
முதலில், உங்களுடைய தாய்மைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
பிறப்புறுப்பில் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் உங்களுடைய பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்ளுதல் போன்ற தொடர்ச்சியான தினசரி சோர்வு போன்றவற்றை இப்போது நீங்கள் நிறைய கடந்து செல்கிறீர்கள். இந்த மாதிரியான சமயத்தில், நீங்கள் உங்களுடைய துணையுடன் நெருக்கமான மனநிலையில் இருப்பதற்கும் மனம் விட்டுப் பேசுவதற்கும் விரும்பலாம். மறுபுறம், உடலுறவிற்கான ஆர்வமின்றி அது உங்களுடைய மனதில் கடைசி விருப்பமாக இருக்கலாம்.
இருந்தாலும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடலுறவானது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மீண்டும் ஒரு தீப்பொறியை தூண்டுவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு உடலுறுவு கொள்வதற்கு எந்தவொரு காலக்கெடுவும் இல்லை. உங்களுக்கான உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு, உங்கள் துணையுடன் நெருக்கமாக இருங்கள்.
பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளக் கூடாது என்பதற்கு குறிப்பிட்ட காத்திருப்பு காலமோ அல்லது நிபந்தனையோ எதுவும் இல்லை. இருப்பினும், சில மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பிறகு, கருப்பை தொற்று அல்லது பிரசவத்தின் போது போடப்படும் தையல்களில் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடலுறவினை மீண்டும் தொடங்குவதற்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருக்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் ஆபத்து இந்த காலகட்டத்தில் அதிகமாக இருப்பதால் இது பொதுவாக ஏற்படுகிறது. கூடுதலாக, பிரசவத்திற்குப் பிறகு, வலி, பிறப்புறுப்பின் விரிவாக்கம், பிரசவத்திற்குப் பின் வெளிப்படும் வெள்ளைப்படுதல், சோர்வு, உடலுறவின் மீது விருப்பம் குறைதல் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். சில வாரங்கள் காத்திருப்பது உங்களுடைய உடல் சரியாக குணமடைவதற்கான நேரத்தைக் கொடுக்கும், மேலும் உங்களுடைய உடலுறவிற்கான வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் உணர்வுபூர்வமாக தயாராக இருக்க வேண்டும்.
சில நேரங்களில் கர்ப்பத்திற்குப் பிறகு, பிரசவத்தின்போது செய்யப்பட்ட பிறப்புறுப்பின் விரிவாக்கம் (எபிசியோடமி) மற்றும் பெரினியல் டியர் (பெண்ணுறுப்பினை விரிவுபடுத்துதல்) போன்ற காயங்களில் இருந்து குணமாகி இருந்தாலும் கூட உடலுறவு கொள்ளும்போது வலிக்கும். பிறப்புறுப்பின் விரிவாக்கம் (எபிசியோடமி) என்பது உங்கள் மருத்துவர் உங்களுடைய பெரினியத்தில் (பிறப்புறுப்பில்) அறுவை சிகிச்சைக்காக செய்யக்கூடிய ஒரு கீறலாகும். இது பிரசவத்தின் போது செய்யப்படும். மேலும் இது குணமடைய சிறிது காலம் ஆகும்.
நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உங்களுடைய பிறப்புறுப்பில் மென்மை மற்றும் வறட்சியை நீங்கள் அனுபவிக்கலாம். இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றை முயற்சிக்கலாம்:
உங்களுடைய சில வலிகளைத் தவிர்க்க அல்லது எளிதாக்குவதற்கு, வலி மருந்துகளை உட்கொள்வது, உடலுறவுக்கு முன் உங்கள் சிறுநீர்ப்பையை காலியாக்குவது, உங்கள் தசைகளை தளர்த்துவதற்காக சூடான குளியல் எடுத்துக் கொள்வது போன்ற சில நடவடிக்கைகளை நீங்கள் முயற்சிக்கலாம். உடலுறவுக்குப் பிறகு, உங்களுடைய பிறப்புறுப்பில் எரியும் உணர்வையும் நீங்கள் அனுபவிக்கலாம். அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்கு ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றிக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
பிறப்புறுப்பின் வறட்சியை சமாளிக்க மசகு எண்ணெய் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும்.
உங்களுடைய வலி மற்றும் அசௌகரியம் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசி புரிய வைக்கவும். வாய்வழி உடலுறவு, பரஸ்பர சுயஇன்பம், நீண்டநேர முன்விளையாட்டு, மசாஜ் போன்ற மாற்று பாலின விருப்பங்கள் மூலமாக முயற்சிக்கலாம்.
நீங்கள் இருவரும் சோர்வாக இல்லாதபோது உடலுறவு கொள்வதற்கு முயற்சிக்கவும். உடலுறவுக்கான மனநிலையை அமைத்துக்கொண்டு, உங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஒருமுறை காரசாரமான மனநிலையை ஏற்படுத்துவதற்கு மீண்டும் பற்றவைக்க முயற்சி செய்யுங்கள்.
இருப்பினும், இந்த சமயத்தில் நீங்கள் கடுமையான மற்றும் அசாதாரண வலியை அனுபவித்தால், உங்களால் தாங்கமுடிந்ததை விட அதிகமாக அனுபவித்தால், உடனடியாக நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், வலி நிவாரண விருப்பங்களையும் கூட முயற்சிக்கவும்.
சாதாரண உடலுறவு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நீங்கள் உடல்ரீதியாக நன்றாக குணமடைந்திருக்கலாம். இருந்தாலும், உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதற்கான முழுமையான விருப்பத்தை நீங்கள் இன்னும் உணரவில்லை. பிரசவத்திற்குப் பிறகான கால கட்டத்தில் உடலுறவு கொள்வதற்கு உங்கள் விருப்பத்தை பாதிக்கும் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு,
● ஹார்மோன் மாற்றங்கள்
● சோர்வு/அசதி
● பிரசவ அதிர்ச்சி
● பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு
● பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் வெளிப்புறம் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படும் வலி
● துணையுடன் உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்பட்டதாக உணர்தல்
● பிரசவத்திற்குப் பிறகான உடல் வடிவம்
சிசேரியன் விஷயத்தில், மக்கள் வித்தியாசமான முறையில் குணமடைகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய மருத்துவர் உங்களை மென்மையான செயல்களைச் செய்யச் சொல்வார். இத்தகைய நடவடிக்கைகள் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்க உதவும். இருந்தாலும், நீங்கள் குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும் அல்லது உடலுறவை உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பவதற்கு, நீங்கள் செளகரியமாக உணர்வதற்கும் மற்றும் உடல் ரீதியாகவும் தயாராகும் வரைக்கும்.
பிரசவத்திற்குப் பிறகு என்னுடைய பிறப்புறுப்பு வித்தியாசமாக இருக்குமா (Will my vagina be different after delivery in Tamil)
உங்களுக்கு சுகப்பிரசவமாக வேண்டும் என்றால், உங்களுடைய குழந்தையை வெளியே எடுப்பதற்கு உங்கள் பிறப்புறுப்பின் பாதையானது விரிவாக்கம் செய்யப்படும். இதன் காரணமாக, உங்கள் பிறப்புறுப்பில் காயம் மற்றும் வீக்கம் ஏற்படலாம். இருப்பினும், இது காலப்போக்கில் குறைந்து விடும், மேலும் வலியும் மறைந்துவிடும்.
சுகப்பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய பிறப்புறுப்பு அதன் முந்தைய வடிவத்திற்கு திரும்பாமல் போகலாம். இது உங்களுடைய எதிர்கால பாலியல் அனுபவத்தை பாதிக்காது.
பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய மாதவிடாய் மீண்டும் தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் 3 வாரங்களில் மீண்டும் கர்ப்பமாகலாம்.இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக விரும்பவில்லை என்றால், பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளும்போது கருத்தடைகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
உடல் ரீதியாக குணமடைந்த பிறகு, நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க இன்னமும் கூட சிரமப்படுகிறீர்கள் என்றால், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைக் கண்டறியவும். கடுமையான சோர்வு, கடுமையான மனநிலை ஊசலாட்டம், பசியின்மை, அதிக உணர்ச்சிகள் போன்றவற்றை நீங்கள் உணரலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் மற்றும் சரியான சிகிச்சையுடன், நீங்கள் விரைவாக குணமடையலாம். மேலும், மீண்டும் ஆரோக்கியமான உடலுறவிற்கான வாழ்க்கையை நீங்கள் மீண்டும் தொடங்குவீர்கள்.
1. Jones C, Chan C, Farine D. (2011). Sex in pregnancy. NCBI
2. Fuchs A, Czech I, Sikora J, Fuchs P, Lorek M, Skrzypulec-Plinta V, Drosdzol-Cop A. (2019). Sexual Functioning in Pregnant Women. NCBI
3. Wiley Online Library. (2017). Sex During Pregnancy: Journal of MidWifery & Women's Health. onlinelibrary.wiley.com
Tags:
Sex can be done after delivery in Tamil, Does Sex after pregnancy hurts in Tamil, Vagina difference after delivery in Tamil, Pregnancy after delivery in Tamil, Feel low sex drive after delivery in Tamil, Sex After Pregnancy in English
Yes
No

















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |