
பொதுவாக குழந்தை பிறந்த பின்பு பெற்றோரின் பொறுப்புகளும் அதிகமாகும். அதுவும் குழந்தைக்கு ஏற்ற மற்றும் நம்பகமான பொருட்களை தேர்வு செய்வது என்பது ஒரு சவாலான விஷயம் தான். அந்த வகையில், பேபி வைப்ஸ் என்பது குழந்தைக்கு தினமும் பயன்படுத்தக் கூடிய ஒரு புராடக்ட் என்பதால், நாம் அதனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துவது பெற்றோரின் அன்றாட வழக்கமாக மாறிவிட்டது. இதன் பயன்பாடு காலப்போக்கில் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேபி வைப்ஸ், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு சௌகரியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்தப் பதிவில், நாம் பேபி வைப்ஸின் பயன்பாடு மற்றும் இது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
முதலில் நாம் பேபி வைப்ஸ் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பேபி வைப்ஸ் என்பது ஈரப்பதத்துடன் இருக்கும் ஒரு சிறிய அல்லது மீடியமான அளவில் உள்ள டிஷுயூ அல்லது துணி போன்ற ஒரு மெட்டீரியல் ஆகும். ஃபோல்ட் செய்து வைத்திருக்கும் வைப்ஸை நம் வசதிக்கு ஏற்றவாறு முழுமையாகாவாயோ அல்லது பாதியாகவோ எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தையின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுத்தத்திற்கு பேபி வைப்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் கடைகளில் பல விதமான வைப்ஸ் கிடைக்கின்றன. ஆனால், அவை அலுவலகத்தை சுத்தம் செய்யும் வைப்ஸ் அல்லது மெடிக்கல் வைப்ஸ் போன்ற இரசாயனங்களின் அடிப்படையில் தனித்தனி புராடக்ட்களாக இருக்கலாம். அவை முதன்மையாக சரும சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை.
தொண்ணூறு சதவீத வெட் வைப்ஸ் பாலிஸ்டர் அல்லது பாலிப்ரோப்பிலீன் உடைய நெய்யப்படாத ஃபேப்ரிக்ஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து மெட்டீரியல் ஆனது பெரும்பாலும் தண்ணீர் அல்லது பிற திரவங்கள் கொண்டு (எ.கா. ஐசோபிரைல் ஆல்கஹால்) நீரேற்றம் செய்யப்படுகிறது. தொட்டுணரக்கூடிய மற்றும் வாசனை சார்ந்த பண்புகளை மாற்ற, மெட்டீரியல் ஆனது கண்டிஷனர்கள், லோஷன்கள் அல்லது வாசனை திரவியங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படலாம்.
பேக்கேஜ்-ல் பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க, மெத்திலிசோதியசோலினோன் போன்ற பிரசர்வேட்டிவ்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வெட் வைப்ஸ் ஆனது மடித்து ஒரு பாக்கெட் அளவிலான பேக்கேஜ் அல்லது பாக்ஸ் டிஸ்பென்சரில் வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதால், பொதுவாக குழந்தையின் டயபர் பகுதியைச் சுற்றியுள்ள சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த சருமப் பகுதியில் மற்ற பகுதிகளை விட அதிக மடிப்புகள் மற்றும் மடிப்புக்கோடுகள் இருக்கும். இதனால் அந்த பகுதியை முழுமையாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு டயபர் ரேஷஸ் (தடிப்பு) ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
டயபர் ரேஷஸ் ஏற்படாமல் தடுப்பதற்கும், ரேஷஸ் வந்துவிட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் டயப்பரை அவ்வப்போது மாற்ற வேண்டும். அதோடு குழந்தையின் சருமத்தில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் சார்ந்த கசடுகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றிய பிறகு சருமத்தை நன்கு சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மென்மையான வெட் வைப்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம், இதனை எந்த வித சிரமமுமின்றி விரைவாகச் செய்யலாம்.
பச்சிளங் குழந்தையின் சருமம் மென்மையாக இருக்கும். அதனால் எந்த ஒரு புராடக்ட்டையும் பயன்படுத்துவதற்கு முன் நாம் கவனமாக இருக்க வேண்டும். அனைத்துமே குழந்தையின் சருமத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது. அவர்களின் சருமத்திற்கு உகந்த மென்மையான புராடக்ட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேபி வைப்ஸில் செயற்கை வாசனைகள், ஆல்கஹால் அல்லது தீமை விளைவிக்கும் பொருட்கள் இல்லாத வரை குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானது தான்.
குழந்தையைப் பராமரிப்பது என்பது அவர்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதையும் உள்ளடக்குகிறது. ஒவ்வொரு முறையும் டயப்பரை மாற்றும் போது குழந்தையின் சருமத்தில் தடிப்புகள் மற்றும் வறட்சி உண்டாகும். அதே போல், சிறுநீர் அல்லது மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அது குழந்தைக்கு பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தக் கூடும்.
ஒவ்வொரு முறையும் சிறுநீர் அல்லது மலம் கழித்த பின் குழந்தையை குளிக்க வைப்பது நல்லதல்ல. இது போன்ற சூழலில் குழந்தைக்கான வைப்ஸை எப்பொழுதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்வது குழந்தையை எந்த நேரத்திலும் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். குறிப்பாக குளிர் காலத்தில் அல்லது சிறிது குளிர்ச்சியாக இருக்கும் போது உங்கள் குழந்தையை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தால், குழந்தையின் மென்மையான சருமம் எளிதில் வறண்டு போய்விடும். தடுப்பூசி செலுத்திய பின்னர் அல்லது அது போன்ற சூழலில் குழந்தை எளிதில் எரிச்சலடையக் கூடும். அதனால் அத்தகைய சமயத்தில் பேபி வைப்ஸ் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் சுத்தம் செய்வது ஒரு சிறந்த வழியாகும்.
தற்போது சந்தையில் விற்கப்படும் பல பிரபலமான குழந்தை வைப்ஸ்களில் லேசான நறுமணப் பொருட்கள் அடங்கி உள்ளன. அவற்றின் மனம் நம்மை ஈர்த்தாலும், உங்கள் குழந்தை இது போன்ற வாசனை அல்லது மூலப்பொருட்களுக்கு உணர்திறன் மிக்கவராக இல்லை என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே, அவற்றை உங்கள் குழந்தைக்கு பயன்படுத்துங்கள். இல்லையென்றால் வாசனை நிறைந்த வைப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.
ஆம், நறுமணம் அற்ற வைப்ஸ் தான் உங்கள் குழந்தைக்கான சரியான தேர்வு என்றும் சொல்லலாம். உதாரணத்திற்கு, வாட்டர் வைப்ஸ், இதில் எந்த வித செயற்கை நறுமணமும் இல்லையென்பதால் இது பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்றாக அமைகிறது. ஏதேனும் எரிச்சல் இருக்கும் பட்சத்திலும், வாட்டர் வைப்ஸ் பாதுகாப்பானதாக அமைகிறது. சுத்தத்திற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
இதையும் படிக்கலாமே! - ஒரு குழந்தையை 40 வினாடிகளில் எப்படி தூங்க வைப்பது?
பொதுவாக பச்சிளங் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஏறக்குறைய 30 வைப்ஸ் தேவைப்படும். உங்களுக்கு பல குழந்தைகள் இருந்தால் அல்லது டயபர் மாற்றங்களுக்கு இடையில் மெத்தை போன்றவற்றை சுத்தம் செய்வது, அல்லது நாப்கினை மாற்றும்போது நிறைய வைப்ஸ்களைப் பயன்படுத்துவது போன்ற பல காரணிகளின் அடிப்படியில் நீங்கள் பயன்படுத்தும் வைப்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
சராசரியாக ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது நீங்கள் நாப்பியை மற்ற வேண்டி இருக்கும். ஒவ்வொரு முறை மாற்றுவதற்கும் ஒன்று முதல் ஐந்து வைப்ஸ் பயன்படுத்துவீர்கள். நாப்பி மாற்றத்திற்கு ஒரு வைப்ஸ் பயன்படுத்துவீர்கள். அதன் பின்பு சுத்தம் செய்ய இன்னும் சில வைப்ஸ்களை பயன்படுத்துவீர்கள்.
பெரும்பாலான தயாரிப்பாளர்கள், பேபி வைப்ஸ் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 2-3 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். சில சமயங்களில் நாம் பேக்-ஐ திறக்காவிட்டாலும், அதில் உள்ள வைப்ஸ் ஈரப்பதம் மற்றும் சுத்திகரிப்பு பண்புகள் அற்று இருக்கும். அதனால் நீங்கள் அதனை நேரடி வெயில் மற்றும் சூரிய ஒளி படாமலே குளிர்ச்சியான, வறண்ட இடத்தில வைத்திட வேண்டும். அப்பொழுது அது நீடித்து நிலைக்கும். ஆவியாகுதல் மற்றும் மாசுபடுவதைத் தடுக்க, பேக்-ஐத் திறந்து பயன்படுத்திய பிறகு உடனடியாக அதனை சரியாக மூடி பாதுகாக்க வேண்டும்.
பேபி வைப்ஸ்-ன் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். உங்கள் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்கள் இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு சரியான முடிவுகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இத்தகைய பாதுகாப்பான ஆப்ஷனாக மைலோ ஃபேமிலியின் பேபி வைப்ஸ் அமையும். ஆம், உங்கள் குழந்தைக்கான சரி\யான பேபி வைப்ஸ் உங்களுக்கு பிடித்த பிராண்ட் ஆன மைலோ ஃபேமிலியில் உள்ளது. இது பற்றி வேறு சில தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள எண்ணினால், மைலோ வலைத்தளத்தைப் பார்க்கவும்.
baby wipes in tamil, uses of baby wipes in tamil, Is baby wipes affect the skin In tamil, How to use baby wipes and why its important In English, How to use baby wipes and why its important In Hindi, How to use baby wipes and why its important In Telugu, How to use baby wipes and why its important In bengali

Gentle Baby Wipes with Lid - Pack of 3
98% Pure Water | Dermatologically Tested




Gentle Baby Wipes with Lid - Pack of 6
98% Pure Water | Dermatologically Tested




Gentle Baby Wipes with Lid - Pack of 4 + 1 Free Pack
98% Pure Water | Dermatologically Tested



Yes
No















delivery is very fast and product's are so good 👍🏻
Good
Mylo Gentle baby wipes is a great product for my baby, it's fragrance is so good and it is the best wipes for babies
Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |