
கர்ப்ப காலத்தில் நீங்கள் விரும்பியதெல்லாம் உண்ண முடியாது. சிக்கல் ஏதும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் உண்ணும், குடிக்கும் உணவுப் பொருட்களில் ஏதேனும் உங்களுக்கோ அல்லது உங்கள் வயிற்றில் வளரும் முதிர்கருவிற்கோ தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கும் பட்சத்தில், உங்கள் மருத்துவர் நீங்கள் அவற்றை தவிர்த்து விட வேண்டுமென பரிந்துரை செய்வார். கருச்சிதைவு, கடுமையான இரத்தப்போக்கு, வயிற்று வலி, மற்றும் குறை பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிப்பவையாக கருதப்படும். எனவே தான், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், உங்கள் மகப்பேறு மருத்துவரால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.
அப்பேற்பட்ட ஒரு விவாதத்திற்குரிய உணவுப் பொருள் பற்றி தான் இங்கு விளக்க இருக்கிறோம்: வால்நட். கர்ப்ப காலத்தில் வால்நட்களை உண்பதால் ஏற்படும் பாதுகாப்பு, அபாயங்கள் குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன. எனவே, இது குறித்து நாம் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.
வால்நட்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு பிற ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பது பற்றி நாம் அறிவோம். அப்போது கர்ப்ப காலத்தில் வால்நட்கள் சாப்பிடுவதால் தீங்கு விளையுமென்று சொல்லப்படுவது எதனால், அல்லது இது வெறும் கட்டுக்கதையா? வாருங்கள், இது பற்றி இந்தக் கட்டுரையில் விவாதிப்போம்.
வால்நட், இது வாதுமைக் கொட்டை என்றும் தமிழில் அறியப்படுகிறது. இதனை கர்ப்ப காலத்தில் உண்பது முழுவதும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதன் தனித்துவமிக்க ஊட்டச் சத்துப் பொருட்கள், முதிர்கருவின் முறையான வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. பொதுவாகவே மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுமுறையில் சில வால்நட்களை சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்ப காலத்தின் போது வால்நட் சாப்பிடுவதால் தாய்க்கும், குழந்தைக்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை வெவ்வேறு முறைகளில் உண்ணலாம், அதாவது பச்சையாக சாப்பிடலாம் அல்லது குடிபானமாக, கிரானோலா பார்களாக, மேலும் பல வடிவங்களிலும் உண்ணலாம்.
உங்கள் டயட்டில் இந்த உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வதற்கு முன்னர், கர்ப்ப காலத்தில் வால்நட் உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்வது முக்கியமாகும்.
கர்ப்ப காலத்தின் போது வால்நட்கள் சாப்பிடுவதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க நன்மைகளுள் ஒன்று, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மிக அதிகமாக நிறைந்திருப்பது தான். இவை தாயின் இதய நலத்திற்கும், முதிர்கருவின் நரம்பு வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, முதிர்கருவின் மூளை உறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம், நரம்பு வளர்ச்சியை விருத்தி செய்கிறது.
துத்தநாகம், மெக்னீசியம் முதல் காப்பர் வரை, கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் முதிர்கருவிற்கும் நலம் பயக்கக் கூடிய பல மினரல்கள் வால்நட்களில் நிறைந்துள்ளன. கர்ப்ப காலத்தில் வால்நட் சாப்பிடுவதால் அதில் உள்ள மினரல் சத்துகளின் அடிப்படையில் நமக்கு கிடைக்கும் சில நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முதிர்கருவின் முறையான மூளை வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் உதவும் காப்பர் அதிக அளவில் வால்நட்களில் உள்ளது.
முதிர்கருவில் சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்திற்கும் கூட உதவுகிறது.
குழந்தையின் எலும்புகள் மற்றும் குருத்தெலும்பின் சரியான வளர்ச்சிக்கும், வலுவாக்கத்திற்கும் மாங்கனீசு உதவியாய் இருக்கிறது.
மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளையும் துத்தநாகம் குறைக்கிறது. இதன் விளைவாக, குறிப்பாக மூன்றாம் டிரமெஸ்டரில் ஒருவருக்கு குறைப் பிரசவம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.
வால்நட்களில் வைட்டமின் ஈ அல்லது டோக்கோஃபெரால் அதிக அளவில் இருப்பதால், ஒருவர் கர்ப்ப காலத்தில் வால்நட்களை உண்ண வேண்டும். வைட்டமின் ஈ மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது தாய் மற்றும் முதிர்கருவின் திசுக்களில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற சேதத்தை குறைக்கிறது. இது உடலில் பிறழ்வு (ம்யூட்டேஷன்) அல்லது புற்று வளர்ச்சி ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது, மேலும் முதிர்கருவின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாகவே மலச்சிக்கல், உப்பிசம், இரைப்பை அழற்சி, மற்றும் ஐபிஎஸ் (இரிடபில் பவல் சிண்ட்ரோம்/குடல் எரிச்சல்) போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அதனால் தான், குறிப்பாக இரண்டாம் டிரைமெஸ்டரின் இடையிலிருந்து, நார்ச்சத்தினை எடுத்துக் கொள்வதற்கு பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நல்வாய்ப்பாக, வால்நட்களில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால், அவை பெண்களுக்கு பொதுவாகவே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடல் வழியாக சரியான முறையில் மலம் கழிப்பதற்கு உதவியாய் இருப்பதால், உப்பிசம் மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகளை சரி செய்கிறது.
வால்நட்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, ஹெச்டிஎல் செறிவினை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, கர்ப்பிணிப் பெண்களின் இதயநலம் நல்ல முறையில் பேணப்படுகிறது.
கர்ப்ப காலத்தின் போது வால்நட்களை உண்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. ஒரு வேளை வால்நட் பருப்பை வேறு எதுவும் கூட சேர்க்காமல் பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லையென்றால், கீழ்க்காணும் முறைகளில் இந்த பருப்பை எளிமையாக கர்ப்ப கால டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
வால்நட் பருப்புகளை சியா விதைகள், வாழைப்பழம் மற்றும் தேனுடன் சேர்த்து குடிபானமாக தயாரித்து உட்கொள்ளலாம்.
நறுக்கப்பட்ட வால்நட்களை வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரானோலா பார்களில் சேர்க்கலாம்.
பீட்ரூட் அல்லது கிரீன் யோகர்ட் புட்டிங்-இல் இதனை கலந்து உண்ணலாம்.
வால்நட்களிலிருந்து பாலை பிரித்தெடுத்து, ரொட்டி, கேக் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் சேர்க்கலாம்.
சமைப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்க்கு மாற்றாக வால்நட் எண்ணெயை பயன்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் வால்நட் சாப்பிடுவதால் குறிப்பிடத்தக்க அபாயங்கள் ஏதும் ஏற்படாது. எனினும் கூட, எதுவாக இருந்தாலும் அதிகப்படியாக உண்பதை தவிர்ப்பது நல்லது, ஆகவே வால்நட்களையும் கூட அளவாகவே சாப்பிட வேண்டும். மேலும், ஒரு வேளை ஏற்கனவே பெண்ணுக்கு வால்நட்-டிற்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், வால்நட் உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும், வால்நட் சாப்பிடுவதால் வயிற்று வலி அல்லது தடிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து கலந்தாலோசிப்பது நல்லது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
கர்ப்ப காலத்தின் போது வால்நட் உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்கனவே இதனால் ஒவ்வாமை பாதிப்பு இல்லை எனும் பட்சத்தில், வால்நட்கள் அதன் பண்புப்படி எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆயினும், தாய் மற்றும் முதிர்கருவின் உடல்நல நன்மைகளின் பொருட்டு, இந்த ஊட்டச்சத்து மிக்க பருப்பை மிதமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். வால்நட்களில் முறையான முதிர்கருவின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன, குறிப்பாக நரம்பு வளர்ச்சி, மற்றும் தாயின் செரிமானம் மற்றும் இதய நலத்தின் மேம்பாட்டிற்கும் இது உதவுகிறது.
Yes
No














Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |