
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதனால் இரவில் நல்ல தூக்கமின்றி பகலில் உறங்குகிறீர்களா? இதற்கு காரணமாக நள்ளிரவில் அருந்தும் சூப், காபி அல்லது பிற திரவங்களின் மீது பழியை சுமத்தலாம். ஆனால் இந்த சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்தால் வழக்கமான லேப் டெஸ்ட் செய்யவேண்டிய நேரம் இதுதான்.
நீரிழிவு நோய் என்பது இன்சுலின் ஹார்மோனை உருவாக்கும் அல்லது எதிர்வினையாற்றும் ஒரு நபரின் திறன் பாதிக்கப்படும் ஒரு கண்டிஷன் ஆகும். இதன் விளைவாக கார்போஹைட்ரேட்டுகளின் அசாதாரண வளர்சிதை மாற்றம் ஏற்படும். இது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இந்நோயின் முக்கிய அறிகுறிகள் இரவில் அதிகப்படியான சிறுநீர் கழித்தல், தாகம் அதிகரித்தல் மற்றும் அதீத பசி உணர்வு ஆகியவையாகும். நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் கையாளும் உத்திகளை நீங்கள் தேடுகிறீர்களானால், நீரிழிவு வகை 2 பற்றிய உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க இந்தக் கட்டுரையை இறுதி வரைப் படியுங்கள்.
சர்வதேச அளவில் பொது சுகாதாரத்தில் நீரிழிவு நோயின் சுமை மிக அதிகமாக உள்ளது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த கண்டிஷன் இன்னும் மோசமாக உள்ளது. சமீபத்திய காலங்களில் இந்த நோய் மக்களை அதிக அளவில் தாக்கியுள்ளது. அதோடு, விரைவில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை மிகவும் மோசமானது. இது நோயுடன் தொடர்புடைய இறப்பு மற்றும் நோய் பாதிப்பு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கான மிகவும் பயனுள்ள உத்தி என்னவென்றால், ஆரம்ப காலத்திலேயே நோயறிதல், சிக்கல்களை ஆய்வு செய்தல், நோயாளிகளுக்கு உகந்த சிகிச்சையை வழங்குதல் மற்றும் ப்ரீடயாபட்டீஸ் உள்ள நபர்களுக்கு முதன்மை தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல். ஆரம்ப காலத்திலேயே நோயை கண்டறிவதனால் ப்ரீடயாபட்டீஸ் உள்ளவர்களை அடையாளம் காண உதவுகிறது. மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் அல்லது சிகிச்சையை முறையாகச் செயல்படுத்துவது நோயின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்த உதவும். சில நேரங்களில் அதை முற்றிலுமாகத் தடுக்கலாம்.
கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிபார்க்கவும்.
இரவில் அதிகப்படியான சிறுநீர் கழித்தல்
அதிகம் தாகம் எடுப்பது போன்ற உணர்வு
காரணம் தெரியாமல் அதிக எடை இழப்பது
அதீத பசி உணர்வு
மங்கலான பார்வை
கைகள் அல்லது கால்களில் அல்லது இரண்டிலும் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு (பின்கள் மற்றும் ஊசிகள் குத்துவது போன்ற உணர்வு).
பலவீனம் அல்லது சோர்வு.
8. தோல் வறட்சி.
9. புண்கள் அல்லது காயங்கள் குணமாவதில் மிக தாமதம்
10. மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள்
கர்ப்பகால நீரிழிவு என்பது பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்று. மற்றும் இது கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பெண் சாதாரண காலங்களில் நீரிழிவு நோயின் எந்த அறிகுறிகளையும் அனுபவித்திருக்க மாட்டார், ஆனால், பிரக்னன்ஸி காலத்தில் இந்த கண்டிஷன் உருவாகலாம். மகப்பேறு மருத்துவர் பொதுவாக கர்ப்பத்தின் 24 வது முதல் 28 வது வாரத்தில் ஸ்கிரீனிங் சோதனைகளைச் செய்கிறார். பிரக்னன்ஸி கால நீரிழிவு நோயின் அறிகுறிகளான தாகம் அதிகரித்தல், சோர்வாக உணர்தல் மற்றும் வாய் உலர்ந்து போதல் போன்ற நீரிழிவு டைப் 2 -யைப் போலவே இருக்கும்.
உணவு மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை செய்வதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்கலாம். நோய் கையாள்வதை இரண்டு படிகளாகப் பிரிக்கலாம்:
சிகிச்சை மேலாண்மை
நீரிழிவு நோயானது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறாகக் கருதப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை ஆரோக்கியமான வரம்புகளுக்குள் பராமரிக்க முடியும்.
நாம் உண்ணும் உணவு நொதிந்து சர்க்கரையை உருவாக்குகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை நிறைய சாப்பிட வேண்டும். உங்கள் கார்போஹைட்ரேட்டுகள் நேரடியாக சர்க்கரையாக மாற்றப்படுவதால், அவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை கட்டுப்படுத்துங்கள்.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது எந்த விளையாட்டையும் விளையாடுவது போன்ற உங்களுக்கு பிடித்த உடல் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது. இதன் நோக்கம் குறைந்தது 30 நிமிட மிதமான செயல்பாட்டைக் கொண்டிருப்பது. இது உங்கள் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் மற்றும் பெரும்பாலான நாட்களில் உங்கள் சுவாச விகிதத்தை அதிகரிக்கும். படிப்படியாக அதிகரிக்கும் உடற்செயல்பாடு இதய நோய் போன்ற சிக்கல்களை உங்களிடமிருந்து தள்ளி வைத்திருக்கும். மேலும், அதிகப்படியான உடல் எடையை குறைக்கவும் மன அழுத்த அளவைக் குறைக்கவும் உதவும்.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க சரியான நேரம் எப்போது?(When is the best time to plan for postpartum weight loss?In Tamil)
பின்தொடர்தல்களுக்கு நீங்கள் தவறாமல் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் ஹெச்.பி.ஏ1சி அளவைக் கண்காணிப்பது மிக அவசியமாகும். நீரிழிவு நோயானது கண் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நோயாளிகள் வருடத்திற்கு ஒரு முறை முழு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், எந்தவொரு கால் புண், அல்லது தொற்றுநோயைப் பற்றியும் கவனமாக இருங்கள். மேலும், பின்கள் மற்றும் ஊசிகள் குத்துவது போன்ற உணர்வுகள் நரம்பு சேதம் அறிகுறிகளைக் கண்காணிக்கவும்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, யோகா, தியானம், உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது உடற்பயிற்சிகளைத் தொடர்வதன் மூலம் உங்கள் மன அழுத்த அளவை நிர்வகிப்பது மிகவும் அவசியமாகும். பாகிஸ்தானின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், தனக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டதற்கு அதிக அளவிலான மன அழுத்தங்களே காரணம் என்றும், அவரது குடும்பத்தில் வேறு யாருக்கும் நீரிழிவு நோய் இல்லை என்றும் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நீரிழிவு நோயானது இதயக் கோளாறுகளின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. மேலும், நீங்கள் ஒரு தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும். உங்கள் மருத்துவரின் உதவியுடன் புகைபிடிப்பதை நிறுத்த முயலுங்கள்.
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, ஆல்கஹால் உட்கொள்ளும் பெண்கள் ஒரு நாளைக்கு 0.6 அவுன்ஸ்க்கு மேல் குடிக்கக்கூடாது, ஆண்கள் ஒரு நாளைக்கு 1.2 அவுன்ஸ்க்கு மேல் குடிக்கக்கூடாது.
நீரிழிவு நிர்வாகத்தின் முதன்மையான நோக்கமானது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவது, சிக்கல்களைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது, இறப்பு விகிதங்களைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பது ஆகியவை ஆகும். நாள்பட்ட நீரிழிவு நோயின் சிக்கல்களை இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் இது நரம்பியல், நெஃப்ரோபதி மற்றும் ரெட்டினோபதி போன்ற மைக்ரோவாஸ்குலர் சிக்கல்களின் நிகழ்வையும் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பின் அளவையும், நோயின் சிக்கல்கள் தொடங்கிவிட்டதா இல்லையா என்பதையும் பொறுத்தே வழங்கப்படுகிறது. எனவே, மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி சிகிச்சை நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும்.
உங்களுக்கோ அல்லது உங்களை நெருங்கியவர்களுக்கோ நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் பீதியடைய வேண்டாம். மாறாக நோயை கையாளவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், ஒரு உத்தியை உருவாக்க வேண்டும். வெற்றிக்கான திறவுகோல் என்பது ஆரம்பகால நோயறிதலாகும். நோய் மற்றும் அதன் ஆரம்ப கால அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதை அடைய முடியும்.
Diabetes in tamil, diabetes meaning in tamil, symptoms of diabetes in tamil, reasons for diabetes in tamil, how to manage diabetes in tamil
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |