hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகள்: காரணங்கள், சிகிச்சை முறை மற்றும் தடுப்பு(Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention In Tamil) arrow

In this Article

    வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகள்: காரணங்கள், சிகிச்சை முறை மற்றும் தடுப்பு(Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention In Tamil)

    Pregnancy

    வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்குகள்: காரணங்கள், சிகிச்சை முறை மற்றும் தடுப்பு(Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention In Tamil)

    8 February 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (பிரசவ தழும்புகள்)(Stretch Marks on Stomach in Tamil)

    ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்பது ஒரு வகையான பிரசவ தழும்பு தான். தோல் நீளும்போது அல்லது சுருங்கும்போது அவர்களுடைய உடலில் இது ஏற்படுகிறது. சமீபத்தில் கர்ப்பம் அல்லது விரைவான எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பை அனுபவித்த பெண்கள் மத்தியில் இது ஒரு பொதுவான கவலையாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க்குகள் (தழும்புகள்) இருக்கும். இந்த ஸ்ட்ரெச் மார்க்குகள் (பிரசவ தழும்புகள்) பாதிப்பில்லாதவை என்றாலும், இது ஒரு நபரின் சுயமரியாதையை பாதிக்கிறது.

    ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்றால் என்ன?(What are Stretch Marks in Tamil)

    மனிதனின் தோலில் கொலாஜன் இருப்பதால் இது மீள்தன்மை கொண்டது. மேலும் தோலானது வேகமாக விரிவடையும் போது, மனித உடலால் போதுமான அளவு கொலாஜனை உற்பத்தி செய்ய முடியாது. இதன் விளைவாக அதிகப்படியான இடங்களில் வடுக்கள் ஏற்படுகின்றன. யாருக்காவது ஸ்ட்ரெச் மார்க்குகள் இருந்தால், இதற்காக அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், ஏறக்குறைய 90 சதவீத மக்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்குகள் உள்ளன, மேலும் இவை உடலின் பல இடங்களில் தோன்றுகிறது, அந்தப் பகுதிகள் -

    • வயிறு

    • மார்பகங்கள்

    • பிட்டப் பகுதிகள்

    • தொடைகள்

    • மேற்புற கைகள்

    ஒருவரது தோலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளை எளிதில் அடையாளம் காண முடியும். வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகள் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றும், இவை சிற்றலை பள்ளங்கள் போன்ற வடிவில் இருக்கும் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டது. ஸ்ட்ரெச் மார்க்குகளின் நிறங்கள் ஒரு நபரின் தோல் தன்மையைப் பொறுத்து இருக்கும்; அவை ஊதா, சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு பழுப்பு நிறத்தில் தோன்றும்.

    ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏன் வயிற்றுப் பகுதியில் ஏற்படுகின்றன?(Why do Stretch Marks appear on Stomach in Tamil)

    ஒருவரின் வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க்குகள் இரண்டு முக்கிய காரணங்களால் தோன்றும், அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:

    • தோலின் விரிவாக்கம் அல்லது சுருக்கம்.

    • உடலில் கார்டிசோன் அளவு அசாதாரணமாக அதிகரிக்கும்போது

    பின்வரும் சூழ்நிலைகளில் ஒருவரின் வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படலாம் -

    • கர்ப்ப காலத்தில், வளரும் கருவுக்கு இடமளிக்கும் வகையில் தோலானது அதிகமாக விரிவடையும்போது, ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய வயிறானது தொடர்ச்சியாக விரிவடைவதாலும், இழுத்துக் கொண்டிருப்பதாலும் வயிற்றில் ஸ்டெர்ச் மார்க்குகள் தோன்றும்.

    • ஒருவர் தன்னுடைய உடல் எடையை திடீரென குறைக்கும் போது அல்லது அதிகரிக்கும்போது, அவருடைய தோலில் ஸ்ட்ரெச் மார்க்குகள் தோன்றும். இது பொதுவாக இளம் வயதினரின் வளர்ச்சியின் போது நிகழ்கிறது.

    • கார்டிகோஸ்டீராய்டுகள் கொண்ட லோஷன்கள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துவதனாலும் ஸ்ட்ரெச் மார்க்குகள் வரும். ஏனென்றால், இந்த கிரீம்கள் தோலின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கும்.

    வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளை எப்படி போக்குவது?(How to Get Rid of Strech Marks on Belly in Tamil)

    ஸ்ட்ரெச் மார்க்குகள் விரும்பத்தாகதவை, சில சமயங்களில் இந்த ஸ்ட்ரெச் மார்க்குகள் மறையும் வரைக்கும் நமக்கு பொறுமை இருக்காது, அதற்காக காத்திருக்கவும் மாட்டோம். ஸ்ட்ரெச் மார்க்குகளை உடனடியாக அகற்றவே நாம் விரும்புவோம். அதன் காரணமாகவே, ஸ்ட்ரெச் மார்க்குகளை அகற்ற உதவுவதற்கான சில காஸ்மெடிக் (ஒப்பனை) நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்தை விரைவாகத் தூண்டுவதற்கும் பாதுகாப்பான பிரசவத்துக்கும் தேவையான 10 பயனுள்ள பயிற்சிகள்

    • ஃப்ராக்ஸல் தோல் சிகிச்சை(Fraxel skin therapy)

    ஃப்ராக்ஸல் தோல் சிகிச்சை என்பது தோலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளைக் குறைப்பதற்கான வலியற்ற ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறையானது அதிகமான ஸ்ட்ரெச் காரணமாக சேதமடைந்த தோலை குணப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது. இந்த முறையானது புதிய மற்றும் பழைய ஸ்ட்ரெச் மார்க்குகளுக்குப் பொருந்தும். இந்த செயல்முறையானது வடுக்கள் மற்றும் சூரியனால் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்றது.

    இது ஆக்கிரமிப்பு இல்லாத செயல்முறை மேலும் இதற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை. மைக்ரோஸ்கோபிக் லேசரைப் பயன்படுத்தி மருத்துவர்கள் இந்த செயல்முறையைச் செய்கிறார்கள், இது தோலிற்குள் நுழைந்து, தோலின் மீள் வளர்ச்சிக்குத் தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது ஸ்ட்ரெச் மார்க்குகளை எளிதாக நீக்குகிறது, மேலும் இந்த செயல்முறையானது வலி குறைந்ததாக இருப்பதோடு, வேகமாக செய்யப்படுகிறது. இந்த செயல்முறையை முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும், மேலும் நோயாளிகள் தங்களுடைய வழக்கமான வேலைகளை ஒரு சில நாட்களிலேயே தொடங்கி விடலாம்.

    • CO2 லேசர்கள்(CO2 lasers)

    CO2 லேசர் சிகிச்சையானது அதிக ஸ்ட்ரெச் மார்க்குகளைக் கொண்டவர்களுக்கு ஏற்றது. வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளை அகற்றுவதற்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வழியாகும். தோல் சிகிச்சை அல்லது ஒரு தனி சிகிச்சைக்கு இதை ஒரு துணை சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம். வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளை CO2 லேசர் சிகிச்சையின் மூலம் திறம்பட நீக்கிய பிறகு, இது ஒரு சில நாட்களில் குணப்படுத்தப்படும்.

    CO2 லேசர்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதற்கு தோலில் நுண்ணிய துளைகளை உருவாக்குகின்றன. இந்த செயல்முறை ஸ்ட்ரெச் மார்க்குகளை சிறியதாக மாற்றும் மேலும் இறுதியில் அவற்றை தோலில் இருந்து அகற்றும். கடுமையான ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள நோயாளிகளுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரைக்கும் CO2 லேசர் சிகிச்சை பல முறை தேவைப்படும்.

    வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளை நிரந்தரமாக அகற்ற முடியுமா?(Is it possible to get rid of stretch marks on stomach permanently in Tamil)

    மற்ற வடுவைப் போலவே ஸ்ட்ரெச் மார்க்குகளும் இறுதியில் மறைந்துவிடும். வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்குகளின் கீழ் ஆரோக்கியமான தோல் திசுக்களை மீண்டும் உருவாக்கி, பின்னர் தற்போதைய வடுக்களை நிரந்தரமாக மறைப்பதற்கான சிகிச்சையும் இதில் அடங்கும். லேசர் மூலமாக ஸ்ட்ரெச் மார்க்குகளை அகற்றுதல் போன்ற சிறப்பு லேசர் சிகிச்சைகள், ஸ்ட்ரெச் மார்க்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு தோல் மருத்துவமனைகளில் நடத்தப்படலாம்.

    வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க்குகள் வராமல் தடுப்பது எப்படி?(How to prevent stretch marks on stomach in Tamil)

    சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நீரேற்றத்துடன் இருப்பதன் மூலமாக ஒருவர் தங்களுடைய தோலில் ஸ்ட்ரெச் மார்க் வராமல் எளிதில் தடுக்கலாம். ஒரு சிறந்த உணவை உருவாக்குவதற்கு உணவு நிபுணரை அணுகவும் இது ஸ்ட்ரெச் மார்க்குளை பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும்.

    ஸ்ட்ரெச் மார்க்குகள் இயற்கையானது, இதனை தவிர்க்க முடியாது. அதே போல் ஸ்ட்ரெச் மார்க்குகள் வந்தவுடன், அவை மறைந்து போகும் வரைக்கும் காத்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒப்பனை சிகிச்சை மூலமாக இதனை ஆற்றுவதற்கு நிபுணர்களின் உதவியை நாடலாம்.

    Tags

    Stretch Marks Meaning in Tamil, Stretch Marks during Pregnancy in Tamil, Stretch Marks due to Weight Gain in Tamil, Stretch Marks after Pregnancy in Tamil, How to get rid from Stretch Marks in Tamil, Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention in English, Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention in Bengali, Stretch Marks On Stomach: Causes, Treatment And Prevention in Telugu

    Stretch Marks Cream - 100 gm

    Removes Stretch Marks | Made Safe Australia Certified | Safe During Pregnancy & Breastfeeding

    ₹ 319

    4.2

    (14541)

    107604 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Sex Life

    Sex Life

    உங்கள் பிரக்னன்ஸியின் இரண்டாவது மூன்று மாதங்களில் உங்கள் துணையுடன் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது I How safely can you have sex with your partner during the second trimester of your pregnancy in Tamil

    Image related to Nutrition Tips

    Nutrition Tips

    கர்ப்ப காலத்தில் நீங்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த உணவு(டையட்) திட்டம் எது I What Is The Best Diet Plan That You Must Consume During Pregnancy in Tamil

    Image related to Scans & Tests

    Scans & Tests

    இரண்டாவது டிரைமெஸ்டர் ஃபெடல் அனோமாலி ஸ்கேன்: உங்கள் கர்ப்ப காலத்தில் அது எதைக் கண்டறியும் I Second Trimester Fetal Anomaly Scan: What will it detect during your pregnancy in Tamil

    Image related to High Blood Pressure in Pregnancy

    High Blood Pressure in Pregnancy

    பேறுகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் அதைத் திறம்பட நிர்வகித்தல் I Symptoms & Management Of High Blood Pressure In Pregnancy in Tamil

    Image related to False Pregnancy

    False Pregnancy

    பொய்க் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன I What Are the Causes & Symptoms of A False Pregnancy in Tamil?

    Image related to Pregnancy Complications

    Pregnancy Complications

    எக்டோபிக்/ இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன - அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, தடுப்பு & அதை எவ்வாறு கண்டறிவது? What is Ectopic Pregnancy - Symptoms, Causes, Treatment, Prevention & How to Detect it in Tamil?

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.