


Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் தீவிரமான மேல் முதுகு வலியானது 50 முதல் 80 சதவீதம் வரையிலான தாய்மார்களை பாதிக்கிறது. பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் கீழ் முதுகு வலியை அனுபவிக்கிறார்கள். ஒரு சிலர் கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி மற்றும் கழுத்து அல்லது தோள்பட்டையில் கூட வலியை அனுபவிக்கிறார்கள்.
கீழ் முதுகு வலியைக் காட்டிலும், கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி குறைவாகவே ஏற்படுகிறது என்றாலும் கூட, மேல் முதுகு வலியையும் ஒரு சிலர் அனுபவிக்கின்றனர். குழந்தையை பெற்றெடுக்கப் போகும் பெரும்பாலான தாய்மார்கள் இந்த வலியானது டல்லாக இருந்தாலும் வலிமையானதாகவும், அடிக்கடியும் ஏற்படுவதால் வேலைகள் செய்வதை இது கடினமாக்குகிறது என்று கூறுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலியானது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றாலும், பெரும்பாலான பெண்களில் இது முதல் மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டரில் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் அவர்கள் அடிக்கடி கூர்மையான வலியை அனுபவிப்பார்கள். இது முதன்மையாக ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் அதிகரிப்பினாலும், இரண்டாவது டிரைமெஸ்டரில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவும் நிகழ்கிறது. வளர்ந்து வரும் மார்பகங்கள் மற்றும் ஈர்ப்பு மையத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் மூன்றாவது டிரைமெஸ்டரில் மேல் முதுகு வலி உண்டாகிறது.
கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி ஏற்பட பல சாத்தியமான காரணங்கள் இருந்தாலும், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய இரண்டும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உதாரணமாக, ரிலாக்ஸின் என்ற ஹார்மோனானது உடலை கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு ஏற்றவாறு தயார் செய்கிறது. எனினும், இது உடல் வலி போன்ற ஒரு சில மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தசைநார்கள் மற்றும் தசைகளை தளர்த்துவதால் அவை வேலை செய்யும் விதத்தை பாதிக்கிறது. இதனால் கூடுதல் வலி ஏற்படுகிறது.
பெரிய மார்பகங்களின் எடை காரணமாகவும் சில சமயங்களில் வலி ஏற்படலாம். மார்பக அகலம் அதிகமாவதால் அவற்றின் எடை கூடுகிறது. மேலும் அவற்றின் தோரணையில் மாற்றம் நிகழ்கிறது. இதனால் மேல் முதுகில் அதிகரித்த தசை செயல்பாடு மற்றும் சோர்வு உண்டாகிறது.
இறுதியில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மேல் முதுகு வலி அல்லது தசையிழுப்பானது, கருப்பை மாற்றங்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பாலும் உண்டாகலாம். கர்பப்பை மேல்புறமாகவும், வெளிப்புறமாகவும் விரிவடைவதால் ஈர்ப்பு மையத்தில் மாற்றம் ஏற்படுகிறது. "கர்ப்ப காலத்தில் ஏற்படும் முன்கூனல் (Pregnancy-related lordosis)", அல்லது முதுகுத்தண்டின் உட்புற வளைவு உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் எடை மாற்றத்துடன், இந்த மாற்றமானது வலி மிகுந்த தசையிழுப்பை ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருந்தாலும், இதிலிருந்து நிவாரணம் பெற பல வழிகள் உள்ளன.
அக்குபஞ்சர், உடலை வலுப்பெற செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் முதுகில் ஏற்படும் அசௌகரியத்தை போக்கலாம்.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது..
உங்களின் மார்பக எடை காரணமாக உங்களுக்கு கர்ப்ப காலத்தில் மேல் முதுகு வலி ஏற்பட்டால், இந்த எடையை தாங்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஷூக்கள் மற்றும் சிறந்த பிரா அணிவதன் மூலம் அறிகுறிகளை குறைக்கலாம்.
இந்த அறிகுறிகளை போக்க ஒரு சில நிபுணர்கள் கர்ப்ப கால மசாஜ் (prenatal massage) செய்ய பரிந்துரைக்கின்றனர்.
கூடுதலாக, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு ஒத்தடம் கொடுப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்னும் வலி இருந்தால் வலி நிவாரணிகள் தான் இதற்கான இறுதித் தீர்வு.
வழக்கமான நீட்சி பயிற்சிகள், சரியான தோரணையை பராமரித்தல் மற்றும் கனமான பொருட்களை தூக்காமல் இருத்தல் போன்றவை மேல் முதுகு வலியைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
நெஞ்சுப் பகுதியை தூக்கி முதுகைக் கொண்டு ஒரு வளைவை உருவாக்குவது விறைப்பு மற்றும் அழுத்தத்தைப் போக்க உதவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பமாக இருக்கும் போது முதுகு வலி ஏற்படக் காரணம்
குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு ஏற்படும் கர்ப்ப கால மேல் முதுகு வலி என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மேல் முதுகு வலியானது ஒருவரது அன்றாட வேலையை பாதிக்காத வரை அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.
அதிக கவனிப்பு தேவைப்படும் மற்றும் அரிதான நேர்வுகளில், முதுகு வலியுடன் சேர்ந்து ஒரு சில தீவிரமான நிலைகளான கல்லீரல் பிரச்சனைகள் அல்லது மார்பக தொற்று ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கூர்மையான மேல் முதுகு வலி குறைப்பிரசவத்திற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, இது குறித்து மகப்பேறு நல மருத்துவரை அணுகுவது அவசியம். மேல் முதுகு வலி தொடர்ந்து இருந்தாலோ அல்லது அவரின் நல்வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலோ உடனடியாக இது குறித்து மருத்துவரிடம் பேச வேண்டும்.
கூடுதலாக, மேல் வலது தோள்பட்டையில் வலியை அனுபவித்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குறிப்பாக, ஹைப்பர்டென்ஷன், ப்ரீ-எக்லாம்சியா அல்லது பார்ப்பதில் சிரமங்கள் அல்லது எதிர்பாராத வீக்கம் போன்ற தொடர்புடைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
எனவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மேல் முதுகு வலியானது ஓரளவு அசௌகரியம் மற்றும் கவலையை அளித்தாலும் இது குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லாத ஒரு தீவிரம் குறைந்த நிலையாகும். போதுமான ஓய்வு மற்றும் மருத்துவர் கூறும் பரிந்துவரைகளை தவறாமல் பின்பற்றுவதன் மூலமாக ஒருவர் இந்த வலியிலிருந்து எளிதில் விடுபடலாம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தை அனுபவிக்கலாம்.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips







கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)