
நம்மில் பலர் சுண்ணாம்பைச் சாப்பிட விரும்புகிறார்கள் அல்லது சாப்பிடுகிறார்கள். இது மற்றவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், ஊட்டச்சத்துக் குறைபாடு தான். ஆனால், சிலர் விஷயத்தில் இது அவ்வளவு எளிதானது அல்ல. அவர்களால் சுண்ணாம்பு சாப்பிடும் உந்துதலைக் கட்டுப்படுத்த முடியாது.
சாக்பீஸ், மண், காகிதம் போன்ற உணவல்லாத பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற கடுமையான ஏக்கம் உள்ளவர்கள் பிகா சிண்ட்ரோம் எனப்படும் மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நிலைக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இதைப் பெரும்பாலும் சரியான வழிகாட்டுதல் மூலமும் துணைப்பொருட்கள் கொடுப்பதன் மூலமும் தீர்க்கலாம். சுண்ணாம்பு சாப்பிடுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டுரை இந்தப் பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.
பிகா சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய உணவு அல்லாத வெவ்வேறு பொருட்களைச் சாப்பிடுவதற்கான உந்துதலை உணர்கிறார்கள். ஆனால் சிலர் சுண்ணாம்பை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் மற்ற உணவுகளுக்கு ஏங்குவதில்லை. சுண்ணாம்பை மட்டுமே சிலர் சாப்பிடுவதற்கான காரணங்கள் இவை:
அவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவில் துத்தநாகமும் இரும்பும் உள்ளன.
அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் தங்கள் அடுத்தவேளை உணவைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
எண்ண சுழற்சி நோய் (ஓசிடி) நோயாளிகள் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுண்ணாம்பு சாப்பிடுவது ஆறுதலளிக்கிறது.
சுண்ணாம்பின் மொறுமொறுப்பும் சுவையும் அவர்களுக்குப் பிடிக்கிறது.
எப்போதாவது சுண்ணாம்பு சாப்பிடுவது தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், அதை உண்ணும் ஏக்கத்தை ஒருவரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
பிகா சிண்ட்ரோம் நோயைக் கண்டறிவது பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
நோயாளியின் உணவுப் பழக்கத்தைப் பற்றிக் கேட்டல்.
எத்தனை முறை ஏக்கம் தோன்றுகிறது என்பதை அறிதல்.
ஏக்கத்தை பாதிக்கக்கூடிய பிற காரணிகளைச் சரிபார்த்தல்.
இந்தத் தகவல்களைக் கொண்டு, நோயாளியின் சுண்ணாம்பு உண்ணும் பழக்கத்தில் ஒழுங்குமுறை ஏதும் உள்ளதா என்று கண்டுபிடிக்க மருத்துவர் முயற்சிப்பார். ஒழுங்குமுறை இருப்பதாகத் தெரிந்தால், மருத்துவர் மேற்கொண்டு இரத்தப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்லலாம். இந்தப் பரிசோதனைகள் இரத்தசோகை, ஈய விஷம் அல்லது பிற மருத்துவ நிலைகள் நோயாளிக்கு இருக்கின்றதா என்று சரிபார்க்கச் செய்யப்படுகின்றன. இவை இருந்தால், நோயாளிக்கு மருத்துவ உதவி தேவைப்படும். இத்தகைய நோயாளிகள் கடுமையான உடல்நலச் சீர்கேடு ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுண்ணாம்பு நச்சுத்தன்மையற்றது என்றாலும், அடிக்கடி அதை உட்கொள்வது கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படுத்தும்.
சுண்ணாம்பு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பின்வருமாறு:
சுண்ணாம்பு உண்ணும் பழக்கம் காரணமாக பல் சொத்தை, பல் சிதைவு போன்ற பல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சுண்ணாம்பு ஒரு உணவு அல்லாத பொருளாக இருப்பதால், அது உடலால் எளிதில் ஜீரணிக்கப்படாது. அது நோயாளிக்கு குடல் அடைப்பையும் மலச்சிக்கலையும் ஏற்படுத்தக்கூடும்.
தீவிரமாக சுண்ணாம்பு உண்ணும் பழக்கம் உள்ள நோயாளிகள் காலப்போக்கில் உண்மையான உணவுப் பொருட்களை சாப்பிடும் திறனை இழக்கிறார்கள். இது நோயாளிக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் எடை இழப்பையும் ஏற்படுத்துகிறது.
சுண்ணாம்பு சாப்பிடுவதால், நோயாளிகளின் இரத்தத்தில் அதிக அளவு நச்சுகள் சேருகின்றன. மருத்துவர்கள் இத்தகைய நோயாளிகளின் இரத்தத்தில் ஈயம் அல்லது ஒட்டுண்ணிகளின் சுவடுகளைக் கண்டுபிடிப்பதுண்டு.
சில பெண்கள் கர்ப்பகாலத்தில் தீவிரமான உணவு ஏக்கம் கொள்கிறார்கள். வெவ்வேறு உணவுப் பொருட்களை உண்ண முயல்கிறார்கள். பொதுவாக, சுண்ணாம்புக்கு ஏங்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரிடம் கர்ப்பகாலத்தில் சுண்ணாம்பு சாப்பிடலாமா? எனக் கேட்பதுண்டு. கர்ப்பிணிப் பெண்கள் சுண்ணாம்பு சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும். கர்ப்பகாலத்தில் சுண்ணாம்பு சாப்பிடுவதன் மூலம், தாய் தனது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சேராமல் தடுக்கிறாள். இது கருவின் வளர்ச்சியைப் பாதித்து குழந்தையின் வளர்ச்சியையும் தாமதமாக்கக்கூடும்.
சில பெண்கள் கர்ப்பத்தின் 9 வது மாதத்தில் சுண்ணாம்பு சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று தவறாக நினைக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் குழந்தை முழுமையாக வளர்ந்திருப்பதால், அதற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அது சரியல்ல. தாயின் சுண்ணாம்பு உண்ணும் பழக்கம் கர்ப்பத்தின் எந்தக் கட்டத்திலும் குழந்தையைப் பாதிக்கும். 9 வது மாதமாகவே இருந்தாலும், தாய் சுண்ணாம்பு சாப்பிட்டால், அவள் உண்மையான உணவுக்கு பதில் சுண்ணாம்பைத் தின்னுகிறாள். இது ஊட்டச்சத்து இழப்பை ஏற்படுத்துவதோடு பசியையும் அடக்கிவிடுகிறது. இதன் விளைவாக, குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால், இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். சுண்ணாம்புக்கு ஏங்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் சிக்கலைத் தீர்க்க கூடுதல் மருந்துகளைப் பெறத் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சுண்ணாம்பு சாப்பிட ஏங்கும் நோயாளிகளுக்கு இரண்டு வெவ்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. நோயாளியைக் கண்டறிந்து சில பரிசோதனைகளை நடத்திய பிறகு மருத்துவர்கள் பொருத்தமான சிகிச்சைத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். பரிசோதனை முடிவுகள் நோயாளிக்கு ஏற்ற சிகிச்சையை அடையாளம்காண மருத்துவர்களுக்கு உதவுகின்றன.
1. பரிசோதனை அறிக்கைகளின் மூலம் நோயாளிக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இருப்பது தெரிந்தால், வைட்டமின்கள் மற்றும் பிற கூடுதல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நோயாளி இத்தகைய கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு ஏக்கம் பொதுவாக நீங்கிவிடும்.
2. எண்ண சுழற்சி நோய் (ஓசிடி) அல்லது பிகா சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைமைகள் உள்ள நோயாளிகள் தங்கள் உணவு ஏக்கத்தை சமாளிக்க சிகிச்சையாளர்களை அணுகி உதவிபெறவேண்டும்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள் மற்றும் அதன் தீர்வுகள்
எப்போதாவது சுண்ணாம்பு சாப்பிட்டால் அது ஒரு தீவிரப் பிரச்சனை அல்ல. ஆனால், சுண்ணாம்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடியும் தோன்றினால், நோயாளிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பிகா சிண்ட்ரோம்வைப் பற்றியும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சுண்ணாம்பு சாப்பிடும் பழக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றியும் மேலும் அறிய, மைலோ செயலியைப் பயன்படுத்தவும்.
References
1. Advani S, Kochhar G, Chachra S, Dhawan P. (2014). Eating everything except food (PICA): A rare case report and review. J Int Soc Prev Community Dent.
2. Bonglaisin JN, Kunsoan NB, Bonny P, Matchawe C, Tata BN, Nkeunen G, Mbofung CM. (2022). Geophagia: Benefits and potential toxicity to human-A review. Front Public Health.
Why do people eat chalk in Tamil, What are risk of eating chalk in Tamil, Eating chalk during pregnancy in Tamil, Eating Chalk: What You Need to Know About This Unusual Craving in English, What Causes Some People to Want to Eat Chalk in Hindi, What Causes Some People to Want to Eat Chalk in Telugu, What Causes Some People to Want to Eat Chalk in Bengali
Yes
No

















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |