hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore

Lowest price this festive season! Code: FIRST10

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Women Specific Issues arrow
  • பெண்களில் காணப்படும் முதன்மையான 10 உடல்நலப் பிரச்சனைகள்(Top 10 Women’s Health Issues In Tamil) arrow

In this Article

    பெண்களில் காணப்படும் முதன்மையான 10 உடல்நலப் பிரச்சனைகள்(Top 10 Women’s Health Issues In Tamil)

    Women Specific Issues

    பெண்களில் காணப்படும் முதன்மையான 10 உடல்நலப் பிரச்சனைகள்(Top 10 Women’s Health Issues In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எண்ணற்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றாலும் கூட, பெண்களைப் பொருத்தவரையில் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் பொதுவானதாக இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், இந்த நோய்கள் ஆண்களையும், பெண்களையும் வெவ்வேறு மாதிரியாக தாக்குகிறது. ஆண்களுக்கு வருகின்றபோது தீவிரத்தன்மை கொண்டதாக இல்லாமல் இருக்கின்ற அதே நோய், பெண்களுக்கு என்று வருகின்றபோது உயிர் போகும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றது.

    இதில் மற்றொரு முரண்பாடான விஷயம் என்னவென்றால், பெண்களுக்கான உடல்நலப் பிரச்சனைகள் பெரும்பாலும் தெரியாமலேயே போய்விடுகிறது அல்லது பரிசோதிக்கப்படாமல் இருக்கின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் மிகப் பொதுவான சில உடல்நலப் பிரச்சனைகள் என்னவென்றால் மார்பக புற்றுநோய், மெனோபாஸ், ஸ்டிரோக் மற்றும் கர்ப்ப கால தொந்தரவுகள் ஆகும். முதன்மையான 10 நோய்களை தெரிந்து கொள்ள நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.

    • பக்கவாதம் (Stroke)

    ஆண்களை ஒப்பிடுகையில் தோராயமாக 56,000 பெண்களை இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் தாக்குகிறது. பொதுவாக பக்கவாதம் இரண்டு வகைப்படுகிறது. அவை ஹெமராஜிக் பக்கவாதம் மற்றும் இஸ்கிமிக் பக்கவாதம் ஆகும். இதன் சில பொதுவான அறிகுறிகளில் தீவிர உணர்வின்மை மற்றும் பேசுவதில் ஏற்படும் சிரமம் முதலியவை அடங்கும்.

    • நீரிழிவு(Diabetes)

    நீரிழிவு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையுமே பாதிக்கக் கூடிய ஒரு நோயாகும். அதிலும் நீரிழிவு குறைபாடு உள்ள பெண்களுக்கு இறுதியாக பல்வேறு விதமான இதயநோய்கள் வருகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு சர்க்கரை நோய் காரணமாக மன அழுத்தம், கண் பார்வை கோளாறு மற்றும் எதிர்பாராத சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன.

    சர்க்கரை நோய்க்கு சிறப்பான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆரோக்கியமான உணவு, வாய்வழி மருந்துகள் மற்றும் எண்ணற்ற முறை இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்வது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். உங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டது என்றால், அதிலும் கர்ப்பம் அடைய வேண்டிய காலத்தில் வந்திருக்கிறது என்றால், கர்ப்பம் அடைவது சிக்கலுக்கு உரியதாக மாறக் கூடும்.

    இது மட்டுமல்லாமல் கர்ப்ப கால சர்க்கரை நோயானது உங்கள் குழந்தையை பாதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய நீங்கள் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். தினரி அடிப்படையில் உடற்பயிற்சி செய்வதை நீங்கள் பரிசீலனை செய்யலாம். நீங்கள் புகை பிடிப்பவர் என்றால், அதை உடனடியாக கைவிடுவது நல்லது!

    • இதய நோய்(Heart Disease)

    அமெரிக்காவில், நான்கில் ஒரு பெண் இதய நோய் காரணமாக உயிரிழக்கிறார். இதய நோய்க்கு காரணமாக உள்ள சில விஷயங்கள் என்னவென்றால் அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடிப்பது மற்றும் கடுமையான ரத்த அழுத்தம் போன்றவை ஆகும். பொதுவாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்களுடன் தொடர்புடையவை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். எனினும், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினருமே இந்த நோய்க்கு சம அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    • மார்பக புற்றுநோய்(Breast Cancer)

    இந்த வகை புற்றுநோய் பொதுவாக தாய்ப்பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் இந்த நோய் பரவக் கூடியது மற்றும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது ஆகும். இது மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு பொதுவாக ஏற்படக் கூடிய பிரச்சனையாக இருக்கிறது.

    முதல் கட்டமாக சிலருக்கு மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன. அவை தொட்டாலே மிகுந்த வலியை ஏற்படுத்தும். மருத்துவ சேவைதாரர்கள் மார்பக பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். மார்பகங்களில் தென்படக் கூடிய சில கட்டிகள் அபாயமற்றதாக இருக்கலாம்.

    கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்(Ovarian As Well As Cervical Cancer In Tamil)

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கர்ப்பப்பையின் கீழ் பகுதியில் நிகழக் கூடியது ஆகும். அதே சமயம், கர்ப்பப்பை புற்றுநோய் என்பது ஃபெலோபியன் குழாய்களில் ஏற்படக் கூடியது ஆகும். இது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டால் மிக கடுமையான வலி ஏற்படக் கூடும், வெள்ளைப்படுதல் நிகழக் கூடும் மற்றும் உடலுறவின் போது மிகுதியான வலி ஏற்படும். கர்ப்பப்பை புற்றுநோய் என்றால், சில சமயம் அறிகுறிகளே தென்படாமல் இருக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோயை அறிந்து கொள்ள நீங்கள் பாப் ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம். அதே சமயம், பாப் ஸ்மியர் பரிசோதனைகளிலும் கூட கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்படாமல் போகலாம்.

    • மகப்பேறு நலன்(Gynecological Health)

    மாதவிலக்கு தவிர்த்த மற்ற காலங்களில் அல்லது கர்ப்ப காலத்தின்போது உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது என்றால், உங்களுக்கு பின்வரும் மகப்பேறு பிரச்சனை இருக்கலாம். பால்வினை (STD) நோய்கள் அல்லது இனப்பெறுக்க குழாய் புற்றுநோய் போன்ற பலவேறு விதமான பெண்ணுறுப்பு பிரச்சனைகள் இருக்கலாம். இவற்றுக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால், ஒரு கட்டத்தில் அதன் காரணமாக குழந்தையின்மை மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    • கர்ப்ப கால பிரச்சனைகள்(Pregnancy Issues)

    உங்களுக்கு ஏற்கனவே சில உடல்நல பிரச்சனைகள் இருக்கிறது என்றால், கர்ப்ப காலத்தில் அவை தீவிரமடையக் கூடும். இதுதவிர, அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்றவை கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான சில பிரச்சனைகள் ஆகும். இவற்றை உரிய காலத்தில் கண்டறியாவிட்டால், அது உங்கள் குழந்தையை பாதிக்கக் கூடும். நல்வாய்ப்பாக, கர்ப்பகால பிரச்சனைகள் பல குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எனினும், ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது தான் சிறப்பான பலனை தருவதாக அமையும்!

    • தன்னெதிர்ப்பு நோய்கள்(Autoimmune Diseases)

    உங்கள் உடலில் வைரஸ்களை தாக்கக் கூடிய செல்களானது உங்கள் உடலின் இயக்க செல்களை தாக்க தொடங்குவதே சுய நோயெதிர்ப்பு நோய்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்படுகிறபோது ஒருவருக்கு மிதமான காய்ச்சல், சோர்வு, வெர்டிகோ போன்ற சரும பிரச்சனைகள் போன்ற தொந்தரவுகள் ஏற்படக் கூடும். சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள், முன்கூட்டியே கண்டறிவது மற்றும் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பது போன்றவை இந்தப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தக் கூடிய முறைகள் ஆகும்.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க சரியான நேரம் எப்போது?(When is the best time to plan for postpartum weight loss?In Tamil)

    • எலும்புப்புரை(Osteoporosis)

    உங்கள் உடலில் எலும்புகள் பலவீனம் அடையும் நிலையை இது குறிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எலும்புகள் உடையக் கூடும். மது அருந்துவது, இயக்கமற்ற வாழ்வியல் நடைமுறை, மரபணு காரணங்கள், மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது புகைப்பிடிப்பது போன்றவை எலும்புப்புரை பிரச்சனை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

    எலும்புப்புரை நோய்க்கு நிரந்தர தீர்வு எதுவும் கிடையாது. இதன் தொந்தரவுகள் அல்லது மிகுந்த பாதிப்புகளை குறைப்பதற்காக மருத்துவ உதவியை நாட வேண்டியிருக்கும். சத்து மாத்திரைகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உங்கள் மருத்துவர் வழங்கக் கூடும்.

    • மன அழுத்தம் மற்றும் கவலை(Depression As Well As Anxiety)

    ஹார்மோன் சீரற்ற நிலையை கொண்டிருக்கும் பெண்களுக்கு கவலை அல்லது மன அழுத்தப் பிரச்சனைகள் ஏற்படலாம். இது மட்டுமல்லாமல் மாதவிலக்கு சுழற்சிக்கு முந்தைய நிலையில் தீவிரமான அறிகுறிகளை சிலர் உணரக் கூடும். நீங்கள் குழந்தையை பெற்றெடுத்துள்ளீர்கள் என்றால், ‘பேபி ப்ளூஸ்’ என்று சொல்லக் கூடிய பொதுவான மன அழுத்தப் பிரச்சனை ஏற்படலாம்.

    இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத உணர்ச்சி மாற்றங்கள், சோகம் மற்றும் நீடித்த சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அதே சமயம், கர்ப்ப குழுக்குள் அல்லது மருத்துவ சேவைதாரரை அணுகி நீங்கள் உதவி கோரலாம்!

    முடிவுரை(Conclusion)

    பெண்களுக்கான நோய்களுக்கு தீர்வு தரக் கூடிய சிறப்பான வழிமுறை என்னவென்றால் நோய்களை ஆரம்பகால கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கடைப்பிடிப்பது ஆகும். குணப்படுத்துவதற்கு கடினமான நோய்கள் மற்றும் இதர பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மருத்துவ சேவைதாரரிடம் ஆலோசனை பெறலாம். அடிக்கடி உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்!

    நீங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் உங்கள் மன நலனையும் பாதிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டியது கட்டாயம் ஆகும் அல்லது உங்களைப் போலவே பிரச்சனை கொண்ட மக்களை சந்தித்து விவாதிக்கலாம். பெரும்பாலான ஸ்ட்ரெஸ்களை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்கவும் இது உங்களுக்கு உதவிகரமாக அமையும்!

    Tags :

    Depression in tamil, Anxiety in tamil, Thyroid cancer in tamil, Women specific health issues in tamil.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.