

Pregnancy
7 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
தேயிலை மரத்தின் அறிவியல் பெயர் மெலலூகா ஆல்டர்னிஃபோலியா, இது ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது. இது சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. தேயிலை மர எண்ணெயை பாக்டீரியாக்களை எதிர்க்கிறது. எனவே, இதனை வீட்டை சுத்தப்படுத்தவும், தலையில் உள்ள பொடுகை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயின் விலை குறைவு மற்றும் சருமத்தின் வெளிப்புற பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
சருமத்தின் வெளிப்புற சிகிச்சைகளுக்கு, நீங்கள் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன, அதாவது தேயிலை மர எண்ணெய், கிருமிகள் மற்றும் வைரஸ்களை அகற்றுகிறது. தேயிலை மர எண்ணெயை சுய பராமரிப்பிற்கான ஆயுர்வேத முறையாகப் பயன்படுத்தலாம். தேயிலை மர எண்ணெய் முகம், சருமம் மற்றும் முடி போன்றவற்றிற்கு பல பயன்களை தருகிறது.
1. பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கு தேயிலை மர எண்ணெயின் பயன்கள் (Tea Tree Oil for Dandruff and Hair Loss)
பொடுகு மற்றும் முடி உதிர்தல் நமக்கு ஒரு தொல்லையாகவும் வருத்தம் தரக் கூடியதாகவும் இருக்கலாம். டீ ட்ரீ கிட், பொடுகுக்கு சிகிச்சையளிக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது. தேயிலை மர எண்ணெய் பெரும்பாலும் ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுகிறது. ஏனெனில் இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 4 வார உபயோகத்திற்கு பிறகு, தேயிலை மர எண்ணெய் ஷாம்பு பொடுகுத் தொல்லையை 41% வரை குறைக்கிறது. தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் தொடர்பான அறிகுறிகளையும் குறைக்கிறது.
2. சருமம் தொடர்பான பிரச்சனைகளில் தேயிலை மர எண்ணெயின் நன்மைகள் (Skin Benefits of Tea Tree Oil)
தேயிலை மர எண்ணெயில் ஏராளமான சரும பராமரிப்பு பயன்கள் உள்ளன. டீ ட்ரீ ஃபேஷியல் கிட்டைக் கொண்டு முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கலாம், ஏனெனில் இது முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அடைப்புகளை நீக்கி, எரிச்சல், வீக்கம் மற்றும் முகம் சிவத்தலை குறைக்கிறது. ஒரு ஆய்வின் படி, தேயிலை மர எண்ணெய் சார்ந்த சிகிச்சைகளைப் பெற்றவர்கள் தங்கள் முகத்தில் குறைந்த எண்ணெய்ப் பசையும், பெரிய துளைகளும் இருப்பதை கவனித்தனர். டீ ட்ரீ ஃபேஸ் கிட்டின் கூறுகளின் ஆக்ஸிஜனேற்ற குணங்கள் உங்கள் சருமத்தை பிரகாசமாக்கவும் வெண்மையாக்கவும் உதவி புரிகின்றன. உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும், வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கவும் லோஷன்கள் மற்றும் சோப்புகளில் டீ ட்ரீ ஸ்கின் பியூரிஃபையிங் கிட்டை உபயோகிக்கவும். தேயிலை மர எண்ணெயில் பூஞ்சை தொற்றை எதிர்க்கும் குணங்கள் உள்ளதால், படர்தாமரையை விரைந்து குணப்படுத்துகிறது.
3. உங்கள் கைகளை கிருமிகள் அற்றதாக வைத்திருக்க விரும்பினால், இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்! (If you want to keep your hands germ-free, use this oil)
கமர்ஷியல் புராடக்டுகளுக்குப் பதிலாக தேயிலை மர எண்ணெய் போன்ற இயற்கையான சானிடைசர்களைப் பயன்படுத்தலாம். தேயிலை மர எண்ணெயில் ஆன்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் குணங்கள் இருப்பதால் சருமத்தில் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்ற உதவுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கலாம். தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கைகளை கழுவும் போது தேயிலை மர எண்ணெயை சேர்ப்பது அதன் செயல்திறனை அதிகரிக்கிறது மற்றொரு சோதனையில் தெரியவந்துள்ளது.
4. தேயிலை மர எண்ணெயின் பூச்சிகளை விரட்டும் பண்புகள் (Insect repellent properties of tea tree oil)
தேயிலை மர எண்ணெயின் பல பயன்பாடுகளில் பூச்சி விரட்டும் பண்பும் ஒன்றாகும். அதன் தனித்துவமான வாசனை மற்றும் இரசாயன தயாரிப்பு காரணமாக இது ஒரு சிறந்த பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. DEET (பூச்சி விரட்டிகளின் முக்கிய மூலப்பொருள்) ஐ விட தேயிலை மர எண்ணெயானது கொசு விரட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
5.இயற்கைசார் டியோடரண்டுகளில் தேயிலை மர எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது( As a natural deodorant, tea tree oil may be effective)
உங்கள் வியர்வையில் எந்த ஒரு வாசனையும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் சருமம் மற்றும் வியர்வை சுரப்பிகளில் உள்ள நுண்ணுயிரிகளால் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. நுண்ணுயிர்களை எதிர்க்கும் குணங்களின் காரணமாக தேயிலை மர எண்ணெயை ஒரு இயற்கை டியோடரண்டாக பயன்படுத்தலாம். இது கமர்ஷியல் ஆண்டிபர்ஸ்பிரெண்ட் மற்றும் டியோடரண்டுகளுக்கு ஏற்ற மாற்று பொருளாக அமைகிறது.
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் பின்வரும் ஆபத்துகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன (The following are the potential hazards and side effects of using this oil in Tamil)
தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும் சிலருக்கு, குறிப்பாக சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களுக்கு, சிறிது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். காயங்கள், தடிப்புகள் மற்றும் சரும எரிச்சல் போன்றவற்றின் அருகில் பயன்படுத்தும்போது சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும். முகத்தில் முகப்பரு, வறட்சி, எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் முதல் முறையாக இந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அலர்ஜியை தவிர்க்க முதலில் அதை சிறிதளவு பயன்பத்தி சோதிக்க வேண்டும். இந்த எண்ணெயை உங்கள் முகத்தில் தடவும்பொது கண்களில் படாமல் பார்த்து கொள்ளவும். இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால் இதனை உட்கொள்வதால் அரிப்பு, வாந்தி மற்றும் மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா அல்லது வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சனைகள் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவரிடம் கூறி தகுந்த பரிசோதனை செய்து கொள்ளவும்.
Five excellent tea tree benefits for your skin in English , Five excellent tea tree benefits for your skin in Telegu , Five excellent tea tree benefits for your skin in Bengali
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips







கரு பதியும் போது ஏற்படும் இரத்தப்போக்கு (இம்பிளான்டேஷன் பிளீடிங்) மற்றும் மாதவிடாய் ஆகிய இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவது? | How to Differentiate Between Implantation Bleeding and Your Periods in Tamil

ஸ்டெம் செல் பாதுகாப்பின் நன்மைகள் என்ன? |What Are The Benefits Of Stem Cell Preservation in Tamil

குழந்தையின் முகப்பரு: காரணம் மற்றும் அறிகுறிகள் | Baby Acne Causes and Symptoms in Tamil

கருவில் இருப்பது ஆணா பெண்ணா: பாலின கணிப்பு | Baby Girl Belly Vs Baby Boy Belly in Tamil

பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil

கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil