This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil

Maternity Fashion
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 28, 2023
பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil
Read time5 min

தாய்ப்பாலூட்டும் போது நீங்கள் அவசியமாகக் கொண்டிருக்கவேண்டிய இரண்டு விஷயங்கள், பொறுமை மற்றும் லேசாக பேடிங் கொண்ட நர்சிங் பிரா. கர்ப்பத்தின் போதும், தாய்ப்பால் ஊட்டும் போதும் மார்பகங்கள் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்திக்கும் என்பதால், ஆதரவாகவும் வசதியாகவும் இருக்கும் பிராவை நீங்கள் அணிவது அவசியம். அதுமட்டுமின்றி, பால் கசிவு ஏற்பட்டால் அதற்கான தீர்வைத் தரும் பிராவைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் அவசியம்.

பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா வாங்குவது நல்லதா? (Should You Consider Purchasing A Padded Maternity Bra in Tamil)

இன்று, ஆன்லைனில் பல மகப்பேறுகால பிரா தேர்வுகள் உள்ளன. இவற்றிலிருந்து நீங்கள் வழக்கமான அல்லது அதிக அளவுள்ளவற்றைத் தேர்வுசெய்யலாம். இந்த பிராக்கள் பல ஸ்டைலான வடிவங்களிலும் வருகின்றன. இருப்பினும், நீக்கக்கூடிய நர்சிங் கிளிப்களுடன் வரும் மகப்பேறுகால பிராக்களை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

லேசான பேடிங் கொண்ட வயர்ஃப்ரீ நர்சிங் ப்ராவை வாங்குவதற்கு முன், பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பேட் செய்யப்பட்ட மகப்பேறு பிரா வாங்கும்போது நீங்கள் வழக்கமாகக் கவனிக்கும் விஷயங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் தருணத்தில் இந்த பிராக்கள் உதவிகரமாக இருக்கும் என்றாலும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேர்வு செய்கையில், பேட் செய்யப்பட்ட மகப்பேறுகால பிராக்கள் அவர்கள் தாய்மை தருணத்தை மிக எளிதாக்கும்!

மார்பகப் பால் கசிவைத் தடுக்க பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா உதவுமா? (How Helpful Is A Padded Maternity Bra When It Comes To Preventing Breastmilk Leakage in Tamil)

முழுமையான கவரேஜ் கொடுக்கும் லேசாக பேடிங் கொண்ட பிரா கண்டிப்பாக பால் கசிவைத் தடுக்க உதவும். இவ்வகை பிராக்களில் பெரும்பாலானவை அட்ஜஸ்ட் செய்யக்கூடியவை. எனவே, பால் எப்போது கசிகிறது என்பதை மிக விரைவாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தேவையான மாற்றங்களைச் செய்ய நர்சிங் கிளிப்களையும் பயன்படுத்தலாம். பல தாய்மார்கள் பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் போது எளிதாக கீழே சரியும் வகையிலான மகப்பேறுகால பிராக்களை தேர்வு செய்கிறார்கள்.

மகப்பேறுகால பிரா வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? (What Are A Few Things To Keep In Mind Before Purchasing A Maternity Bra in Tamil)

மகப்பேறுகால பிராவில் ‘ஒன் சைஸ்-ஃபிட்ஸ்-ஆல்’ தேர்வு இல்லைஒவ்வொருவருக்கும் அவரது நிலைக்கு ஏற்ற பிரா தேவைப்படும். எனவே, லேசாக பேடிங் கொண்ட நர்சிங் பிராவை வாங்கும் அது பால் கசிவைத் தடுக்குமா, நன்கு பொருந்துகிறதா, குழந்தைக்குப் பாலூட்டுவதை எளிதாக்குகிறதா என்பத கவனத்தில் கொள்ளவேண்டும்.

பேடிங் செய்யப்பட்ட மகப்பேறு பிராவை வாங்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வசதி (Comfort) ​​​

மகப்பேறுகால பிராவை மிக நீண்ட நேரம் அணிய வேண்டியிருக்கும் என்பதால், சரியான அளவிலான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எத்தகைய பிராவுடன் நீங்கள் வசதியாகத் தூங்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு பிராதேர்ந்தெடுப்பது நிச்சயமாக ஒரு சிறந்த தேர்வாகும்.

2.பேடிங்(Padding)

ஃபோம் கப் கொண்ட மகப்பேறுகால பிராக்கள் பொதுவாகச் சிறந்த தேர்வாகும். முன்பக்கத்தில் மோல்ட் செய்யப்பட்ட கப்களைக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் மகப்பேறு பிராக்களும் வாங்கலாம். பேடிங் செய்யப்பட்ட மகப்பேறு பிராக்கள் கசிவு ஏற்படும் போது தாய்ப்பாலை உறிஞ்சும். அதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் போது தேவையான ஆதரவையும் இவை வழங்குகின்றன.

3. பிரா எக்ஸ்டெண்டர்கள் (Bra Extenders)​​​​

ஒரு சில அங்குல எக்ஸ்டெண்டர்களுடன் வரும் மகப்பேறுகால பிராக்கள் பொதுவாக அட்ஜஸ்ட்செய்யத்தக்கவை மற்றும் அவை உங்கள் மார்பகங்கள் காற்றோட்டமாக இருக்க நிறைய இடத்தை வழங்குகின்றன. உங்கள் மார்பகங்களைப் பொறுத்தவரை, மகப்பேறு பிராவின் கொக்கிகளை அதற்கேற்ப சரிசெய்யலாம். உண்மையில், பேட் செய்யப்பட்ட மகப்பேறு பிராவின் வசதியைக் கணக்கில் கொள்கையில் அந்த பிராவின் கொக்கிகளும் கணக்கிள் கொள்ளப்படுகிறது.

4.மென்மையான, காற்றோட்டமான துணி (Soft And Breathable Fabric )

கர்ப்பிணித் தாய்மார்கள் பொதுவாக ஹாட் ஃப்ளாஷ் பிரச்சனையை அனுபவிப்பார்கள். எனவே, உணர்திறன் வாய்ந்த முலைக்காம்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பொதுவாக காற்றோட்டமான மற்றும் மென்மையான துணிகளாலான பிராவை வாங்குவது நல்லது. பருத்தி போன்ற துணிகள் உங்கள் மார்புப் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற துணிகள் உங்கள் முலைக்காம்புகளுக்குல் மிகவும் மென்மையாக இருக்கும்.

5. அண்டர்வயர் இல்லாத பிராக்கள் (Bra Without Underwires )​​​​​​​

வயர்லெஸ் பிரா சருமத்தை இறுக்காது. இருப்பினும், அண்டர்வயர் பிராக்கள் பால்மடி வீக்கம் அல்லது பால் சுரப்பி அடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க மென்மையான மற்றும் வசதியான வயர்லெஸ் பிராக்களைத் தேர்வு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

6.பல்வேறு பிரா ஸ்டைல்கள் (Different Bra Styles)

வெவ்வேறு பாணிகள் அல்லது வடிவங்களைக் கொண்ட மகப்பேறு பிராக்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக, மகப்பேறுகால ஸ்போர்ட்ஸ் பிராக்கள் இரவில் கசியும் தாய்ப்பாலை எளிதாக உறிஞ்சும். அதுமட்டுமல்லாமல், நீட்சித்தன்மை கொண்ட துணியால் ஆன பிரா, பிரா கப்களைக் கீழே இழுப்பதை எளிதாக்குகிறது. இது தாய்ப்பால் கொடுக்கும் மகளிருக்கு மிக வசதியானது. மிகவும் நெகிழ்வான மற்றும் சருமத்தை இறுக்காத ஸ்டைல்களை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காட்டன் நர்சிங் பிராக்கள் பொதுவாகச் சிறந்த தேர்வு எனலாம்.

முடிவுரை (Conclusion ​​​​​​​)

பேட் செய்யப்பட்ட மகப்பேறுகால பிரா நீங்கள் நினைப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய பிராக்கள் தாய்பால் கசிவைத் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நீங்கள் தேர்வு செய்யும் பிரா உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். சரியான பிரா, தாய்மைக்கு மேலும் மகிழ்ச்சி தருவது உறுதி!

​​​​​​​

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.