


Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு கர்ப்பிணிப் பெண் சீரான இரத்த ஓட்டம் மற்றும் உடல் ஆரோக்கியமாக செயல்படவும், தன்னை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரானது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் செரிமானத்தில் உதவுகிறது மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது, இது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. மேலும் இது உடலில் கொழுப்பு கரையவும், கர்ப்ப காலத்தில் சரியான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது.
இந்த நன்மைகளுடன் கூடுதலாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் மூலம் ஒருவருக்கு லேசான ஆற்றல் ஊக்கமாக செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்றாலும், அதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் எடுக்க வேண்டும்.
ஆம், கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் கூறியது பின்வருமாறு -
வெதுவெதுப்பான நீர் உடலில் உள்ள கழிவு பொருட்கள் மற்றும் நச்சுகளை அகற்றி உடலை நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது.
வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவதால் கர்ப்ப காலத்தில் பொதுவான பிரச்சினையாக கருதப்படும் காலை சுகவீனத்தில் இருந்து ஒருவர் நிவாரணம் பெறலாம்.
வெதுவெதுப்பான தண்ணீர் மலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
கர்ப்ப காலத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதன் பலன்களில் ஒன்று நெஞ்செரிச்சல் மற்றும் தீவிரமான செரிமான கோளாறுகள் ஏற்படுவதைத் தடுப்பதாகும்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும்போது அவர்களின் சீரான இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. வெதுவெதுப்பான தண்ணீர் இரத்த ஓட்டத்தை சீராக்கி, BP நார்மலாக இருப்பதை ஊக்குவிக்கும். மேலும் இது ஆரோக்கியமான உடலை பராமரிக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அடிக்கடி தொற்றுகள் மற்றும் வைரஸ் நோய்களுக்கு ஆளாகிறார்கள். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது இது போன்ற தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
வெதுவெதுப்பான நீரானது கர்ப்பிணிப் பெண்களின் மூச்சுக்குழாய் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்கிறது.
கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. இருப்பினும், ஒரு வேலை வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும்போது தாய்க்கு வாயிலோ அல்லது தொண்டையிலோ எரியும் உணர்வு ஏற்பட்டால், அது உணவின் அளவு மற்றும் வகையை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. இது பெண்களில் தீவிரமான அசௌகரியத்தை ஏற்படுத்தி, அவர்கள் உண்ணும் உணவை பாதிக்கிறது.
இவ்வாறு குறைந்த அளவிலான உணவு உண்பது தாயின் வலிமையைக் குறைக்கலாம். மேலும் வளர்ந்து வரும் குழந்தைக்கு தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். மேலும் தாய்க்கு தீவிரமான புண் ஏற்பட்டால், அது தொற்று ஏற்பட வழிவகுக்கும். இது மருந்துகள் எடுப்பதற்கான தேவையை உண்டாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும், நேரடியாக குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கர்ப்பமாக இருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது தசைவலியை மற்றும் வீக்கம் உள்ள இடங்களுக்கு இதமளித்து, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். எனினும், வெதுவெதுப்பான நீரில் குளிக்க திட்டமிட்டால் நீங்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகப்படியாக சூடாக இல்லாத பட்சத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெதுவெதுப்பான குளியலை மேற்கொள்ளலாம்.
நீரின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இல்லாமல் இருப்பதை ஒருவர் உறுதி செய்ய வேண்டும். வெப்பநிலை இதை விட அதிகமாக இருந்தால், இரத்த அழுத்தம் அதிக அளவில் குறைந்து, குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். இது கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், கர்ப்ப காலத்தின் முதல் டிரைமெஸ்டரில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஒரு தாய் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், குழந்தைக்கு முதுகெலும்பு வளைவு (spina bifida) ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகிறது. ஒரு தாய் ஹைப்பர்தெர்மியா என்ற மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், அவரின் உடலானது வெப்பத்தை வெளியேற்றுவதைக் காட்டிலும் அதிக அளவிலான வெப்பத்தை உறிஞ்சும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுவே கர்ப்பிணிப் பெண்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கக்கூடாது என்று சொல்லப்படுவதற்கான ஒரு காரணம் ஆகும்.
எனவே, குளிக்கும் முன்பு ஒரு தாய் பாத் தெர்மாமீட்டரின் உதவியுடன் நீரின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். நீரானது நேரடியாக கர்ப்பபைக்குள் சென்று குழந்தையை பாதிக்கும் என்று ஒருவர் எண்ணக் கூடாது. குழந்தையானது கர்ப்பப்பையில் உள்ள பனிக்குட பைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பலாப்பழம்: தொடர்புடைய நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்றாலும், ஒருவர் இது குறித்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீரில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளைக் கொல்லும் வகையில் நீரைப் போதுமான அளவு கொதிக்க வைக்க வேண்டும்.
நீரில் காரீயம் இருக்கக்கூடாது.
குழாய் நீரைக் கொதிக்க வைத்து குடிக்கக்கூடாது; தண்ணீர் சுத்திகரிப்பானில் இருந்து தண்ணீர் பருக வேண்டும்.
தீவிரமான தொற்றுக்கு வழிவகுக்காமல் இருக்க, தொண்டை அல்லது வாய்க்கு எந்த ஒரு காயமும் ஏற்படாத வகையில் வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும்.
ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரே நேரத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக பருக வேண்டும்.
நீரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்த நீரைப் பருகலாம்.
கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். எனினும், வெதுவெதுப்பான நீரைப் பருகும் போது, ஏதேனும் அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்க ஒருவர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Tags
Benefits of Drinking Warm Water During Pregnancy in English, Benefits of Drinking Warm Water During Pregnancy in Hindi
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips







கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)