
கணிக்கப்பட்ட தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன் நிகழும் பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. குறைப்பிரசவ குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து விடுவதால் அத்தகைய குழந்தைகளுக்கு சில சிக்கல்கள் இருக்க வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், தாய்ப்பால் உட்கொள்வதில் பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, இரத்த சோகை, சுவாசக் கோளாறு போன்றவை இதில் அடங்கும். இந்த குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பு மற்றும் மருத்துவ மேற்பார்வை தேவைப்படுகிறது. ஏனெனில், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிறந்துள்ளனர்.
குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் உள்ளுறுப்புகள் முழுமையாக வளர்ந்திருக்காது. இது ஒரு குறிப்பிட்ட அபாய கட்டத்தில் அவர்களை இருக்க வைக்கிறது. இது சரியான கவனிப்பு மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வந்த பிறகு படிப்படியாக மறைந்துவிடும். எனவே, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது என்பது குறைப்பிரசவத்தில் உங்களுக்கு குழந்தை பிறந்து நீங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவதில் இருந்து தொடங்குகிறது. முதலில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை சில நாட்கள் குழந்தைக்கான சிறப்பு பராமரிப்பு அல்லது என்ஐசியூ-ல் (பச்சிளங்குழந்தைக்கான சிறப்பு பராமரிப்பு) வைத்து பார்க்க வேண்டும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நீங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தால் நீங்கள் சில முக்கியமான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும்.
கணிக்கப்பட்ட தேதிக்கு முன்பே பிறந்த குழந்தையை வீட்டில் எப்படி பராமரிப்பது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? உரிய காலத்தில் பிரசவமாகும் குழந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்களோ அதே முக்கியத்துவத்தை இந்தக் குழந்தைக்கும் கொடுக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கொஞ்சம் கூடுதலாகவும் இந்தக் குழந்தையின் மீது நீங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உணவு மற்றும் தூக்கம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக நிறை மாத குழந்தைகளை விட குறை மாத குழந்தைகள் அதிகம் தூங்குவார்கள். அவர்கள் தூங்குவதற்கான சரியான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திடீர் குழந்தை இறப்பு நோய் அறிகுறிக்கான (SIDS) அதிக அபாயம் உள்ளது. இந்த நிலை ஏற்படுவதைத் தடுப்பததற்காக, நீங்கள் இதை உறுதி செய்ய வேண்டும்:
உங்கள் குழந்தையை நிமிர்ந்து படுத்து தூங்க வைக்க வேண்டும்.
உங்கள் குழந்தை நீங்கள் தூங்கும் அதே அறையில் தூங்க வைக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் மெத்தை உறுதியாகவும், தட்டையாகவும், தலையணைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தை உங்களுடன் சேர்ந்து உங்கள் பக்கவாட்டில் தூங்கக் கூடாது.
ஆரம்ப நாட்களில், பிறந்த உடனேயே, குறை மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பாலை உறிஞ்சுதல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல்கள் இருக்கும், எனவே, உங்கள் குழந்தைக்கு ஐவி அல்லது குழாய்கள் மூலம் தற்காலிகமாக உணவளிக்க வேண்டும்.
இத்தகைய குழந்தைகள் முழுமையான வளர்ச்சியை பெறுவதற்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே, குறைப்பிரசவ குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது ஆகும். குறிப்பாக குழந்தை பிறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னும் பின்னும் தாய்க்கு உண்டாகும் சீம்பால் (முதல் பால்), குறைமாத குழந்தைகளுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும். அவை பின்வருமாறு:
தொற்றுநோயை எதிர்த்துப் போராட உங்கள் குழந்தைக்கு உதவுகிறது
உங்கள் குழந்தையின் குடலை வளர்ச்சியடையச் செய்கிறது
உங்கள் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது
உங்கள் குழந்தை வளர்ச்சி அடையவும் மேம்படவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பொதுவாக 8-10 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது இருக்கும். நீங்கள் 4 மணி நேரத்திற்கு மேல் இடைவெளி விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது நீர்ச்சத்து பற்றாக்குறையை குழந்தைக்கு ஏற்படுத்திவிடும். ஆனால், அதேநேரம் அந்த குழந்தையின் குடல்கள் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குழந்தைக்கு அதிகமாக தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
குறைப்பிரசவ குழந்தைகள் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு பின்வருவனவற்றை கடைப்பிடியுங்கள்:
உங்கள் குழந்தையை சந்திக்க வருபவர்கள் கைகளை சுத்தம் செய்து கொண்டு வருகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நோய்த்தடுப்பு என்பது மேம்பட்ட ஹெல்த்துக்கான பாதை. மருத்துவர் பரிந்துரைத்த அட்டவணைகளின்படி உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுங்க.
குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதையும் உரிய சுகாதாரத்தை கடைப்பிடிப்பதையும் உறுதிப்படுத்திக்கோங்க.
உங்க வீட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்க
முதல் சில வாரங்களில் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துடுங்க.
இதையும் படிக்கலாமே! - மோட்டார் ஸ்கில்களின் குழந்தையின் தசைஇயக்கு திறன் முக்கியத்துவம் என்ன?(What is the significance of motor skills? In Tamil)
உங்கள் குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், குழந்தை நல மருத்துவரிடம் முதல் சந்திப்பைத் திட்டமிடுங்கள். உங்கள் குழந்தையின் ஹெல்த்தையும் வளர்ச்சியையும் கண்காணிக்க குழந்தை மருத்துவரைப் பார்ப்பது அவசியம். மருத்துவர் பரிந்துரைத்தபடி உங்கள் குழந்தைக்கு வழக்கமான செக்-அப் மற்றும் டெஸ்ட்டுகளை செய்யுங்கள். உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் சில விஷயங்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
உங்கள் குழந்தை வீட்டில் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், வழக்கமாக இல்லாத எதையும் குழந்தையிடம் நீங்கள் கண்டாலோ அதையும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
வயதுக்கு ஏற்ப குழந்தை எடை கூடுகிறதா என்பதையும் செக் பண்ணி பாருங்கள்.
இரத்தப் பரிசோதனை, காது கேட்கும் திறன் மற்றும் பார்வை திறன் பரிசோதனை போன்ற வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்
உங்க குழந்தை வளர்ச்சியின் முன்னேற்றத்தை பதிவு செய்யுங்கள்.
குறைப்பிரசவத்தில் பிறந்த உங்கள் குழந்தைக்கு கங்காரு தாய் முறை பராமரிப்பு தொடக்கத்தில் சில வாரங்களுக்குத் தேவை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கான கங்காரு தாய் முறை பராமரிப்பு என்பது சருமத்துடன் சருமம் தொடர்பு கொள்ளும் முறை ஆகும்.
இந்த முறை புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பயிற்சி என நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு நாப்கின் உடுத்தி, போர்வையால் போர்த்தி உங்கள் நெஞ்சின் மீது ஓய்வெடுக்க வைக்கலாம். அதனால், குழந்தை உங்கள் உடலுடன் நெருக்கமாக இருந்து பாதுகாப்பாக உணரும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான கங்காரு பராமரிப்பு முறையின் நன்மைகள் பல உள்ளன:
உங்கள் குழந்தை உணரும் வலி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது.
ஹெல்த்தியான எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதை எளிதாக்குகிறது.
உங்கள் குழந்தையை அதன் புதிய சூழலுக்கு மாற்றியமைத்து ஆறுதல்படுத்துகிறது.
உங்கள் குழந்தையின் இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் கொழுப்பு குறைவாக இருப்பதால் இது உடல் வெப்பத்தை உருவாக்க உதவுகிறது.
நிறைமாதக் குழந்தைகளைப் போல உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாததால், குறைமாதக் குழந்தைகள் உடல் வெப்பத்தை விரைவாக இழக்க நேரிடும். உங்க குழந்தையின் உடல் வெப்பநிலை மற்றும் ஹெல்த் சீரானவுடன், நீங்கள் அவர்களை குளிப்பாட்டலாம்.
உங்கள் குழந்தையின் குளியல் நடைமுறை இப்படி இருக்க வேண்டும்:
குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டவும்.
குழந்தையை குளிப்பாட்டிய உடன், உடனடியாக உடம்பை துடைத்துவிட கைக்கெட்டும் தூரத்தில் துண்டை வைத்துக் கொள்ள வேண்டும். துடைத்துவிட்டு உடனடியாக குழந்தைக்கு போர்த்திவிட வேண்டும்.
உங்க குழந்தையை அலங்கரித்து, ஒரு ஸ்வாடில்/சால்வையில் போர்த்தி வைக்கவும் அல்லது ஸ்லீப்பிங் பேக்கில் வைக்கவும்.
Note: குறிப்பு:
வானிலை மிகவும் சூடாக இருந்தால், குழந்தைகள் அதிக சூட்டை உணரக் கூடும். இது, திடீர் குழந்தை இறப்பு நோய் அறிகுறியின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி, வானிலைகளுக்கு ஏற்ப குழந்தையை பாதுகாப்பாக வைப்பதாகும்.
குழந்தைகளை பாதிக்கும் நோய் மற்றும் அவசரநிலைகளை அடையாளம் கண்டு கையாள்வதில், முன்கூட்டியே பெற்றோர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும். சாத்தியமான அபாயங்களிலிருந்து உங்கள் குழந்தையை மீட்பதற்கு சிபிஆர் மற்றும் உயிர்காக்கும் திறன்கள் போன்ற அடிப்படை நுட்பங்களில் பயிற்சி பெறுங்கள்.
நிறைமாத குழந்தைகளை விட குறைமாத குழந்தைகள் வித்தியாசமான வேகத்தில் வளர்வதை நாம் அறிவோம். இருப்பினும், அந்தக் குழந்தைகளும் இறுதியில் வளர்ந்து விடுவார்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கு வளர்ச்சி அட்டவணையை மெயின்டெயின் செய்ய உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகுங்க.
உங்கள் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைப் புரிந்துகொள்ள உங்கள் குழந்தையின் மைல்கற்களை நீங்கள் பதிவு செய்யலாம். இது ஏதேனும் குறிப்பிட்ட பின்னடைவு அல்லது உடனடியாக சிகிச்சையளிக்கக் கூடிய சிக்கல்களைக் கண்டறிய உதவும்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை எப்படி கவனித்துக்கொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யும்போது நீங்கள் நன்றாக உண்பது, ஓய்வெடுப்பது மற்றும் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வதை செய்யாமல் விட்டு விடாதீர்கள். பெரும்பாலும் தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் கவனிக்காமல், தங்களுடைய விலைமதிப்பற்ற குழந்தைகளுக்காகத் தங்கள் கவனத்தை செலுத்துகிறார்கள்.
உங்களால் முடிந்தவரை உங்களின் மற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்க.
உங்களால் முடிந்த போதெல்லாம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்.
நீங்கள் விரும்புவதைச் செய்ய நேரம் ஒதுக்குவதன் மூலம் உங்களை நன்றாக நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அதிகமாக மனச்சோர்வடைந்தால், தொழில்முறை உதவியைப் பெற தயங்காதீர்கள்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை வீட்டில் வைத்து கையாள்வது சில சமயங்களில் கஷ்டம் தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், உங்கள் குழந்தையின் வளர்ச்சி மேம்பட உதவும் உத்திகளை நீங்கள் இறுதியில் கற்றுக்கொள்வீர்கள். அனைத்து குழப்பங்களுக்கிடையிலும், உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியாக இருப்பதை மறந்து விடாதீர்கள்.
Premature babies in tamil, how to grow up premature babies in tamil, tips for carring the premature child in tamil, how to care yourself in tamil,
Yes
No

















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |