
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 6, 2025
உங்கள் முதல் மும்மாதங்களுக்கான லைஃப் சேவர்கள் (உயிர் காக்கும் ஆலோசனைகள் (14 Lifesavers For Your First Trimester In Tamil)
Likes5 Likes|
Read time15 min

நீங்கள் புதிய தாயாக ஆகப் போகிறீர்களா?, வாழ்த்துக்கள்! அடுத்து வரும் மாதங்கள் உங்களுக்கான புதிய தொடக்கங்களை கொண்டு வருமென்பதில் சந்தேகமே இல்லை. எனினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலில், உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் முதல் மும்மாதங்களுக்கான சிறந்த உயிர் காக்கும் ஆலோசனைகள் (Best Lifesavers For Your First Trimester In Tamil)

ஆம்! உங்கள் முதல் மும்மாத வாரங்களில் மகிழ்ச்சி, ஆச்சரியம், பயம், எதிர்பார்ப்பு, கவலை, மற்றும் மன அழுத்தம் போன்ற கலவையான பல்வேறு உணர்ச்சிகள் தோன்றும். உண்மையில், சில சமயங்களில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எவ்வாறு சமாளித்து நடந்து கொள்வது என்பதை கூட நீங்கள் அறியாமல் போகலாம். எனவே, உங்கள் வெவ்வேறு உணர்வுகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, புதிய மாறுதல்களுக்கு ஏற்றவாறு உங்களை தயார்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவும். உங்கள் முதல் மும்மாதங்களுக்கான 14 லைஃப் சேவர்கள், உங்கள் சௌகரியத்தின் பொருட்டு கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

குமட்டல் (Morning Sickness):

இது முதல் மும்மாதங்களில் பொதுவாக காணப்படும் அறிகுறிகளில் ஒன்று. புதிதாக தாயாகி இருப்பவர்கள் இதனை சமாளிக்க பெரிதும் சிரமப்படுவார்கள். பிரசவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளும் வைட்டமின்களை எடுத்துக் கொள்வதை குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம், இது மன அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கு உதவும். இது தவிர்த்து, வீட்டில் எலுமிச்சையை முகர்ந்து பார்ப்பது அல்லது வெதுவெதுப்பான தண்ணீரீல் இஞ்சி/தேன்-ஐ கலந்து குடிப்பது போன்றவையும் குமட்டலை கட்டுப்படுத்த உதவும்.

இது பொதுவாக காணப்படும் அறிகுறியென்றாலும் கூட, நீங்கள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து, உங்களுக்கு வந்திருப்பது ஹைப்பரமெஸிஸ் க்ராவிடேரம் (hyperemesis gravidarum) இல்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நிலைமை தீவிரமாகும் பட்சத்தில், தொடர்ச்சியாக வாந்தியெடுப்பது ஒருவரின் உடலில் நீரிழப்பினை ஏற்படுத்தி விடும் அல்லது எலக்ட்ரோலைட் (உடலில் உள்ள மினரல்கள்) சமநிலையின்மையை கூட ஏற்படுத்தி விடும்.

நீரேற்றம் (Hydration):

உங்கள் உடலில் எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும். வாட்டர் ரிமைண்டர் ஆப் (தண்ணீர் அருந்துவதை நினைவூட்டும் செயலி) அல்லது அலாரத்தை பயன்படுத்தி தண்ணீரை தவறாமல் அருந்தி வரவும். இளநீர் குடிப்பது பற்றியும் நீங்கள் பரிசீலிக்கலாம். ஏனென்றால், இளநீரில் பொட்டாசியம் இருப்பதால், நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும், தினந்தோறும் குறைந்தபட்சம் 9-லிருந்து 13 கிளாஸ் வரை தண்ணீர் அருந்துவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களின் காரணமாக உடலிலுள்ள திரவச் சத்தினை இழக்க நேரிடும். இதனால் உடலிலுள்ள எலக்ட்ரோலைட்கள் குறைவடையும் விகிதமும் அதிகரிக்கும். எனவே, உடலின் நீர் தேவைக்கேற்ப ஒவ்வொருவரும் நீர் அருந்துவது அவசியமாகும், குறிப்பாக கர்ப்பகாலத்தில், உடலுக்கான நீர்த்தேவை அதிகரிக்கும் போது இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுகமான தூக்கம் (Comfy Sleep):

சரியான தூங்கும் நிலையை கண்டுகொள்வது சில தாய்மார்களுக்கு சிரமமாக இருக்கும். இதன் மூலம் ‘இன்சோம்னியா’ போன்ற ‘தூக்கம் வராத நிலை’ உருவாகி, தூக்கத்தை இழக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாகக் கூடும். சுகமாக தூங்குவதற்கு, நீங்கள் கர்ப்பகால தலையணைகளை வாங்கலாம் அல்லது இனிமையான இசையை கேட்கலாம்.

இது மட்டுமின்றி, நீங்கள் நிம்மதியாக தூங்குவதற்கு இன்னும் பல விஷயங்களை முயற்சிக்கலாம். உங்கள் இடப்புறமாக படுத்துக் கொள்ளும் போது, கர்ப்பப்பையிலும், கருவிலும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனினும், வலப்பக்கமாகவோ அல்லது மல்லாக்கவோ படுத்திருக்கும் போது ஏற்படும் இரத்த ஓட்டத்தினால், குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது.

வேலையை பகிர்ந்து கொள்ளவும் (Share the work):

ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தாய்மார்கள் பொதுவாக சோர்வாக இருப்பார்கள், அவர்களுக்கு தங்கள் கணவர்மார்களின் ஆதரவு இந்த சமயத்தில் தேவைப்படும். எனவே, வீட்டு வேலைகளை உங்கள் கணவர்மார்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் வேலைச் சுமையை குறைத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, இந்த சமயத்தில், வீட்டு வேலைக்கு ஒரு பணிப்பெண்ணை அமர்த்திக் கொள்வது பற்றியும் நீங்கள் பரிசீலிக்கலாம், குழந்தை பிறப்பிற்கு பின்னரும் உங்களுக்கு பல வழிகளில் இது உபயோகமாக இருக்கும்.

அலுவலக வேலையை பொறுத்தவரை, மகப்பேறு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் அல்லது பணி நேரங்களை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், கர்ப்ப காலத்தில் 34-வாரங்கள் ஆனவுடன், கூடுமானவரை ஓய்வு எடுக்கவும். ஏனென்றால், புதிதாக தாயாக போகும் பெண், குழந்தை பிறப்பிற்கு தன்னை தயார் செய்து கொள்வதற்கு நிறைய நேரம் தேவைப்படும்.

சரியான பிளானரை (திட்டமிடல்) உருவாக்கவும் (Maintain a Planner) :

டயட் சார்ட்கள் (உணவு கட்டுப்பாடு குறித்த அட்டவணைகள்/diet charts), புதிய சந்திப்புகள் மற்றும் பல்வேறு மெடிக்கல் ரெக்கார்டுகள் போன்றவற்றை கொண்ட ஒரு பிளானரை பராமரிப்பது இந்த காலகட்டத்தில் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி, உங்கள் கர்ப்பகால டயட் சார்ட் என்று வரும் போது, அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் உடல் எடையை அவ்வப்போது பரிசோதித்து அதனை பதிவு செய்து வைத்திருப்பது, குழந்தையின் வளர்ச்சி படிமுறையை கண்காணிப்பதற்கு உதவும்.

உடைகள் (Dresses):

உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தின் போது, உங்கள் வயிறு புடைத்திருப்பது அந்தளவுக்கு வெளியே தெரியாது. எனவே, இந்த சூழ்நிலைகளில், தளர்வான, சௌகரியமிக்க பருத்தி ஆடைகளையே தேர்வு செய்யவும். கர்ப்ப காலத்தில் அணியக் கூடிய இறுக்கமான உடைகளை (maternity clothes) அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை அந்தளவிற்கு சௌகரியமாக இருக்காது.

உண்மையில், கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். இந்த சமயத்தில் அவர்களது உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும. இதனால் முதுகு வலி, தசைகளில் வலி போன்ற உடல்ரீதியான அசௌகரியங்களும் ஏற்படும். எனவே, இந்த சமயத்தில் சௌகரியமான ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். இது உபாதைகளை குறைக்க உதவும். மேலும் உங்கள் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை சமாளித்துக் கொள்வதற்கும் உதவும்.

பிரா அணிவதில் கவனம் செலுத்துவது (Attention to Bras):

உங்கள் மார்பகங்கள் சற்று கனத்தது போலவும் அல்லது வலிப்பதாகவும் நீங்கள் உணரலாம். மேலும், அடுத்த சில மாதங்களில், உங்கள் மார்பகங்களின் அளவும் அதிகரிக்கலாம். இப்பேற்பட்ட சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு ஏற்றவாறு, புதிய, சௌகரியமான பிரா-க்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் மார்பக காம்புகளில் வலி ஏற்பட்டால், பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது தேங்காய் எண்ணெயை வைத்து நீங்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். சௌகரியமான கர்ப்பகால பிரா-க்களை

சுய பராமரிப்பு (Self-care):

கர்ப்ப காலகட்டத்தில், உங்களை நன்றாக கவனித்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் உங்கள் குழந்தை பிறந்தவுடன், குழந்தையை கவனித்துக் கொள்வதற்கே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில், எந்தெந்த உணவுகளெல்லாம் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளென்று தெரிந்து கொள்வதற்கு உங்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து கலந்தாலோசிக்கலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கு உதவும்.

சுய பராமரிப்பு என்பது நீங்கள் என்ன உணவு உண்கிறீர்கள் அல்லது என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்ததல்ல, உங்களுடன் பொழுதை கழிக்கின்ற நபர்களை பொறுத்தும் உள்ளது. உங்கள் பெண் தோழிகளுடன் மாலை நேரத்தில் வெளியே சென்று பொழுதை கழிக்கலாம் அல்லது உங்கள் கணவருடன் ஊர் சுற்ற செல்லலாம்!

கர்ப்பகால புத்தகங்கள் மற்றும் கர்ப்பகால செயலிகள் (Maternity Books and Pregnancy Apps) :

உங்கள் வாழ்வில் இது புதியதொரு அனுபவமாக இருப்பதால், நீங்கள் இதனை பற்றி நன்கு தெரிந்து கொள்வது உங்களுக்கு நீண்ட காலத்திற்கு உபயோகமாக இருக்கும். நீங்கள் கர்ப்பகால செயலிகளை பதிவிறக்கம் செய்து, உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, கர்ப்பகாலம் தொடர்பான புத்தகங்களையும் நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப கால வகுப்புகளில் சேர்வதும் கூட, உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு உதவக் கூடும். கர்ப்பகால வகுப்புகளில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது பற்றியும், ஆரம்ப கால கட்டங்களில் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியும் கற்றுக் கொடுப்பார்கள். மேலும், குழந்தை பிறப்பிற்கு முன்னும், பின்னும் உங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு இந்த வகுப்புகள் உதவும்.

ஒரு டிராக்கரை (கண்காணிப்பான்) பராமரிக்கவும் (Maintain a tracker) :

தவறாமல் உங்கள் எடையை கண்காணிப்பது, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கணிப்பதற்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் மாறுதல் தென்படும் பட்சத்தில், உடனே மருத்துவ ஆலோசனையை பெறவும். சில நேரங்களில், கர்ப்ப காலத்தில் மிக அதிகமாக எடை அதிகரித்தால், மிக அதிக எடை கொண்ட குழந்தை பிறப்பதற்கு வழிவகுக்கும். எனவே, இது பல்வேறு பிரசவ சிக்கல்கள், சிசேரியன் போன்றவை ஏற்படுவதற்கும் அல்லது அதிக உடல் பருமனுள்ள குழந்தை பிறப்பதற்கும் வழிவகுத்து விடும்.

சரும பராமரிப்பு (Skincare):

ஒரு வேளை நீங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு உங்கள் சரும பராமரிப்பில் கவனம் செலுத்தி வந்தீர்கள் எனில், தற்போது கர்ப்பகாலத்தின் போது உங்கள் ஸ்கின் கேர் தயாரிப்புகளை (சரும பராமரிப்புக்கான தயாரிப்புகள்) உபயோகிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால், இந்த கால கட்டத்தில் சில தயாரிப்புகளை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. இந்த தயாரிப்புகளில் உள்ள கெமிக்கல்களின் காரணமாக, கருச்சிதைவுகள் அல்லது பிறவிக் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

உதாரணத்திற்கு, கர்ப்ப காலத்தின் போது புதிய தாய்மார்களை ட்ரெட்டினாய்ன் உபயோகிக்க கூடாதென மருத்துவர்களில் பலர் ஆலோசனை கூறுவர். ட்ரெட்டினாய்ன் என்பது பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு பயன்படுத்தும் ஆற்றல் வாய்ந்த ரெட்டினால் ஆகும். உங்கள் ஸ்கின் கேர் தயாரிப்புகளை மாற்றுவதற்கு முன், உங்கள் தோல் மருத்துவரை கலந்தாலோசித்து, கர்ப்ப காலத்தில் பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகளை பற்றித் தெரிந்து கொள்ளவும்.

நடைபயிற்சி (Walks):

கர்ப்ப காலத்தின் போது நாம் மேற்கொள்ளும் மிக உதவிகரமான நடவடிக்கைகளுள் நடைபயிற்சியும் ஒன்று. நீங்கள் தீவிரமாக பயிற்சி செய்ய முடியாதாகையால், எளிதான உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தினந்தோறும் நடப்பது, உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு உதவுவது மட்டுமின்றி, உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பதற்கும் உதவும். கர்ப்பகாலத்தின் போது, காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் சிசேரியன் டெலிவரி போன்றவை ஏற்படும் அபாயங்களை நடைபயிற்சி மேற்கொள்வது குறைக்கிறது. அது மட்டுமின்றி, நிறைய கலோரிகளை நடப்பதன் மூலம் நீங்கள் எரிக்க முடியும், இதனால் உங்கள் உடல் எடையும் கூட கட்டுப்பாட்டில் இருக்கும்!

மன ஆரோக்கியம் (Healthy Mind):

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மனதை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது, உடல் ஆரோக்கியத்தை பேணுவது போலவே மிக முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

மனச்சோர்வு, பதற்றம், அல்லது பிற மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் தாய்மார்கள் தங்களை சரியாக கவனித்துக் கொள்வதில்லை. அது மட்டுமின்றி, இந்த பிரச்சினைகளின் காரணமாக, இந்த முக்கியமான காலகட்டத்தில் அவர்கள் போதை பொருட்களை எடுத்துக் கொள்ளவோ அல்லது மது அருந்தவோ ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கங்கள் அனைத்துமே வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

துணையுடன் நல்லுறவு பேணுவது (Better Relationship):

கர்ப்ப காலத்தின் போது மனோநிலை மாற்றங்கள் ஏற்படுவது வாஸ்தவம் தான் என்றாலும், உங்கள் கணவருடனான நல்லுறவினையும் பேணுவது மிக அவசியமாகும். ஏனெனில் பல சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் துணைவருடன் வெளியில் சுற்றுவதற்கோ அல்லது வார இறுதியில் ஒன்றாக எங்காவது விடுமுறையை கழிப்பதற்கோ நீங்கள் திட்டமிடலாம். கணவன் மனையிடையே நல்லுறவு பேணுவதும் கூட கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனோநிலைமைகளை மேம்படுத்துவதற்கு உதவும்.

கர்ப்பணிப் பெண்கள் தங்களின் முதல் மும்மாதங்களில் பொதுவாக சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? (What Are The Common Problems Pregnant Women Usually Encounter During Their First Trimester In Tamil)

தசைப்பிடிப்பு ஏற்படுவது அல்லது பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுவது ஆகியன கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முதல் மும்மாதங்களில் பொதுவாக சந்திக்கும் பிரச்சினைகளாகும். உண்மையில், முதல் மும்மாதங்களில் கருச்சிதைவும் கூட பொதுவாக ஏற்படுகிறது. மேலும், நீங்கள் கருச்சிதைவு ஏற்பட போவதை உணர்ந்தீர்களானால், அதனை நிகழாமல் செய்வதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் எடுக்கக் கூடிய எந்தவொரு சிகிச்சையும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்கவுமே பணியாற்றக் கூடியது.

அது மட்டுமின்றி, நீங்கள் எல்லா நேரமும் சோர்வாகவே உணர்வீர்கள். நாள் முழுவதும் தூங்குவது கூட மிகச் சாதாரணமானது தான். உண்மையில் சொல்ல போனால், மிக அற்ப காரணங்களுக்காக கூட உங்கள் மனநிலையில் தோன்றும் மாற்றங்களை உங்கள் குடும்ப நபர்கள் கவனிக்க நேரிடலாம். இந்த மாற்றங்கள் அனைத்துமே உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்கள் நடைபெறுவதை குறிக்கின்றது.

உங்கள் முதல் மும்மாதங்களில் நீங்கள் என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? (What Foods Should You Consider Having In Your First Trimester In Tamil)

கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கான தேவைகள் என்பது மிக அதிகமாக இருக்காது. உண்மையில், உங்கள் முதல் மும்மாத காலத்தில் தினந்தோறும் நீங்கள் சுமார் 2000 கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயினும், உங்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை பொறுத்து, சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கலோரிகளை எடுத்துக் கொள்ளச் சொல்லி உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்வார்.

தினந்தோறும் மூன்று வேளை உணவு உண்ணவும், நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். ஊட்டச்சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவினை உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதன் மூலம், நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

இன்று, பல்வேறு மருத்துவர்கள் வைட்டமின்கள், பேரூட்டச்சத்துகள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளையே பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஊட்டப் பொருள்கள் அனைத்தும் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். உங்கள் முதல் மும்மாத டயட்டிற்கு உதவும் சில உணவுகள், உங்கள் சௌகரியத்தின் பொருட்டு கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழுப்பில்லாத இறைச்சி (Lean meat )

இது புரதச்சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்தது. உண்மையில், நன்கு சமைக்கப்பட்ட கொழுப்பில்லாத இறைச்சியான, மீன் துண்டு அல்லது இறைச்சித் துண்டு, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மற்றும் வான்கோழி இறைச்சி போன்றவை மனித உயிரணுக்களை மீளுருவாக்கம் செய்யும் கூறுகளாக விளங்கும் ஊட்டப் பொருள்களை வழங்குகின்றன.

தயிர்(Yogurt)

உங்கள் குழந்தையின் எலும்பு அமைப்பு வளர்ச்சியடைவதற்கு தேவையான கால்சியமும், புரதச் சத்தும் தயிரில் உள்ளது. ஒரு சில உட்பொருட்களை தவிர்த்து, குறைந்த அளவு மட்டுமே சர்க்கரை சேர்க்கப்பட்ட தயாரிப்பினை தேர்வு செய்யவும்.

எடாமேம் (Edamame)

இது புரதச்சத்து, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றை கொண்டிருக்கும் சோயா பீன்ஸ் ஓடுகளாகும்.

கேல் (Kale )

இந்த காய்கறிகள் வைட்டமின் கே, சி, ஈ மற்றும் ஏ போன்ற ஊட்டப் பொருள்களையும், மேலும் கூடுதலான சத்துக்களையும் வழங்குகிறது. இதில் ஃபோலேட் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

வாழைப்பழங்கள் (Bananas )

ஆம்! வாழைப் பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனினும், இதனை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.

இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு என்ன செய்யலாம்? (What Can You Do To Alleviate Stress During This Period In Tamil)

உங்களுக்கு மன அழுத்தம், கவலை, அல்லது சோர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படுகிறதென்றால், உங்கள் வாழ்வின் முற்றிலும் “புதியதொரு காலகட்டத்தில்” நீங்கள் இருப்பதாக பொருள் கொள்ளலாம். இந்த சமயத்தில், உங்களுக்கே நீங்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். மிக நல்ல முறையில் உங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறை செலுத்தவும். தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, நிறைய ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் கவனிப்பும் உங்களுக்குத் தேவைப்படும்.

புகை பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால், கண்டிப்பாக முழுமையாக அதனை விட்டு விட வேண்டும். ஏனென்றால், இந்த பழக்கங்களினால் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும். எதிர்மறையான சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு உங்களை கவனித்துக் கொள்வதற்கு வேண்டி நீங்கள் உங்களுக்கான நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். இந்த கட்டத்தில் தேவையான உதவிகள் அனைத்தையும் கேட்டுப் பெறவும்.

நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்தை சுமந்து கொண்டிருப்பது, தீவிரமான இதய நோய்கள் அல்லது இயல்பு மீறிய இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகளை விளைவிக்கக் கூடும். மேலும், கர்ப்பப்பையில் உங்கள் குழந்தை 37 வாரங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பே பிறந்து விடுகின்ற அபாயத்தையும் அதிகரிக்கக் கூடும். எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கும் கூட இது இட்டுச் செல்லக் கூடும்.

இதையும் படிக்கலாமே! - பெண் உறுப்பு வழியாக பிரசவம்: அர்த்தம், வகைகள் மற்றும் நன்மைகள்

முடிவுரை (Conclusion)

பெரும்பாலும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியானது, உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களிலேயே ஏற்பட்டு விடுகிறது. உண்மையில், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சி, பல உறுப்பு அமைப்புகள், போன்றவற்றின் வளர்ச்சி, உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே ஏற்பட்டு விடுகின்றன. தவிர, கருச்சிதைவுகள் அல்லது பிறவிக் குறைபாடுகளும் பொதுவாகவே காணப்படும். இந்த காலகட்டத்தில் முதல் மும்மாத உடல் ரீதியான மாற்றங்களை நீங்கள் கட்டாயமாக உணரப் போகும் காரணத்தால், உங்கள் முழு மனதோடு இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராகிக் கொள்ளவும். உங்கள் வாழ்வின் மறக்க முடியாத காலங்களில் இதுவும் ஒன்றென்பது உறுதி!

TAGS :

first trimester in pregnancy in tamil, tips for first trimester in pregnancy in tamil,14 Lifesavers For Your First Trimester In English, 14 Lifesavers For Your First Trimester In Hindi, 14 Lifesavers For Your First Trimester In Telugu, 14 Lifesavers For Your First Trimester In Bengali

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.